முருகா என்றால்,
பகையை உருவாக்குவதும், பகையின் வசப்பட்டு பகை கொண்டோரை அழிக்க நினைப்பதும், பகை கொண்டோர் மனநிலையை பாதித்து, சதா சர்வகாலம் பகை முடிக்கவே எண்ணி எண்ணி இறுதியில் பகை உணர்வு உள்ளோனை அழித்தேவிடும். ஆன்மீக நாட்டம் கொண்டவர்க்கு பகை உணர்வும், அதை செயல்படுத்த முனைவதும், சற்றும் பொருத்தமில்லாத உணர்வுகளாகும். பகை உணர்வு இருந்தாலே அவர் ஆன்மீகத்திற்கு சற்றும் தகுதியற்றவர் என்பதை முருகன் அவர் தமக்கு உணர்த்துவார்.
நமது நட்பிற்கும் பகைக்கும் காரணமாய் அமைவது நாம் முன் செய்த வினைகளின் வெளிப்பாடே என்பதை நமக்கு உணர்த்தி நட்பினை புரிந்து கொள்வதற்கும் பகைவனை பகைவனது இயல்பை அறிந்து ஒதுங்கி அமைதியுடன் வாழவும், பகையை நட்பாக்கி கொள்ள சந்தர்ப்பத்தையும் ஏற்படுத்தி தருவார் முருகப்பெருமான்.
ஆதலின் பகையை பற்றியோ, நட்பைப்பற்றியோ நமக்கு யாதொன்றும் தெரியாது. நமக்கும் பிறருக்கும் என்னவிதமான பிரச்சனைகள் முன் சென்மத்திலோ இச்சென்மத்திலோ நாம் அறிந்தோ, அறியாமலோ செய்தோமோ தெரியவில்லை, முருகா எமக்கு பகையாவது எதுவென்றும், நட்பாவது எதுவென்றும் அறியேன்.
நான் உன் பக்தனன்றோ, எமது பகையையும், நட்பையும் உமது திருவடிக்கே அர்ப்பணிக்கிறேன். நீரே எனக்கு அனைத்துமாகி பகையை விலகிக்கிடவும், நட்பை உருவாக்கிடவும், நட்புள்ளோரிடம் நட்பு கொள்ளவும், பகை கொண்டோரிடம் பகை நீக்கி நட்பாக்கி கொள்ளவும் எமக்கு உடனிருந்து அருள்வாய் கருணைக்கடலே என்று வணங்கி வணங்கி போற்ற போற்ற முருகன் அருள் கூடி நட்பு பெருகி பகை மறைந்து அமைதியான வளமான வாழ்வை முருகன் அருள்கூடி வாழ்வான் முருக பக்தன்.
பன்னிரு கரத்தோன் போற்றி!
பகல் இரவு அற்றோன் போற்றி!
எண்ணிய அனைத்தும் நல்கும் இறைவனடி போற்றி! போற்றி!!
முருகா போற்றி, முதல்வா போற்றி, முக்தனே போற்றி, சித்தர் தலைவனே போற்றி, கந்தா போற்றி, கடம்பா போற்றி, எந்தையே போற்றி, இறைவா போற்றி போற்றி.
-சுபம்-
மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்
No comments:
Post a Comment