Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Saturday, 6 May 2017

மகான் கொங்கணேஸ்வரர் ஞான சூட்சும நூல் 19/05/2014

முருகப்பெருமான் துணை


நீங்கள் கடைத்தேற வாய்ப்பளித்த அரங்கனை உளமார குருவாய் ஏற்று தொண்டராய், அன்பராய், சீடராய், அரங்கன் நிழலில் இருந்து தொண்டு செய்து வாய்மூடி மௌனியாக கீழ்படிந்து நடந்து அவரவர் கடமைகளைச் செய்து கடைத்தேறுங்கள். 



அருள்பலம் மிக்கதான ஞானிகள் அருளாட்சி செய்கின்ற ஆறுமுகனார் தலைமையேற்கும் ஓங்காரக்குடில்தனை ஆறுமுக அரங்கர் வாழும் அற்புத ஞானக்குடிலை அவரவரும் உண்மை உணர்ந்து பொருளுணர்ந்து கண்டு ஆங்கே நடைபெறுகின்ற தானதர்ம அறப்பணிகளுக்கு புண்ணியங்கள் செய்து புண்ணியம் பெற்றிடவே உதவிகள் பலவாறாய் செய்து உத்தமமகா ஞானயோகி அரங்கமகா தேசிகர் தம்மை குருவாய் ஏற்றுமே குருமனம் மகிழ நடந்து குரு வார்த்தை மீறாமல் நடந்து குருகுலவாசம் தனிலே வருகையுற்று ஓங்காரக்குடில்தனக்கு தொண்டர்களாகி அரங்கரின் தொண்டர்களாகி இவ்வுலகினில் அறதரும தான புண்ணியச் செயல்களை குடிலெனும் அரங்கமகாதேசிக கற்பக விருட்சக நிழலினிலே தங்கி தொண்டுகள் சேவைகள் என்றே மனமுருகி மனமுவந்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிடவே அரும்பாடுபட்டு செய்திடல் வேண்டும்.


அவ்விதம் தன்னலமற்று குருசீட நெறி வந்து குரு வார்த்தை மீறாமல் குருவே தெய்வமென்று எண்ணி குருவின் கற்பக நிழலில் இருந்து தொண்டு செய்து சீடனாகிட்டவர் தமக்கு ஆசான் அரங்கரின் கருணையை அடைந்து அவர் தமக்கு உயர் பதவிகளும், புகழும், கட்டாயம் தாமே வருதலுறப் பெறுவார்கள். அவர் தம்முள்ளே குருநாதன் அரங்கனருள் இருந்திடுவதாலே அவர்தம்முள்ளே கருணை பெருகி கலியிடர் வெல்லும் வல்லமைகளையும் பெற்று உயர்வார்கள்.


சொற்குரு, சற்குருநாதன் அரங்கர் தம்மிடம் தீட்சை உபதேசம் அடைந்து நிற்போரெல்லாம் சகல மேன்மைகளையும் தடையின்றி தம் வாழ்வினிலே பெற்று ஆசான் அரங்கர்வழி தொடர்ந்து வருகின்றோர்களெல்லாம் அவரவரைப் பற்றிய துன்பங்கள் அகன்று மாற்றங்களை கண்டு மகத்துவம் பெற்றிடுவார்கள்.


உலகினை காக்கவே வந்து உதித்த அற்புத மகா ஞானயோகி அரங்கமகாதேசிகர். அரங்கர் எனும் அற்புத கற்பக விருட்சம் தனிலே அந்த அருளொளி அளித்து காக்கும் கருணை நிழலிலே அவரவரும் இருந்திட்டால் அவர்கள் அடையும் பலன்தான் என்னே! கேட்டதெல்லாம் தருகின்ற தன்மை உடையது கற்பகவிருட்சம். கேட்கும் முன்னே தந்தருள் புரிவது அரங்கர் திருவடி நிழல். அரங்கர் திருவடிநிழல் தங்கும் பாக்கியம் யாவருக்கும் கிடைத்தல் எளிதன்று. அற்புதம் நிறை அரங்கர் திருவடி நிழல் தங்க வாய்ப்பினை பெற பல்காலம் தவமாய் தவமிருந்து பெற்றாலன்றி கிடைத்திடாது. அவனது நிழல் தங்கிட தங்கிட்டவர் தமக்கு அனைத்தும் தாமே வரும். அவர்தம் வாழ்வினிலே பலபல ஏற்றங்களும் பலபல மாற்றங்களும் அடைந்திட பெறுவார்கள்.


ஞானிகள் எங்களது அனைவரது ஆற்றலையும் கொண்டு ஞானிகள் எங்களது அனைவரது கலவையாக ஒன்று கூடியே ஆற்றல்மிகுந்து அவதாரமாகிவிட்ட அரங்கமகாதேசிகர் தம்மை மனதால், சிந்தையால், செயலால், பணிந்து போற்றி துதித்து அணுகி உடன் இருந்து வருகின்றவர்களும் அற்புதமாய் தன்னிலை மறந்து அரங்கனே தெய்வமென்று இருந்து தனக்கென்று ஒன்றும் வேண்டா உத்தம சீடர்நிலை நின்று சேவை புரிபவர்களும் உலகினிலே தனியாக தவம் என்ற ஒன்றை செய்ய தேவையில்லை.


அரும்பாடுபட்டு தவம் செய்வதின் பயனையெல்லாம் தண்ணருள் புரியும் அரங்கன் கருணையால் தாமே பெறுவார்கள். தானாகவே தவத்தின் சக்தியெல்லாம் ஞானிகளருளால் அடைந்திட்ட திருவடி நிழல்சார் தொண்டர்களெல்லாம் இவ்வுலகினிலே எத்துணை தவம் செய்தாலும் கிட்டா ஞானம் தனை அரங்கர் சேவை மூலம் அற்புதமாய் எளிமையில் அரங்கர் கருணையினால் பெற்றிடுவர், பெற்ற அவரவரும் ஞானமடைந்திடுதல் அரங்கனருளால் கூடும் அன்றோ?


உத்தமமகா ஞானிதமை அரங்கரை குருவாய் மனம் ஒப்பி ஏற்றிடல் வேண்டும். ஏற்றிட்ட அவரவரும் குருவின் வார்த்தைதனை கடுகளவும் மீறாது எதிர்வாதம் செய்யாது கடவுளின் கட்டளையாகவே எண்ணியே கீழ்படிதல் வேண்டும். குருஅரங்கன் மனம்மகிழ நவகோடி சித்தரிஷி கணங்களும் மகிழ்ந்து அருளாசிகளை அருளுவர். ஆயின் குருமனம் அசூயை படுமாறு ஒரு சிறிதளவேனும் நடந்திடுவார்களேயானால், எப்படி குரு மனம் மகிழ ஒன்பதுகோடி ஞானிகள் அருளாசியாய் மாறுகிறதோ அதுபோல குருவின் மனக்கஷ்டமும் ஒன்பது கோடி ஞானிகளின் மனக்கஷ்டமாக மாறி பெரும் பாவத்தை அந்த அன்பர்தம் மீது சார்ந்துவிடும். ஆதலின் அன்புச் சீடர்களே, தொண்டர்களே, அன்பர்களே, அரங்கன் ஏதோ வாளாவிருக்கிறான் என்று எண்ணி விடாதீர்கள். கருணையே வடிவானதொரு கருணாமூர்த்தி ஆறுமுகன் உள்ளமர் அரங்கன் ஞானிகள் நாங்களெல்லாம் போற்றும் ஞானத்தலைவன் ஆவான். ஞானிகள் நாங்களே அரங்கரிடத்து அரங்கனுள் உறை ஆறுமுகன்தனை தலைவணங்கி நின்று அரங்கர் செயல்கண்டு வியந்து அற்புதமாய் வணங்கி போற்றுகிறோம். சாதாரண மானுடர்களான நீங்களெல்லாம் அரங்கன் கருணையை உணராது அவர் தம்மிடம் அணுகுகையில் பயமின்றி உங்கள் அறிவின் சொல்கேட்டு தவறேதும் செய்து விடாதீர்கள்.


நீங்கள் கடைத்தேற வாய்ப்பளித்த அரங்கனை உளமார குருவாய் ஏற்று தொண்டராய், அன்பராய், சீடராய், அரங்கன் நிழலில் இருந்து தொண்டு செய்து வாய்மூடி மௌனியாக கீழ்படிந்து நடந்து அவரவர் கடமைகளைச் செய்து கடைத்தேறுங்கள். தொண்டுகள் செய்யாவிட்டாலும் பரவாயில்லை. அரங்கனிடத்து அமைதியாக நடந்து கொள்ளுங்கள். அதை விடுத்து அரங்கன் செயல்களையோ அரங்கர் தருமத்தினையோ விமர்சித்து இடையூறோ செய்திட்டால் அரங்கன் ஒன்றும் செய்ய மாட்டான். அரங்கன் உள்ளிருக்கும் அருளாளன் அமைதியே வடிவானவன். உலக உயிர்களையெல்லாம் காக்கும் இரட்சகன் ஞானபண்டிதன் விழித்திடுவான். அவன்தன் கோரப்பார்வை பட்டால் ஆறுமுக வேற்படை கிளம்பி இடையூறு செய்திட்டவர் தம்மை என்ன செய்யுமென்று ஞானிகள் எங்களுக்கே தெரியாது.


அரங்கனை சாதாரணமாக எண்ணி விடாதீர். முடிந்தால் குருவாய் ஏற்று பின் தொடருங்கள். இல்லையேல் விலகி விடுங்கள். தப்பித்துக் கொள்வீர்கள். அதை விடுத்து அரங்கனுடனிருந்து கொண்டே அரங்கனுக்கு பங்கம் செய்தால் அது குருதுரோகமாகி உலகின் மூலகுருநாதன் ஞானபண்டிதன் முதல் வழிவழி வந்த திருக்கூட்ட மரபின் ஞானிகள் அத்தனை பேர்களின் கோபத்திற்கும் ஆளாகி மீளா சாபமுற்று ஞானம் மறந்து ஆன்மா மறந்து நரகக்குழியில் வீழ்ந்து பொடிபட்டு போவீர்கள்.



ஆதலில் அமைதியுடன் அரங்கன் திருவடி நிழல் சார்ந்து பண்புடன் பரிபக்குவத்துடன் அவரவரால் இயன்ற அளவு தொண்டுகள் செய்து கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளுங்கள். அவ்விதம் பண்புடன் நடக்கின்ற தொண்டர் தமக்கு நன்மைகளை வாரிவாரி வழங்கி நன்றுதரும் ஞானசித்தனே அரங்கமகாதேசிகனே போற்றி! போற்றி!! கலியுக ஞானியே ஞானதவசியே அரங்கா போற்றி! போற்றி!! என்று குருசீடர் நடைமுறை உரைத்து ஞானசூட்சும நூல் கூறுகிறார் மகான் கொங்கணேஸ்வரர்.
-சுபம்-

2 comments:

  1. நம் நாமே உயர்த்த உய்வ
    அரங்கன் அடியே துறையூர்
    தான் என அறஉக்க!

    ReplyDelete
  2. நீர் உயர உறையுங்கள் உறையூர்
    அரங்கன் அடி யே!

    ReplyDelete