முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்....
இக்காலம் கலிகாலத்தின் உச்சமான காலமாகும். இக்கலிகாலத்தின் உச்சத்திலே பத்தினி பெண்களும், பக்தரும், பண்புடையோரும், தொழிலாளர்களும், விவசாயிகளும், பஞ்சபராரிகள் என உள்ள அனைவர்களிலும் ஒரு சில பகுதியினர் மட்டுமே கலியுகத்தின் கொடுமைகளால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பலர் அநீதிக்கு துணையாய் நிற்பதினாலே அவர்களுக்கு பாதிப்புகள் வரவில்லை.
இவ்வுலகினில் பசியும் பஞ்சமும் வந்துவிட்டது, மழை இல்லை, பருவ மழை தவறுகிறது, வெயில் கொடுமை தாங்கவில்லை, கடல் சீற்றமடைகிறது, எங்கு பார்த்தாலும் பூமி அதிர்கிறது, விலைவாசிகள் ஏறிவிட்டது, மக்களிடையே அராஜகம் தலைவிரித்தாடுகிறது, நீதி இல்லை, நேர்மை இல்லை, ஒருவருக்கு ஒருவர் நம்பிக்கை இல்லை, உண்மை இல்லை, வஞ்சனை மக்களை வாட்டுகிறது, கொடும் நோய்கள் பரவுகிறது, கொடுமையான வகையில் மரணங்கள் உண்டாகிறது. மனிதனுக்கு பேராசை அளவு கடந்துவிட்டது, அதிகமான வெப்பமும் அதிகமான குளிரும் மக்களை வாட்டுகிறது, விவசாயிக்கு விளைச்சல் இல்லை, பெரும் பகுதி விவசாயமே இல்லை, தொழில்கள் செய்ய முடியவில்லை, இப்படி உலகில் எங்கு பார்த்தாலும் எதையெடுத்தாலும் பிரச்சனை பிரச்சனை பிரச்சனைதான். உலகமெங்கும் கொடுமைகள் அளவு கடந்து போய்விட்டதால் அதைக் கண்டு வெகுண்டு எழுந்த முருகப்பெருமான் உலகைக் காக்க விரைந்து உலகினில் வெளிப்பட்டான் துர்முகி ஆண்டின் துவக்கம் தனிலே, ஆயினும் செயல்பட முடியவில்லை.
உலகினில் எல்லோரும் கலியின் கொடுமையால் அவதிப்பட்டு அனைவரும் ஒன்றுகூடி எங்களை காப்பாற்ற யாருமே இல்லையா? என்றே இறைவனை பிரார்த்திக்கும் காலத்தில்தான் முருகப்பெருமான் தனது பேராற்றலை உலகினில் ஒரு நொடிப் பொழுதினில் வெளிப்படுத்தி அற்புதம் நிகழ்த்துவான். அப்படி உலக மக்கள் பெரும் பகுதியினர் அழைக்கும் வரை எல்லாம்வல்ல இயற்கை அனுமதி இல்லாததினால் நடக்கும் கொடுமைகளைக் கண்டும் முருகன் அமைதியாக இருக்க வேண்டிய கொடும் நிலை ஏற்பட்டுள்ளது என்றும், மக்களில் பெரும்பகுதி முருகப்பெருமானை அழைக்கவில்லை என்பதாலும், தான்படும் துன்பத்திற்காக கடவுளை வழிபடாமல் துன்பம் தீர்க்க பாவச் செயலான உயிர்ப்பலியினை இடுவதாலும் முருகன் அமைதியாய் இருக்கிறான் என்பதையும் அறியலாம்.
இவ்வளவு கொடும் பாதிப்பிற்கு ஆளான மக்கள் தாம்படும் கஷ்டங்களுக்கும் துன்பத்திற்கும் ஒரு தீர்வு இல்லையா? என இறைவனிடமோ, தக்க சான்றோர்களிடமோ கேட்கவில்லை. அவரவர் துன்பம் துடைக்க உயிர்ப்பலியிடும் செத்துப்போன சிறுதெய்வங்களை நாடினார்கள். தான்பட்ட துன்பம் தீர, மேலும் பாவம் சேர்க்கும் வகையிலே உயிர்ப்பலியிட்டு துன்பம் போக்க முயற்சிக்க, அது மேலும் பாவத்தைத்தான் சேர்த்தது. வந்துதித்த முருகனே வெகுண்டு எழுமளவிற்கு மக்கள் மேலும் பாவச் செயல்களை தொடர்ந்து செய்கின்றனர். ஏற்கனவே கோபமான இயற்கை மேலும் கோபம் அடைகிறது.
மனிதனோ இன்னும் தனது துன்பத்தின் அடிப்படை உயிர்க்கொலை என்பதை அறியாமல் மேலும் மேலும் உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளையும் அடித்து கொன்று புசித்து புசித்து கொலை பாவத்தை அளவிலாது செய்கிறான். இப்படியிருக்க உலகைக் காக்க ஞானபண்டிதன் எங்கே தனது ஆற்றலை வெளிப்படுத்த முடியும். மேலும் மேலும் பாவியாகத் துடிக்கும் மனிதனுக்கு எவ்விதம் கருணை காட்டுவான் முருகன். இயற்கைதான் கருணை காட்டுமா என்றால் மேலும் அது அழிவைத்தான் தரும்.
முருகன் வெளிப்பட்டபோதும் அவனது ஆற்றல் வெளிப்பட உலகமக்களெல்லாம் உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, ஜீவதயவுடைய முருகனை, காப்பாற்ற வாருங்கள் எங்கள் இறைவா! முருகா! என அழைத்திட்டால் அழைத்தவர்கள் நலன் கருதியேனும் முருகன் ஆற்றலை வெளிப்படுத்துவது உறுதி என்பதை அறியலாம்.
................
................
வளப்பமாம் துன்முகியில் வடிவேலன் ஆண்டிட
நலம்பல உண்டாம் நாள்தோறும்.
No comments:
Post a Comment