முருகா என்றால்:
மூச்சுக்காற்றின் இயல்பறிந்து மூச்சுக்காற்றையும் அதன் தன்மையும் தெளிவுபட கற்று வசப்படாத மூச்சுக்காற்றை வசப்படுத்தி இரேசித்து, பூரித்து, கும்பித்து புருவமத்தியில் ஸ்தம்பித்திட ஸ்தம்பித்த அவர்களுக்கு மரணம் இல்லை, பிறப்பும் இல்லை என்பதை அறியலாம்.
இத்தன்மையை அடைய உலகம் தோன்றியதுமுதல் எத்தனையோ பேர்கள் முயற்சித்தார்கள்.
ஆனால் யாருக்கும் வசப்படாத இந்த இரகசியம் முருகப்பெருமானாகிய ஒருவனுக்கு மட்டும் மூச்சுக்காற்றின் இயல்பு அறிந்து கொண்டு அதை இரேசித்து, பூரித்து, கும்பித்து புருவமத்தியில் செலுத்தி விட்டான்.
காற்று எல்லா ஜீவராசிகள் வாழ்வதற்கும் அடிப்படை ஆதாரமாக உள்ளது. ஆனால் அந்த காற்று எந்தஒரு உயிரிலும் ஒடுங்கவில்லை.
ஆனால் முருகப்பெருமான், தான் தோன்றியது முதல் ஓரறிவு ஜீவன்முதல் ஆறறிவு ஜீவர்கள் வரை எல்லா உயிர்களிடத்தும் அளவிலாது அன்பு செலுத்தினன்.
ஆதலினால் எல்லா ஜீவராசிகளிலும் முருகனை வாழ்க வாழ்க என வாழ்த்த வாழ்த்த எவ்வுயிருக்கும் யாருக்கும் வசப்படாத ஒடுங்காத காற்று முருகனது ஜீவதயவிற்கு கட்டுப்பட்டு ஒடுங்கியது.
எல்லா உயிர்களின் ஆசியே முருகனுக்கு வாசியாக மாறி வாசி லயப்பட காரணமாய் அமைந்தது.
எனவே ஜீவதயவுதான் ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்பதை அறிய வேண்டும்.
முருகப்பெருமான்தான் ஒரு மனிதனுக்கு வாசி நடத்தி தரவல்ல தகுதியும், ஆற்றலும், அதிகாரமும் கொண்டவனாய் உள்ளான். அவனால் மட்டுமே வாசி நடத்தி கொடுக்க இயலும். வாசி நடத்தும் அதிகாரம் முருகப்பெருமானுக்கு மட்டுமே உண்டு என்று அறிவது சிறப்பறிவாகும்.
முருகப்பெருமானின் திருவடிகளை பூசித்து ஆசிபெற்ற மக்கள் இனிபிறவா மார்க்கத்தை அடைவார்கள்.
இவ்வுலகினிலே புண்ணியவான் என்று ஒருவன் இருந்தால் அது முருகப்பெருமானை அன்றி வேறு யாரொருவரையும் சொல்வதற்கு வாய்ப்பில்லை.
No comments:
Post a Comment