Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Saturday, 27 August 2016

அரங்கனே உலகின் ஒரே ஒரு ஞானகுரு

முருகா என்றால் :


முருகன் அருள் கூடிடும். முருகனருள் கூடிட கூடிட வழிநடத்துவோன் அகத்தீசன்தான் என்றே உணர்த்தப்படுவர். அகத்தீசன் அருள் கொண்டே முருகனருள் பெறுதல் இயலும் என்றறியும் அறிவும் தானே வரும். அந்த அகத்தீசனோ அரங்கன் உடன் உறைகின்றான். அந்த அரங்கனுள்ளே ஆறுமுகன் உள்ளமர்ந்தான்.


அந்த ஆறுமுகனோ அரங்கனாய் அவதரித்து அரூபத்திலே ஆறுமுகனாய் ரூபத்திலே அரங்கனாய் பதினெட்டு சித்தர்கள் ஒன்று கூடிய தோற்ற தூல தேகம் தாங்கி நிற்கின்றனன் என்ற உண்மையை உணரப் பெறுவார்கள்.


பதினெட்டு சித்தர்கள் கூடிய தேகமும், ஆறுமுகனார் உள்ளமர்ந்து அரங்கனாய் வெளிப்பட்ட உலகின் ஒரே மகாஞானயோக நிலை நிற்கின்றவர் மகான் அரங்கன் மட்டுமே என்ற உள்ளுணர்வு மிகும்.


மேலும் ஆறுமுகனை வணங்க வணங்க அவனருள் கூடிட ஆறுமுகன் ஒளிதேகம் கொண்டவன். உலகின் எல்லா ஞானிகளும் அவனருள் பெற்று சோதி தேகம் பெற்று ஒளி வடிவினராகி விட்டபடியினாலே அவர்களால் மனிதனின் புறக்கண்களுக்கு அகப்படார். அவர்களை இந்த ஊனக்கண் கொண்டு காண இயலாது. அவர்களால் மனிதனுடன் நேரடியாக பேசி புரியவைக்க இயலாது என்பதையும் உணர்வர். ஞானிகளும், அகத்தீசனும் ஞானத்தலைவனும் மனிதனின் அறிவினில் சார்ந்தே உணர்த்த உணர முடியும் என்றும் ஆறுமுகனோ, அகத்தீசனோ, ஞானிகளோ நம்மை சார்ந்து உணர்த்த உணரும் வாய்ப்பை நாம் இன்னும் பெறவில்லை என்றும் உணரப்பெறுவார்கள்.


ஆதலின் ஆறுமுகன் உள்ளமர் அரங்கனே இன்றைக்கு உலகிலுள்ள எழுநூறுகோடிக்கும் மேலான மக்களுள் ஞானம் உரைக்கவல்ல உபதேச ஞானகுரு என்பதையும் அவரே சொற்குரு என்பதையும் அவரே சற்குரு என்பதையும் அவரே ஞானகுரு என்பதையும் உணர்த்தப்பட்டு அரங்கனருளாலேதான் கலியுகம் ஞானம் பெற இயலும் என்றே மறுக்க முடியாத உண்மையையும் உணரப்பெறுவார்கள்.


முருகா! முருகா!! முருகா!! என்றே மனமுருகி முருகனடியைப் பற்றிடுங்கள்! முற்றுப்பெற்ற ஞானிகள் தம் தொடர்பினையும் மூலகுருவின் நிலையையும் உணர்ந்து குருஅருள் பெறும் மார்க்கம் தனை உணரப்பெற்று குருஅருள் பெற்று ஞானம் அடைவீர்கள்.

-மகான் கௌதமர்
..............

No comments:

Post a Comment