Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Friday, 19 August 2016

முருகன் ஜோதி தரிசனம்

முருகன் ஜோதி தரிசனம்


அவரவரும் வீட்டினில் ஒரு நெய் தீபமோ, நல்லெண்ணை தீபமோ ஏற்றி முருகனின் தாரக மந்திரமான “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றே தொடர்ந்து மனமுருகி ஜெபித்து வரவர, நாம் ஏற்றிய ஜோதியில் முருகன் தோன்றி நமக்கு அருள் செய்வான் என்பதையும், முருகனை தொடர்ந்து வணங்கி வணங்கி, அவன் ஜோதியில் தோன்றி அருள்வதையும் கண்டு ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.

அதி உன்னதமான இத்தகைய ஜோதி வழிபாட்டை செய்பவர் எவராயினும் சரி, அவர் எத்தகைய பாவியாயினும் சரி, அவர் எந்த இனத்தவராயினும் சரி, அவர் எந்த நாட்டை சார்ந்தவராயினும் சரி, அவர் எந்த மதத்தவராயினும் சரி, எல்லோர்க்கும் நின்றருளும் ஆனந்த ரூபனுமாகிய ஆதி ஞானத்தலைவன் முருகப்பெருமான் ஜாதி, மத, இன, மொழி, தேச பாகுபடற்றவன் அவனை ஜோதியில் வழிபட்டு தரிசிக்கின்றவர் பஞ்சமாபாவியாயினும் சரி, ஜோதி வழிபாடு செய்த காரணம் ஒன்றினாலேயே முருகனருளுக்கு ஆளாகி பஞ்சமா பாவங்களெல்லாம் தொலைந்து தூய்மை பெற்று ஞானியாகவும் மாறிவிடுவான் என்பது அந்த முருகப்பெருமானே சொன்ன சத்திய வாக்காகும் என்பதையும் அறியலாம்.


No comments:

Post a Comment