முருகா என்றால்,
உலகில் அனைத்து தீய பழக்கங்களின் நுழைவாயிலாக இருப்பது காமமே என்பதை தெள்ளத்தெளிவாக உணரலாம். காமமே பொருள்பற்று, புலால் உண்ணுதல், பேராசை, பொறாமை, வஞ்சனை, சூழ்ச்சி, மதுப்பழக்கம், சூதாடுதல், பிறர் பொருளை அபகரித்தல் என்று படிப்படியாக உலகில் உள்ள அனைத்து தீயபழக்கங்களையும் ஒன்றன் பின்ஒன்றாக அவனிடத்து சேர்த்து அப்பழக்கங்களுக்கு அவனை அடிமையாக்கி, அவன் அதற்கெல்லாம் அடிமையானதை அவனை அறிய ஒட்டவிடாமல் அவன் அறிவையும் மயக்கி இதுவே இன்பவாழ்வு என்றும் இதுவே உண்மை வாழ்வு என்றும் அவனை தீயவழியிலே கொண்டு சென்று இறுதியில் அவனை பெரும் பாவியாக்கி அழித்தே விடும் என்று உணரப்பெறுவார்கள்.
காமமற்றவனும், வெல்ல முடியாத மாமாயை வென்று பொசுக்கியவனும், தூய மனமுள்ளவனும், தாய்மை குணம் உள்ளவனும், தயவே வடிவானவனுமாகிய முருகப்பெருமானை வணங்க வணங்க நம்மை நரகத்தில் வீழ்த்தும் தீய பழக்கங்களிலிருந்து நாம் விடுபடலாம்.
முருகனை போற்றுவோம் தூயமனம் பெற்று வாழ்வோம்
முருகனை போற்றுவோம் தயைசிந்தையுடன் வாழ்வோம்
முருகனை போற்றுவோம் தயைசிந்தையுடன் வாழ்வோம்
-சுபம்-
No comments:
Post a Comment