Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Friday, 19 August 2016

யார் காரிய குரு? யார் காரண குரு?

முருகா என்றால்,

:

காரிய குருவின் தன்மையை உணர்த்திடுவதோடு காரண குருவின் தன்மையையும் உணர்த்துவான்.

காரிய குருவின் தன்மையாம் பந்தபாசம் உள்ளவனாகவும், காமுகனாகவும், பொருள் வெறியனாகவும், தன்னை உண்மை குருவாய் எண்ணி நம்பி வந்த உண்மை தொண்டன்தனை வஞ்சித்து பொருள் பறிக்கின்ற பாவியாகவும், இன்னும் அநேகம் அநேகம் தீய குணங்களை உள்ளடக்கி வெளியே பரமபக்தன்போல பட்டை தீட்டி கொட்டை மாட்டி, உருமாகட்டி, தாடி வளர்த்து, சிகையலங்காரம் செய்து, கண்ணிலே கருணையாளன் போல கனிவு கொண்டவன் போல, பசப்பான மயக்கப் பார்வை பார்த்து காக்க வந்த கடவுள் போல விஸ்தார டம்பம் பேசி, வீண் ஆரவாரம் செய்து, தெய்வத்தின் அருள் வந்திட்டது போல போலியாக பத்தி பரவசமாகி துள்ளி குதித்து பார்ப்போரை ஏமாற்றி நடித்து அகத்தே கொடும் வஞ்சனையாளனாக உள்ள அந்த மகா பாவிகளை அவர்தம் குணக்கேடுகளை முருகனடிப் பற்றி வேண்டுவோர் தமக்கு தக்க தருணத்தில் வெளிப்படுத்தி காரியகுரு இவனென்றே முகத்திரை கிழித்து காத்தருள் புரிவான் அன்புக்கடவுள் ஆறுமுகன்.

காரண குருவின் தன்மையை உணர்த்துவன். காரணகுருவின் தன்மையாம் பொருள் பற்றற்றவனாகவும் பந்தபாசமற்றவனாகவும், தூயமனம் உள்ளவனாகவும், உலகஉயிர்பால் கருணைக் கொண்டு எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணுகின்றவனாயும் உடல், பொருள், ஆவி அனைத்தையும் உலக உயிர்களுக்கு அர்ப்பணிக்க கூடியவனாகவும் இருப்பதையும் எந்நேரமும் எக்கணமும் ஞானத்தலைவன் நினைவினின்று விடுபடாமல் ஞானிகள் அருள் பெற்ற அற்புத திருவாளனாயும் இருப்பான் என்பதையும் காரண குருவின் அற்புதம்தனை அன்பர் உள்ளத்தே உணர்த்தி அவரே உமக்கு ஞானிகள் சார்பினிலே சொற்குருவாய் உபதேசிக்க தகுதியுடையோன் என்பதையும் உணர்த்தி ஞானிகள் திருவடியைப் பற்றிட முயலும் அன்பர் தமக்கு சொற்குருவாம் காரண குருவிடத்து சீடனாக்கிடவே அருளுவான் ஞானத்தலைவன் ஆறுமுகன்.

உலகின் காரண காரிய குருக்கள் என்றே இருந்திட்டாலும் காரண குருவை அறியாது காரிய குருவாம் போலி ஆன்மீக குருவிடத்து சென்று ஏமாறுவது என்பது அவரவர் முன்சென்மத்தில் செய்திட்ட பாவத்தினால் வந்த தீயவினைகளாகும். ஆதலினாலே தீயவினை மிகுதியாய் வினை வென்ற ஞானம்பெற முற்பட்டு கடைத்தேறிட விரும்பிய போதும் அவன் செய்த பாவமே ஞானம் அடைய விடாமல் போலி ஆன்மீகவாதிகளான காரிய குருவிடத்து அவனது பாவம் கொண்டு சேர்த்து மேலும் பாவியாக்குகிறது.

ஒருவன் தான் பற்றிய குரு காரிய குருவா? காரண குருவா? என்றே அறிந்திடவே  உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து முருக நாமம்தனை நாமஜெபமாக கூறி பூசைகள் செய்தும் மாதம் ஒருவருக்கேனும் மனமுவந்து அன்னதானம் செய்து பாருங்கள்

யார் காரிய குரு? யார் காரண குரு? என்று ஆதிதலைவன் முருகப்பெருமான் அன்பர் தம்முள்ளத்து உணர்த்தி தெளிவடைய செய்வார் இது சாத்தியம்.

முருகா! முருகா!! முருகா!!! என்றே மனமுருகி அழைத்துப் பாருங்கள் முருகன் அருள் கூடி முக்தி நிலை செல்ல வழிபிறப்பதை பாருங்கள்.

-சுபம்

No comments:

Post a Comment