முருகா என்றால்,
ஒருவன் செய்த நன்றியை எக்காலத்தும் மறவாதிருக்க வேண்டும் என்ற அறிவைப் பெறலாம்.
மேலும் பலருக்கு உதவி செய்தாலும் பயனை எதிர்பார்த்து செய்யக் கூடாது, பயன் கருதி செய்கின்ற உதவிகள் பிறவியை உண்டுபண்ணும்; பயனை எதிர்பார்க்காமல் செய்கின்ற உதவிகளே பிறவியை அற்றுப் போகச் செய்யும் என்பதையும் அறியலாம்.
“ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்று போகும் போதும் வரும் போதும் காலை எழும் போதும், சாப்பிடும் போதும், மேற்கண்ட மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருக்க வேண்டும். மந்திர ஜெபம் செய்ய செய்ய குணக்கேடுகள் நீங்கிக் கொண்டு வருவதை அறியலாம்.
முருகப்பெருமான் காமமற்றவன், கோபமற்றவன், பேராசை அற்றவன், தாய்மை குணத்தை உடையவன், வஞ்சனை அற்றவன், எக்காலத்தும் அழிவில்லாதவன் முருகப்பெருமான் உலக நம்மைக்காக அவதரித்த கடவுளாகும். அவனே குருநாதன் என்று சொல்கின்ற தகுதி பெற்றவனாவான். இந்த கருத்து நவகோடி சித்த ரிஷிகள் சேர்ந்தெடுத்த முடிவாகும்.
No comments:
Post a Comment