கருணையே வடிவான முருகபிரானை வணங்க வணங்கத்தான் கல்மனமாய் உள்ள அவனது மனம் கரையும் என்றறிந்து முருகனே கதியென்று இருந்து தொடர்ந்து வணங்குவான் முருகபக்தன். முருகனை வணங்க வணங்க கல்மனம் கரைந்து மென்மனமாக மாறிட துவங்கும். மென்மனம் பெற்றவனே ஜென்மத்தைக் கடைத்தேற்றிடுவான்.
பலப்பல ஜென்மங்களாய் செய்த பூசையாலும், புண்ணிய பலத்தாலும் கிடைத்திட்ட அற்புதமான மனிதப்பிறப்பை பெற்றுள்ளான். பெறுதற்கரிய மானுடதேகம் பெற்றும் மனிதன் மயக்கமுற்று பொருள் பற்றினால், தான் பெற்ற பொருளை, இறைவனால் அவனுக்கு, தான் பெற்ற பொருளை பிறருக்கு கொடுத்து அவன் கடைத்தேறுவதற்காக கொடுக்கப்பட்ட பொருளை இச்சைக் கொண்டு பிறருக்கு கொடுக்காமல் தான்மட்டுமே வைத்துக் கொள்ள வேண்டுமென்று பேராசை கொண்டு நிலையற்ற பொருளை நிலையென்று நம்பி மயக்கமுற்று பெறுதற்கரிய மானுடதேகம் பெற்றும் பிறவா நிலையடைய முயற்சிக்காது தாம் பெற்ற இந்த அரிய மானுட தேகத்தினின்றும் விடுபட்டு இழிபிறப்பாய் மிருகங்களாய் பிறக்கின்றான் என்ற உண்மையை அறிவான் முருகபக்தன்.
அறிந்த முருக பக்தன் முருகன் திருவடியைப் பற்றி பூசித்து மிகையான பொருளை தானதருமங்கள் செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வான்.
படிகடந்த அருணகிரி பகர்ந்த திருப்புகழை
படிக்க படிக்க படிகடக்கலாம்.
ஆறுமுகனைப் போற்றுவோம்
அன்பை பெறுவோம்.
-சுபம்
No comments:
Post a Comment