Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Thursday, 25 August 2016

ஏழுவகையான திரைகளை விலக்குவது எப்படி?

முருகா என்றால் 


“ஏழுவகை தாதுக்களைப் பற்றியும் ஏழுவகை தாதுக்கள் ஏழுவகையான திரைகளாக மாறியது எப்படி என்பதையும் அறிந்தும், அறிந்த பின் நம்முள் உள்ள அருட்பெருஞ்சோதியை மறைக்கின்ற அந்த திரைகளை முருகன் அருள் பெற்று மெல்ல மெல்ல நீக்குகின்ற உபாயத்தையும் அறியலாம். உபாயம் அறிந்து ஞானிகள் அருளால் மெல்ல மெல்ல நீக்கிட வழிவகையையும் அதை குருஅருளால் பெறுகின்ற வகையையும் அறிந்து
தெளிவடையலாம். தெளிவின் முடிவாக அஞ்ஞான காசமாகிய அஞ்ஞானம் எனும் இருள் சூழ்ந்த திரைகளை உணர்ந்தும் அதை விலக்குவதற்கான உபாயத்தினையும் அறியலாம்.


முருகன் அருள் கூடிட கூடிட அந்த அழுத்தமான இருள் திரையை விலக்குதற்கும் அந்த திரையின்  தன்மையையும் அறிந்து விலக்கி அருள் ஒளி தோன்றிடச் செய்திட ஜீவதயவால் மட்டுமே முடியும் என்றும்  அந்த ஜீவதயவு தம்முள் தோன்றி திரைவிலக்கும் வல்லமை பெற்றிட புண்ணியங்கள் செய்வதாலும்  அன்னதானம் செய்வதாலும் தோன்றுகின்ற பரோபகார புண்ணிய பலத்தினாலும் ஜீவர்களின் ஆசியினாலும்  தோன்றும் அருள் பேரொளி ஆற்றலே நம்முள் ஜீவஒளியை தோன்றிடச் செய்து ஜீவதயவை பெருக்கி அந்த ஜீவதயவே ஜீவ ஒளியாக மாறி அஞ்ஞான காசமாகிய இருண்ட இரும்பு திரையையும் கரைத்து விலக்கி நம்முள் அருள் ஜோதியை தோன்றிடச் செய்து அருள் பேரொளியாய் விளங்கிடச் செய்திடும் என்ற ஜீவ பரம இரகசியத்தையும் அறிந்து கொண்டு குருஅருளால் அத்தகைய தன்மை அடையவும் கூடிய சூழ்நிலைதனை அமையவும் பெறலாம்.


குருஅருளும் திருஅருளும் கூடிட அந்த சூழ்நிலை அமைந்து தொடர்ந்து முருகன் அருள் பலம் கூடிட கூடிட குருமுகத்தான் ஞானத்தலைவன் முருகனே குருவாக வந்துமே புண்ணியங்கள் மிகுந்து செய்திடவும் அன்னதானங்கள் மிகுந்திட செய்திடும் வாய்ப்பை நல்கி அற்புதமாய் ஜீவர்களின் ஆசியை அளவிறந்து பெற்றிட செய்து அவரே அவர் தம்முள் சார்ந்துமே திரைகள்தனை முழுதுமாக நீக்கிட நீக்கிட திரைகள் அனைத்தும் விலகிட ஜீவதயவு பெருகி பெருகி பேரொளியாய் சுடர்விட்டு பிரகாசித்து நம்முள்ளே எழுந்து சுயஞ்சோதி அருட்பிரகாசமாகவே ஆகி பரஞ்சோதியாக தோன்றியே அவர் தம்மை அருட் கடலில் ஆழ்த்தி
அருட்பெருஞ் சோதியாகவே ஆக்கி ஆறுமுகனார் உடன் கலந்திட அற்புத பேரொளியாகியே அகண்ட பேரண்ட பேரொளியாக ஆகி என்றும் நீங்கா பேரின்ப நிலைதனை அளித்திடும்.”


இந்த மகோன்னத நிலைதனை அடைய நம்மால் இயலாது என்றே வாளாவிருக்கக் கூடாது. நம்மால் முடிந்த அளவு தானதருமங்களை செய்து நாம் பெறும் அந்த சிறிய தயவினைக் கொண்டு மேலும் மேலும் முயற்சித்து முயற்சித்து சிறிய தயவினால் பெருந்தயவை பெற்றிட தளராது முயற்சித்திட வேண்டும்.


இவையனைத்தும் முருகா உனதருள் கூடினாலன்றி அணுவளவும் அசைத்திட முடியாது என்ற உண்மை பேரறிவு மிகுந்து அவர்தம் திருவடிகளிலே சரணடைந்து அந்த முருகனே நமக்கு குருவாய் ஞானகுருவாய் வந்து உபதேசித்து நம்மை கடைத்தேற்றிட வேண்டுமென்றே ஞானகுருநாதனாம் முருகனே நமக்கு சொற்குருவாய் வந்து வழி நடத்திட வேண்டுமென்றே அந்த குருநாதன் முருகன் துணையாலே அந்த ஞானத்தலைவன் முருகன் திருவடியைப் பற்றிடவே அருள் செய்திடவே ஐம்புலன் ஒடுங்கி நிற்க வணங்கி ஆறுமுகன் அருள் பெற்று ஞானம் அடைந்திட வரமும் பெற்றே உயர்வடையலாம்.


முருகப் பெருமானார் அருள் இல்லையேல் உமக்கு அணுவளவும், ஞானம் இல்லை, அருளும் இல்லை, பொருளும் இல்லை, புண்ணியமும் இல்லை, நம்மை வாழ வைத்ததும் அவனே! நாம் வாழ்வதும் அவனருளே! இனி வாழப்போவதும் அவனருளாலே! கந்தனை மறவாதிருங்கள்! கடைத்தேற்றிக் கொள்ளுங்கள்! காலம் கடத்தாதீர்கள்.

மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

     

Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html





No comments:

Post a Comment