முருகா என்றால்:
சரியை, கிரியை, யோகம், ஞானத்திற்கு முருகனே தலைவன் என்பதை அறிந்து அவன் திருவடியை பற்றுகின்ற அறிவு வரும்.
முருகப்பெருமானே வள்ளுவப் பெருமானாக உலக நலம் கருதி அவதரித்த காலத்து சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற பதங்களை மாற்றி எல்லோரும் அறிய எளிமையாக அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்றே அமைத்தார்.
ஆயின் காலச் சூழலிற்கேற்ப ஆதி ஞானத்தலைவன் அவ்வப்போது அவதரித்து இவ்வுலகை வழிநடத்துவன் என்பதையும் அறியலாம்.
அதன்வகையில் முருகன் மீது பயபக்தி விசுவாசம் மிகக் கொண்டுமே வணங்க வணங்க இக்காலத்தே ஆதி ஞானத்தலைவனின் அவதாரமாக ஆறுமுக அரங்கராய் அவதரிப்பை அந்த ஞானத்தலைவனே வணங்குவோர் தம்முள் உணர்த்த உணர்வார்கள் முருகனின் பக்தரெல்லாம்.
நமது ஆன்மா காமதேகத்தினுள் சிக்கி சிறைப்பட்டுள்ளது. காமதேகம் நீங்கினால் சிறைப்பட்ட ஆன்மா தெளிவடைந்து ஒளிபெறும். ஒளிபெற்ற ஆன்மா காமக்கசடை முழுதுமாக நீக்கி உயிரும் உடலும் இரண்டற கலந்து மரணமிலாப் பெருவாழ்வாகிய வீடுபேற்றினை அடையும்.
வீடுபேறு என்பது விடுதலை என்பதாம். காமம் உள்ளவரை சிறைபடுவது உறுதி. காமம் நீங்கினால் காமமற்ற தேகம் பெற்றால் சிறையற்ற விடுதலையடைந்த ஆன்மாவை உடைய உண்மை தேகத்தினை அடைந்திடுவதால் காமமற்ற ஒளிதேகம் பெறுவதே வீடுபேறு அடைதலாகும்.
அன்று வள்ளுவராய் தோன்றி எளிமைப்படுத்திய முருகப்பெருமான் இன்று பொல்லா மாமாயை சூழ்ந்திட்ட இக்கலியுகத்தில், பக்தியென்பது சற்றும் இல்லாத கலியுகத்திலும் மக்கள் ஞானம் அடைய வேண்டியே தாமே அவதரித்து, அரங்கர் வடிவினில் தோன்றி எல்லா மக்களும் வீடுபேற்றினை அடைந்திட எளிய மார்க்கமதை வகுத்திட்டான். தயை எனும் பிறருக்கு கொடுத்து பெறுவதற்கான குணமதனை பெருக்கி ஈகையை வளர்த்து ஆன்ம லாபம் பெற்று அதன்படியே வீடுபேறு அடையவல்ல எளிய வழிமுறை வகுத்து அரங்கன் உருவில் உலகோரை வழி நடத்தி வீடுபேறடைய உறுதுணையாய் அந்த முருகனே குருநாதன் வடிவினில் உடனிருந்து கற்பித்து, உபதேசித்து அருளி நிற்கின்றான் ஓங்காரக்குடிலாசான் வடிவினிலே துறையூரினிலே ஏழாம் படை
வீடமைத்துமே.
வீடமைத்துமே.
மக்களே தவறவீடாதீர்கள் முருகப்பெருமான் வந்துவிட்டான். நீங்கள் எங்கிருந்தாலும் சரி, அங்கிருந்தே முருகனை மனம் உருக பூசியுங்கள், முருகன் உங்களை வழிநடத்துவான். உண்மை உரைப்பான், உண்மை குருநாதனாம் அரங்கனை அறிமுகப்படுத்துவான், அரங்கனாய் உள்ள ஆறுமுகன் ஆசிபெற வைப்பான்.
போற்றுவோம் முருகன் கருணையை
பெறுவோம் பெறுதற்கரிய பேரின்ப வாழ்வை.
பெறுவோம் பெறுதற்கரிய பேரின்ப வாழ்வை.
சொல்லுங்கள் “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்று தினமும் காலை மாலை 10 நிமிடங்களேனும் முடிந்தால் இரவு 12 மணிக்கு 10 நிமிடமும் சொல்லுங்கள், அமர்ந்து சொல்ல முடியாவிட்டாலும் பரவாயில்லை, நடக்கும் போதோ, பயணம் செய்யும் போதோ, உணவு அருந்தும் போதோ, அலுவலுக்கு இடையிலோ என்று எவ்விதத்திலேனும் முருகனின் மந்திரத்தை சொல்லுங்கள். மந்திர ஜெபத்தின் பயனை உணர்ந்து பாருங்கள்.
வெற்றி நிச்சயம்! வெல்லுவோம் பிறவியை!
இது சத்தியம் சத்தியம்.
-------
இது சத்தியம் சத்தியம்.
-------
No comments:
Post a Comment