முருகா என்றால் :
மனமுவந்து அன்னதானம் செய்வதற்கும், உலகப்பொது வேதமாம் சித்தர்கள் போற்றித் தொகுப்பினை பாராயணம் செய்வதற்கும் முருகன் அருளும் ஆசியும் வேண்டுமென்று அறியலாம்.
முருகனை வணங்க வணங்க முருகனே அரங்கனுருவில் இக்கலியுகம் மாமாயையினின்று விடுபட்டு அற்புதமாய் அறியாமை இருள் நீங்கி ஞானஒளி பெற்றிடவே வேதங்களின் முடிவாய், ஞானநூல்களின் முடிவாய், அநேகஅநேக புராண இதிகாச சாஸ்திர ஸ்தோத்திர நூல்களின் முடிவாயும் இறுதியாயும் , எளிமையாயும், வெட்டவெளியாய் இந்நூலை அமைத்தனன் முருகன் என்று உணரலாம்.
ஞானிகளின் நாமசெபமே உம்மை ஞானியாக்கும் என்ற பேருண்மையையும் அதனுள் ஆழப்புதைத்து வைத்தனன் அந்த ஆறுமுகன் என்ற உண்மையையும் உணரலாம்.
முருகனை வணங்க வணங்க வேத, ஞான, இதிகாச, புராண, சாஸ்திர, ஸ்தோத்திர நூல்களினை படித்து அதன் உட்பொருள்தனை விவாதித்து, கற்று, கேட்டு, தெளிந்து, அறிந்து, உணர்ந்து, அதன்பின் உண்மைப்பொருளை அவரவர் மனதினுள் தோன்றியபடி தோன்றியவாறு உணர்ந்து கடைத்தேறுவது என்பது எந்த சென்மத்திலும் நடக்காது என்றும் இதையெல்லாம் தோற்றுவித்த ஞானிகளை அற்புதமாய் பக்தியினாலே மனம்உருகி அவர்தம் திருவடிப்பற்றி பூசித்திட கல்லை பொன்னாக்கும் வல்லமை பெற்றவரும், ஆணை பெண்ணாக்கும் இன்னும் எல்லாம் சாதிக்கவல்ல ஞானிகள் அறியாமையில் உள்ள நம்மை விரைந்து ஆட்கொண்டு கருணையால் அனைத்தையும் நமக்கருளி முக்திதனையும், சித்திதனையும் அருளிக் காப்பார்கள் என்ற அதிநுட்பமான பேரறிவைப் பெற்று ஞானிகள் திருவடியையும் ஞானத்தலைவன் முருகன் திருவடியையும் பற்றி கடைத்தேறலாம் என்ற உணர்வு மேலோங்கி நூல்களை அளவோடு படித்து விவாதம் தவிர்த்து ஞானிகள் திருவடியை பூசித்திடுவான்.
ஞானிகள் பதம் பற்றி ஞானபண்டிதன் பதம்பற்றி போற்றி போற்றி துதித்து துதித்து உளம் உருகி பூசித்து கடைசியில் ஞானிகள் அருளைப் பெற்றே விடுவான் ஞானிகள் அருளைப் பெற்று பெற்று முருகன் அருளையும் பெற்றேவிடுவான் அந்த பாக்கியசாலி.
முருகா! முருகா!! முருகா!!! என்றே மனமுருகி பிரார்த்தியுங்கள், முருகன் அருளைப் பெற்று சித்தி முக்தியை பெற்று கடைத்தேறுங்கள்.
-சுபம்-
No comments:
Post a Comment