முருகா என்றால் :
நடுநிலை நின்று நலமாய் வாழ அருளுவான் முருகன்.
நடுநிலை என்பது நீதிக்குட்பட்டு நடுநிலை நின்று வாழ்வது என ஒரு பொருள்படும்.ஆயினும் நடுநிலை என்பது உடல் சார்ந்தியங்கும் இடது கலையாகிய சுவாசத்திற்கும் ஆன்ம இயக்கம் சார்ந்த வலது கலையாகிய சுவாசத்திற்கும் இடையே நின்று இடது வலது கலைகளை சமன் செய்திட அந்த சுவாசம் நடுநிலையாகிய புருவமத்தியின்கண் உள்ள பத்தாம் வாசலாகிய நடுவன் என்று சொல்லப்படுகின்ற சுழிமுனை தனிலே பிரவேசித்து செல்லும் நிலையைக் குறிக்கின்றதாகும்.
அதுவே நடுநிலை நின்றலாகும். உடல் சார்ந்து சுவாசம் இயங்க அதாவது இடதுகலை மிகுதியாக இயங்க இயங்க உடல் சார்ந்த இயக்கங்கள் அதிகமாகி உடல் சார்ந்த காமவிகாரங்கள் அதாவது உடற்பற்று மிகுந்து மிகுந்து அளவிலாத பொருள்பற்றும், காமப்பற்றும் உண்டாகி அவனைப் பாடாய்படுத்தி விட்டு அவனை நரகத்தில் தள்ளிவிடும்.
வலது கலையாகிய வலதுகலை மிகுந்து இயங்க இயங்க அது ஆன்மாவைத் தாக்கி ஆன்ம இயக்கம் உடல் சக்திக்கு மிகுந்து இயங்க இயங்க, ஆன்ம குற்றமாகிய கோபமாகவும் ஆணவமாகவும் மாறி வெளிப்பட துவங்கும். அதாவது வலதுகலை, உடல் உஷ்ணம்தனை அபரிமிதமாக ஏற்றி அதன் உஷ்ணம்தனை உடல் தாங்காது கோபமாக மாறிவிடும். அந்த உஷ்ணமே மூளையைத் தாக்கி தன்னைக் கட்டுப்படுத்த இயலாத அளவிற்கு கோபமாக மாறி செயல்படும்.
ஆதலின் இந்த இருகலைகளையும், கலைஞானம் கற்ற சான்றோர் தமை நாடிச்சென்று சமன் செய்திடல் வேண்டும் என்ற உணர்வு முருகப்பெருமானாரை வணங்க வணங்க மிகும்.
இடது வலது கலைகளை சமன் செய்து நடுவாகிய சுழிமுனை கதவு திறந்து சுழிமுனை பிரவேசம் செய்தாலன்றி ஆன்மாவைப் பற்றியுள்ள கோபம் நம்மை விட்டு அகலாது என்ற உணர்வும் உணரப் பெறுவர்.
எவனொருவன் சுழிமுனைதனை திறந்து வாசிவசப்பட்டு வெற்றி பெற்றானோ அவனது திருவடியை பற்றினால்தான் கோபத்தினையும், பற்றுகளையும் தம் கட்டுக்குள் கொண்டு வரமுடியும் என்ற உண்மை அறிவும் வரும்.
குணமே வடிவமாய், அருளே வடிவமாய், அன்பே வடிவமாய், தயவே வடிவமாய், நிற்கின்ற ஞானத்தலைவன் முருகப்பெருமான் திருவடியைப் பற்றிட பற்றிட குணக்கேடுகள் தம்மை விட்டு நீங்கும் என்பதை அறிந்து ஆறுமுகனார் திருவடியைப் பற்றி தொழ தொழ அவர்தம்முள்ளே ஆறுமுகனார் அருள்ஒளி தோன்றிட கோபத்தின் தீவிரம் குறையும், பற்றின் வேகம் குறையும்.
முருகன் மீது பக்தி கொண்டு பக்தி கொண்டு பக்தி விசுவாசமுள்ள பக்தனாகி வேண்டுதல், வேண்டினாலும் அவரவர் வினைக்குற்றத்தின் மிகுதியினால் அவரவர் வேண்டுகோள் நிறைவேற சிலசமயம் காலதாமதம் ஆகலாம். ஆயின் தாமதம் தாளாத பக்தர்கள் அகிலாண்டகோடி பிரம்மாண்ட நாயகன் முருகனை ஏகவசனத்தில் விளித்து முருகா உனக்கு கண்ணில்லையோ? உம்மையே நாடிய பக்தன் நான், எனது துன்பம் களைந்திடாமல் அமைதியாய் ஏன் இருக்கிறாய்? என்றெல்லாம் பக்தி விசுவாசத்தில் தூற்றுவான். அவனது வசவுகளையும் மலர் மாலையாய் எண்ணி சிரித்து மகிழ்ந்து இன்முகம் கொண்டு ஏற்று அருள்புரிவான் ஆறுமுகன். அத்தகு தாயன்பு உள்ளவர்தான் முருகன், கோபமே அற்ற குணக்குன்று. அந்த குணக்குன்று முருகன்தன் திருவடியைப் பற்றி அவன்தன் திருவடி நிழலிலே அடைக்கலம் புகுந்து கோபமெனும் கொடும் பாதகத்தின் தீவிரத்தினின்று தப்பி சாந்தமாக வாழுங்கள்.
முருகனருளாலே முருகன் திருவடியைப் பற்றுவோம்! முருகனருள் பெற்று சாந்தமான வாழ்வை வாழ்வோம்!!
மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்
முருகா! முருகா!! முருகா!!! என்றே முற்றிலும் உமது சிந்தை சொல் செயலெல்லாம் முருகனருளாய் கூடிட செபியுங்கள் முருகனே குருநாதனாய் வந்திடும் அற்புதம் காணுங்கள்.
Saturday, 20 August 2016
முருகா என்றால் சிறப்பறிவினை பெறுவார்கள்
முருகா என்றால் :
உடம்பைப் பற்றியும் உயிரைப் பற்றியும் தன்னறிவினுள்ளே உணர்ந்து முருகனே ஞானத்தலைவனாய் உணர்த்தப்பட்ட, உணர்ந்த அவரெல்லாம் ஞானத்தலைவன் முருகப்பெருமான் அருளாலே உடம்பும் உயிரும் சமநிலையில் நின்றால்தான் தவம் சித்திக்கும் என்றும், ஏதேனும் ஒன்று தாழ்ந்தாலும் ஏதேனும் ஒன்று மிகுந்தாலும் ஒன்றை ஒன்றுவிட்டு நீங்கவோ அழிக்கவோ செய்துவிடும் என்றறிந்து உடம்பின் ஆற்றலையும் உயிரின் ஆற்றலையும் ஏககாலத்தில் ஞானிகள் துணையோடு சமன் செய்து தராசுதட்டுபோல பாவித்து பராமரித்து தவம் சித்தி பெற வேண்டும் என்ற உண்மை அறிவு உள்ளுணர்வால் உணர்த்தப்படும். முருகன் அருளால் அன்றி தவம், யோகம், ஞானம் என்ற யாதொன்றையும் அறியவோ அறிந்து உணரவோ, உணர்ந்து கடைப்பிடிக்கவோ, கடைப்பிடித்து கடைத்தேறவோ கடைத்தேறி பிறவி வெல்லவோ, கண்டிப்பாக முடியாது என்ற சிறப்பறிவினை பெறுவார்கள்.
ஒரு நொடிப்பொழுதில் அணுவிலிருந்து அகிலாண்டகோடி அண்ட மாபிரம்மாண்டமாய் பிரபஞ்சம் முழுதும் பரந்து விரிந்து அருளொளி வீசி பரப்பி அருள்நிறை தெய்வமாய் அருளும் ஆற்றலுடை முருகனை மறவாது துதியுங்கள், போற்றுங்கள் வணங்குங்கள்.
எத்துணை எத்துணை எத்துணை மகாபிரம்மாண்டமாய் விரிந்து விரிந்து சென்ற முருகப்பெருமானார், நீ மனமுருகி உண்மை மனதோடு உள்ளன்போடு, பயபக்தியுடன் உனது ஆன்ம நேய உரிமையுடன் அன்பால் அழைத்திட்டால் வேறெந்த சக்திகளாலும் வேறெந்த விதங்களிலும் கட்டுக்கடங்காத பிரம்மாண்ட சோதி நாயகன் முருகன் பக்தனே உனதன்பிற்கு கட்டுப்பட்டு சுருங்கி உனதுளே சார்ந்து உம்மை நாடி வந்து “அஞ்சேல் மகனே யாமிருக்கேன் பயமேன்” என்றே அபயகரம் நீட்டி அருளி உம்மை காத்தருள் புரிந்து கருணைமிக கொள்வான். தாயினும் மிக்க தயவுடை நாயகன் நம் முருகப்பெருமான் அவனது கருணையின் அன்பிற்கு அளவுண்டோ யாருமறியார் அவன் கருணை அளவை.
கண்ணீர் மல்க மனமுருகி உண்மை அன்பால் முருகனை மனமுருகி அழையுங்கள் முருகனின் அருளின்பத்தில் திளைத்து இன்புறுங்கள்.

Friday, 19 August 2016
ஞானம் பெற தேவையான அடிப்படைத் தகுதிகள்
முருகா என்றால் :
ஞானம் அடைதல் படிநிலையானது நான்கானது என்றும், அவற்றினிலே சரியை என்ற நிலையினிலே தன்னை நோக்கி வருகின்ற விருந்தை உபசரித்தும், பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவித்தும் உலக உயிர்களுக்கு தம்மால் ஆகிய உபகாரங்களை செய்தும், நெறிக்கு உட்பட்டு பொருள் சேர்த்தும், உயிர்க்கொலை தவிர்த்தும், புலால் மறுத்தும், ஜீவகாருண்ய நெறி நின்றும், எவ்வுயிர்க்கும் தீங்கு செய்யாதிருத்தலாகிய தூயநெறியில் நின்று தேறி கிரியை என்ற நிலையிலே நின்று மனித தன்மைக்கும் அப்பாற்பட்ட சக்தி உண்டென்றும் அந்த சக்தியே கடவுள் என்றும் கடவுள் உண்டென்று நம்புதலும் அந்த கடவுளை அடைந்திட வேண்டியே பக்தி செலுத்துதலும் கடவுளை அடைந்திட ஏதுவாக உள்ள வகையினிலே
சான்றோர்களை போற்றுதலும் வணங்குதலுமாய் இருந்துமே அடியவர்கள் தம்மை பாதுகாப்பதுடன் கடவுள் வழிபாட்டையும் செய்து வருதலும் கடவுள் தன்மை அடைய உதவிடும் உண்மை சாதுக்களின் தொடர்பினை ஏற்படுத்திக் கொண்டு சாதுசங்க தொடர்பினை விடாது பற்றி அவரவர் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளவும் முயற்சிகளை விடாது செய்தும் அவரவரால் இயன்ற அளவு ஞானிகள் கூறின, மார்க்கம்தனிலே தவதான தருமங்களை செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள முயலுதலும், ஆக இவ்விதம் செய்து கிரியையை முடித்து, யோகமார்க்கம் தனிலே வருகையுற்று யோகநிலை என்ற நிலையடைந்து கசடான மனித தேகத்தின்கண் உள்ள நீங்காத கசடை நீக்குதற்கான ஞானபண்டிதரால் வகுத்தும் தொகுத்தும் அளிக்கப்பட்ட வாழையடி வாழையென திருக்கூட்ட மரபினை சார்ந்திட்டவர்க்கு மட்டுமே புலப்படும்படியானதொரு அற்புத கலைதனை யோககலைதனை பக்குவம் பெற்றுமே அறிந்திடல் வேண்டும்.
யோகம் என்பதே மூச்சுக்காற்றையும், அதன் இயக்கத்தையும், அதன் வெளிப்பாடையும், அதன் இரகசியத்தையும், அதன் பயன்களையும் அறிந்து யாருக்கும் எந்த சக்திக்கும் கட்டுக்கடங்காத வாசியெனும் மூச்சுக்காற்றின் இயக்கத்தை கட்டுக்குள் அடக்கி ஒடுங்கிட செய்தலாம் என்ற உண்மை அறிந்து நாசியின் இடது பக்கம் வருகின்ற இடகலை காற்றையும், நாசியின் வலதுபக்கம் ஓடுகின்ற வலகலை காற்றையும், சுழிமுனையாகிய புருவமத்தியில் ஒடுங்கிடச் செய்திடல் வேண்டும். அதை செய்திட அதிகாரம் பெற்றிட்டவர் யோகநாதனாம் முருகப்பெருமான் ஒருவர் மட்டுமே என்ற அதிநுட்ப சூட்சும இரகசியத்தை உணர்ந்திடல்
வேண்டும்.
யோகம் என்பது ஆதிதலைவன் ஆறுமுகனாம் யோகநாதனாம், யோகமூர்த்தியாம், முருகப்பெருமானாரால்தான் செயல்படுத்திட இயலும் என்றும் அதற்குரிய சாதனங்களை அவரவர் தகுதிக்கேற்ப அவனே அருளுவான் என்றும், அவனருள் இல்லையேல் யோகம் இல்லையென்றும் உணர்தல் வேண்டும்.
உணர்ந்து யோகம் கற்று ஞானம்தனை அறிந்திடவே அயராது ஊன் உருகி உருகி உருகி, மனம் கசிந்து கசிந்து கசிந்து, நெஞ்சம் நெகிழ்ந்து நெகிழ்ந்து நெகிழ்ந்து, ஆற்றி அரற்றி தலைவன் மனம் குளிர நடந்து நடந்து, ஞானியர் நெஞ்சம் நெகிழ்ந்து கரைந்திட பக்திதனை செலுத்தி செலுத்தி, குருவிசுவாசம் மிகுதிபட நடந்து நடந்து, குருநாதன் முருகன் தம்முள் கலந்து நமக்கு உடலைப்பற்றியும், உயிரைப்பற்றியும் அறிவித்து உடலையும் உயிரையும் தூய்மையாக்கி, செம்மையாக்கி, உடல்உயிரை சேர்த்து, பிறவாநிலை தனை அடைந்திடல் என்றொரு நிலைதனை அடைந்திடல் வேண்டும்.
இப்படி நான்கு படித்தர நிலைகளிலே மனிதன் பன்னெடுங்காலம் அயராது பாடுபட்டு இறையருள் துணையுடனே சரியை நிலையும் கடந்து, கிரியை நிலையையும் கடந்து யோகநிலைதனை அடைந்து இறைவனாம் முருகப்பெருமான் தனிப்பெரும் தயவினாலே அந்த சாதகன் அவன்தன் தனது சாதக இருநிலைகளாம் முன்பு செய்த சரியை, கிரியை தனிலே அளவிலாது செய்திட்ட தானதவ பலன்களாலே, பக்தி விசுவாசத்தாலே, புண்ணிய பலத்தாலே ஞானிகள் அருள்பலத்தாலே, ஞானகுருவின் அண்மையாலே, தீவினைகளை குறைத்திட்டதாலே, உலக ஜீவர்களது ஆசியினாலே உயிர்க்கொலை துறந்ததாலே, பற்றுகளை துறந்ததாலே அவர் தமக்கு ஞானம் அடைதற்கு சாதகமாய் அதன் சாதனமாம் யோகம்தனை யோகஞானத்தலைவன் முருகப்பெருமானே முன்னின்று அருளுவான், அந்த சாதகனுக்கு ஞானியர் புடைசூழ யோகம்தனை. இப்படி திருஞான திருக்கூட்ட மரபினர் ஒன்று கூடிட எல்லாம்வல்ல ஞானத்தலைவன்
சாதகன் தனக்கு யோகமளித்து அவர்தமக்கு வாசியின் சூட்சுமங்கள் உணர்த்தி வாசியாம் பரம்பொருளை அவன் தன்னுள்ளே இருத்தி புருவமத்தியாம் சுழிமுனைக் கதவை திறந்து செலுத்தி அடைத்து அவன்தன் தேகத்தினின்று அடைக்கப்பட்ட ஓரங்குல காற்று உருதரித்த நாடிதனிலே செலுத்தி மீண்டும் வெளியேறா வண்ணமே பாதுகாத்து வாசிப்பயிற்சிதனை செய்திட செய்திட அக்காற்றே அளவிறந்த சக்தியுடையதாய் மாறி பெரும் ஆற்றலாய் மாறியே பெருங்கனலாய் மாறி மனிததேகத்தை சுட ஆரம்பிக்கும்.
அப்படி தவம் தணலாய் சுடுகின்ற அந்த மூலாக்கினியில் மனித தேகத்தின்கண் உள்ள பிறவிக்கு காரணமாக உள்ள அசுத்த சுக்கிலத்தை தாக்கி தாக்கி சுத்தப்படுத்த முயற்சிக்கும்.
விந்து கட்டுதல் என்றொரு பயிற்சி நிலை யோகத்தின்கண் உள்ளதுதான், என்ற உண்மையும், அது சாதாரண மக்களுக்கு சொல்லப்பட்டதல்ல என்றும் உணர்வதுடன் அதன் தன்மையையும் உணர்ந்திடலாம்.
ஞானம் பெறுதலின் ஒரு படிநிலையே விந்து கட்டுதலாகும் என்றும் அதுவே முடிவானது அல்ல என்றும் அதை மூன்றாம் படி நிலையாகிய யோகநிலைதனை ஆறுமுகனார் அருளினால் பெற்றிட்ட யோகிகளால்தான் செய்திட இயலும் என்றும் அறியலாம்.
ஆயினும் தாய்தந்தையரால் பெறப்பட்ட இந்த தேகத்தில் சுத்த சுக்கிலம் ஊறாது. ஆயின் ஒவ்வொரு அணுக்களிலுமே இயற்கையின் அதீத சக்தியினால் காமக்களிம்பு விடாது பற்றியுள்ளதால் அந்த அணுக்களிலிருந்து தோன்றும் சுக்கிலமும், காமக்களிம்புடனே இருக்கின்றபடியாலே காமக்களிம்பை நீக்கிட ஞானத்தலைவனே சாதகன் உடலைச் சார்ந்து வழிநடத்தி உடல் அணுக்களிலே உள்ள காமக்களிம்பை தன்மூலக்கனல் கொண்டு சாதகன் மூலக்கனல் உதவியுடன் மிகமிக மெதுவாக அணுக்களை சூடேற்றி சூடேற்றி அணுக்கள் வெப்பமாகிடும்படியாக அதேசமயம் அணுக்கள் செத்துவிடாமலும் செய்து செய்து அணுக்களை சுத்தப்படுத்துவான். எப்பொழுது அணுக்கள் சுத்தமாகின்றதோ அதுவரை அதனின்று ஊறும் சுக்கிலம்தனை கட்டமாட்டார்கள் யோகிகள்.
இது அந்த ஞானக்கூட்டத்தினருக்கு மட்டுமே தெரியும். அவ்விதம் இல்லாமல் மீறி சூட்சுமம் அறியாமலேயே அசுத்த சுக்கிலத்தை கட்டினால் அசுத்தமாகிய சுக்கிலம் ஆர்ப்பரித்து எழுந்து உடம்பை விஷமாக்கி அதீத காமத்தை உண்டு பண்ணுவதோடு அந்த சாதகனை எந்த சுக்கிலம் பிறவாமையை தரவல்லதோ அதுவே அவனைக் கொன்றுவிடும். ஆதலின் அதுவரை யோகியர் தேகத்துள் தூயதேகம் பெறுமளவும் ஊறும். சுக்கிலம்தனை இறைவனருளால் ஞானபண்டிதன் சார்ந்து உடலை சார, அசுத்த சுக்கிலம் ஒட்டாது செய்து புறந்தள்ளி விடுவான். இப்படி அதிலுள்ள இரகசியங்கள் இருக்க இவ்வுலகினிலே நூறுக்கும் சில ஆயிரங்களுக்காக ஆசைப்பட்டு தனக்கு தெரியாத யோகப்பயிற்சிகளை ஏதோ சில ஞானநூல்களை அதன் உண்மைப் பொருளுணராது படித்து, கற்று தேர்ந்தவர் போல பசப்பி, மக்கள் மனம் கவர்ந்து, சொல்வதை நம்பி இல்லறத்தான் சென்று அசுத்த சுக்கிலத்தை உடம்பினுள் தவறான யோகப்பயிற்சிகள் மூலம் கட்டுவானேயானால் அதனால் உடல் உஷ்ணம் காமக்கனலும், யோகக் கனலுமாய், உடல் உஷ்ணம் அளவு கடந்து ஏறி தலைபாரம் ஏற்பட்டு மலச்சிக்கல் ஏற்பட்டு அசுத்த சுக்கிலம் உடலில் தங்கி உடம்பு நாற்றமெடுத்து விஷமாகி இறந்தும் போவான். அன்பு கொண்டு எச்சரிக்கை செய்கிறேன் மக்களே! விந்து கட்டுதல் ஆறுமுகனார் அருள் பெற்ற யோகிகளுக்கு மட்டுமே உகந்ததாகும். மற்றைய சாதாரண இல்லறவாசிகளுக்கோ, ஆசி பெறாத வாலிபர்களுக்கோ உகந்தது அல்ல. பக்தி செலுத்துங்கள் ஆறுமுகனார் திருவடியைப் பற்றி! அவன் உணர்த்துவான் உங்களுக்கு!
“முருகா! முருகா!! முருகா!!!” என்றே மனம் உருகி பூசிப்போம் யோகத்தின் இரகசியம் அறிந்து தேறுவோம்.

வாசி நடத்தும் அதிகாரம் முருகப்பெருமானுக்கு மட்டுமே உண்டு
முருகா என்றால்:
மூச்சுக்காற்றின் இயல்பறிந்து மூச்சுக்காற்றையும் அதன் தன்மையும் தெளிவுபட கற்று வசப்படாத மூச்சுக்காற்றை வசப்படுத்தி இரேசித்து, பூரித்து, கும்பித்து புருவமத்தியில் ஸ்தம்பித்திட ஸ்தம்பித்த அவர்களுக்கு மரணம் இல்லை, பிறப்பும் இல்லை என்பதை அறியலாம்.
இத்தன்மையை அடைய உலகம் தோன்றியதுமுதல் எத்தனையோ பேர்கள் முயற்சித்தார்கள்.
ஆனால் யாருக்கும் வசப்படாத இந்த இரகசியம் முருகப்பெருமானாகிய ஒருவனுக்கு மட்டும் மூச்சுக்காற்றின் இயல்பு அறிந்து கொண்டு அதை இரேசித்து, பூரித்து, கும்பித்து புருவமத்தியில் செலுத்தி விட்டான்.
காற்று எல்லா ஜீவராசிகள் வாழ்வதற்கும் அடிப்படை ஆதாரமாக உள்ளது. ஆனால் அந்த காற்று எந்தஒரு உயிரிலும் ஒடுங்கவில்லை.
ஆனால் முருகப்பெருமான், தான் தோன்றியது முதல் ஓரறிவு ஜீவன்முதல் ஆறறிவு ஜீவர்கள் வரை எல்லா உயிர்களிடத்தும் அளவிலாது அன்பு செலுத்தினன்.
ஆதலினால் எல்லா ஜீவராசிகளிலும் முருகனை வாழ்க வாழ்க என வாழ்த்த வாழ்த்த எவ்வுயிருக்கும் யாருக்கும் வசப்படாத ஒடுங்காத காற்று முருகனது ஜீவதயவிற்கு கட்டுப்பட்டு ஒடுங்கியது.
எல்லா உயிர்களின் ஆசியே முருகனுக்கு வாசியாக மாறி வாசி லயப்பட காரணமாய் அமைந்தது.
எனவே ஜீவதயவுதான் ஜென்மத்தைக் கடைத்தேற்றும் என்பதை அறிய வேண்டும்.
முருகப்பெருமான்தான் ஒரு மனிதனுக்கு வாசி நடத்தி தரவல்ல தகுதியும், ஆற்றலும், அதிகாரமும் கொண்டவனாய் உள்ளான். அவனால் மட்டுமே வாசி நடத்தி கொடுக்க இயலும். வாசி நடத்தும் அதிகாரம் முருகப்பெருமானுக்கு மட்டுமே உண்டு என்று அறிவது சிறப்பறிவாகும்.
முருகப்பெருமானின் திருவடிகளை பூசித்து ஆசிபெற்ற மக்கள் இனிபிறவா மார்க்கத்தை அடைவார்கள்.
இவ்வுலகினிலே புண்ணியவான் என்று ஒருவன் இருந்தால் அது முருகப்பெருமானை அன்றி வேறு யாரொருவரையும் சொல்வதற்கு வாய்ப்பில்லை.
மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்
முருகா என்றால் முன்செய்த பாவங்கள் நீஙகிவிடும்
முருகா என்றால்:
உடம்பும் உயிரும் சேர்ந்து தோன்றுவதற்குக் காரணம் ஆண்பாலில் உள்ள சுக்கிலமும் பெண்பாலிலுள்ள சுரோணிதமும் என்பதை அறிந்தும் இதில் உடம்பிலுள்ள களிம்பு உள்ள வரை உடம்பினுள் உயிர் தங்குமே தவிர ஒரு கால பரியந்தத்தில் உடம்பின் தகுதியின்மையால் உடம்பை விட்டு உயிர் பிரிந்துவிடும்.
ஆனால் ஆதி ஞானத்தலைவன் அருள் பெருங்கருணையும் அருளும் கிடைக்கப் பெற்றால் உடலில் உயிர் சேரவொட்டாமல் தடுக்கின்ற களிம்பினை நீக்கி உடம்பையும், உயிரையும் சேர்க்கும் உபாயம்தனை அறியலாம். உடல் பிணியால் உயிருக்குப் பிணி உண்டாகும். உடல் பிணி நீங்கினால் உயிர்பிணி நீங்கும். உயிர்பிணி நீங்கினால் சிறப்பறிவு உண்டாகும்.
அந்த சிறப்பறிவின் துணை கொண்டுதான், இனி பிறவா மார்க்கத்தை அடையலாம். இதை முற்றிலும் அறிந்தவனும் அதற்கு முயற்சிப்போர் தமக்கு அருளி, வழி நடத்துபவனும் தலைவனாய் உள்ளவன் ஞானத்தலைவன் முருகப்பெருமான் தான்.
முருகனது திருவடியை பூசிக்கப் பூசிக்க உடம்பைப் பற்றியும், உயிரைப் பற்றியும் அறிந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.
ஒரு மனிதன் கடைத்தேறுவதற்கு முக்கியக் காரணமாய் உள்ளவை பக்தியும், தயை சிந்தையுமே ஆகும். தயை சிந்தையையும், பக்தியின் தயவும் கொண்டுதான் எல்லா ஞானிகளும் அவரவர் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொண்டார்கள். தயை சிந்தையே பக்தியாகவும், பக்தியே தயை சிந்தையாகவும் மாறி இரண்டற கலக்கும். இவை இரண்டிற்கும் தலைவன் முருகனே என்பதை அறிந்து கொள்ளும் வரையிலும் மனப்போராட்டம் ஒருவனுக்கு இருந்து கொண்டுதான் இருக்கும்.
தயவே முருகன் என்றும், பக்தியே முருகன் என்றும் அறிந்துவிட்டால் அந்த முருகப்பெருமானே அவனுக்குக் குருநாதனாகி அவனை வழிநடத்தி கடைத்தேற்றுவான்.
ஒருவனுக்கு ஆதி ஞானத்தலைவன் அருள் செய்ய முற்பட்டாலும், அவன் அந்த அருளைப் பெற இயலாதவனாகி வெகுபேர் சிறப்பறிவு பெறமுடியாமல் தவிக்கின்றனர்.
ஏனெனில் அவர்களுக்குக் காமம், கோபம், வஞ்சனை, லோபித்தனம், பொறாமை எனப்படும் தீய குணங்களாக மாறி அவன் முன்செய்த கர்மவினைகள் அவனைத் தடுக்கிறது.
முன்செய்த பாவங்களே காமமாகவும், லோபித்தனமாகவும், கோபமாகவும், பொறாமையாகவும், வஞ்சனையாகவும் மாறுகிறது என்பதை அறிந்து குணமே வடிவான அருள் தடாகமான அருள்நிறை தெய்வம், தயவே வடிவான முருகன் மீது பக்தி செலுத்தி செலுத்தி தயவினை பெருக்கி முருகனாகிய தயவுத் தடாகத்தில் மூழ்கி நமது பாவமெல்லாம் நீங்கி தூய்மை பெற்றிட்டால் முருகன் அருள் கூடி நாமும் சிறப்பறிவை பெறலாம்.
முருகன் என்று சொல்லப்பட்ட தயவுக் குளத்தில் மூழ்கினாலன்றி ஒருவன் ஜென்மத்தைக் கடைத்தேற்ற முடியாது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
முருகனின் அருள்பார்வையைப் பெற
முருகா என்றால் :
யோகப்பயிற்சிகளாலோ, உணவுக்கட்டுப்பாட்டினாலோ, புலன் அடக்கத்தினாலோ அவரவர்க்கு உண்டான ஊழ்வினையாம் கர்மவினையாம் தீவினைகள் தம்மை தொடர்ந்து வருவதினின்று தப்பிக்க முடியாது என்றும் அவை நம்மை தொடர்ந்து வந்து நம்மை துன்பத்தில் ஆழ்த்திவிடும் என்றும் என்ன முயற்சி செய்திட்டாலும் ஊழ்வினையின் தாக்கத்திலிருந்து நாம் விடுபட முடியாது என்றும் உணர்ந்திடவும் கூடும்.
உணர்ந்த அவர் இந்த தேகம் எத்தனை பயிற்சி செய்தாலும், எத்தனை பாடுபட்டாலும், இயற்கை நியதிக்கு உட்பட்டு வீழ்ந்துதான் போகும். அழியா வரம் அருளும் தயாநிதிக் கடவுள் தன்னிகரில்லா தனிப்பெரும் ஞானத்தலைவன் ஞானமளிக்கும் எங்கள் ஞானபண்டிதன் முருகப்பெருமானார் திருவடி திருத்துணையினால்தான் கர்மவினைதனின் கொடுமையிலிருந்து தப்பி கடைத்தேறி ஞானம் பெற்று பரிணாம வளர்ச்சியின் சுழற்சியில் இருந்து விடுபட்டு ஜென்மத்தைக் கடைத்தேற்றிட அந்த முருகப்பெருமானின் திருவடியை உளம் உருக ஊன் உருக உளமார மனம் உருகி பூசித்து அவனருள் பெற்றாலன்றி இயலாது என்றே உணரலாம்.
உணர்ந்துமே முருகன்தன் திருவடி முன்னே அவரவரும் தம் தம் உள்ளம், உடல், பொருள், ஆவிதனை சரணாகதியாக அவர்தம் திருவடிக்கே கையினிலே நீரேந்தி மூன்றுமுறை நீரினால் மானசீகமாக தர்ப்பணம் செய்தே அவர்தம் திருவடிமுன்னே வீழ்ந்து வணங்கி, “முருகா நாயினும் கடையேனாகிய என்னையும் ஒரு பொருட்டாக மதித்து கனிவு கொண்டு என்னை உமது அருட்கண் பார்வையால் உற்று நோக்கினால் அந்த கருணைப் பார்வையே எனக்கு சிறப்பறிவையும் நல்லுணர்வையும் எனக்கு தந்து என்னை கடைத்தேற்றும் என்பதை நான் உணரவும், உணர்ந்து உமதருளால் உனது திருவடியைப் பற்றி பூசித்து ஆசி பெறவும் நீரே எமக்கு அருள் செய்திடல் வேண்டும். தொடர் பிறவிக்கு காரணமான உடம்பை பற்றியும் உயிரைப் பற்றியும் அவை கர்மவினைகளினால் சிறைப்பட்டு மீள முடியாமல் தவிப்பதற்கு காரணமான உடல் மாசைப் பற்றியும், உயிர் மாசைப் பற்றியும் அறியவும், அறிந்து அந்த உடல் மாசையும் உயிர் மாசையும் வெல்லுதற்கு விடா முயற்சி கொண்டு முழுமையாக விடுதலை அடையும் வரையிலும் தளராத உறுதியும் ஆற்றலையும் தந்தருள வேண்டும்.
நீரே எமக்கு சிந்தையும் செயலும் சொல்லுமாய் இருந்து எம்மை வழிநடத்தி யான் மேற்கொண்ட முயற்சிகளுக்கு சக்தியாய் துணையிருந்து எம்மை சார்ந்து எமது வினைகளிலிருந்து எம்மைக் காத்து இரட்சித்து அருள் புரிந்து எனது ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள உறுதுணையாய் வந்தருள் புரியுங்கள் அருளரசே! எம்மை காத்தருள் புரியுங்கள் என்றெல்லாம் அவனருளாலே அவன்தாள் வணங்கி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வாய்ப்பையும் பெற்று முருகன் திருவடி வணங்கி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள உறுதியும் நம்பிக்கையும் பிறக்கும்”
முருகனடியைப் பற்றி முருகனருள் பெற்று முழுமை விடுதலை பெற முயல்வோமாக!
-சுபம்

முருகா என்றால் சத்தையும் அசத்தையும் பற்றி அறியலாம்
முருகப்பெருமானை வணங்கி பூஜித்து ஆசி பெற்றிட்டால் :
சாதாரண மனிதனுக்கு அவனுள் இருக்கின்ற சத்தையும், அசத்தையும் பற்றி அணுவளவும் தெரியாது. முருகப்பெருமானின் தயவையும், அருளையும், ஆசியையும் பெற்றாலன்றி சத்தைப் பற்றியோ, அசத்தைப் பற்றியோ அறிய முடியாது. முருகனது அருளைப் பெற பெற, சத்தையும் அசத்தையும் பற்றி அறியலாம். முருகனது அருளைப் பெற பெற அவனது அருள்பலம் கூடிட சத்தையும் அசத்தையும் பிரிக்கின்ற உபாயமதனை பெறுவது எப்படி? என்பதை அறியலாம்.
ஆதி ஞானத்தலைவனே அச்சீடன்பால் மனமிரங்கி சீடனது காமதேகத்தினுள் பிரவேசித்து அச்சீடனை முழுமையாக சார்ந்து சத்தையும் அசத்தையும் பிரித்து தந்தாலன்றி வேறெந்த முயற்சியாலும் ஒருபோதும் சத்தும், அசத்தும் பிரியாதென்றும், அதை விடுத்து வேறு வேறு உபாயங்களை கையாண்டு சத்தையும் அசத்தையும் பிரிக்க முயன்றால் மரணமே பரிசாக கிடைக்கும் என்பதையும் உணர்ந்து அதன் இரகசியங்களை கைவரப்பெற்று முருகப்பெருமானை தம்முள் சார்ந்திடும் உபாயமதை செய்வான்.
முருகப்பெருமான் பெருங்கருணை கொண்டு நம்முள் அவ்வளவு எளிதாக பிரவேசிக்க மாட்டான். சதகோடி சூரியபிரகாசமுள்ள அருட்ஜோதி தனிப்பெருங் கருணையே வடிவான பொன்னார் மேனியுடை முருகப்பெருமான் அவ்வளவு எளிதாக காரிருள் கொண்டிட்ட கசடான நாறும் மும்மல தேகத்துள் பிரவேசிக்க ஒருபோதும் விரும்ப மாட்டான்.
அப்படிப்பட்ட தூய்மையான முருகனும் அன்பர் தம் பக்திக்கு இரங்கி அவனை சாரும் வாய்ப்பு ஒன்று மட்டுமே உள்ளது. ஆதலின் முருகன் நம்மை சார்ந்திட என்ன செய்ய வேண்டும் என்பதையும் அந்த முருகப்பெருமானே பக்தியுடைய சீடனுக்கு உணர்வால் உணர்த்துவார்.
எத்தனை எத்தனை பாவம் செய்திருந்தாலும் சரி, இன்று முதல் மாறி முருகா உமது திருவடிக்கே எமது உள்ளம், உடல், பொருள், ஆவி அனைத்தும் அர்ப்பணிக்கிறேன் என்றே முருகனது திருவடிகளிலே முழுச் சரணாகதியினை முதலில் அடைதல் வேண்டும்.
அதைவிட முக்கியம் பாவியாகாதிருக்க வேண்டும், அதனினும் முக்கியம் உயிர்க்கொலை பாவமதனை எந்த ஒரு நொடியிலும் செய்தலாகாது. உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து, சுத்த சைவ உணவை முதலில் மேற்கொள்ள வேண்டும். தினம்தினம் மறவாமல் காலை 10 நிமிடமும், மாலை 10 நிமிடமும், இரவு 10 நிமிடமும் முருகனது திருவடி பற்றி “ஓம் முருகா” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி” என்றோ “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றோ நாமஜெபமாகிய பூஜையை மனமுருகி செய்திடல் வேண்டும். மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்க வேண்டும் என்கிற மிக முக்கியமான அடிப்படையான தகுதிகளை முதலில் வளர்த்து கொண்டு செயல்பட செயல்பட, முருகனது அருள் கூடும்.
முருகனருள் கூட கூட, அனைத்து இரகசியங்களும் முருகனருளால் அவர் தமக்கு விளங்கி அசுத்த தேகமதை தூய தேகமாக மாற்றிட வழிவகை கிடைத்து, முருகன் அவனது தேகம் சார்ந்து சுத்தி செய்ய செய்ய, இறுதியில் ஒளி பொருந்திய தேகமாக இவனது தேகமும் மாறி தானும் தலைவனும் ஒன்றென ஆகுமாறு தயாநிதி தனிக் கருணை தெய்வம் முருகப்பெருமானின் பெருந்தயவினாலே, கருணையாலே இவனும் தலைவனும் ஒன்றாகி அருட்பெருஞ்ஜோதி வடிவினனாகி அற்புதமான நிலையையும் எய்துவான். முருகன் கருணையே கருணை! முருகன் கருணையே கருணை!! முருகன் கருணையே கருணை!!!
ஒருபோதும் அற்புதமான இந்த நிலையை அடைய சீடனது பாவம் விடாது. எப்படி முயற்சி செய்தாலும் தடுத்து அவனை மீண்டும் நரகத்திலே தள்ளும். ஆயினும் என் செய்வது? முருகனருள் பெற்று முற்றுப்பெற்ற ஞானியர் தம் திருவடித் துணையினாலன்றி முருகனை அணுவளவும் நெருங்க முடியாது. ஞானியரே முயற்சிப்பவன் வினை வரும் வழி அறிந்து அவனை வினையினின்று மீட்டு மீள்வினை சேராது பாதுகாப்பர்.
அந்தவிதமாய் ஞானியரும் அரூபநிலை நிற்கின்ற படியினாலே ஞானியர் பூசைகளே நமக்கு துணை. ஞானவர்க்கத்தினுள் உதித்த சற்குருவின் துணையும், சொற்குருவாய் உள்ள குருநாதரின் முழு பாதுகாப்பும், தயவும், கருணையும் இருந்தாலன்றி ஒரு அடி கூட ஞானத்துறையில் செல்ல முடியாது. அவரவர் செய்கின்ற பக்திக்கு உரிய பலன் கிடைக்குமே அன்றி சொற்குரு துணை இல்லாவிடினில் ஞானமடைவது எளிதன்று.
ஆயின் சொற்குருவை எப்படி காண்பது? எவரொருவர் ஜாதி, மத, இன, மொழி, தேச பாகுபாடற்றும், எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணுகின்ற தாயுள்ளமும், பொருள் பற்றற்றும், காமவிகாரமற்றும், கோபம் அற்றவராயும், உலக நலனே தனது கொள்கையாக கொண்டு தன்னை அர்ப்பணித்து தலைவன் திருவடியே துணையென்று தூய நெறியிலே எவ்வுயிர்க்கும் தீங்கு நினையாத மனநிலையில், ஜீவதயவின் சிகரமாக விளங்கி நிற்கிறாரோ அவரே சொற்குரு ஆவார். அவர்தம் சீடராகி முருகனை, முருகனது அருளை, வடிவை, அன்பை, கருணையை சொற்குரு காட்ட காட்ட, அறிந்து அவர்தம் வழிகாட்டலில் நடந்து நடந்து நாமும் வெற்றி பெறலாம் என்பதையும் அறியலாம்.
இனி உலகெங்கும் சரவணஜோதி வழிபாடே நிலைபெறும் என்பதையும் அறம், பொருள், இன்பம், வீடுபேறடைய சரவணஜோதி வழிபாட்டைத் தவிர வேறு உகந்த மார்க்கம் ஏதுமில்லை என்பதையும் அறியலாம்.
இதுவரை இவ்வுலகம் கலியுகத்தின் மாயையுள் ஆட்பட்ட காரணத்தினாலே புறசமய சடங்குகளினாலே ஆட்பட்டது என்றும், தற்காலம் ஞானசித்தர் காலம் என்றும் அந்த ஞானசித்தர் காலத்திலேதான் ஆதி ஞானத்தலைவன் சுயஞ்ஜோதிபிரகாச அருள்ஜோதி வடிவினனான முருகப்பெருமான் நேரில் வெளிப்படுவான் என்பதையும் அறியலாம்.
முருகப்பெருமானை வணங்கி நேரில் தோன்ற, தரிசிக்க நமது இந்த தேகத்தினில் உள்ள சாதாரண கண்களுக்கு சக்தி இல்லையென்றும், சதகோடி சூர்ய பிரகாசமும் பொன்னிறமும் கொண்டு அந்தி செவ்வானம் போல் பட்டொளி வீசி மிளிர்கின்ற சதானந்த சாந்த சொரூப ஜோதி முருகனை இந்த புறக்கண்களால் பார்க்க முற்பட்டால் கண் பார்வை போய்விடும்.
ஆதலால் முருகன் நேரில் தோன்ற வாய்ப்பில்லை ஆதலினாலே அவரவரும் வீட்டினில் ஒரு நெய் தீபமோ, நல்லெண்ணை தீபமோ ஏற்றி முருகனின் தாரக மந்திரமான “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றே தொடர்ந்து மனமுருகி ஜெபித்து வரவர, நாம் ஏற்றிய ஜோதியில் முருகன் தோன்றி நமக்கு அருள் செய்வான் என்பதையும், முருகனை தொடர்ந்து வணங்கி வணங்கி, அவன் ஜோதியில் தோன்றி அருள்வதையும் கண்டு ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம்.

Subscribe to:
Posts (Atom)