Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Sunday, 14 May 2017

சித்தர்கள் வரலாறு பாகம் 2

முருகப்பெருமான் துணை

மகான் சுப்ரமணியர் ஆசிநூல் (04/09/2013)




பாரதநாடு பொருள் வளமும் புண்ணியபலமும் நிறைந்த நாடாகும். உலகைக்காத்து இரட்சிக்கும்படியான தூய்மையான பூசையாம் சித்தர்பூசைதனை சிறப்புற செய்து வருகின்ற கலியுக ஞானி அரங்கமகாதேசிகர் கார்த்திகை மைந்தனாகிய எம்மைக்கேட்க நானும் பெருமைமிகு சித்தர்கள் வரலாறுதனை நூல்மூலம் உரைக்கின்றேன்.



சித்தர்கள் வரலாற்றில் முதன்முதலாக நந்தி உபதேசம் அடைந்த திருமூலன் குறித்து கூறுகிறேன்.



நந்தி உபதேசம் பெற்று திருமந்திரம் எட்டாயிரம் பாடல்களை இக்கலியுக மக்களுக்காக இயற்றினார், மகான் திருமூலர். ஞானத்தொண்டுகள் பலசெய்த திருமூலர் புரட்டாசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் தில்லையம்பதியாகிய சிதம்பரத்தில் ஜோதியானார்.


தமிழ் தலைவனாகிய எம்மிடம் தமிழைச் சிறப்புறக்கற்று தேர்ந்து உலகெலாம் தமிழ்வழியே ஞானம் பரப்பிய எமது அன்பு மைந்தன் அகத்தியர் மித்ரா வருணர் வர்க்கத்தில் தோன்றினார். தொண்டுகள் பலகோடி செய்து பலகோடி சித்தரிஷிகணங்களை தோற்றுவித்து எம்முடன் ஐக்கியமாகவே மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் கும்பகோணத்தில் ஜோதியானார்.


பல யுகங்கள் வாழும் சக்திபெற்ற யோகியும், மருத்துவம், இரசவாதம், சாஸ்திரங்களில் விற்பன்னரான மகான் பதஞ்சலி முனிவர் பங்குனி மாதம் மூல நட்சத்திரத்தில் அவதரித்து இராமேஸ்வரத்தில் முக்தியும், பிறிதொரு யுகத்தில் திருப்பட்டூரிலும் ஜோதியானார்.


உயர்ஞானம் அளித்திட்ட மகான் கமலமுனிவர் வைகாசி மாதம் பூசநட்சத்திரத்தில் முக்தி பெற்றார்.


குதம்பை அணிகலன் அணிய குதம்பை என பேர்பெற்ற குதம்பைச்சித்தர் அத்திமரபொந்திலிருந்து தவம்செய்து சமுதாயத்திற்கு நல்ஒழுக்கம் நல்விரதவழிமுறைகளை விளக்கி ஆடி மாதம் விசாக நட்சத்திரத்தில் மாயவரத்தில் சித்தி அடைந்தார்.


மச்சமுனிவரின் சீடரான மகான் கோரக்க மகரிஷி கோவை மாவட்டம் பேரூரில் கார்த்திகை மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் சித்தி அடைந்தார்.


மருத்துவத்தில் ஞானம்பெற்ற மகான் தன்வந்திரி பகவான் ஐப்பசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் அவதரித்து, வைத்தீஸ்வரன் கோவிலில் சித்தி பெற்றார்.


மகான் சுந்தரானந்தர் மதுரையில் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் சித்தி பெற்றார். இவரது உயர்ஞானக் கருத்துக்கள் மிகவும் உயர்ந்ததாகும்.


மகான் கொங்கணர், கொங்கு நாட்டில் யாதவர் குலத்தில் தோன்றி மகான் திருமூலரிடத்தும், போகரிடத்தும் சித்தியோகம் பயின்று சித்திரை மாதம் உத்திராட நட்சத்திரத்தில் திருப்பதியில் சித்தி பெற்றார்.


மகான் சட்டைமுனிவர், இலங்கையில் சிங்கள வகுப்பில் தோன்றியவர். இவர் சைவ, வைணவ பேதங்களைப் போக்கிட தெளிவான ஞானகருத்துக்களை கூறியவர். மக்களுக்கு பலவித தொண்டுகள் செய்து ஆவணி மாதம் மிருகசீரிட நட்சத்திரத்தில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் முக்தி பெற்றார்.


மகான் வால்மீகி வேடர் குலத்தில் அவதரித்தவர். ஞானமளிக்கும் பல நூல்களை இயற்றிய மகரிஷி வால்மீகி, புரட்டாசி மாதம் அனுச நட்சத்திரத்தில் திருவையாற்றில் சித்தி பெற்றார்.


மகான் இராமதேவர் வைணவ குலத்தில் தோன்றியவர். இவர் மாசி மாதம் பூர நட்சத்திரத்தில் தென்மேருவாகிய மதுரை அழகர்மலையில் சித்தி பெற்றார்.


மகான் நந்தீசர் ஞானநூல்கள் பல இயற்றி இறுதியில் காசியில் வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத்தில் முக்தி பெற்றார்.


மகான் இடைக்காடர் இடைக்காட்டூரில் புரட்டாசி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் இடையர் குலத்தில் தோன்றினார். கணித, சோதிட, வான சாஸ்திர ஞானம் பெற்று இறுதியில் திருவண்ணாமலையில் முக்தி பெற்றார்.


மகான் மச்சமுனிவர் கோரக்கரின் குருநாதர் ஆவார். இவர் திருப்பரங்குன்றத்தில் ஆடி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார்.


மகான் போகர் விசுவகர்மா குலத்தில் தோன்றினார். பழனி மலையில் வைகாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் சித்தி பெற்றார்.


மகான் கருவூரார் கன்னர் குலத்தில் பிறந்தவர். சித்திரை மாதம் அஸ்தம் நட்சத்திரத்தில் தோன்றினார். பாசுரங்கள் பல இயற்றி, பக்தி நெறிவழி செல்கின்ற இவருடைய ஆசான் மகான் போகமகரிஷி ஆவார். இவர் கரூர் மாவட்டம் கரூரில் சித்திபெற்றார்.


மகான் பாம்பாட்டிச்சித்தர் திருக்கோகர்ணத்தில் ஜோகி என்னும் பிரிவினில் தோன்றினார். மருதமலையில் முருகப்பெருமானின் அருளை பூரணமாகப் பெற்று, சங்கரன்கோவிலில் கார்த்திகை மாதத்தில் மிருகசீரிட
நட்சத்திரத்தில் சித்தி ஆனார்.


மகான் புலிப்பாணிச்சித்தர் வேடர் குலத்தில் தோன்றியவர். புரட்டாசி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் தோன்றினார். பழனிமலையில் முக்தி பெற்றார்.


மகான் புலத்தீசர் பாபநாசத்தில் ஆவணி மாதம் அனுச நட்சத்திரத்தில் சித்தி பெற்றார்.


மகான் தேரையர் பிரும்ம குலத்தில் தோன்றியவர். இவர் பங்குனி மாதம் மூல நட்சத்திரத்தில் தோரணமலையில் சித்தி பெற்றார்.


மகான் சிவவாக்கியர் சங்கர குலத்தில் தோன்றியவர். இவர் தை மாதம் மக நட்சத்திரத்தில் தோன்றினார். மக்களுக்கு உபதேசங்கள் பல அளித்து, கும்பகோணத்தில் முக்தி பெற்றார்.


மகான் ரோமரிஷி மகான் புஜண்டமகரிஷியின் மைந்தராவார். ஆனி மாதம் கார்த்திகை நட்சத்திரத்தில் தோன்றினார். இவர் கைலாசத்தில் முக்தி பெற்றார்.


மகான் காகபுஜண்டர் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் தோன்றினார். பல யுகங்கள் வாழ்ந்த இவர், பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் திருச்சிராப்பள்ளிக்கு அருகில் உள்ள உறையூரில் முக்தி பெற்றார்.


மகான் அழுகண்ணிச்சித்தர் அக்னி குலத்தில் பொன்பரப்பியில், புரட்டாசி மாதம் அனுச நட்சத்திரத்தில் தோன்றி, நாகப்பட்டினத்தில் சித்தி பெற்றார்.


மகான் நாரதர் பிரம்ம குலத்தில் புரட்டாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் தோன்றினார். இவரது முக்தி தலம் திருவிடைமருதூரும், கருவை நல்லூரும் ஆகும்.


மகான் காசிப மகரிஷி பல யாத்திரைகளை செய்து ஞானம் பெற்று உலகமக்களுக்கு நன்மைகள் பல செய்து ஆனி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் ருத்ரகிரி மலையில் சித்தி பெற்றார்.


மகான் வரதரிஷி மார்கழி மாதம் உத்திராட நட்சத்திரத்தில் கேரள மாநிலம் தென்மலையில் ஞானசித்தி அடைந்தார்.


மகான் புண்ணாக்கீசர் கன்னடியர் குலத்தில் அவதரித்தார். வைகாசி மாதம் சித்திரை நட்சத்திரத்தில் சென்னிமலையில் சித்தி பெற்றார்.


மகான் கண்ணிச்சித்தர் கன்னிகளாலான பாடல்களைப் பாடி இப்பெயர் பெற்றார். பங்குனி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பெருங்காவூரில் சித்தி பெற்றார்.


மகான் கடுவெளிச்சித்தர் ஆனந்த களிப்பு எனும் நூலை இயற்றியவர் ஆவார். இவர் தை மாதம் சுவாதி நட்சத்திரத்தில் காஞ்சிபுரத்தில் முக்தி பெற்றார்.


மகான் விசுவாமித்திரர் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் காசி நகரில் சித்தி பெற்றார்.


மகான் கௌதமர் ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார். திருவண்ணாமலை, திருவிடைமருதூர் ஆகிய இடங்களில் சமாதியானார்.


மகான் சுந்தரர் திருவாரூரில் முக்தி அடைந்தார்.


மகான் காலாங்கிநாதர் சித்திரை மாதம் அசுவினி நட்சத்திரத்தில் தோன்றி ஞானம் அடைந்து, திருப்பனந்தாள், திருக்கடவூரில் ஞானசித்தி அடைந்தார்.


மகான் அகப்பைச்சித்தர் ஆவணி மாதம் பூர நட்சத்திரத்தில் தோன்றி மனமாகிய பேயை வென்று திருவையாறில் ஞானசித்தி பெற்றார்.


மகான் பட்டினத்தார் வணிகர் குலத்தில் தோன்றினார். திருவொற்றியூரில் முக்தி பெற்றார்.


மகான் அத்திரி மகரிஷி பிரம்ம ஞானிகளுள் சிறந்த மகரிஷியாகிய இவர் ஆவணி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் கைலாயமலையின் அடிவாரத்தில் சித்தி பெற்றார்.


மகான் வசிஷ்டர் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் தோன்றினார். அஷ்டமா சித்திகளை அடைந்து மார்கழி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் கயிலை மலையில் சித்தி அடைந்தார்.


மகான் வியாச முனிவர் நேபாளத்தில் ஆவணி மாதம் கேட்டை நட்சத்திரத்தில் தோன்றினார். மார்கழி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் கயிலை மலையில் சித்தி பெற்றார்.


மகான் பிருகுமகரிஷி சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் தோன்றினார். மார்கழி மாதம் உத்திராட நட்சத்திரத்தில் முக்தி பெற்றார்.


மகான் அருணகிரிநாதர் திருவண்ணாமலையில் ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் தோன்றினார். ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் முக்தி பெற்றார்.


மகான் சுந்தரானந்தர் மதுரையில் ஆவணி மாதம் ரேவதி நட்சத்திரத்தில் தோன்றினார். இவரை வல்லப சித்தர் எனவும் அழைப்பார்கள். ஆவணி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் சித்தி பெற்றார்.


மகான் பிரம்மமுனிவர் பிரம்மரிஷி தேசத்தில் தோன்றினார். கோரக்கரும், பிரம்மமுனிவரும் இரட்டை சித்தர்கள் என்பார்கள். இவர் பங்குனி மாதம் மிருகசீரிடம் நட்சத்திரத்தில் அவதரித்து, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் முக்தி பெற்றார்.


மகான் யூகி முனிவர், மகான் தேரையரின் மாணாக்கர் ஆவார். ஆவணி மாதம் பூச நட்சத்திரத்தில் தோன்றினார். ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார்.


மகான் அல்லமாபிரபு சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் தோன்றினார். ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் சித்தி பெற்றார்.


மகான் குருராஜர் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் தோன்றினார். ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார்.


மகான் திருநாவுக்கரசர் திருவுடையவூரில் தோன்றினார். திருப்புகலூரில் சித்திரை மாதம் சதயம் நட்சத்திரத்தில் முக்தி பெற்றார்.


மகான் திருஞான சம்பந்தர் சீர்காழியில் தோன்றியவர். நல்லூரில் வைகாசி மாதம் மூல நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார்.


மகான் கபிலர் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் ஊத்துமலையில் முக்தி அடைந்தார்.


மகான் குருதட்சணாமூர்த்தி ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் தோன்றியவர். திருவாரூர் மடப்புரத்தில் ஆவணி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார்.


மகான் யாகோபு ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் தோன்றியவர். கோவை மாவட்டம் பேரூரில் பங்குனி மாதம் பூராட நட்சத்திரத்தில் முக்தி அடைந்தார்.


மகான் இராமலிங்க சுவாமிகள் வடலூரில் தை மாதம் பூச நட்சத்திரத்தில் ஜோதியில் கலந்தார்.


மகான் கணபதி தாசர் ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் நாகப்பட்டினத்தில் முக்தி பெற்றார்.


மகான் பீர்முகமது ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் சித்தி பெற்றார்.


மகான் வியாக்ரமர் தை மாதம் பூச நட்சத்திரத்தில் பெரம்பலூர் மாவட்டம் திருப்பட்டூரில் முக்தி அடைந்தார்.


மகான் திருமாளிகைத்தேவர் ஆனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் திருவாடுதுறையில் முக்தி அடைந்தார்.


மகான் வரரிஷி கயிலையில் சித்திரை மாதம் அசுவனி நட்சத்திரத்தில் சித்தி பெற்றார்.


மகான் தாயுமானசுவாமிகள் இராமேஸ்வரம் அருகில் காட்டூரணியில் தை மாதம் விசாக நட்சத்திரத்தில் ஜோதி ஆனார்.


மகான் மார்க்கண்டேயர் ஆனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கருவை நல்லூரில் முக்தி அடைந்தார்.


மகான் மிருகண்டரிஷி சதுரகிரியில் தவமியற்றி மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் சதுரகிரியில் சித்தி பெற்றார்.


மகான் ஜமதக்கினி மகரிஷி ஐப்பசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் ஊத்துமலையில் சித்திபெற்றார்.


மகான் கஞ்சமலை சித்தர் கார்த்திகை மாதம் பூசம் நட்சத்திரத்தில் சேலம் அருகிலுள்ள கஞ்சமலையில் முக்தி பெற்றார்.


மகான் பத்ரகிரியார் பங்குனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் திருவிடை மருதூரில் சித்தி பெற்றார்.


மகான் மௌனசித்தர் தை மாதம் சதய நட்சத்திரத்தில் சித்தி பெற்றார்.


மகான் ஞானசித்தர் பண்டரிபுரத்தில் அவதரித்தார். ஆனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கயிலையில் முக்தி பெற்றார்.


மகான் வராகிமிகி ஆவணி மாதம் மூலம் நட்சத்திரத்தில் சதுரகிரி மேல்மலையில் சித்தி பெற்றார்.


மகான் ஒளவையார் பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் சித்தி பெற்றார்.


மகான் திருவள்ளுவர் தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் மயிலாப்பூரில் சித்தி பெற்றார்.


மகான் மாணிக்கவாசகர் திருவாதவூரில் பிறந்தார். மாசி மாதம் மகம் நட்சத்திரத்தில் திருப்பெருந்துறையில் முக்தி பெற்றார்.


மகான் கணநாதர் சீர்காழியில் பிறந்தார். ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் சீர்காழி தோனியப்பர் சன்னதியில் சித்தி பெற்றார்.


மகான் வேதாந்த சித்தர் காஞ்சிபுரம் திருத்தண்காவில் பிறந்தார். கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் கயிலையில் முக்தி பெற்றார்.


மகான் தூர்வாச முனிவர் துருவ தேசத்தில் பிறந்தவர். மார்கழி மாதம் பூராட நட்சத்திரத்தில் திருவண்ணாமலையில் சித்தி பெற்றார்.


மகான் கதம்ப மகரிஷி ஆனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கயிலையில் முக்தி பெற்றார்.


மகான் அனுமன் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் சித்தி பெற்றார்.


மகான் மெய்கண்டதேவர் திருக்கோவிலூரில் அவதரித்தார். திருக்கோவிலூரில் கார்த்திகை மாதம் பூர நட்சத்திரம் முக்தி அடைந்தார்.


மகான் அருள்நந்தி சிவாச்சாரியார் புரட்டாசி மாதம் பூரம் நட்சத்திரத்தில் திருத்தெலூரில் முக்தி பெற்றார்.


மகான் ஜனகர் தை மாதம் பூசம் நட்சத்திரத்தில் திருவல்லம் ஊரில் முக்தி பெற்றார்.


மகான் அசுவினித்தேவர் ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் சதுரகிரியில் முக்தி பெற்றார்.


மகான் அம்பிகானந்தர் புரட்டாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் கயிலையில் முக்தி பெற்றார்.


மகான் இராமானந்தர் மார்கழி மாதம் பூராட நட்சத்திரத்தில் ஸ்ரீரங்கத்தில் முக்தி பெற்றார்.


மகான் உமாபதி சிவாச்சாரியார் சித்திரை மாதம் அஸ்த நட்சத்திரத்தில் சிதம்பரம் அருகில் அண்ணாமலைநகரில் சித்தி பெற்றார்.


மகான் கடைப்பிள்ளைச்சித்தர் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் மேருமலையில் சித்தி பெற்றார்.


மகான் கண்ணானந்தர் தை மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் காளஹஸ்தியில் சித்தி பெற்றார்.


மகான் கல்லுளிச்சித்தர் ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் ஊத்துமலையில் முக்தி அடைந்தார்.


மகான் கலைக்கோட்டுச்சித்தர் மதுரையில் முக்தி அடைந்தார்.


மகான் கௌபாலச்சித்தர் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் கொங்கு நாட்டில் சித்தி பெற்றார்.


மகான் கணராமர் புரட்டாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் காசியில் சித்தி பெற்றார்.


மகான் குகைநமச்சிவாயர் மாசி மாதம் ஆதிரை நட்சத்திரத்தில் திருவண்ணாமலையில் சித்தி பெற்றார்.


மகான் குறும்பைச்சித்தர் கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் கொங்கு மலையில் சித்தி பெற்றார்.


மகான் கூர்மானந்தர் சித்திரை மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் பாண்டிய நாட்டில் சித்தி பெற்றார்.


மகான் கௌசிக முனிவர் சித்திரை மாதம் பரணி நட்சத்திரத்தில் திருவாடுதுறையில் சித்தி பெற்றார்.


மகான் சண்டிகேசர் தை மாதம் உத்திர நட்சத்திரத்தில் திருசேய்நல்லூரில் முக்தி பெற்றார்.


மகான் சத்யானந்தர் ஐப்பசி மாதம் பூச நட்சத்திரத்தில் விரிஞ்சியூரில் சித்தி பெற்றார்.


மகான் சங்கமுனிச்சித்தர் ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் கயிலையில் சித்தி பெற்றார்.


மகான் சங்கர மகரிஷி ஆனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கயிலையில் முக்தி பெற்றார்.


மகான் சங்கிலிச்சித்தர் ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் திருவொற்றியூரில் சித்தி அடைந்தார்.


மகான் சச்சிதானந்தர் தை மாதம் திருவோணம் நட்சத்திரத்தில் கயிலையில் சித்தி பெற்றார்.


மகான் நந்தனார் ஆதனூரில் தோன்றினார். புரட்டாசி மாதம் ரோகிணி நட்சத்திரத்தில் சிதம்பரத்தில் சித்தி பெற்றார்.


மகான் சிவயோக முனிவர் புரட்டாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் கயிலையில் சித்தி பெற்றார்.


மகான் சிவானந்தர் ஆனி மாதம் மூல நட்சத்திரத்தில் சதுரகிரியில் சித்தி பெற்றார்.


மகான் சுகப்பிரம்மர் மார்கழி மாதம் பூராட நட்சத்திரத்தில் கயிலையில் முக்தி அடைந்தார்.


மகான் சூத முனிவர் வைகாசி மாதம் உத்திராட நட்சத்திரத்தில் சதுரகிரியில் முக்தி பெற்றார்.


மகான் சூர்யானந்தர் கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் வடதேசத்தில் முக்தி அடைந்தார்.


மகான் சூல முனிவர் வைகாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் இமயமலை சாரலில் முக்தி பெற்றார்.


மகான் சேது முனிவர் ஆடி மாதம் பூர நட்சத்திரத்தில் கொங்கு நாட்டில் சித்தி பெற்றார்.


மகான் சொரூபானந்தர் ஆவணி மாதம் மூல நட்சத்திரத்தில் தில்லை என்கிற சிதம்பரத்தில் முக்தி பெற்றார்.


மகான் ஜம்பு மகரிஷி ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் அயோத்தியில் சித்தி பெற்றார்.


மகான் ஜனந்தனர் புரட்டாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் திருப்பதியில் சித்தி பெற்றார்.


மகான் ஜனாதனர் கார்த்திகை மாதம் பரணி நட்சத்திரத்தில் காளஹஸ்தியில் சித்தி பெற்றார்.


மகான் ஜனக்குமாரர் மாசி மாதம் மக நட்சத்திரத்தில் கயிலையில் முக்தி பெற்றார்.


மகான் ஜெகநாதர் மார்கழி மாதம் பூராட நட்சத்திரத்தில் பூரி நகரில் சித்தி பெற்றார்.


மகான் ஜெயமுனிவர் தை மாதம் பூச நட்சத்திரத்தில் காஞ்சிபுரத்தில் சித்தி பெற்றார்.


மகான் டமாரானந்தர் மார்கழி மாதம் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் கொங்கு நாட்டில் முக்தி பெற்றார்.


மகான் தானந்தர் சித்திரை மாதம் சதய நட்சத்திரத்தில் நாகப்பட்டினத்தில் சித்தி பெற்றார்.


மகான் திரிகோணச்சித்தர் தை மாதம் திருவோண நட்சத்திரத்தில் இலங்கை திரிகோணமலையில் சித்தி பெற்றார்.


மகான் நாதாந்தசித்தர் புரட்டாசி மாதம் விசாக நட்சத்திரத்தில் கயிலையில் சித்தி பெற்றார்.


மகான் நொண்டிச்சித்தர் ஆனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கொல்லிமலையில் சித்தி பெற்றார்.


மகான் பரத்துவாசர் மார்கழி மாதம் உத்திராட நட்சத்திரத்தில் கயிலையில் முக்தி பெற்றார்.


மகான் பரமானந்தர் ஆடி மாதம் பூரம் நட்சத்திரத்தில் காஞ்சிபுரத்தில் சித்தி பெற்றார்.


மகான் பராசரிஷி பங்குனி மாதம் உத்திர நட்சத்திரத்தில் சிதம்பரத்தில் முக்தி பெற்றார்.


மகான் பிங்கள முனிவர் மார்கழி மாதம் மூல நட்சத்திரத்தில் திருக்கச்சூரில் முக்தி அடைந்தார்.


மகான் பிடிநாகீசர் தை மாதம் பூராடம் நட்சத்திரத்தில் திருக்கச்சூரில் சித்தி பெற்றார்.


மகான் பூனைக்கண்ணார் ஆடி மாதம் ஆயில்யம் நட்சத்திரத்தில் பருவத மலையில் முக்தி அடைந்தார்.


மகான் மஸ்தான் ஐப்பசி மாதம் பரணி நட்சத்திரத்தில் அரபு எல்லையில் முக்தி அடைந்தார்.


மகான் மயூரேசர் ஆடி மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் சென்னிமலையில் சித்தி அடைந்தார்.


மகான் மாலாங்கன் ஆவணி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் ஊத்துமலையில் சித்தி பெற்றார்.


மகான் முத்தானந்தர் ஆடி மாதம் பூச நட்சத்திரத்தில் சிதம்பரத்தில் முக்தி பெற்றார்.


மகான் யோகச்சித்தர் ஆனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கயிலையில் முக்தி பெற்றார்.


மகான் யோகானந்தர் மார்கழி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கயிலையில் முக்தி பெற்றார்.


மகான் விளையாட்டுச்சித்தர் மாசி மாதம் மக நட்சத்திரத்தில் வெள்ளியங்கிரி மலையில் முக்தி பெற்றார்.


மேற்கண்ட மகான்களின் வரலாற்றினை கலியுகஞானி அரங்கமகாதேசிகர் ஞானத்தலைவன் முருகப்பெருமானிடம் அறிவிக்க வேண்டி வேண்டுகோள் வைத்திட ஞானத்தலைவன் முருகப்பெருமானும் மனமிரங்கி அரங்கமகாதேசிகருக்கு ஞானிகள் வரலாறுகள்தனை அருளிச்செய்தார்.


ஞானவான் அரங்கரின் ஓங்காரக்குடில் எல்லா ஞானிகளின் ஆசியும், அருளையும் பெற்ற சபையாகும். எல்லா ஞானிகளும் இந்த ஓங்காரக்குடிலிற்கு ஆற்றல் பல அளித்து ஞான சபையென அறிவிக்கின்றோம். அத்தகு ஞான எல்லையில் ஞானிகளாகிய நாங்களெல்லாம் கலந்து அலங்கரித்து இவ்வுலகை ஆட்சி செய்கின்றோம். அவரரும் அந்த ஞான சபைக்கு வந்து கலந்து ஆசி பெற்றும் தேவாதி தேவர்களின் அருளையும் பெற்று உயர்வடைவீர்கள் என கூறுகிறார் மகான் சுப்ரமணியர் தமது அருட்சுவடி மூலம்.
....


     

Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html





No comments:

Post a Comment