முருகா என்றால் :
சாதாரண மனிதன் ஞானியாகுவதற்கு முதல் தடையாய் இருப்பது உயிர்க்கொலை செய்து அதன் மாமிசத்தை உண்டதால் வந்த பாவம்தான் என்ற உண்மையை உணர்ந்து உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சைவஉணவை மேற்கொண்டு ஞானம்பெற முருகன் திருவடியை பற்றிட வேண்டுமென்ற மனஉறுதி தோன்றும்.
இயற்கை மனிதனை தோற்றுவிக்கும்போதே அந்த மனிததேகத்தினை சைவஉணவிற்கு உகந்ததாகத்தான் தோற்றுவித்தது. அவனது செரிமான மண்டலத்தில்கூட மாமிசத்தை செரிப்பதற்கான எந்த சிறப்பு அமைப்பும் இல்லை. ஏனெனில் ஞானம் பெறுவதற்காகவே உருவாக்கப்பட்ட சிறப்பான இந்த மனித தேகத்தில் பாவம் சேர்ந்து விடலாகாது என்பதினாலேயே இயற்கை ஜீவதயவின் அருளைப் பெற ஏதுவாக சைவஉணவை மேற்கொண்டு சாந்தமனநிலை கொண்டு ஜீவதயவினால் ஒளிதேகம் பெற்றிடவே இந்த தேகத்தை சாந்த தேகமாக படைத்திட்டது.
ஆனால் இயற்கையின் கொடையை அதன் அற்புதம் உணரா மனிதன் சுவைக்கு அடிமையாகி உணவு தேடலில் ருசியின் தன்மைக்கு அடிமையாகி எளிமையாக கிடைக்கிறது, சத்தானதாக உள்ளது என கற்பனை செய்து மாமிசத்தை சாப்பிட ஆரம்பித்தான். என்றைக்கு மனிதன் உயிர்க்கொலை செய்து அதன் மாமிசத்தை சாப்பிட ஆரம்பித்தானோ அன்று வந்தது அவனது வினைத்தொடர்ச்சி. அன்று வந்தது அவனது அதீத பாவச்சுமை. அன்று வந்தது அறியாமையெனும் அதீத இருள். அன்று தான் இறைவனுடன் கொண்டிருந்த அற்புத தொடர்பு துண்டிக்கப்பட்டு அறியாமை எனும் இருளில் மூழ்கி ஒளிபொருந்திய தூய சாந்தஅறிவு மழுங்கி மிருக அறிவு ஓங்கி மும்மலக் குற்றத்துள் ஆழஆழ புதைந்தனன் மனிதன்.
அந்தோ பரிதாபம்! தான் என்ன செய்கின்றோம் என்றே அறியாமல், அறியாமையில் உழன்று உழன்று உயிர்க்கொலை செய்த பாவம் இன்றுவரை அவனை மீளவிடாமல் மீண்டும் மீண்டும் பாவத்தில் தான் தள்ளுகிறதே தவிர அவனை மீண்டு வரவிடவே இல்லை.
ஞானம்பெற தலையாய குணம் ஜீவதயவு, ஜீவதயவு ஞானவீட்டின் திறவுகோல். ஆதலின் ஞானம்பெற விரும்புகிறவன் ஜீவதயவின் முதல் எதிரியான உயிர்க்கொலையை கண்டிப்பாக இனி அவனது வாழ்நாளில் ஒருமுறை கூட செய்திடல் ஆகாது.
ஞானம்பெற விரும்புகின்ற ஒருவன் ஜீவதயவாகிய ஞானவீட்டின் திறவுகோலை தொலைத்துவிட்டு ஞானம்பெற விழைவது எப்படி சாத்தியம். உயிர்க்கொலை செய்பவனுக்கு எப்படி ஜீவதயவு வரும்? ஜீவதயவை தொலைத்தவனுக்கு ஞானம் எப்படி வரும்?
ஆதலின் ஞானம்பெற விரும்புகிறவன் முதன்முதலில் ஜீவதயவை பெற ஏதுவாக உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து ஞானிகள் திருவடியைப் பற்றினால் தான் ஞானத்திற்குரிய சிறப்பறிவை தலைவன் முருகன் அருளால் பெறலாம்.
தாவரங்களும் உயிர்தானே அது உயிர் கொலையில்லையா என்பார் அறிவாளி சிலர்.
ஓரறிவு உயிர்தனை கொன்றால் பாவம்தான், அதுவும் உயிர்தான். ஆயின் மனித முயற்சியால் ஒருபடி நெல்லை உண்ட மனிதன். அதே தனது சுய முயற்சியால் அதன் முளைக்கா வித்தை அது முளைப்பதற்கு ஏதுவாக நிலம்தனை பண்படுத்தி பதப்படுத்தி நீர்விட்டு, உரமிட்டு அந்த ஒரு உயிருக்கு பதிலாக உபகாரமாக ஆயிரம் ஆயிரம் கோடி உயிர்களை அவனது முயற்சியால் தோற்றுவிக்க இயலும். இயற்கை மனிதன் கடைத்தேற்றுவதற்காகவே சைவ உணவையும், அந்த உயிர் பாவம் நீங்க அவனுக்கு ஆறாம் அறிவாகிய பகுத்தறிவின் மூலம் அந்த ஓரறிவின் கொலை பாவம் நீங்க அந்த ஓரறிவு உயிரை உண்டாக்கி பெரும் புண்ணியத்தையும் இணைத்தே தருவித்து தோற்றுவித்தது. ஆனால் ஐந்தறிவு உடைய விலங்கை கொன்றால் மீண்டும் மனிதனால் தோற்றுவிக்கலாகாது.
ஆதலின் உடம்பினின்று உயிர் பிரித்து மகிழ்ந்து சுவை கொட்டி சாப்பிடும் அசைவ உணவினை விட்டு விலகினால் அன்றி உயிர்க்கொலை பாவம் நீங்கினாலன்றி அவனது ஞான முயற்சியில் எத்துணை எத்துணை புண்ணியம் செய்தாலும் கடைத்தேற இயலாது என்பதையும் இறையருள் பெற முடியாது என்பதையும் முருகனது திருஅருள் கொடையால் உணர்வார்கள்.
முருகா! முருகா! முருகா! என்போம் ஜீவதயவின் தலைவன் ஜீவதயாசோதி முருகன் அருளைப் பெறுவோம். ஜீவதயவுடையவராய் ஆகியே ஞானம் பெறுவோம். முருகன் அருளே சிறப்பறிவாய் மாறி ஜீவதயவை நம்முள் தோற்றுவிக்கும்.
..............
மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்
முருகா! முருகா!! முருகா!!! என்றே முற்றிலும் உமது சிந்தை சொல் செயலெல்லாம் முருகனருளாய் கூடிட செபியுங்கள் முருகனே குருநாதனாய் வந்திடும் அற்புதம் காணுங்கள்.
Tuesday, 30 August 2016
அரங்கதரிசனம் சாபவிமோசனம்
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவா ஆதிமூல குருமகா சன்னிதானம் அருள்நிறை ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் தன்னை சாதாரணமாக எண்ணிவிடாதீர். அவர் தம்மை பார்ப்பதற்கும் அணுகுதற்கும் எளிதானவர் என்றே எண்ணியே அவர்தம் மறைப்பின் இரகசியம் உணராது மாயையுள் சிக்கி சன்னிதான மகாபிரபு அரங்கரை அலட்சியம் செய்து விடாதீர்கள். அலட்சியம் செய்திட்டால் அதுவே அவர்கள் வாழ்வில் செய்திட்ட மிகப்பெரிய பிழையாகும்
மகான் குதம்பைச்சித்தர் ஞான சூட்சும நூல்
சோதி வடிவாய் நின்ற குமரா
சுவாமி மலை அமர்ந்த முருகா
ஆதி உமை அருளை பெற்ற
அறுமுகனே அன்புக் குமரா
குமரனே குன்றக் குடியானே
குகனே எங்களின் தலைவனே
அமரனாய் ஆனந்த குமரனாய்
அனைத்துமாய் நிற்கும் வேலனே
வேலனே பன்னீரு கரம் கொண்டு
வினை போக்க வேல் கொண்டவனே
ஞாலத்தை வெல்ல ஞானியாய்
ஞான தேசிகனாய் வந்து உலகுக்கு
உலகுக்கு ஞான அமுதூட்டும்
உன் சூட்சுமம் கண்டேனப்பா
உலகோர் நலம் கருதியே
உயர் ஞான சூட்சும நூலை
நூலை குதம்பைச் சித்தர் யானும்
கண்டுரைப்பேன் உலக மக்களே
மக்களே பிறவிக் கடல் தனை
மறுபிறப்பு கொள்ளா நீந்திட
ஊக்கமுடன் ஓங்காரக் குடிலுக்கு
உடன் வருதல் வேண்டும்
வேண்டி வந்து விழுந்து வணங்கி
வேலவனாய் அரங்கன் காட்சி கிட்ட
தொண்டு செய்தே குடிலில் இருக்க
தேசிகன் அருளாசி அடைவரப்பா
அப்பப்பா அரங்கனை அலட்சியம்
அகிலமதில் கண்டிடும் மக்கள்
தப்பிக்க கலிகாலமதில் வழியில்லை
தண்டனைக்கு உள்ளாக நேரும்
நேராது காத்து நிந்தனை கொள்ளா
நிலமதனில் அமைதி மிகுபட நடந்து
சேராது துர் தீகுணம் ஒழிய
சிவராஜ யோகி அரங்கன் நிழல்
நிழல் அகலா தொண்டு செய்து
நித்தம் செபதபத்தில் இருக்க
சுழலும் நவக்கோள்கள் தானும்
சுத்த சன்மார்க்கவாதி என காத்தருளும்
அருளும் பொருளும் தானே கிட்டும்
அரங்கன் கருணை மிகுதி கிட்ட
மருளும் மக்களே விழித்து எழுங்கள்
மரணமிலா வாழ்வு அரங்கனால் கிட்டும்
உலக மக்களே உண்மை உரைப்பேன் யான், உணர்ந்து பற்றிக் கொள்ளுங்கள். தாங்கள் மீளா பிறவிக் கடலினுள் ஆழ்ந்து தொடர் பிறவிதனிலே மீள இயலாது தவிக்கின்றீர். மீளா பிறவிக்கடல்தனை மறுபிறப்பு கொள்ளாது நீந்தி கடைத்தேறிடவே நீங்களெல்லாம் மிகுந்த ஊக்கமுடன் உத்தம ஞானமளிக்கும் ஞானஆலயமாம் ஆதிகுருநாத அவதார ஆறுமுக அரங்கமகா தேசிகர் வாழும் கருணாலயமாம் ஓங்காரக்குடில்தனக்கு காலம் தாழ்த்தாது உடனே வாருங்கள்.
அற்புதன் அகிலம் ஆளும் அரங்கன் திருக்குடிலிற்கு பயபக்தியுடன் மனம் ஒடுங்கி கடைத்தேற்றுங்கள் தயவே! என்றே மனமுருகி அரங்கதரிசனம் சாபவிமோசனம் என்றே எண்ணியே குடில் எல்லை வந்து வீழ்ந்து பணிந்து வணங்கி அற்புத வடிவுடை வேலனாய் அகத்துள் அமர்ந்து அரங்கராய் காட்சிதரும் ஆறுமுகப்பெருமானை ஐம்புலன் ஒடுங்கிடும் படியான பணிவுடனும் பயபக்தியுடன் ஆன்ம ஒடுக்கம் பெற்றாற் போலெண்ணி அற்புத மகா சன்னிதானம் அருள் அரங்கரை கண்ணால் கண்டு வணங்கிடவே அரங்கன் காட்சி கிட்டிடவே குடில் வரும் அவரவரும் குடில் சார்ந்து குடில்தனிலே அரங்கரால் மேற்கொள்ளப்பட்ட தரும அறப்பணிகளிலே தன்னலமற்று, எதிர்பார்ப்பின்றியே தாராளமாய் உதவிகள் செய்தும், தொண்டுகள் செய்தும், அரங்கதரிசனம், என்று கிடைக்குமோ! என்றே ஏக்கம்தனை ஆன்ம உருக்கத்துடன் கொண்டுமே தளராது செய்துவர செய்துவர, வருகின்ற அவரவரெல்லாம் அருள்நிறை அரங்கரின் அருளிற்கு பாத்திரமாகி அரங்கரின் அருளாசிதனை அடைவாரப்பா.
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவா ஆதிமூல குருமகா சன்னிதானம் அருள்நிறை ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் தன்னை சாதாரணமாக எண்ணிவிடாதீர். அவர் தம்மை பார்ப்பதற்கும் அணுகுதற்கும் எளிதானவர் என்றே எண்ணியே அவர்தம் மறைப்பின் இரகசியம் உணராது மாயையுள் சிக்கி சன்னிதான மகாபிரபு அரங்கரை அலட்சியம் செய்து விடாதீர்கள். அலட்சியம் செய்திட்டால் அதுவே அவர்கள் வாழ்வில் செய்திட்ட மிகப்பெரிய பிழையாகும்.
உலகை காத்திடவே நம்பால் இரக்கம் மிகக் கொண்டுமே சாதாரண மனிதன் முதல் யோகியரும் அச்சமின்றி அணுகுதல் பொருட்டே எளிமை கொண்டனன் அரங்கன். ஆதலின் எளிமையுடையோர் அரங்கர் இவர்தம் ஆற்றல் என்ன? இவரோ ஞானம் அளித்திட வல்லோர்? என்றெல்லாம் அவரவர் மாய அறிவினை நம்பி ஏமாந்துவிடாதீர்கள்.
அரங்கமகாதேசிகனின் துணை இல்லையேல், அரங்கன் தயவை பெறவில்லையேல் அரங்கனின் அருள் இல்லையேல் அரங்கனின் அருட்கண் பார்வையை பெறாவிடில், அரங்கனின் அன்பிற்கு பாத்திரம் ஆகாவிடில் சுழற்றி சுழற்றி அடித்து மகாமாயையுள் உம்மை வீழ்த்தி நரகத்திற்கு கொண்டு செல்லும் கலியுகமாயை இந்த கலியுகத்தின் கோரப்பிடியின் கொடுமையிலிருந்து உம்மால் மீளமுடியாது. அரங்கனை அலட்சியம் செய்திட்டால் செய்தவர்கள் கட்டாயம் தண்டனைக்கு உள்ளாக நேரிடுவது தப்பாது.
ஆதலின் மக்களே இவ்வித தண்டனைகளுக்கு உள்ளாகாமல் உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
அரங்கரின் ஆறுமுக சூட்சுமம் உணராவிட்டாலும் பரவாயில்லை. அவர்தம் ஆற்றலை உம்மால் உணர முடியாவிட்டாலும் பரவாயில்லை. அவர்தம் அருள் கொடையின் வெளிப்பாட்டை உணர முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஏதோ உங்களால் முடிந்த அளவு தொண்டோ, பூசைகளோ ஞானிகள் பெயரிலே செய்துவிட்டு, வந்த சுவடு தெரியாமல் அமைதியாக சென்று விடுங்கள். உங்களால் முடிந்த அளவிற்கு அரங்கனின் அறதருமப் பணிகளுக்கு உதவிடுங்கள். உங்கள் உதவி அரங்கன் தனக்கு செய்வதாய் யாரும் தவறாக எண்ணிவிட வேண்டாம். நீங்கள் செய்யும் தருமமும் தொண்டும் உங்கள் நலனிற்காக உங்கள் ஆன்ம முன்னேற்றத்திற்காக நீங்கள் செய்து கொள்வதே அன்றி அரங்கனுக்கு செய்வதாக எண்ணிவிடாதீர்கள்.
அரங்கன் ஞானிகள் எங்கள் தலைவன். ஆறுமுகப் பெருமான், அகிலத்தையே காக்கும் வல்லமை உடையவன். அவன்தனை நீங்கள் காப்பதாக எண்ணி கற்பனை செய்து விடாதீர்கள். தன் அருள் பேராற்றல்தனை உண்மையில் அரங்கன் வெளிப்படுத்தினால் இந்த அகிலமே தாங்காதப்பா, பெரும் பிரளயமே ஏற்பட்டுவிடும். ஆதலின் அகில உயிர்களை காத்திடவே வந்திட்ட அரங்கன் அமைதி கொண்டான் ஆறுமுகனான தம்மை மறைத்து அகிலத்தோர் அணுகிட எளிய வேடம் தாங்கியே.
அகில நெருப்பு தொட்டால் சுடும் அரங்க நெருப்பு தொடாமலேயே சுட்டுவிடும். எச்சரிக்கை! எச்சரிக்கை! அரங்கனிடம் பணிந்து போற்றி திருவடி நிழல் சார்ந்து கடைத்தேறிட முடியாவிட்டாலும் பரவாயில்லை.
அதைவிடுத்து அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயக ஆறுமுக அரங்க ஞானக்கனலை தவறான எண்ணத்துடன் தீண்டி வீடாதீர்கள். மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாவீர்கள் அரங்கரை அலட்சியமாய் எண்ணி ஏதேனும் செய்து விட்டால் செய்தவர் தமக்கு வினைகள் அளவிறந்து சேருவது மட்டுமன்றி அவர்தம் குலமே நாசமாகும்.
ஆதலின் அரங்கன் திருவடிக்கு பணிந்து பயபக்தி கொண்டு நடந்து, தோற்றம் கண்டு சாதாரணமாய் எண்ணாமல் சாட்சாத் பரப்பிரம்மமாய் சுத்தஞானியாய் ஆறுமுகனாய் கண்டிப்பாக எண்ணியே வணங்கிடல் வேண்டும். இயலாவிடில் அமைதியாக சென்று விடுங்கள். அரங்கனை துவேசம் செய்திட எண்ணினால் விளைவுகள் தம்மை யாரும் சிந்திக்கக் கூட இயலாது.
உத்தமமாய் உண்மை உரைத்தேன் உலகோரே! பாவத்தின் சாகரம் தன்னிலே வீழாது காத்திடவே குதம்பையன் யான்.
ஆதலின் அரங்க நிந்தனை கொள்ளாது இவ்வுலகினிலே அவரவரும் அமைதியினை மிகுதியாக கடைப்பிடித்துமே அனைத்தும் அரங்கன் செயல் என்றே எண்ணி நடந்து தீய குணங்களும் துர்சிந்தனைகளும் தம்முள் தோன்றா வண்ணமே நடந்து சிவராஜயோகி அரங்கன் நிழலில் அகலாது தொண்டுகள்தனை பயபக்தியுடன் மனம் ஒன்றி மனம் உருகி செய்து தினம்தினம் இடைவிடாது செபதபங்களில் இருந்திட, இருக்கின்ற அவரவர்களை நவகோள்களின் நாயகர்களும் அவர்கள் தம் ஆசியினை சுத்த சன்மார்க்கவாதிகளாய் உள்ள அவர்தமக்கு அருளிக் காப்பார்கள்.
அரங்கன் நிழல்தனை சார்ந்து தொண்டும், பூசையும் தவறாமல் அமைதி கொண்டு அன்பு கொண்டு செய்கின்ற அவரவரும் கோளிடர் நீங்கி அருளையும் பொருளையும் தானே அரங்கனருளால் பெற்றிடுவர். அரங்கனருளை அளவிலாது பெற்றுயர முயற்சியுங்கள்.
மருளாகிய மாயையுள் சிக்கி தடுமாறுகின்ற மக்களே காலம் இல்லை! யுகமாற்றம் விரைந்து வருகிறது, காத்திருக்காது காலம், விழித்து எழுங்கள், விரைந்து வாருங்கள், நேரம் உள்ளபோதே அரங்கன் திருவடியை பற்றிட முயற்சியுங்கள். அன்பிற்கு மட்டுமே மனமிரங்கும் அரங்கனை அன்பினால் தொழுது அவனருளை பெற்று உயர்ந்திடுங்கள். மரணமில்லாப் பெருவாழ்வு அரங்கனால் படிப்படியாக கிட்டிடப் பெறுவீர்கள் என அரங்கனியல்பு உரைத்து அரங்கதரிசனம் சாபவிமோசனம் அரங்க நிந்தனை குலச்சாபம் என்பதையும் அன்பரும் மக்களும் அறிந்திட உண்மை உரைத்து ஞானசூட்சும நூல் கூறுகிறார் மகான் குதம்பைச்சித்தர்.
-சுபம்-
மகான் குதம்பைச்சித்தர் ஞான சூட்சும நூல்
சோதி வடிவாய் நின்ற குமரா
சுவாமி மலை அமர்ந்த முருகா
ஆதி உமை அருளை பெற்ற
அறுமுகனே அன்புக் குமரா
குமரனே குன்றக் குடியானே
குகனே எங்களின் தலைவனே
அமரனாய் ஆனந்த குமரனாய்
அனைத்துமாய் நிற்கும் வேலனே
வேலனே பன்னீரு கரம் கொண்டு
வினை போக்க வேல் கொண்டவனே
ஞாலத்தை வெல்ல ஞானியாய்
ஞான தேசிகனாய் வந்து உலகுக்கு
உலகுக்கு ஞான அமுதூட்டும்
உன் சூட்சுமம் கண்டேனப்பா
உலகோர் நலம் கருதியே
உயர் ஞான சூட்சும நூலை
நூலை குதம்பைச் சித்தர் யானும்
கண்டுரைப்பேன் உலக மக்களே
மக்களே பிறவிக் கடல் தனை
மறுபிறப்பு கொள்ளா நீந்திட
ஊக்கமுடன் ஓங்காரக் குடிலுக்கு
உடன் வருதல் வேண்டும்
வேண்டி வந்து விழுந்து வணங்கி
வேலவனாய் அரங்கன் காட்சி கிட்ட
தொண்டு செய்தே குடிலில் இருக்க
தேசிகன் அருளாசி அடைவரப்பா
அப்பப்பா அரங்கனை அலட்சியம்
அகிலமதில் கண்டிடும் மக்கள்
தப்பிக்க கலிகாலமதில் வழியில்லை
தண்டனைக்கு உள்ளாக நேரும்
நேராது காத்து நிந்தனை கொள்ளா
நிலமதனில் அமைதி மிகுபட நடந்து
சேராது துர் தீகுணம் ஒழிய
சிவராஜ யோகி அரங்கன் நிழல்
நிழல் அகலா தொண்டு செய்து
நித்தம் செபதபத்தில் இருக்க
சுழலும் நவக்கோள்கள் தானும்
சுத்த சன்மார்க்கவாதி என காத்தருளும்
அருளும் பொருளும் தானே கிட்டும்
அரங்கன் கருணை மிகுதி கிட்ட
மருளும் மக்களே விழித்து எழுங்கள்
மரணமிலா வாழ்வு அரங்கனால் கிட்டும்
உலக மக்களே உண்மை உரைப்பேன் யான், உணர்ந்து பற்றிக் கொள்ளுங்கள். தாங்கள் மீளா பிறவிக் கடலினுள் ஆழ்ந்து தொடர் பிறவிதனிலே மீள இயலாது தவிக்கின்றீர். மீளா பிறவிக்கடல்தனை மறுபிறப்பு கொள்ளாது நீந்தி கடைத்தேறிடவே நீங்களெல்லாம் மிகுந்த ஊக்கமுடன் உத்தம ஞானமளிக்கும் ஞானஆலயமாம் ஆதிகுருநாத அவதார ஆறுமுக அரங்கமகா தேசிகர் வாழும் கருணாலயமாம் ஓங்காரக்குடில்தனக்கு காலம் தாழ்த்தாது உடனே வாருங்கள்.
அற்புதன் அகிலம் ஆளும் அரங்கன் திருக்குடிலிற்கு பயபக்தியுடன் மனம் ஒடுங்கி கடைத்தேற்றுங்கள் தயவே! என்றே மனமுருகி அரங்கதரிசனம் சாபவிமோசனம் என்றே எண்ணியே குடில் எல்லை வந்து வீழ்ந்து பணிந்து வணங்கி அற்புத வடிவுடை வேலனாய் அகத்துள் அமர்ந்து அரங்கராய் காட்சிதரும் ஆறுமுகப்பெருமானை ஐம்புலன் ஒடுங்கிடும் படியான பணிவுடனும் பயபக்தியுடன் ஆன்ம ஒடுக்கம் பெற்றாற் போலெண்ணி அற்புத மகா சன்னிதானம் அருள் அரங்கரை கண்ணால் கண்டு வணங்கிடவே அரங்கன் காட்சி கிட்டிடவே குடில் வரும் அவரவரும் குடில் சார்ந்து குடில்தனிலே அரங்கரால் மேற்கொள்ளப்பட்ட தரும அறப்பணிகளிலே தன்னலமற்று, எதிர்பார்ப்பின்றியே தாராளமாய் உதவிகள் செய்தும், தொண்டுகள் செய்தும், அரங்கதரிசனம், என்று கிடைக்குமோ! என்றே ஏக்கம்தனை ஆன்ம உருக்கத்துடன் கொண்டுமே தளராது செய்துவர செய்துவர, வருகின்ற அவரவரெல்லாம் அருள்நிறை அரங்கரின் அருளிற்கு பாத்திரமாகி அரங்கரின் அருளாசிதனை அடைவாரப்பா.
சிவராஜயோகி, பரமானந்த சதாசிவா ஆதிமூல குருமகா சன்னிதானம் அருள்நிறை ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் தன்னை சாதாரணமாக எண்ணிவிடாதீர். அவர் தம்மை பார்ப்பதற்கும் அணுகுதற்கும் எளிதானவர் என்றே எண்ணியே அவர்தம் மறைப்பின் இரகசியம் உணராது மாயையுள் சிக்கி சன்னிதான மகாபிரபு அரங்கரை அலட்சியம் செய்து விடாதீர்கள். அலட்சியம் செய்திட்டால் அதுவே அவர்கள் வாழ்வில் செய்திட்ட மிகப்பெரிய பிழையாகும்.
உலகை காத்திடவே நம்பால் இரக்கம் மிகக் கொண்டுமே சாதாரண மனிதன் முதல் யோகியரும் அச்சமின்றி அணுகுதல் பொருட்டே எளிமை கொண்டனன் அரங்கன்
அரங்கமகாதேசிகனின் துணை இல்லையேல், அரங்கன் தயவை பெறவில்லையேல் அரங்கனின் அருள் இல்லையேல் அரங்கனின் அருட்கண் பார்வையை பெறாவிடில், அரங்கனின் அன்பிற்கு பாத்திரம் ஆகாவிடில் சுழற்றி சுழற்றி அடித்து மகாமாயையுள் உம்மை வீழ்த்தி நரகத்திற்கு கொண்டு செல்லும் கலியுகமாயை இந்த கலியுகத்தின் கோரப்பிடியின் கொடுமையிலிருந்து உம்மால் மீளமுடியாது. அரங்கனை அலட்சியம் செய்திட்டால் செய்தவர்கள் கட்டாயம் தண்டனைக்கு உள்ளாக நேரிடுவது தப்பாது.
ஆதலின் மக்களே இவ்வித தண்டனைகளுக்கு உள்ளாகாமல் உங்களை காப்பாற்றிக் கொள்ளுங்கள்.
அரங்கரின் ஆறுமுக சூட்சுமம் உணராவிட்டாலும் பரவாயில்லை. அவர்தம் ஆற்றலை உம்மால் உணர முடியாவிட்டாலும் பரவாயில்லை. அவர்தம் அருள் கொடையின் வெளிப்பாட்டை உணர முடியாவிட்டாலும் பரவாயில்லை. ஏதோ உங்களால் முடிந்த அளவு தொண்டோ, பூசைகளோ ஞானிகள் பெயரிலே செய்துவிட்டு, வந்த சுவடு தெரியாமல் அமைதியாக சென்று விடுங்கள். உங்களால் முடிந்த அளவிற்கு அரங்கனின் அறதருமப் பணிகளுக்கு உதவிடுங்கள். உங்கள் உதவி அரங்கன் தனக்கு செய்வதாய் யாரும் தவறாக எண்ணிவிட வேண்டாம். நீங்கள் செய்யும் தருமமும் தொண்டும் உங்கள் நலனிற்காக உங்கள் ஆன்ம முன்னேற்றத்திற்காக நீங்கள் செய்து கொள்வதே அன்றி அரங்கனுக்கு செய்வதாக எண்ணிவிடாதீர்கள்.
அரங்கன் ஞானிகள் எங்கள் தலைவன். ஆறுமுகப் பெருமான், அகிலத்தையே காக்கும் வல்லமை உடையவன். அவன்தனை நீங்கள் காப்பதாக எண்ணி கற்பனை செய்து விடாதீர்கள். தன் அருள் பேராற்றல்தனை உண்மையில் அரங்கன் வெளிப்படுத்தினால் இந்த அகிலமே தாங்காதப்பா, பெரும் பிரளயமே ஏற்பட்டுவிடும். ஆதலின் அகில உயிர்களை காத்திடவே வந்திட்ட அரங்கன் அமைதி கொண்டான் ஆறுமுகனான தம்மை மறைத்து அகிலத்தோர் அணுகிட எளிய வேடம் தாங்கியே.
அகில நெருப்பு தொட்டால் சுடும் அரங்க நெருப்பு தொடாமலேயே சுட்டுவிடும். எச்சரிக்கை! எச்சரிக்கை! அரங்கனிடம் பணிந்து போற்றி திருவடி நிழல் சார்ந்து கடைத்தேறிட முடியாவிட்டாலும் பரவாயில்லை.
அதைவிடுத்து அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயக ஆறுமுக அரங்க ஞானக்கனலை தவறான எண்ணத்துடன் தீண்டி வீடாதீர்கள். மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாவீர்கள் அரங்கரை அலட்சியமாய் எண்ணி ஏதேனும் செய்து விட்டால் செய்தவர் தமக்கு வினைகள் அளவிறந்து சேருவது மட்டுமன்றி அவர்தம் குலமே நாசமாகும்.
ஆதலின் அரங்கன் திருவடிக்கு பணிந்து பயபக்தி கொண்டு நடந்து, தோற்றம் கண்டு சாதாரணமாய் எண்ணாமல் சாட்சாத் பரப்பிரம்மமாய் சுத்தஞானியாய் ஆறுமுகனாய் கண்டிப்பாக எண்ணியே வணங்கிடல் வேண்டும். இயலாவிடில் அமைதியாக சென்று விடுங்கள். அரங்கனை துவேசம் செய்திட எண்ணினால் விளைவுகள் தம்மை யாரும் சிந்திக்கக் கூட இயலாது.
உத்தமமாய் உண்மை உரைத்தேன் உலகோரே! பாவத்தின் சாகரம் தன்னிலே வீழாது காத்திடவே குதம்பையன் யான்.
ஆதலின் அரங்க நிந்தனை கொள்ளாது இவ்வுலகினிலே அவரவரும் அமைதியினை மிகுதியாக கடைப்பிடித்துமே அனைத்தும் அரங்கன் செயல் என்றே எண்ணி நடந்து தீய குணங்களும் துர்சிந்தனைகளும் தம்முள் தோன்றா வண்ணமே நடந்து சிவராஜயோகி அரங்கன் நிழலில் அகலாது தொண்டுகள்தனை பயபக்தியுடன் மனம் ஒன்றி மனம் உருகி செய்து தினம்தினம் இடைவிடாது செபதபங்களில் இருந்திட, இருக்கின்ற அவரவர்களை நவகோள்களின் நாயகர்களும் அவர்கள் தம் ஆசியினை சுத்த சன்மார்க்கவாதிகளாய் உள்ள அவர்தமக்கு அருளிக் காப்பார்கள்.
மருளாகிய மாயையுள் சிக்கி தடுமாறுகின்ற மக்களே காலம் இல்லை! யுகமாற்றம் விரைந்து வருகிறது, காத்திருக்காது காலம், விழித்து எழுங்கள், விரைந்து வாருங்கள், நேரம் உள்ளபோதே அரங்கன் திருவடியை பற்றிட முயற்சியுங்கள். அன்பிற்கு மட்டுமே மனமிரங்கும் அரங்கனை அன்பினால் தொழுது அவனருளை பெற்று உயர்ந்திடுங்கள். மரணமில்லாப் பெருவாழ்வு அரங்கனால் படிப்படியாக கிட்டிடப் பெறுவீர்கள் என அரங்கனியல்பு உரைத்து அரங்கதரிசனம் சாபவிமோசனம் அரங்க நிந்தனை குலச்சாபம் என்பதையும் அன்பரும் மக்களும் அறிந்திட உண்மை உரைத்து ஞானசூட்சும நூல் கூறுகிறார் மகான் குதம்பைச்சித்தர்.
-சுபம்-
செயல்களிலே வெற்றி பெறுவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும்
முருகா என்றால் :
ஒருவன் மேற்கொள்ளும் செயல்களிலே வெற்றி பெறுவதற்கு என்னென்ன தகுதிகள் வேண்டும் என்பது அவனுள் முருகனருளால் உணர்த்தப்படும்.
முருகனருள் பெற அந்த செயல் செய்வோன் முருகனது திருவடியைப் பற்றி மனமுருகி வணங்கி முருகா நான் இன்றுமுதல் உயிர்க்கொலை செய்யமாட்டேன், புலால் உண்ண மாட்டேன், பிறஉயிர்களுக்கு தீங்கு செய்ய மாட்டேன், பிறர் பொருளை வஞ்சனையாக அபகரிக்க மாட்டேன், சாதி, மத, இன, மொழி பாகுபாடு பார்க்க மாட்டேன், பொருள் மீது வெறிகொண்டு பற்றுமிகுந்து பொருள்மீது அதீத இச்சை கொள்ள மாட்டேன், பிறர் வளர்ச்சி கண்டு பொறாமை கொள்ள மாட்டேன். இது உமது திருவடிக்கு சமர்ப்பிக்கின்றேன். இச்செயல்களை செய்யாதிருக்க எம்மால் ஆகாது. இவை என்னை வஞ்சித்து விடாமல் என்னை காத்தருள்.
முருகா உமது நாமத்தை சொல்பவருக்கும் உமது திருவடியைப் பற்றி பூசிப்போர்க்கும் உமது திருவடி பெருமையை சொல்வோர்க்கும் உமது கருணையான தயவால் அவர் தமக்கு உணவு, உடை, தங்க இருப்பிடம், அத்தியாவசிய தேவைகள் அனைத்தும் தங்கு தடையின்றி தாராளமாய் கிடைக்கும் என்பதை உமதருளால் உணர்ந்திட்டாலும் எனது மனமோ, மனைவி, பிள்ளைகள், உற்றார், உறவினர், நண்பர் என்றே பலவிதமாய் திரிந்து பாசவலையுள் அகப்பட்டு பரிதவித்து நாளைக்கு என்ன செய்வோம்? என்றே எண்ணி ஏங்கி பொருள்மீது பற்று கொள்ள செய்து உமது பொன்னடியை மறக்க செய்கிறது. மகோன்னத மாணிக்கமே மாமேருவே ஞானத்தலைவ முருகா எம்மைக் காத்தருள்.
இன்றைக்கு அருளின முருகன் நாளைக்கும் அருளுவான் என்றே அரங்க உபதேசம் கேட்ட நான் அதை மறந்து நாளைக்கு நமக்கு வேண்டுமே என மாயையுள் வீழ்ந்து தடுமாறுகிறேன் என்று உமதருளை உமது அன்பை உமது கருணையை உளமார உண்மையுடன் உணர்ந்து உமது வழி தொடர்வேனோ யாமறியேன் பாவியேன் என்னை கடைத்தேற்றுங்கள். எமக்கு உண்மை உணர்த்தி உமதருள் பெற நல்லருள் புரியுங்கள்.
அன்பே, ஆரா அமுதே, ஞானமே, ஞானச்சுடரே, அனாத இரட்சகனே, பாவியேன், எம்மீதும் ஒருகருணை பார்வை பாரப்பா. உமது கடைக்கண் அருளிருந்தால் கடைத்தேறுவேன் யான். கருணை இருந்தால் தப்பித்து விடுவேன். உன் அன்பிருந்தால் உம் திருவடியைப் பற்றிடுவேன் யான்.
எம் இறையே தயாநிதியே, தன்னிகரில்லா தனிப்பெரும் தகைமையே குணக்குன்றே தலைவா உமதடிப் பற்றும் உத்தமச் செயல்களிலே வெற்றிபெற எமக்கு அருளுங்கள். செயல்களிலே வெற்றிதனை உமதருளால் பெற்றிடவும், அதனினும் மேலான உண்மை வெற்றியாம் குணக்கேடுகளின் பிடியினின்று விடுபட்டு உமது திருவடியைப் பற்றுவதிலே அடைகின்ற வெற்றிதான் உண்மை வெற்றி என்பதை எமக்கு உணர்த்தி உமது திருவடிக்கே எம்மை ஆளாக்கி வெற்றிபெற உறுதுணை செய்யுங்கள் என்றே மன்றாடி முருகன் அருள் பெறபெற முருகனருளால் அனைத்தும் கூடும் என்பதை உணரலாம்.
முருகனடியைப் பற்றிடுங்கள். முருகனருளை பெற்று முக்திவழி நடந்திடுங்கள்.
..............
மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்
நல்ல குருநாதர் கிடைக்கப்பெற்றால்.......
முருகா என்றால் :
மோனநிலைக்கண்ட ஞானிகள் நட்பு கிடைத்தால் அவர்களே குருவாய் அடையும் வாய்ப்பை அடையப்பெற்றால், அவர்தம் திருவடியை இறுகப் பற்றிக் கொண்டு வழுவாது நடந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டுமென்ற பேரறிவு வரும்.
முருகன் நாமம் தொடர்ந்து செபிக்க செபிக்க அந்த முற்றுப்பெற்ற ஞானியின் திருவடி நிழலில் இருந்து தொண்டு செய்திடவே வாய்ப்பும் கிடைக்கும்.
ஒருவன் முன்சென்மத்திலே ஞானிகளுக்கு செய்திட்ட தொண்டின் பயனாலும் அவன் செய்த புண்ணியத்தாலும் பூஜாபலனினாலும் முருகன் அருள் கூடிட ஞானிகள் தொடர்பு இச்சென்மத்தில் ஏற்படும்.
ஆயினும் புண்ணியத்தின் சம்பளமாய் நன்னெறி புகுந்து ஞானியர் திருவடி பற்றிடும் அவனுக்கு அவன் செய்த பாவங்களெல்லாம் அச்சமயத்திலே முன்வந்து நின்றே ஞானியர் திருவடி பற்ற விடாமல் தடுத்திடும்.
முன்வினைகள் காரணமாக தாம் கொண்ட சற்குருவாம் சொற்குருநாதனை தாம் அடைக்கலம் கொண்டிட்ட ஞானகுருநாதனை அவர்தம் ஆற்றல் மீது சந்தேகம் கொள்வான். அவன் பெற்ற காமதேகத்தின் காரணமாக எழுகின்ற உணர்வுகளுக்கு ஆட்பட்டுமே குருநாதர் மீது சந்தேகம் கொள்வான்.
மலக்குற்றமுள்ள தேகத்தின்கண் தோன்றிட்ட மலஅறிவினால் உந்தப்பட்டு அறிவின் தெளிவில்லாமையினாலே மயக்கத்திற்கு ஆட்பட்டு குருவையே சந்தேகிப்பான். அதுமட்டுமல்ல தமக்கு தேவையற்ற ஒன்றை பெறவேண்டியே வேண்டுதலாய் வேண்டிட அவ்வேண்டுதல் அவனது வினைக் குற்றத்தினால் நிறைவேறிடாது இருக்கவே அதற்கு காரணம் நமக்கு குரு, அருள் செய்யவில்லை என்றெண்ணி குருவை சந்தேகிப்பான்.
பந்தபாசத்திற்கு ஆட்பட்டு தமக்கு உற்றவர்தம் குறைகள் நீங்கிட பாசவலையினால் உந்தப்பட்ட அவன் குருவிடம் கோரிக்கை வைத்திட அவரவர் வினை அவரவர் சார்புடையது. ஆதலின் பெறுதற்கு தகுதியற்ற உறவினர்கள், சீடன் தம் குருஅருள் பெற இயலாததால் அவன்தன் வேண்டுகோள் காலதாமதமோ! நிறைவேறாமலோ போகுங்காலத்து எம் வேண்டுகோள் ஏற்கவில்லை என்றே குருவின் மீது சந்தேகம் கொள்வான்.
தாம் விரும்பியது விரும்பியவாறு விரும்பிய காலத்து நடந்திட வேண்டுமென்றே எண்ணிடுவான் தன் தகுதி உணரா பக்தன். ஆயினும் தாம் உம்மை வணங்கினோம் உமதருள் எனக்கு வேண்டும் என்றே மன்றாடுவான். அவரவர் புண்ணிய பலத்திற்கும் பூஜாபலத்திற்கும் ஏற்பவே குருஅருளும் திருஅருளும் கூடுமாதலால் அவனது கோரிக்கை நிறைவேறாதது குருஅருள் குற்றமோ திருஅருள் குற்றமோ அன்று, அது அவன் செய்த பாவமேயாம். ஆயினும் குரு எம்மை புறந்தள்ளினர் என்றே குருவின் மீதே சந்தேகம் கொள்வான்.
முற்றுப்பெற்ற பற்றற்ற ஞானிகளின் தொடர்பை பெறுவதற்கே அவன் பலபல சென்மங்களாக பாடுபட்டு புண்ணியங்கள் பலவாறாய் செய்திருக்க வேண்டும். அப்படி அவன் செய்த புண்ணிய பலத்தாலும் ஞானிகள் ஆசியும் கூடினதாலேதான் இச்சென்மத்தில் குருவின் வடிவினிலே ஞானிகள் அருள் செய்வர்.
ஆயினும் அச்சீடன் தமக்கு வேண்டியது கிடைக்காதபோது குருவின் மீது குருவின் செயல் மீது குருவின் ஆற்றல்மீது சந்தேகம் கொள்வான். இது அவனது பாவமாம். சந்தேகம் என்பது அவனது பாவத்தின் அடையாளம். என்று உள்மனதில் சந்தேகம் வந்ததோ அன்றே அவனது ஞானவாழ்வு பின்னடைவை காண்கும்.
உத்தம குருநாதர், சீடன் தம்மை அவன் செல்லும் தவறான பாதையினின்று மீட்டிட அவனது பாவத்தினால் அவனது அறிவு மழுங்கி தீயநெறி செல்லுவதினின்று மீட்டிட, எதிர்காலத்தே சீடனுக்கு ஏற்படும் ஆபத்திலிருந்து காத்திட, ஞானவழி செல்ல அவனிடத்து உள்ள குணக்கேடுகளை நீக்கிட, மலக்குற்றத்தில் அகப்பட்ட சீடன்தனை மலக்குற்றத்தினின்று மீட்டு காத்திட வேண்டியே அவன்தனை அவனது குற்றம்தனை, அவன்தனக்கு உணர்த்தி குறை கூறி அவனை தாயினும் மேலான கருணை கொண்டு கடைத்தேற்றுவார் மகாஞானி.
சீடன் தான் செய்வது சரியென்று புறந்தள்ளுங்காலத்து அவன்மீது கடிந்து திருத்துவார் மகான் கருணைவள்ளல். ஆனால் அவ்வித கடிந்துரைகளெல்லாம் வாயினின்று வருபவைகளே அன்றி ஞானவான் உள்ளத்தினின்று வருவது அன்று. சீடன் கடைத்தேற வேண்டுமே என்றுதான், குருநாதர் எப்போதும் எண்ணுவார்.
அவர் சீடன் நலனை மையமாக கொண்டவர். சீடன் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அவனைக் கடைத்தேற்றுவது என்பது ஞானிகள் பண்பாகும். ஏனெனில் நம்பி வந்தோரை கைவிடலாகாது என்பதே ஞானிகள் பண்பாகும். ஆதலின் சீடன் திட்டினாலும் சரி, எதிர்த்தாலும் சரி, ஏற்றுக்கொண்டாலும் சரி, ஏற்று கொள்ளாவிட்டாலும் சரி, குரு தன் கடமையை செவ்வனே செய்வர்.
குருவின் உபதேச வார்த்தைகள் மயக்கத்தில் உள்ள சீடனுக்கு கசப்பாய் இருக்கும், வேம்பாய் கசக்கும், பழைய பாலாய் புளிக்கத்தான் செய்யும், இது அச்சீடனின் பாவச்சுமையை உணர்த்துகிறதே அன்றி குருவின் குற்றமல்ல.
குருவின் உபதேசம் மீறும் சீடன்மீது கருணை கொண்டு மனதினுள் வீணில் கழிகிறானே எம் அன்பு பிள்ளை எங்ஙனம் தேறுவான் என்ன செய்வோம் என்றே தன் தவம் மறந்து தன் பூசை மறந்து, தனது செயல் மறந்து அவன்பால் அன்பு கொண்டு ஆறுதல் கூறி தேறுதல் கூறி அவனை எக்காலத்தும் கைவிடாது காத்து கடிந்து கூறி, தேற்றி கூறி, கண்டித்தும், வசைபேசியும் இப்படி பலபலவாறாய் திருத்திட முயல்வர் ஞானிகளாம் சொற்குருநாதன்.
சீடனால் குருவிற்கு ஆவதொன்றுமில்லை. அவர்கள் பெற்று விட்டனர். அனைத்தையும் சீடனை வஞ்சிக்கவோ, ஏமாற்றவோ, கண்டிக்கவோ, தண்டிக்கவோ அவசியமில்லை. ஏனெனில் அனைத்தும் ஆறுமுகனருளால் அடைந்து வெற்றி பெற்றவர்கள் அவர்கள்.
ஆதலினால் பெற வேண்டியவன் சீடனே முற்றுப்பெற்ற ஞானியர் தொடர்பு கிடைக்கப் பெற்றும் அந்த வாய்ப்பை சீடன் இழப்பானேயானால் இழப்பு குருநாதருக்கல்ல சீடனுக்கேயாம். ஆதலின் கொண்ட நல்குரு பற்றற்றவர், பண்பே வடிவானவர், குணக்குன்று, குமரனின் தோற்றம், மும்மலமற்றவர், வினையற்றவர், மகாகோடி புண்ணியவான், அருள்நிறை ஞானி.
அவருக்கு சீடர்களால் ஆவது ஒன்றுமில்லை. ஆயினும் இந்த எழுநூறு கோடி மக்களிலே ஞானமெனும் பெருநிலை அடையும் வழி தனிலே விரும்பி வந்திட்ட முன் சென்ம தொடர்பினாலே, முன்சென்ம வாசனையாலே, செய்திட்ட புண்ணியத்தாலே வந்தோராம் திருக்கூட்ட மரபின் தொடர்புடைய மாந்தர்கள் என்ற ஒன்றின் மீதுள்ள கருணையாலே சீடர்கள் குறைதமை குருநாதர்கள் பொறுத்துக்கொள்கின்றனரே அன்றி சீடர்களிடத்து அவர்கள் எந்தவிதத்தும் அவர்கள் கடமைப்பட்டவர்கள் அல்லர்.
ஏனெனில் அவரவரும் அவரவர் வினைக்குற்றம் நீங்கிடவே குருகுலம் சார்ந்தனர். ஆதலின் சீடனால் குருவிற்கு ஆவதொன்றுமில்லை. ஆனால் குருவினால்தான் சீடனுக்கு அனைத்துமேயாம்.
எனவே அந்த கிடைத்ததற்கரிய குரு வாய்க்கப் பெற்ற சீடன் அந்த குருநாதன், சீடன் வினை போக்கிட எந்த வகையில் சோதித்தாலும், வேதித்தாலும், சுட்டாலும், வசைபாடினாலும், புறந்தள்ளினாலும் அந்த உண்மை குருவின் திருவடிகளைப் பற்றி இறுகப்பற்றி குரங்கு பிடியாய் பிடித்து உயிர் காத்திட போராடும் குரங்கினை போன்று பற்றின இலையை நழுவ விடாது. ஆவி சோர்ந்திடும் வரை விடாது இறுகப் பற்றியது போல பற்றி, குருவே உமது திருவடி விடேன் நீயே எம்மை எம் வினைக்காரணமாக புறந்தள்ளினாலும் நான் உம்மை விடேன். எம்மை காணும் போதெல்லாம் பேராற்றலுடை பெரியோனே உமக்கு எம்மை காணச்சகியாது தான். ஆயினும் நான் உம்மை விடேன். எம்மை புறந்தள்ளாதே. பாவியேன் அறியாது செய்த பாவங்களை பொறுத்தருள்வீர். மகாதேவனே மன்னிக்கும் குணம் உள்ளவனே உம் திருவடி விட்டு நீங்காதிருக்க அருளுங்கள். எம் வினை எம்மை தாக்குகிறது.
உமதருள் கொண்டு வினை நீக்கி காத்தருளுங்கள் என்றெல்லாம் உருகி உருகி பூசித்து குருவின் திருவடி நீங்காதிருக்க நம் வினைவெல்ல குருஅருள் நாடி நின்றிடல் வேண்டும். அவ்வாறின்றி பெறுதற்கரிய குருவின் செயல் கண்டு குரு செயல்களுக்கு விளக்கம்தனை தம்முள் கேட்டு சந்தேகம் கொண்டு எக்காலத்தும் விலகி விடாதீர்.
இப்படிப்பட்ட குரு இனி கிடைப்பது அரிது என்றே உணர்ந்திடச் செய்திடுவன்! அந்த ஆறுமுகனை அளவிலாது வணங்கும் பக்தர் தமக்கு அந்த ஆறுமுகனே குருவாய் வந்து அந்த சீடனுள் இருந்து உணர்த்திடுவன்! அருள்நிறை கருணைக்கடவுள் கந்தப்பெருமான்.

பகைவனையும் நட்பாக்கிக் கொள்கின்ற பண்பைப் பெறலாம்
முருகா என்றால் :
பகைவனையும் நட்பாக்கிக் கொள்கின்ற பண்பைப் பெறலாம்.
அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்ற நான்கையும் அறிந்து தேர்ந்து கடைத்தேறிய ஞானிகளால் மட்டும்தான் பகைஉணர்வு இல்லாமல் இருக்க முடியும்.
சாதாரண மனிதன் வினைக்குற்றத்திற்கு உள்ளானவன். ஆதலின் அவனிடம் வினைக்குற்றத்தினால் பிறிதொருவர் மீது நட்பு ஏற்படுவதும் பிறிதொருவர் மீது பகை ஏற்படுவதும் இயல்பே. அவரவர் முன் செய்திட்ட பாவபுண்ணியங்களுக்கு ஏற்பதான் நட்பும் பகையும் அமைகிறது.
முன் செய்த பாவத்தின் காரணமாக பகை ஏற்பட்ட போதும், அதை பகையற்ற நட்பே வடிவான ஞானிகள் துணை கொண்டு தமக்குற்ற பகையை நட்பாக்கிக் கொள்ள வேண்டும். பகையை நீக்கி நட்பாக்கி கொள்ள வேண்டுமே அன்றி பகைமை பாராட்டி நரகத்தில் வீழலாகாது.
ஒருவன் தமக்கு முன்பு செய்த இடையூறுகளை அவ்வப்போது மறந்து விடல் வேண்டும். எப்படி காய்கறிகளில் உள்ள குற்றமான கோம்பை நீக்கி காயை சமைக்கிறோமோ அதுபோல அவரிடத்து உள்ள குற்றங்களை மறந்து நன்மைகளை மட்டும் எண்ணி ஏற்று பகையை மறத்தல் வேண்டும்.
ஏனெனில் பகை நமது வினையால் வந்த குற்றமாகும். பகை தாங்கி வருவது மட்டுமே மற்றொருவன் செயல். ஆதலின் தாங்குபவனை மறந்து தம்வினைக் குற்றம் என்று நினைத்து தாங்கி வந்தவனை நட்பாக்கிகொண்டு, மேல்வினை குற்றத்திலிருந்து தப்பித்துவிடல் வேண்டும்.
இவ்விதமாய் பகையை நீக்கிட அவர் தம்மிடம் மனம் விட்டு பேசியும் தாம் செய்திட்ட செயல்களை அவரிடத்து சொல்லி குற்றங்களை மன்னித்தும், பிறர் தமக்கு செய்த இடையூறுகளை தமது வினை என எண்ணி பொறுத்துக் கொண்டும் பகை கொள்வதிலிருந்து தப்பித்துக் கொள்ள வேண்டும்.
தூயமனம் பெற்றால்தான் இவை வரும். தூயமனம் பெற தூயவனாம் குருநாதன் வழிகாட்டல் அவசியமாம். ஞானகுருநாதன் சொற்குரு வழிகாட்டல்தனை குருமனம் மகிழ நடந்து பெற்று குருநாதர் தம்மிடம் மானசீகமாக பகை நீங்கிடவே விண்ணப்பித்து சொற்குரு உபதேச வழி நடந்து நடந்து பகை நீக்கிடல் வேண்டும்.
முருகன் அருள் கூடிட பகைதானே நீங்கும். முருகன் அருளைப் பெற்று பகை நீங்கி பகைமை பாராட்டாது உலகினர் அனைவரிடத்தும் நட்பு பாராட்டி நல்லோராய் வாழுங்கள்.
உலகில் உள்ள எழுநூறு கோடிக்கும் மேலான மக்களில் மனிதனாகிய நாம் நம்முடன் சார்ந்த ஒரு சிலரிடம் மட்டுமே நட்பாயும், பகையாயும் உள்ளோம். அனைவரிடத்தும் நாம் அவ்விதம் இல்லை.
ஆதலின் நட்பும் பகையும் நமது முன் சென்ம தொடர்பினிலே வருகின்றது ஆதலால் அவை முன்சென்ம வாசனையால் வந்திட்ட வினைக் குற்றங்களே என்று உணர்ந்திடல் வேண்டும். பகை திடீரென தோன்றுவதில்லை. பகை நட்பு கொண்டோர் தம்மிடம் உள்ள குறைகளை காண காண அந்த குறைகளை பெரிதாக எண்ணிட பகையாய் மாறுகிறது.
நட்பிலிருந்துதான் பகை தோன்றுமே அன்றி வெளியிலிருந்து சம்பந்தமில்லாமல் வருவது இல்லை. ஆதலின் பிறர் தமக்கு செய்த இடையூறுகளை துன்பங்களை மறந்து அவர் செய்த நன்மைகளை சிறிதாயினும் கவனத்தில் கொண்டு அதன் பொருட்டு அவர் செய்த துன்பங்களை மன்னித்து ஏற்றுக் கொண்டு நட்பை வளர்த்தால் பகை என்ற பேச்சுக்கே அங்கே இடமில்லை.
பகையை நீக்கி நட்புடன் வாழ்வோம். முருகா! முருகா! என்றே முருகன் அருள்பெற கூவுவோம். முருகனருளால் பகை நீங்கி நட்புறவான வாழ்வை வாழ்வோம்.
..............
Related Articles
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)
Nathan Suryahttp://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html
கலியுகத்தின் மிகச்சிறந்த ஞானி அரங்கனேயாவார்
சிறப்பறிவினை மக்களுக்கு அளித்து முன்னேற்றும் அரங்கனே இவ்வுலகின் கலியுகத்தின் மிகச்சிறந்த ஞானியாவார்
மகான் சட்டநாதர் ஞான சூட்சும நூல்
சத்திய ஜோதியே அரங்கராசா
சத்திய கீர்த்தியே தவராசா
சத்திய மூர்த்தியே சற்குரு தேவா
சன்மார்க்க யோகியே ஞான தேசிகா
தேசிகாய நமஹ என்று சொல்ல
தீவினை அகன்று மாற்றமும்
தேசிகாய நமஹ என்று சொல்ல
தேவைகள் யாவும் நிறைவேற்றி அருளும்
அருளும் அரங்கா வாழ்க வாழ்க
அளவிலா தருமராசனே வாழ்க
அருளும் மகாயோகியே வாழ்க
அண்ணலே வாழ்கயென வாழ்த்தி
உரைக்கவே சைவ வழி நடந்து
உண்மைபட வாழும் மக்களும்
கரையேற அரங்கன் நிழல்
கண்டாலே போதும் மாற்றமுண்டு
உண்டான புலன் வழி அல்லல்
உடன் அவர்களை விட்டகன்று
கண்டிடுவர் சகலவழி தேற்றம்
கருணை மிகுதீட்சை அரங்கனிடம் ஏற்க
ஏற்கவே எவ்வகை செயலும்
ஏற்றமே தடைகள் ஏது
உற்றதொரு சகல சேவைகளும்
உயர்வாய் செய்து சிறப்பர்
சிறப்பறிவு ஊட்டும் அரங்கனே
சிறந்த கலியுக தவசியே
சிறப்பு வழி காட்டும் அரங்கனே
சிவயோகம் காட்டும் ஞானியே
ஞானி அரங்கன் பெருமையை
ஞான அவதார சூட்சுமத்தை
நானிலத்தில் மக்கள் அறியவே
ஞான சூட்சும நூலில் உரைக்கின்றோம்
உரைக்கவே ஆசானை எண்ணி
உருகி மனதுள் தியானிக்க
குறையிலா எப்புலன் வழியும்
குவலயத்தில் அணுகி அருள் புரிவார்
அருள் பெற்று ஆசான் பெருமை
அகிலமெங்கும் பரப்பி மக்கள்
இருள் நீக்கி ஞான ஒளிகண்டு
இனி பிறவா பேரின்பகதி அடைவீர்
சிறப்பறிவினை மக்களுக்கு அளித்து முன்னேற்றும் அரங்கனே இவ்வுலகின் கலியுகத்தின் மிகச்சிறந்த ஞானியாவார்.
சிறப்பான வழிகளை மக்களுக்கு எடுத்துக் கூறுபவர் மகாஞானி அரங்கனே ஆவார். சிவயோகத்தையும், அதன் தன்மையையும் அதன் சூட்சா சூட்சுமங்களையும் உணர்த்தி கடைத்தேற்றும் சிவயோக ஞானி அரங்கனேயாவார். உயர் ஞானமளித்து உன்னதநிலை கொண்டு சென்று காத்தருள் புரிகின்ற அரங்கரின் பெருமையை அவர் இவ்வுலகினிலே தோன்றிட்ட அவதாரத்தின் இரகசியத்தை ஆறுமுகனாய் அமர்ந்து அரங்கனாய் வெளிப்படுகின்ற விதத்தை அரங்கரின் இரகசியத்தின் பொருளை இவ்வுலக மக்களெல்லாம் தெளிவுடன் அறிந்து தெளிந்து அரங்கனே முருகனென்று உணரவும் அரங்கன் திருவடியைப் பற்றி கடைத்தேற்றிடவே எண்ணியே ஞான சூட்சுமங்களை உலகறிய உரைக்கின்றோம் ஞானிகள் நாங்களெல்லாம்.
உயர் ஞானமளித்து காக்கும் உத்தம மகாஞானயோகி ஆறுமுகனார் அவதாரம், சற்குருநாதர், சொற்குருநாதர், ஞானகுருநாதர், யோககுருநாதர் அரங்கமகா தேசிகனை இவ்வுலகின் எந்த இடத்திலிருந்தும் மக்கள் மனதுள் உருகி உருகி தியானிக்க, தியானிக்கும் அம்மக்கள் விரும்புகின்ற எந்த துறையாயினும் சரி எந்த விதமானாலும் சரி அவரவர் விரும்பிய வண்ணமே அந்தந்த துறைகளிலே வெற்றியையும், அருளையும், உடன் அணுகி அருள் புரிவார் அரங்கமகா தேசிக தாய்.
அத்தகு உயர் ஞான பெருந்தாய் அரங்கன் பெருமைதனை உலகெங்கும் பரப்பி மக்கள் தனது இருள் நீங்கிடும் படியாகவே அரங்கனருள் உலகெங்கும் கூடிடும் வகைதனிலே பரப்பிடுங்கள்.
உலகினில் அரங்கனின் அருள்பெருகி பெருகி ஞானம் பரவி மக்கள் அறியாமை இருள் நீங்கி ஞானஒளி கண்டு இனி பிறவா பேரின்பநிலையை அடைந்து வெற்றி பெறுவீர்கள் என கூறுகிறார் தமது தியான சூட்சுமநூல் மூலம் மகான் சட்டநாதர்.

Monday, 29 August 2016
முருக தரிசனம் பாவவிமோசனம்!
முருகா என்றால் :
வேதாகமங்களெல்லாம் ஓங்கி உயர்ந்து போற்றுகின்ற வேதநாயகன் பரப்பிரம்ம சொரூபியான அருட்பெருஞ்சோதி ஆண்டவர் முருகப்பெருமானே என்பதை உணரலாம். வேதங்களும், ஆகமங்களும், இதிகாசமும், புராணமும், ஞானநூல்களும், உபநிஷத்துக்களும், சாத்திரங்களும், தோத்திரங்களும், பிரபந்தங்களும் இன்னும் பலபலவாய் தோன்றிய வேதாகம நூல்கள் அனைத்தும் அந்த மறைபொருளாய் கால பரியந்தம் தனிலே வெளிப்படுத்தாது மறைக்கப்பட்ட ஆதி ஞானத்தலைவன் அந்தந்த காலத்தின் சூழ்நிலைக்கேற்ப வெவ்வேறு நாமங்களினாலே சொல்லி அழைக்கப்பட்ட நாமங்களின் நாயகன் முருகனே என்றும் அவனே ஞானமளிப்போன் அவனே அனைத்து நாமத்திற்கும் அழைத்த அக்கணமே வந்தருள் செய்து அன்பர் குறை தீர்த்திட்டவனும் எங்கெங்கிருந்து ஏதேது வேண்டினும் அங்கங்கிருந்து அருளுகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராயும் திகழ்ந்தனன் ஆதிமூல நாயகனாம் வேற்படை வேலவனாம் முருகப்பெருமானே என்றும் அறியலாம்.
ஆதலின் மனித மல அறிவின் துணை கொண்டு ஞானிகள் இயற்றிய ஞானநூல்களின் சாரங்களை நமது அறிவினால் உணர முடியாது என்றும், உணர்ந்து அந்த நூல்களில் அந்தந்த ஞானிகள் பின்வரும் திருக்கூட்ட மரபினர் அவர் சார்ந்த துறையின் தன்மையை தெரிந்து கொள்ளவே அவரவர் அனுபவத்தை ஞானானுபவத்தை எழுதி வைத்தனர் என்றும், அந்த அனுபவங்களை உணர்வால்தான் உணரமுடியுமே அன்றி வார்த்தைகளால் உணர முடியாது என்றும் அவர்கள் கண்டு இரசித்த பேரானந்த அனுபவத்தை ஞானநிலை கொண்டே நாமும் அனுபவிக்க முடியும் என்றும் உணர்ந்து ஞானமடைய ஞானிகள் திருவடியே துணையென்றும் ஞானிகள் திருவடி பற்றினாலன்றி ஞானபண்டிதனை அடைதல் இயலாது என்பதையும் உணரப்பெறுவார்கள்.
முருகா! முருகா!! முருகா!!! என்றே செபித்திட செபித்திட முருகன் அருள் கூடி அனைத்து தெய்வங்களின் பெயரினாலும் அழைத்திட்டாலும் அங்கே முன்னின்று அவரவர் விரும்பிய வடிவினிலே அருளுபவன் முருகன் தான் என்றும் அவரவர் செய்திட்ட பாவபுண்ணியத்திற்கு ஏற்பவே அவரவர் வழிபாடு இருக்கும் என்றும் அவரவரும் வினைக்கேற்ப அவர்தம் உள்ளத்து தோன்றும் சிந்தனைகள் மாறி சிலர் சிறுதெய்வ வழிபாட்டிலும், சிலர் பலியிடும் தெய்வங்களையும், சிலர் மும்மூர்த்திகளையும், சிலர் சக்தி வழிபாட்டிலும், சிலர் காளி மாரியம்மன் போன்ற தேவதைகளையும் சிலர் பல மதம் சார்ந்தும் வணங்கிடுவர் என்றும் முற்றுப்பெற்ற ஞானிகளை வணங்கி அருள்பலம் பெற்றவர் தமக்கு அருள்சோதி வடிவினனாக தோன்றி அருள்கின்றவன் அறுபடை வீடு கொண்ட ஆறுமுகனாக தோன்றி அருளி காக்கின்ற அந்த முருகனே அவரவர் வினைக்கேற்ப பன்றியாகவும், நாயாகவும், எருமையாகவும், காளியாகவும் இன்னும் பலபல வடிவினில் சிங்கமாகவும், புலியாகவும், அவரவர் பக்திக்கும் பாவவினைக்கேற்பவும் காட்சி தருகிறான். ஆயினும் அவனது பக்தி உண்மையாய் இருப்பின் அங்கிருந்தும் பெருந்தாயன்பினால் அவன் விரும்பிய வண்ணமே அருளுகின்றனர் முருகன்.
அற்புதமாய் ஆனந்த தரிசனம் பெற்று உயர்ஞானம்தனை பரிசாக பெற்று உயர்வடையக் கூடிய வகையிலே அழகுடை அதியற்புத சோதி வடிவினனாக தோன்றும் ஆறுமுகனை ஞானிகள் துணையிருந்தாலன்றி புண்ணிய பலம் இருந்தாலன்றி, குருவழிகாட்டல் இருந்தாலன்றி, ஞானமார்க்கம் வருகையுற்றால் அன்றி, அன்னதானம் செய்து பிறஉயிர் துன்பம் நீக்கினாலன்றி, சுத்த சைவம் கடைப்பிடித்தாலன்றி பெற இயலாது என்பது சத்தியம் என்பதையும் உணரலாம்.
சோதி வடிவுடை முருக தரிசனம் பாவவிமோசனம்! குறையுடைய சிறு தெய்வ தரிசனம் பாவபெருக்கம்! என்பதையும் முருகன் அருளால் உணரப்பெறுவார்கள்.
ஆக பன்முகம் காட்டும் முருகனை புண்ணிய பலத்தினால், அருள்பலத்தால் முற்றுப்பெற்ற ஞானிகள் உதவியுடன் முருகனை முருகனாக பார்க்க முடியாமல் போனது அவரவர் செய்திட்ட பாவமே என்றும் முருகனை பலவித கோர வடிவினனாக பார்த்து அவனது உண்மை சொரூபம் தனை அறிய ஒட்டாது தடுத்தது நாம் செய்த பாவமே என்றும் உணர்ந்து உண்மை ஞானசொரூப ஞானபண்டித முருகனை தரிசித்திட அயராது நாத்தழும்பேற முருகநாமத்தை சொல்லி சொல்லி பாவம் கழிந்து முருகதரிசனம் பெற வேண்டும் என்ற முயற்சியும் நம்முள் தோன்றும். தோன்றிய அம்முயற்சி முருகனருளால் முருகதரிசனம் கிடைத்திட துணை வரும்.
முருகா! முருகா!! என்று விடாது சொல்லி சொல்லி முருகனை நெஞ்சார நினையுங்கள். முருகனை முருகனாக பார்த்து மகிழ்ந்து ஞானம்தனை அவனிடத்து வரமாய் பெறுங்கள்.

Saturday, 27 August 2016
அரங்கனே உலகின் ஒரே ஒரு ஞானகுரு
முருகா என்றால் :
முருகன் அருள் கூடிடும். முருகனருள் கூடிட கூடிட வழிநடத்துவோன் அகத்தீசன்தான் என்றே உணர்த்தப்படுவர். அகத்தீசன் அருள் கொண்டே முருகனருள் பெறுதல் இயலும் என்றறியும் அறிவும் தானே வரும். அந்த அகத்தீசனோ அரங்கன் உடன் உறைகின்றான். அந்த அரங்கனுள்ளே ஆறுமுகன் உள்ளமர்ந்தான்.
அந்த ஆறுமுகனோ அரங்கனாய் அவதரித்து அரூபத்திலே ஆறுமுகனாய் ரூபத்திலே அரங்கனாய் பதினெட்டு சித்தர்கள் ஒன்று கூடிய தோற்ற தூல தேகம் தாங்கி நிற்கின்றனன் என்ற உண்மையை உணரப் பெறுவார்கள்.
பதினெட்டு சித்தர்கள் கூடிய தேகமும், ஆறுமுகனார் உள்ளமர்ந்து அரங்கனாய் வெளிப்பட்ட உலகின் ஒரே மகாஞானயோக நிலை நிற்கின்றவர் மகான் அரங்கன் மட்டுமே என்ற உள்ளுணர்வு மிகும்.
மேலும் ஆறுமுகனை வணங்க வணங்க அவனருள் கூடிட ஆறுமுகன் ஒளிதேகம் கொண்டவன். உலகின் எல்லா ஞானிகளும் அவனருள் பெற்று சோதி தேகம் பெற்று ஒளி வடிவினராகி விட்டபடியினாலே அவர்களால் மனிதனின் புறக்கண்களுக்கு அகப்படார். அவர்களை இந்த ஊனக்கண் கொண்டு காண இயலாது. அவர்களால் மனிதனுடன் நேரடியாக பேசி புரியவைக்க இயலாது என்பதையும் உணர்வர். ஞானிகளும், அகத்தீசனும் ஞானத்தலைவனும் மனிதனின் அறிவினில் சார்ந்தே உணர்த்த உணர முடியும் என்றும் ஆறுமுகனோ, அகத்தீசனோ, ஞானிகளோ நம்மை சார்ந்து உணர்த்த உணரும் வாய்ப்பை நாம் இன்னும் பெறவில்லை என்றும் உணரப்பெறுவார்கள்.
ஆதலின் ஆறுமுகன் உள்ளமர் அரங்கனே இன்றைக்கு உலகிலுள்ள எழுநூறுகோடிக்கும் மேலான மக்களுள் ஞானம் உரைக்கவல்ல உபதேச ஞானகுரு என்பதையும் அவரே சொற்குரு என்பதையும் அவரே சற்குரு என்பதையும் அவரே ஞானகுரு என்பதையும் உணர்த்தப்பட்டு அரங்கனருளாலேதான் கலியுகம் ஞானம் பெற இயலும் என்றே மறுக்க முடியாத உண்மையையும் உணரப்பெறுவார்கள்.
முருகா! முருகா!! முருகா!! என்றே மனமுருகி முருகனடியைப் பற்றிடுங்கள்! முற்றுப்பெற்ற ஞானிகள் தம் தொடர்பினையும் மூலகுருவின் நிலையையும் உணர்ந்து குருஅருள் பெறும் மார்க்கம் தனை உணரப்பெற்று குருஅருள் பெற்று ஞானம் அடைவீர்கள்.
-மகான் கௌதமர்

Thursday, 25 August 2016
ஏழுவகையான திரைகளை விலக்குவது எப்படி?
முருகா என்றால்
“ஏழுவகை தாதுக்களைப் பற்றியும் ஏழுவகை தாதுக்கள் ஏழுவகையான திரைகளாக மாறியது எப்படி என்பதையும் அறிந்தும், அறிந்த பின் நம்முள் உள்ள அருட்பெருஞ்சோதியை மறைக்கின்ற அந்த திரைகளை முருகன் அருள் பெற்று மெல்ல மெல்ல நீக்குகின்ற உபாயத்தையும் அறியலாம். உபாயம் அறிந்து ஞானிகள் அருளால் மெல்ல மெல்ல நீக்கிட வழிவகையையும் அதை குருஅருளால் பெறுகின்ற வகையையும் அறிந்து
தெளிவடையலாம். தெளிவின் முடிவாக அஞ்ஞான காசமாகிய அஞ்ஞானம் எனும் இருள் சூழ்ந்த திரைகளை உணர்ந்தும் அதை விலக்குவதற்கான உபாயத்தினையும் அறியலாம்.
முருகன் அருள் கூடிட கூடிட அந்த அழுத்தமான இருள் திரையை விலக்குதற்கும் அந்த திரையின் தன்மையையும் அறிந்து விலக்கி அருள் ஒளி தோன்றிடச் செய்திட ஜீவதயவால் மட்டுமே முடியும் என்றும் அந்த ஜீவதயவு தம்முள் தோன்றி திரைவிலக்கும் வல்லமை பெற்றிட புண்ணியங்கள் செய்வதாலும் அன்னதானம் செய்வதாலும் தோன்றுகின்ற பரோபகார புண்ணிய பலத்தினாலும் ஜீவர்களின் ஆசியினாலும் தோன்றும் அருள் பேரொளி ஆற்றலே நம்முள் ஜீவஒளியை தோன்றிடச் செய்து ஜீவதயவை பெருக்கி அந்த ஜீவதயவே ஜீவ ஒளியாக மாறி அஞ்ஞான காசமாகிய இருண்ட இரும்பு திரையையும் கரைத்து விலக்கி நம்முள் அருள் ஜோதியை தோன்றிடச் செய்து அருள் பேரொளியாய் விளங்கிடச் செய்திடும் என்ற ஜீவ பரம இரகசியத்தையும் அறிந்து கொண்டு குருஅருளால் அத்தகைய தன்மை அடையவும் கூடிய சூழ்நிலைதனை அமையவும் பெறலாம்.
குருஅருளும் திருஅருளும் கூடிட அந்த சூழ்நிலை அமைந்து தொடர்ந்து முருகன் அருள் பலம் கூடிட கூடிட குருமுகத்தான் ஞானத்தலைவன் முருகனே குருவாக வந்துமே புண்ணியங்கள் மிகுந்து செய்திடவும் அன்னதானங்கள் மிகுந்திட செய்திடும் வாய்ப்பை நல்கி அற்புதமாய் ஜீவர்களின் ஆசியை அளவிறந்து பெற்றிட செய்து அவரே அவர் தம்முள் சார்ந்துமே திரைகள்தனை முழுதுமாக நீக்கிட நீக்கிட திரைகள் அனைத்தும் விலகிட ஜீவதயவு பெருகி பெருகி பேரொளியாய் சுடர்விட்டு பிரகாசித்து நம்முள்ளே எழுந்து சுயஞ்சோதி அருட்பிரகாசமாகவே ஆகி பரஞ்சோதியாக தோன்றியே அவர் தம்மை அருட் கடலில் ஆழ்த்தி
அருட்பெருஞ் சோதியாகவே ஆக்கி ஆறுமுகனார் உடன் கலந்திட அற்புத பேரொளியாகியே அகண்ட பேரண்ட பேரொளியாக ஆகி என்றும் நீங்கா பேரின்ப நிலைதனை அளித்திடும்.”
இந்த மகோன்னத நிலைதனை அடைய நம்மால் இயலாது என்றே வாளாவிருக்கக் கூடாது. நம்மால் முடிந்த அளவு தானதருமங்களை செய்து நாம் பெறும் அந்த சிறிய தயவினைக் கொண்டு மேலும் மேலும் முயற்சித்து முயற்சித்து சிறிய தயவினால் பெருந்தயவை பெற்றிட தளராது முயற்சித்திட வேண்டும்.
இவையனைத்தும் முருகா உனதருள் கூடினாலன்றி அணுவளவும் அசைத்திட முடியாது என்ற உண்மை பேரறிவு மிகுந்து அவர்தம் திருவடிகளிலே சரணடைந்து அந்த முருகனே நமக்கு குருவாய் ஞானகுருவாய் வந்து உபதேசித்து நம்மை கடைத்தேற்றிட வேண்டுமென்றே ஞானகுருநாதனாம் முருகனே நமக்கு சொற்குருவாய் வந்து வழி நடத்திட வேண்டுமென்றே அந்த குருநாதன் முருகன் துணையாலே அந்த ஞானத்தலைவன் முருகன் திருவடியைப் பற்றிடவே அருள் செய்திடவே ஐம்புலன் ஒடுங்கி நிற்க வணங்கி ஆறுமுகன் அருள் பெற்று ஞானம் அடைந்திட வரமும் பெற்றே உயர்வடையலாம்.
முருகப் பெருமானார் அருள் இல்லையேல் உமக்கு அணுவளவும், ஞானம் இல்லை, அருளும் இல்லை, பொருளும் இல்லை, புண்ணியமும் இல்லை, நம்மை வாழ வைத்ததும் அவனே! நாம் வாழ்வதும் அவனருளே! இனி வாழப்போவதும் அவனருளாலே! கந்தனை மறவாதிருங்கள்! கடைத்தேற்றிக் கொள்ளுங்கள்! காலம் கடத்தாதீர்கள்.

ஆன்மா எவ்வாறு சிறைப்படுகிறது?
முருகா என்றால்,
மும்மலக்குற்றத்திற்கு காரணமானதை அறிந்து மும்மலக் குற்றத்தை முருகன் அருளால் நீக்கி அறயாமையினின்று விடுபட்டு தெளிந்த அறிவை பெற்று நிலையற்ற தொடர்பிறவியை வென்று நிலையான மரணமில்லாப் பெருவாழ்வை பெறலாம் என்று உணர்வான்.
நாம் காணும் அனைத்தும் நிலையற்றவைதான். இந்த நிலையற்ற பொருளெல்லாம் ஒரு கால பரியந்தத்தில் அதனதன் தன்மைக்கேற்ப அழியத்தான் போகிறது என்ற உண்மையை உணர்ந்திடுவான் முருகனை போற்றும் முருகபக்தன்.
ஆயினும் நிலையற்ற எல்லா பொருள்களும் கண்டிப்பாக நிலையான ஒன்றிலிருந்துதான், தோன்றியிருக்க வேண்டும் என்றும் நிலையான ஒன்றிலிருந்து தோன்றிய அவையெல்லாம் அதனதன் தன்மைக்கேற்ப செயல், வினை வடிவமாகி பல்வேறு சூழ்நிலைக்கு ஆட்பட்டு அதனதன் சூழ்நிலைக்கேற்ப காலத்தின் மாற்றத்தினால் படிப்படியாக தோன்றியது போலவே தேய்ந்து மறைந்தும் பின் தோன்றுகின்றன என்பதையும் அறிகின்றான்.
முருகா! முருகா! முருகா! என்றே சிந்தையெல்லாம் முருகனின் திருநாமம்தனை ஏற்றி தொழுது தொழுது வழிபட வழிபட தோற்ற இரகசியமும் அவனுள்ளே முருகனே தோன்றி உணர்த்திட அறியப்பெறுவான்.
எது என்றும் அழிவில்லாத பொருளாய் இருக்கின்றதோ அதுவே நிலையானது என்றும், அதுவே பரம்பொருள் என்றும் அறிகின்றான். நிலையான அந்த பொருள் சிற்றணுவாகிறது, சிற்றணுவாகிய அதுவே ஆன்மா என்றே பெயர் பெற்று பரம்பொருளாய் ஆதி வஸ்துவினின்று பிரிந்திட அது தனக்கென்று ஒரு அணுக்கூட்டத்தை தனது கவர்ச்சியினால் தோற்றுவிக்கிறது. நிலையான அந்த ஆன்மா நிலையற்ற அணுக்களால் ஆன ஒரு கூட்டினை தனது ஈர்ப்பினால் கட்டுகிறது. அதற்கு உண்டான அனைத்து கட்டளைகளும் அந்த ஆன்மாவின் உள்ளேயே புதைந்துள்ளது என்பது இதுவரை யாரும் அறியமுடியாத அறிவிற்கும் எட்டாததொரு மிக பிரம்மாண்டமான சூட்சுமமாகும்.
அப்படி தோன்றிய ஆன்மாவானது மீண்டும் மீண்டும் தோன்றுகின்ற கூட்டினை ஸ்திரப்படுத்தி தம்மோடு அந்த கூட்டினை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ள முடியாமல் அந்தந்த தேர்ந்தெடுத்த உருவாக்கிய கூட்டின் தன்மைக்கேற்ப கால வித்தியாசங்களில் ஆன்மாவிற்கும் கூட்டிற்கும் உள்ள தொடர்பு அறுபட்டு போவதால் கூட்டைவிட்டு ஆன்மா பிரிகிறது. ஆன்மா பிரிந்த உடனே அதுவரை ஆன்மாவால் ஈர்த்து வைக்கப்பட்ட அந்த கூடு ஈர்ப்பு மையம் விலகியதால் நெறிப்படுத்தும் கட்டளை கேந்திரம் விலகியதால் ஒன்றுடன் ஒன்று இணைய இயலாத அணுக்களெல்லாம் அவைஅவை பிரிந்து பிரிந்து எங்கிருந்து கூடியதோ அங்கேயே பிரிந்து செல்கின்றன.
இப்படி ஆன்மா பரமாணுவினின்று தோன்றி தனக்கென இதுவரை ஒரு கூடு கிடைக்காமல் அலைந்து அலைந்து பல்வேறு கூடுகளிலே கட்டி தஞ்சம் புகுகிறது. ஆனால் எங்கும் நிரந்திர கூடு கிடைக்கவில்லை என்பதையும் ஒரேஒரு அணுத்திரளில் மட்டுமே ஒரே ஒரு அணுக் கூட்டமைப்பில் மட்டுமே ஆன்மாவும் அந்த அணுக்கூட்டமைப்பின் அணுக்களும் ஒன்று கூடுவதற்கான வாய்ப்பை உள்ளதை உணர்கிறது. அந்த கூட்டமைப்பே மனித தேகம் என்ற பெயர் பெற்றது.
இப்படி இயக்கமற்ற ஒன்றிலிருந்து தோன்றிய ஆன்மாதான், பல்லாயிரங்கோடி ஆண்டுகளாக எடுத்த பலப்பல தேகத்தின் செயல்பாட்டினால் அது அத்தேகத்தின் வாயிலாய் தோன்றி செயல் பதிவுகளையும் (வினைப்பதிவு) தன்னுடனே எடுத்து செல்வதால் அடுத்த அணுக்கூட்டமான தேகத்தை அமைத்திட சார்ந்திடும்போது அந்த ஆன்மா பெற்ற வினைப்பதிவும் தேக அணுக்களை சார்ந்து தேகத்தின் அணுக்களிலும் தன்வினைப்பதிவை பதிப்பதால் எக்காலத்தும் அணுக்கூட்டமும் ஆன்மாவும் ஒன்றிணைய வாய்ப்பே இல்லாமல் போகிறது.
ஆன்மாவின் செயல்களால் பிற ஆன்மாக்கள் பட்ட துன்பங்களினால் பிற ஆன்மாக்களிலிருந்து வெளிப்பட்ட பதிவுகளெல்லாம் இந்த ஆன்மாவை தாக்குவதால் பதிவுகளில் குற்றம் ஏற்பட்டு ஆன்மாவை மாசுள்ளதாக்கி தொடர்ந்து தொடர்ந்து வருவதினாலே ஆன்மா மும்மலக்குற்றம் எனும் சிறையினுள் அகப்பட்டு மீள முடியாமல் தவிக்கிறது. அதுவே ஒரு தேகத்தினோடு ஆன்மா இரண்டற கலக்க முடியாமல் அறியாமையில் மூழ்கி, கலக்க வழி தெரியாது தடுமாறுகின்றது.
இப்படி தடுமாறுகின்ற ஆன்மாக்கள் முற்றுப்பெறுவதற்கான இரண்டற கலப்பதற்கான ஏதுவான மனிததேகத்தினுள் பிரவேசித்து அந்த அணுதிரள்களிலே அணுவுக்கு அணுவாய் கலந்துள்ள மும்மலக் கசடை நீக்கிட ஒரு உபாயம்தனை அற்புதமான வேதியியல்தனை அதிசூட்சா சூட்சுமம் மிக்கதொரு வழிமுறையை கண்டு பிடித்து சேராத தேகத்தை ஆன்மாவுடன் சேர்த்து வெற்றி கண்டான் ஆதித்தலைவன் முருகப்பெருமான் என்பதையும் முழுதும் தன் அறிவினால் உணர்கிறான் முருகனின் ஆசி பெற்ற முருகபக்தன்.
பிறஉயிர்களுக்கு செய்திட்ட தீயசெயல்களே வினைப்பதிவுகளாக மாறி, நிலையான ஆன்மாவில் பதிந்திட அந்த ஆன்மா மாசுபடுகிறது. அதனால் மாசு மிகுந்த தேகமே அமைகிறது. ஆதலின் மாசுபட்ட ஆன்மாவை சுத்தி செய்தால் தேகமும் சுத்தியாகும் என்பதை உணர்த்திடுவான் ஆதிதலைவன் முருகப்பெருமான்.
ஆதலின் பிற உயிர்களுக்கு செய்திட்ட துன்பங்கள் பாவினைகளாக பதிந்திட, பிறஉயிர்களுக்கு செய்கின்ற உபகாரம் தூயவினைகளாக நற்பதிவுகளாக பதியும் நற்பதிவுகள் எல்லாம் ஒன்று கூடிட ஜீவதயவினால் ஆனதொரு சாவி, அந்த ஆன்மாவிற்குள் கிடைத்திடும் ஆன்மகுற்றம் நீங்க நீங்க அந்த ஜீவர்கள் வாழ்த்துகின்ற வாழ்த்து எனும் இயற்கை சார்ந்த அடிப்படை நல்வினை பதிவுகளெல்லாம் நல்ல செயல்செய்யும் ஆன்மாவினை சாரச்சார ஆன்ம ஒளி பெற்று அதன் விளைவாய் அது பெற்ற தேகத்தினிலே அணுக்களை சேர ஒட்டாது தடுக்கின்ற மும்மலக்குற்றமெனும் கசடை நீக்கவல்ல ஒரு சாவியை, அதாவது அடிப்படை பதிவுகளை வெளிக் கொணர்கிறது.
ஒன்று கூடாத அணுத்திரளை ஆன்மாவுடன் ஒன்று கூட்டிட ஏற்கனவே ஒன்று கூடிட்ட ஆன்மா ஒன்றினது வழி நடத்தல் அவசியமாகிறது. அதன் மூலப்பிரதி தேவைப்படுகிறது.
அதுவே ஞானிகளின் ஆன்மாவாகும். அதுவே முற்றுப்பெற்றவர் தம் ஆன்மாவாகும். அந்த முற்றுப்பெற்ற ஞானிகளின் வழி நடத்துதலினாலே இந்த ஆன்மா சேராத அணுக் கூட்டத்தினின்று எப்படி கசடை நீக்குவது என்று கற்றுத்தெளிந்து படிப்படியாக படிப்படியாக பல்லாயிரமாண்டு சுமார் 27,000 வருடங்களாக பாடுபட்டு பாடுபட்டு மீள்வினைக்கு ஆளாகாமல் ஞானிகள் துணையுடன் வந்து வந்து தேக அணுக்கூட்டத்தில் உள்ள கசடை நீக்கி நீக்கி தூய்மையான அணுக்களால் கூடிய சுத்த தேகம்தனை இறுதியில் பெறுகிறது.
பின்னரே ஞானத்தலைவன் ஆறுமுகனார் ஒளி பொருந்திய அந்த பேரான்மா முன்னிலையிலே ஞானிகள் ஆன்மாக்களெல்லாம் ஒன்றுகூடி நிற்க, இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்மாவினுள் பரமானந்த நிலைநிற்கும் ஆறுமுகனார் ஆன்மாவின் உட்பிரவேசத்தினால் ஆன்ம சுத்தி பெற்று அந்த ஆன்மா பெற்ற தேகக்கசடை முருகன் நீக்குவான்.
ஆறுமுகனார் தேகக்கசடை ஜீவகாருண்யமாகிய ஜீவதயவு எனும் பிற உயிர்கள் நமக்களிக்கின்ற மகிழ்வின் கூறுகளாய் ஆன நல்வினை பதிவுகளைக் கொண்டே இந்த கசடான தேகத்தை தூய்மைப்படுத்துவதினால் முதலில் களங்கப்பட்ட ஆன்மாவை சதா ஜீவதயவின் பெருக்கத்தை அளவிறந்து பெறுதற்காக ஏராளமான புண்ணியங்களை மிகுந்து செய்திட தூண்டி பிற உயிர்களின் ஆசிகளை பெறச்செய்து பெறச்செய்து ஞானவீட்டிற்கான திறவுகோலை பெற்றுத் தருவான் ஞானபண்டிதன்.
முருகா! முருகா! முருகா! முருகா! முருகா! முருகா! என்றே அயராது நாத்தழும்பேற நாமம்தனை சொல்லி சொல்லி ஜீவதயவின் சிகரம், ஆதிமூல தலைவன் முருகன் ஆசி பெறப்பெற ஜீவதயவுடை முருகன் அவன் தம்முள்ளே ஜீவதயவாகிய ஞானவீட்டின் திறவுகோல் கொண்டு ஞானமடையச் செய்து ஆன்மா சுத்தி பெறச் செய்து ஒரு சிறப்பான தனித்தன்மையுடைய வேதியியலால் இணையாத அணுக்கூட்டத்தை குற்றம் நீக்கி இணைத்திட துணைபுரிந்து இணைத்து ஆன்மாவை விட்டு மீண்டும் பிரியாத வகையிலே ஒன்று கூட்டி தருவான் ஞானபண்டிதன்.
ஜீவதயவின் அருள் கூடவே ஞானபண்டிதன் அருளைப் பெற்று அந்த ஆன்மாவும் ஆன்மாவிற்கு உண்டான அணுத்திரள் கூட்டமைப்பாம் தேகமும் ஒன்றென கலந்து ஆன்மா எந்த ஆதிவஸ்துவினின்று தோன்றியதோ அதைப் போன்றே பஞ்சபூதத்தினால் பெறப்பட்ட அணுத்திரள் கூட்டமான தூலதேகமும் அகதேகமாக அணுதேகமாக ஒளிதேகமாக மாறி ஆன்மாவைப் போன்றே அதுவும் ஆகினபடியால் அது மீண்டும் எக்காலத்தும் ஆன்மாவை விட்டு பிரியாது, தோன்றிய பஞ்சபூதத்தின் தன்மைக்கு அப்பாற்பட்டும் பஞ்சபூதத்துவினின்று விடுபட்டு ஆதி வஸ்துவாய் மாறுகின்றபடியாலே ஆன்மா தேகம் விட்டு பிரிதலான மரணம் என்ற ஒன்று அந்த ஆன்மாவிற்கோ அது பெற்ற உடலிற்கோ ஏற்படாமல் அந்த ஆன்மா என்றுமே அழியாத ஆன்மாவை விட்டு பிரியாத மரணமில்லா தேகத்தைப் பெற்று மரணமில்லாப் பெருவாழ்வை ஜீவதயவினால் மட்டுமே இறுதியில் அடைகிறது.
இப்படி ஆன்மா மரணமில்லாப் பெருவாழ்வை பெறுவதற்கு அதற்கு சாவியாக இருப்பதும் தேகக்கசடை நீக்க பயன்படுவதும் ஜீவதயவு எனும் ஜீவர்கள்பால் செலுத்துகின்ற பரிவே காரணமாய் இருப்பதினாலே அந்த ஜீவதயவே இறுதியில் மரணமில்லாப் பெருவாழ்வாக தூயதேகமாக ஆதிமூல வஸ்துவிற்கு அடிப்படையாக இருப்பதையும் அறிவான் முருகபக்தன்.
அறிய அறிய, தெளிய தெளிய முருகன்மீது பக்தி கூடி கூடி அந்த ஜீவதயவு என்பதே முருகனின் அருளாய் வெளிப்படுகிறது என்பதையும் உணர்வான் ஜீவதயவின் வடிவமே முருகன் என்றும் முருகனின் வடிவமே ஜீவதயவு என்றும் ஜீவதயவின் பேராற்றலே அருட்பெருஞ்சோதியாய் தோன்றுகிறது என்பதையும் உணர்ந்து ஜீவதயவைப் பெருக்கி கடைத்தேறுவான் முருகபக்தன்.
வேலனை போற்றுவோம்
காலனை வெல்லுவோம்.

Saturday, 20 August 2016
ஜீவதயவு ஞானவீட்டின் திறவுகோல்
முருகா என்றால் :
சாதாரண மனிதன் ஞானியாகுவதற்கு முதல் தடையாய் இருப்பது உயிர்க்கொலை செய்து அதன் மாமிசத்தை உண்டதால் வந்த பாவம்தான் என்ற உண்மையை உணர்ந்து உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சைவஉணவை மேற்கொண்டு ஞானம்பெற முருகன் திருவடியை பற்றிட வேண்டுமென்ற மனஉறுதி தோன்றும்.
இயற்கை மனிதனை தோற்றுவிக்கும்போதே அந்த மனிததேகத்தினை சைவஉணவிற்கு உகந்ததாகத்தான் தோற்றுவித்தது. அவனது செரிமான மண்டலத்தில்கூட மாமிசத்தை செரிப்பதற்கான எந்த சிறப்பு அமைப்பும் இல்லை. ஏனெனில் ஞானம் பெறுவதற்காகவே உருவாக்கப்பட்ட சிறப்பான இந்த மனித தேகத்தில் பாவம் சேர்ந்து விடலாகாது என்பதினாலேயே இயற்கை ஜீவதயவின் அருளைப் பெற ஏதுவாக சைவஉணவை மேற்கொண்டு சாந்தமனநிலை கொண்டு ஜீவதயவினால் ஒளிதேகம் பெற்றிடவே இந்த தேகத்தை சாந்த தேகமாக படைத்திட்டது.
ஆனால் இயற்கையின் கொடையை அதன் அற்புதம் உணரா மனிதன் சுவைக்கு அடிமையாகி உணவு தேடலில் ருசியின் தன்மைக்கு அடிமையாகி எளிமையாக கிடைக்கிறது, சத்தானதாக உள்ளது என கற்பனை செய்து மாமிசத்தை சாப்பிட ஆரம்பித்தான்.
என்றைக்கு மனிதன் உயிர்க்கொலை செய்து அதன் மாமிசத்தை சாப்பிட ஆரம்பித்தானோ அன்று வந்தது அவனது வினைத்தொடர்ச்சி. அன்று வந்தது அவனது அதீத பாவச்சுமை. அன்று வந்தது அறியாமையெனும் அதீத இருள். அன்று தான் இறைவனுடன் கொண்டிருந்த அற்புத தொடர்பு துண்டிக்கப்பட்டு அறியாமை எனும் இருளில் மூழ்கி ஒளிபொருந்திய தூய சாந்தஅறிவு மழுங்கி மிருக அறிவு ஓங்கி மும்மலக் குற்றத்துள் ஆழஆழ புதைந்தனன் மனிதன்.
அந்தோ பரிதாபம்! தான் என்ன செய்கின்றோம் என்றே அறியாமல், அறியாமையில் உழன்று உழன்று உயிர்க்கொலை செய்த பாவம் இன்றுவரை அவனை மீளவிடாமல் மீண்டும் மீண்டும் பாவத்தில் தான் தள்ளுகிறதே தவிர அவனை மீண்டு வரவிடவே இல்லை.
ஞானம்பெற தலையாய குணம் ஜீவதயவு, ஜீவதயவு ஞானவீட்டின் திறவுகோல். ஆதலின் ஞானம்பெற விரும்புகிறவன் ஜீவதயவின் முதல் எதிரியான உயிர்க்கொலையை கண்டிப்பாக இனி அவனது வாழ்நாளில் ஒருமுறை கூட செய்திடல் ஆகாது. ஞானம்பெற விரும்புகின்ற ஒருவன் ஜீவதயவாகிய ஞானவீட்டின் திறவுகோலை தொலைத்துவிட்டு ஞானம்பெற விழைவது எப்படி சாத்தியம்.
உயிர்க்கொலை செய்பவனுக்கு எப்படி ஜீவதயவு வரும்? ஜீவதயவை தொலைத்தவனுக்கு ஞானம் எப்படி வரும்?
ஆதலின் ஞானம்பெற விரும்புகிறவன் முதன்முதலில் ஜீவதயவை பெற ஏதுவாக உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து ஞானிகள் திருவடியைப் பற்றினால் தான் ஞானத்திற்குரிய சிறப்பறிவை தலைவன் முருகன் அருளால் பெறலாம்.
தாவரங்களும் உயிர்தானே அது உயிர் கொலையில்லையா என்பார் அறிவாளி சிலர். ஓரறிவு உயிர்தனை கொன்றால் பாவம்தான், அதுவும் உயிர்தான். ஆயின் மனித முயற்சியால் ஒருபடி நெல்லை உண்ட மனிதன். அதே தனது சுய முயற்சியால் அதன் முளைக்கா வித்தை அது முளைப்பதற்கு ஏதுவாக நிலம்தனை பண்படுத்தி பதப்படுத்தி நீர்விட்டு, உரமிட்டு அந்த ஒரு உயிருக்கு பதிலாக உபகாரமாக ஆயிரம் ஆயிரம் கோடி உயிர்களை அவனது முயற்சியால் தோற்றுவிக்க இயலும். இயற்கை மனிதன் கடைத்தேற்றுவதற்காகவே சைவ உணவையும், அந்த உயிர் பாவம் நீங்க அவனுக்கு ஆறாம் அறிவாகிய பகுத்தறிவின் மூலம் அந்த ஓரறிவின் கொலை பாவம் நீங்க அந்த ஓரறிவு உயிரை உண்டாக்கி பெரும் புண்ணியத்தையும் இணைத்தே தருவித்து தோற்றுவித்தது. ஆனால் ஐந்தறிவு உடைய விலங்கை கொன்றால் மீண்டும் மனிதனால் தோற்றுவிக்கலாகாது.
ஆதலின் உடம்பினின்று உயிர் பிரித்து மகிழ்ந்து சுவை கொட்டி சாப்பிடும் அசைவ உணவினை விட்டு விலகினால் அன்றி உயிர்க்கொலை பாவம் நீங்கினாலன்றி அவனது ஞான முயற்சியில் எத்துணை எத்துணை புண்ணியம் செய்தாலும் கடைத்தேற இயலாது என்பதையும் இறையருள் பெற முடியாது என்பதையும் முருகனது திருஅருள் கொடையால் உணர்வார்கள்.
முருகா! முருகா! முருகா! என்போம் ஜீவதயவின் தலைவன் ஜீவதயாசோதி முருகன் அருளைப் பெறுவோம். ஜீவதயவுடையவராய் ஆகியே ஞானம் பெறுவோம். முருகன் அருளே சிறப்பறிவாய் மாறி ஜீவதயவை நம்முள் தோற்றுவிக்கும்.
..............
மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்
சாதாரண மனிதன் ஞானியாகுவதற்கு முதல் தடையாய் இருப்பது உயிர்க்கொலை செய்து அதன் மாமிசத்தை உண்டதால் வந்த பாவம்தான் என்ற உண்மையை உணர்ந்து உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சைவஉணவை மேற்கொண்டு ஞானம்பெற முருகன் திருவடியை பற்றிட வேண்டுமென்ற மனஉறுதி தோன்றும்.
இயற்கை மனிதனை தோற்றுவிக்கும்போதே அந்த மனிததேகத்தினை சைவஉணவிற்கு உகந்ததாகத்தான் தோற்றுவித்தது. அவனது செரிமான மண்டலத்தில்கூட மாமிசத்தை செரிப்பதற்கான எந்த சிறப்பு அமைப்பும் இல்லை. ஏனெனில் ஞானம் பெறுவதற்காகவே உருவாக்கப்பட்ட சிறப்பான இந்த மனித தேகத்தில் பாவம் சேர்ந்து விடலாகாது என்பதினாலேயே இயற்கை ஜீவதயவின் அருளைப் பெற ஏதுவாக சைவஉணவை மேற்கொண்டு சாந்தமனநிலை கொண்டு ஜீவதயவினால் ஒளிதேகம் பெற்றிடவே இந்த தேகத்தை சாந்த தேகமாக படைத்திட்டது.
ஆனால் இயற்கையின் கொடையை அதன் அற்புதம் உணரா மனிதன் சுவைக்கு அடிமையாகி உணவு தேடலில் ருசியின் தன்மைக்கு அடிமையாகி எளிமையாக கிடைக்கிறது, சத்தானதாக உள்ளது என கற்பனை செய்து மாமிசத்தை சாப்பிட ஆரம்பித்தான்.
என்றைக்கு மனிதன் உயிர்க்கொலை செய்து அதன் மாமிசத்தை சாப்பிட ஆரம்பித்தானோ அன்று வந்தது அவனது வினைத்தொடர்ச்சி. அன்று வந்தது அவனது அதீத பாவச்சுமை. அன்று வந்தது அறியாமையெனும் அதீத இருள். அன்று தான் இறைவனுடன் கொண்டிருந்த அற்புத தொடர்பு துண்டிக்கப்பட்டு அறியாமை எனும் இருளில் மூழ்கி ஒளிபொருந்திய தூய சாந்தஅறிவு மழுங்கி மிருக அறிவு ஓங்கி மும்மலக் குற்றத்துள் ஆழஆழ புதைந்தனன் மனிதன்.
அந்தோ பரிதாபம்! தான் என்ன செய்கின்றோம் என்றே அறியாமல், அறியாமையில் உழன்று உழன்று உயிர்க்கொலை செய்த பாவம் இன்றுவரை அவனை மீளவிடாமல் மீண்டும் மீண்டும் பாவத்தில் தான் தள்ளுகிறதே தவிர அவனை மீண்டு வரவிடவே இல்லை.
ஞானம்பெற தலையாய குணம் ஜீவதயவு, ஜீவதயவு ஞானவீட்டின் திறவுகோல். ஆதலின் ஞானம்பெற விரும்புகிறவன் ஜீவதயவின் முதல் எதிரியான உயிர்க்கொலையை கண்டிப்பாக இனி அவனது வாழ்நாளில் ஒருமுறை கூட செய்திடல் ஆகாது. ஞானம்பெற விரும்புகின்ற ஒருவன் ஜீவதயவாகிய ஞானவீட்டின் திறவுகோலை தொலைத்துவிட்டு ஞானம்பெற விழைவது எப்படி சாத்தியம்.
உயிர்க்கொலை செய்பவனுக்கு எப்படி ஜீவதயவு வரும்? ஜீவதயவை தொலைத்தவனுக்கு ஞானம் எப்படி வரும்?
ஆதலின் ஞானம்பெற விரும்புகிறவன் முதன்முதலில் ஜீவதயவை பெற ஏதுவாக உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து ஞானிகள் திருவடியைப் பற்றினால் தான் ஞானத்திற்குரிய சிறப்பறிவை தலைவன் முருகன் அருளால் பெறலாம்.
தாவரங்களும் உயிர்தானே அது உயிர் கொலையில்லையா என்பார் அறிவாளி சிலர். ஓரறிவு உயிர்தனை கொன்றால் பாவம்தான், அதுவும் உயிர்தான். ஆயின் மனித முயற்சியால் ஒருபடி நெல்லை உண்ட மனிதன். அதே தனது சுய முயற்சியால் அதன் முளைக்கா வித்தை அது முளைப்பதற்கு ஏதுவாக நிலம்தனை பண்படுத்தி பதப்படுத்தி நீர்விட்டு, உரமிட்டு அந்த ஒரு உயிருக்கு பதிலாக உபகாரமாக ஆயிரம் ஆயிரம் கோடி உயிர்களை அவனது முயற்சியால் தோற்றுவிக்க இயலும். இயற்கை மனிதன் கடைத்தேற்றுவதற்காகவே சைவ உணவையும், அந்த உயிர் பாவம் நீங்க அவனுக்கு ஆறாம் அறிவாகிய பகுத்தறிவின் மூலம் அந்த ஓரறிவின் கொலை பாவம் நீங்க அந்த ஓரறிவு உயிரை உண்டாக்கி பெரும் புண்ணியத்தையும் இணைத்தே தருவித்து தோற்றுவித்தது. ஆனால் ஐந்தறிவு உடைய விலங்கை கொன்றால் மீண்டும் மனிதனால் தோற்றுவிக்கலாகாது.
ஆதலின் உடம்பினின்று உயிர் பிரித்து மகிழ்ந்து சுவை கொட்டி சாப்பிடும் அசைவ உணவினை விட்டு விலகினால் அன்றி உயிர்க்கொலை பாவம் நீங்கினாலன்றி அவனது ஞான முயற்சியில் எத்துணை எத்துணை புண்ணியம் செய்தாலும் கடைத்தேற இயலாது என்பதையும் இறையருள் பெற முடியாது என்பதையும் முருகனது திருஅருள் கொடையால் உணர்வார்கள்.
முருகா! முருகா! முருகா! என்போம் ஜீவதயவின் தலைவன் ஜீவதயாசோதி முருகன் அருளைப் பெறுவோம். ஜீவதயவுடையவராய் ஆகியே ஞானம் பெறுவோம். முருகன் அருளே சிறப்பறிவாய் மாறி ஜீவதயவை நம்முள் தோற்றுவிக்கும்.
..............
மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்
ஞானம் பெறுதல் மிகமிக நீண்ட பயணம்
முருகா என்றால் :
அன்னதானமும் பூஜையும் அவரவர் ஆன்மலாபத்திற்காக தன்னலமற்று பிரதிபலன் பாராது செய்கின்ற புனிதச் செயல்களாகும் என்றும், அவற்றை பிரதிபலன் கருதி செய்வதினாலே பலனில்லை என்ற உண்மையையும் உணரப்பெறுவார்கள்.
ஒரு மனிதன் காலை எழுந்து உடலில் உள்ள கழிவுகளை காலத்தே வெளியேற்றி பசித்தபோது உடல் வளர்க்க உணவினை உண்டு, உடல்தனை ஆரோக்கியம் கெடாமல் உடம்பிற்கு என்னென்ன வேண்டும்? எது நல்லது? எது கெட்டது? என்று பார்த்து பார்த்து செய்வது போலவே அவனது ஆன்மாவிற்கு என்ன செய்கின்றான் என்றால் ஒன்றுமில்லை.
உடல் காக்க ஏதேதோ செய்து செய்து காக்கும் அவன் அவனது ஆன்மாவிற்கு ஆக்கம் தருகின்றது எவை எவை என்றே தெரியாமல் வெகுபேர் தடுமாறுகின்றனர்.
முருகப்பெருமானை வணங்க வணங்க முருகன் அருள்கூடி அருள் பெறும் அன்பர்தாம் அவரவர் செய்த செயல்களிலே கர்வம் கொள்ளாது அவர்தம்மை ஆறுமுகன் காப்பான். உடல்காக்க உணவு உண்டு மருத்துவம் செய்வது என்ற பலவழிதனிலே உடலை காத்து வரும் மனிதன் ஆறுமுகனார் அருள்கூடிட பல ஞானிகளுக்கு அறிந்தோ அறியாமலோ செய்திட்ட தொண்டின் பலனினால் அவன்தன் ஆன்ம அறிவு தூண்டப்பட்டு உடல் வளர்த்தல் மட்டுமே வாழ்வன்று, உடம்பின்கண் உறையும் ஆன்மாவையும் ஆக்கம் பெறச் செய்ய வேண்டுமென்ற அருளுணர்வு மேலோங்கும்.
அவனின் அந்த அருளுணர்வு ஆறுமுகனாம் முருகப்பெருமான் அவனுக்களித்த அருள் பிட்சையாகும். அந்த அருள் பிட்சையே அவன் அவனது பிறப்பினிலே மனிதனாய் பிறந்ததின் பலன்தனை பெறும் பயனாம். அருள்பிட்சை பெற்றவன் உயிர்க்கொலை தவிர்த்தும், புலால் மறுத்தும் வாழ்ந்து, உயிர்க்கொலை பாவத்திலிருந்து தப்பிக்கின்றானோ அதுவே அவன் தனக்கு ஆண்டவன் ஆறுமுகன் செய்கின்ற அளவிலாத கருணையாகும். பிறர் தமக்கு அன்னதானம் செய்திட வேண்டுமென்ற உணர்வே உயிர்க்கொலை தவிர்த்தால்தான் வரும். உயிர்க்கொலை தவிர்த்தது முருகனின் அருள்பிட்சை.
அன்னதானம் செய்திட வேண்டும், புண்ணியம் சேர்க்க வேண்டும், பூசை செய்திட வேண்டும், இறையருள் பெற்றிட வேண்டுமென்ற உணர்வு வருவதே பரப்பிரம்மம் முருகன் அளவிலாத கருணைக்கொண்டு அவனுக்கு அளித்திட்ட பிட்சையாகும். பிட்சைபெற்ற நாம் அருளாளன் முருகன் திருவடியை மனமுருகி பூசித்திட வேண்டுமே அன்றி பூசை செய்துவிட்டோம் அன்னதானம் செய்துவிட்டோம் என்று வியப்பது தன்னை வியந்து பாராட்டிக் கொள்வது இவை தம்மால் செய்யப்பட்டது, தனது ஆற்றலால், தனது பணத்தால், தனது உழைப்பால், தனது செயலால், தனது அறிவால் செய்தோம் என்று எண்ணுவதே தலைவன் அருள் அவன்பால் குறைகின்றது என்பதை உணர்த்துவதாகும்.
முருகன் போட்ட பிட்சையால் வாழும், பாவம் சூழ்ந்த மனிதவர்க்கம் நமக்கு ஏதோ போனால் போகிறது என்று அருட்பெருஞ்சோதி ஆண்டவன் முருகன் நமக்கு நல்லதை சொல்லித் தந்தான். பிரம்மாண்ட ஞானத்தில் அணுவளவே அன்னதானம் செய்தும் பூஜை செய்தும் தயவை அடையலாம் என்ற உண்மை, அதை தெரிந்து கொண்டு பெரிய பெரிய விஷயங்களை தெரிந்து கொண்டதாக எண்ணி சிலபேர்க்கு அன்னதானம் செய்துவிட்டு ஏதோ சிறிது பூசை செய்துவிட்டு பெரியதாக இறைவனை மகிழ்வித்து விட்டதாக மனதினுள் கற்பனை செய்து கொண்டு நான் அன்னதானம் செய்தேன், மனமுருகி பூசை செய்தேன், ஒன்றுமே நடக்கவில்லை என எதிர்பார்ப்பது மலையை உடைக்க சிறுகடுகை தெளித்துவிட்டு மலை உடையும் என எதிர்பார்ப்பதை போலானதாகும்.
அவனவன் செய்திட்ட பாவம்தான் எவ்வளவு எவ்வளவு. அவனவன் செய்திட்ட பாவச்சுமையின் அளவு கணக்கிலடங்காது. அவ்வளவு பாவச்சுமைகள் இருக்கும்போது சிறிதளவு புண்ணியம் செய்துவிட்டு சிறிதளவு பூசை செய்து விட்டு பெரும் பலனை எதிர்பார்ப்பது தவறு என்ற உண்மை உணர்வு முருகப்பெருமானை பூசை செய்வதால் வரும்.
உணர்வு வந்துமே ஆறுமுகன் திருவடியே கதியென்று பற்றினால் அன்றி நாம் செய்திட்ட பாவத்திலிருந்து விடுபட முடியாது என்றும் உடம்பை வளர்க்க உணவு உண்பதும் உடம்பின் நலன் பெற கழிவு நீக்கமும் அவசியமான கடவுளின் கட்டளை என்பதைப் போலவே. ஆன்ம பெருக்கம் ஆன்ம வளர்ச்சிக்கு புண்ணியமும் அருளும் தேவை என்பதினாலே அன்னதானம் செய்து புண்ணியம் பெருக்கி ஆன்மபலத்தையும் முருகப்பெருமான் திருவடியைப் பற்றி பூசித்து அவனருள் பெற்று ஆன்ம விளக்கம் பெறுதலும் நித்திய கடமைகள் என்ற உண்மை உணர்வு மிகுந்து அன்னதானமும் பூசைகளும் பிரதிபலன் எதிர்பாராது செய்திட வேண்டுமென்ற உள்ளுணர்வு மிகும்.
அன்னதானமும் பூசையும் ஆன்மலாபம் பெறுவதற்காக முருகப்பெருமானால் உமக்கு அளிக்கப்பட்ட அருள் பிட்சையாகும். அந்த அருள்பிட்சை பெற்றிட்ட நாம் ஞானத்தில் வெகுதொலைவு சென்றதாக கற்பனை பண்ணாமல் மேலும் மேலும் முருகன் திருவடியைப் பற்றிட வேண்டுமென்ற தன்னடக்கமும் நான் செய்ததோ என்றில்லாமல் ஆண்டவ உனது அருளால் சிறிது செய்தேன் ஏற்றருள் புரிவாய், நாயிற் கடையேனாகிய எமது பாவங்களையெல்லாம் ஒழித்து திருவடி பற்றிட அடியேன் எம்மை வழிநடத்துவாய்
ஞானத்தலைவனே என்றே அவனது திருவடியைப் பற்றி உண்மை ஞானம் பெற தூண்டும் ஆறுமுகன் அருள். உணவு உண்பது உடம்பின் நித்திய கடமைகள் போல பூசை செய்வதும், அன்னதானம் செய்வதும் ஆன்ம நித்திய கடமை என்றே உணர்ந்து செய்திடும் பக்குவம் வரும்.
அவரவர் பசிக்கு ஏற்றார்போல உணவு உண்பது போல, அவரவர் தகுதிக்கேற்றார்போலதான், தானதருமங்கள் செய்திட முடியும் என்றும், பசிக்கு ஏற்றார் போலத்தான் உணவு உண்பதைப் போல பக்தியும் ஓரளவிற்குத்தான் செய்திட முடியும்.
அதைவிடுத்து ஓயாமல் பக்தி செய்கிறேன் பேர்வழி என்று தொடர்ந்து மனம் ஓய்ந்து போகுமளவிற்கு பக்தி என்ற பெயரில் பிடிவாதம் முரட்டுத்தனமும் கொண்டு செய்திட்டால் வெறுப்பு ஏற்படுமே அன்றி மனஉருக்கம் ஏற்படாது என்றும் உணர்வார்கள்.
ஞானம் பெறுதல் மிகமிக நீண்ட பயணம் அதில் பொறுமையாக, நிதானமாக, பார்த்து பார்த்து செல்ல வேண்டும். திக்கு தெரியாத காட்டில் நடப்பது போலாகும்.
நாம் எந்த நிலை உள்ளோம், நாம் செய்த பாவபுண்ணியம் எவ்வளவு? நாம் நல்ல வழியில் சென்று கொண்டுள்ளோமா? என்றெல்லாம் ஒன்றுமே நமக்கு தெரியாது. ஆதலால் மனதினுள் போட்டு குழப்பிக் கொள்ளாமல் முருகா உன்னடி சரணடைந்தேன். நான் சரணாகதி அடைந்தது உண்மையோ பொய்யோ தெரியாது. என்னை ஏற்றருள் புரிந்திடுங்கள்.
எம்மை வழிநடத்துங்கள் என்றே ஞானத்தலைவன் முருகன் திருவடியை இறுகப் பற்றிக் கொள்வதை தவிர வேறுவழியில்லை என்ற உணர்வினை அந்த முருகனே உணர்த்த உணரப்பெறுவார்கள்.
முருகா! முருகா! முருகா! என்றே மனம் உருகி அழைத்திடுங்கள் அழைத்த அக்கணமே வந்தருள் புரியும் முருகன் அருள் பெற்று முற்றுப்பெற விழையுங்கள்.

பேராசையே பிறவிக்கு காரணம்
முருகா என்றால் :
உடல் உயிர் தோற்றம் பற்றியும், அதனுள் மும்மலக்குற்றம் பற்றினதால் வந்த கேடுகள் பற்றியும் அதை நீக்க வழிமுறைகளும் உரைத்து மனிதனைப் பற்றிய பொறாமை, பேராசை, கடுங்கோபம், கொடுஞ்சொல் கூறுதல் ஆகியவற்றினின்று நம்மைக் காத்து கடைத்தேற்றுவான்.
ஆதியில் அகிலாண்டகோடி பிரம்மாண்ட அண்ட வெளி முழுதும் மிகமிகமிக பிரம்மாண்டமாய் பரந்து விரிந்து பரமாணுக்களால் ஆகி அணுக்களாய் பரந்து விரிந்து பிரம்ம நிலையில் அசைவற்று நின்றன. நின்ற அந்த பிரம்மாண்டமே திடீரென ஒருவித பேரியக்கதிற்கு உள்ளாயின. அந்த பேரியக்கத்தின் மூலாதாரமாக எல்லையில்லாது பரந்து விரிந்த பெருஞ்சோதி சுடரொன்று தோன்றியே விரிந்தது. அந்த ஒளிச்சுடர் தனின் ஈர்ப்பினாலே அண்டத்தினுள்ள அனைத்தும் கவரப்பட்டு மாபெரும் இயக்கத்திற்கு உண்டாயின.
இயக்கத்திற்கு உட்பட்ட அணுக்களெல்லாம் அவை அவை தன்மைக்கேற்ப ஒன்று கூடி ஒளியிலிருந்து காற்று உண்டானது. காற்று உண்டான உடன் நெருப்பு உண்டானது. அதன் தொடர்ச்சியாக நீர் நிலம் உண்டானது. இந்த காற்றையும், நெருப்பையும், நீரையும், நிலத்தையும் தாங்கி நின்றது ஆகாயமாயிற்று. ஆதலின் அணுக்களெல்லாம் ஒன்று கூடி இவ்விதமே பஞ்சபூதங்களாக பிரம்மாண்டமாய் பரந்து விரிந்து நின்றன. இவையெல்லாம் ஒன்று கூடி அதாவது பஞ்சபூதங்களான மண்ணும், நீரும், நெருப்பும், காற்றும், ஆகாயமும் என்றே அவற்றுள் ஒன்றென்றும் பிறிதொரு பூதத்தினை பல்வேறு பட்ட அளவில் பலவிதமாகவே கலந்து கலந்து கலந்து முடிவில் பல்லாயிரக்கணக்கான கோடி உடல்களாகவும், அதே பஞ்சபூதம் தனது கூறாய், ஆன்ம வடிவினதாகி அந்தந்த உடல்களையும் சார்ந்திட்டது.
ஆதலின் உடலும் உயிரும் ஏககாலத்திலேதான் தோன்றியது. இது தவிர பஞ்சபூதங்களெல்லாம் ஒன்று கூடிட்டாலும் ஆன்மா இயங்க தகுதியற்றவையெல்லாம் ஜடப்பொருளாகவே மாறிவிட்டது.
அப்படி தோன்றியவைகள் அனைத்தும் ஏககாலத்திலே ஒரு நொடிப் பொழுதினிலே சிந்தனைக்கு எட்டாத வகையினிலே அதிஅதிஅதி விரைவாக தோற்றியது ஒரு சக்தியாம். அந்த சக்தியே இயற்கை அன்னை ஆவாள்.
அந்த இயற்கை அன்னை அனைத்தையும் ஒரு விளையாட்டு போல நொடிப்பொழுதில் படைத்தனள். அனைத்தும் அவளது விதிக்கு அவளது கதிக்கு உட்பட்டு தோன்றி வளர்ந்து அழிந்து பின்தோன்றி வளர்ந்து அழிவதாய் அதனதன் உள்ளேயே ஒரு தனி இயக்கம் தனிலே சிக்கின்று தொடர்ந்து இயங்கி வரலாயின.
ஒவ்வொரு உயிரும் உடல் சார்ந்து இயங்க இயங்க அவை அவை இயக்கத்தினால் உண்டான செயல்களும் அதன் விளைவுகளும் அதன் பிரதி வினைகளும் அந்த உடல் சார்ந்து அந்த உடலை இயக்கிய ஆன்மாவினிலே தங்கலாயிற்று. இப்படி தங்கிய ஆன்மா தனது தூய்மை தன்மையினின்று மாறுபட்டு வினைக்கு உள்ளாயிற்று.
தோன்றிய அனைத்து உயிர்களிலே மனித தேகம் சார்ந்திட்ட உயிருக்கு மட்டும் அந்த உடம்பின் பயனை உணர்ந்து எந்த இயற்கையால் தோற்றுவிக்கப்பட்டதோ அந்த இயற்கையை அந்த இயற்கையின் தயவினால் வெல்லும்படியானதொரு அறிவை தந்தது.
இயற்கையை வெல்லுகின்ற உபாயமாய் அமைந்த அற்புத கருவியே மனித தேகமாகும். ஆன்மா இயற்கையின் மற்ற தேகங்களை சார்ந்த பொழுது அந்தந்த தேகத்தினை ஒத்து, ஒன்று முதல் ஐந்து வரையிலான அறிவினைப் பெறும் மனிததேகத்தை சார்ந்திட்டதால்தான் நல்லது கெட்டதை பிரித்தறிந்து கடைத்தேறிட ஏதுவான ஆறாம் அறிவினையும் பெறுமாறு அருள் தந்தது.
அந்த ஆறாம் அறிவின் பயனால் தோன்றிய காலத்திலிருந்து தான் இயங்கிட இயற்கை அவனுள் பாசமெனும் ஆசையை அவன் வாழ கருணையாய் வைத்தது. அந்த ஆசையாகிய காமம் அல்லது ஈர்ப்பு இல்லாவிடின் உயிர்கள் வாழ்வதினிலே நாட்டமின்றி ஜடநிலைக்கு வந்துவிடும். ஆதலின் வாழ்வதற்கு தேவையானவற்றை அவன் பெற்று தனது வாழ்வை சுகமாக்கிக் கொள்ள அவனுக்கு தேவையான உணவு மற்றும் இதரப் பொருள்களை சேர்க்க விருப்பத்தை உண்டாக்கிற்று இயற்கை.
மனிதனுக்கு மட்டுமே இந்த குணமாம் மற்றைய ஜீவராசிகளெல்லாம் சேர்த்து வைப்பதற்குரிய அறிவை இயற்கை அளிக்கவில்லை. ஒரு சில உயிர்கள் மட்டும் வாழ்வை வாழ எதிர்காலத்திற்காக தமது இனம் வாழ சேமித்து வைக்கும். மற்றைய பெரும்பாலான உயிரினங்கள் சேமிக்காது. பசி தோன்றும் போது கிடைத்ததை தின்று வாழும், கடைசியில் இறந்து விடும்.
ஆனால் ஆறறிவு படைத்த மனிதன், தன் அறிவைக் கொண்டு செயல்பட்டு காலத்திற்கும் உணவிற்காக அலையாமல் பலநாட்களுக்கு தேவையான உணவை பாடுபட்டு சிலநாட்களில் சேர்த்து வைத்து பின் அதனை கொண்டு பல நாட்கள் வாழலாயினன்.
இதன் பயனை ருசிகண்டு மனிதன் சேர்த்து வைப்பதற்கு பல்விதமாய் பாடுபடுவதைவிட பிறர் சேர்த்து வைப்பதை அபகரிப்பது எளிதாய் எண்ணி பிற உயிர்கள் சேர்த்து வைத்திருப்பதையும், பிற மனிதர் கூட்டம் சேர்த்து வைத்த பொருட்களையும் உடல் பலம் கொண்டு போராடி அடைந்திடல் ஆயினன்.
உயிர் வாழ இயற்கை அளித்த அந்த ஆசையாகிய அற்புத உணர்வு பேராசையாய் மாறிட வினைக்குற்றங்கள் மிகுந்து அந்த ஆன்மாக்களை பற்றலாயின. பற்றின வினை மீண்டும் மீண்டும் தோன்றி தோன்றி ஆசை வலைக்குட்படுத்தி அவனை மயக்கத்தில் ஆழ்த்தி பேராசையை தூண்டி பாவியாக்கிக் கொண்டே வந்து தொடர் பிறவிக்கு காரணமாக்கி துன்பத்திலாழ்த்தி பழிவாங்குகிறது.
இப்படி பேராசையே பிறவிக்கு காரணமாக அமைவதை கண்டுபிடித்த முதல் ஞானவான் ஞானபண்டிதனாவார். அவரே பேராசை, பொறாமை, கடுங்கோபம், கொடுஞ்சொல் ஆகிய குற்றங்களை தெளிவுற உணர்ந்து பற்றற்ற நிலை நின்று பேராசை ஒழித்து கடைத்தேறினவன் ஆவான்.
பற்றற்றவன் துணையினால்தான் பேராசையை நாம் ஒழித்திட முடியும். அவனால்தான் பேராசையைக் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்பதை முருகனருளால் உணர்ந்து அவன் தாள் போற்றிட முருகனருளால் பேராசை வென்று அவன் திருவடிக்கே ஆளாகி கடைத்தேறலாம்.
பற்றற்ற பரமன் முருகன் திருவடி பற்றுவோம்!
பற்றுகளை விட்டு முருகன் திருவடிக்கு அடைக்கலமாவோம்!!
.............

Subscribe to:
Posts (Atom)