Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Saturday, 6 May 2017

ஞானத்திருவடி நூலிற்கு மகான் அகத்தியர் ஆசி நூல்

முருகப்பெருமான் துணை


மகான் அகத்தியர் ஆசி நூல்



அண்டத்தை காக்கவந்த அரங்கா வாழ்க
அறப்பணியை செய்கின்ற சித்தா வாழ்க
அண்டத்தில் தர்மத்தை வளரச்செய்து
அகத்தியனின் சூட்சமனே தேசிகா வாழ்க


வாழ்கவே உன் சேவை உலகத்தில்
உயர்ந்ததென்று சித்தர்களும் அறிவோமய்யா
வீழாது சீடர்களை காக்கும் அரங்கா
விண்ணோரின் அருள் உருவம் சூட்சமன் நீ


சூட்சமனே உனைபணிவோர் சாக்காட்டை வெல்வார்
சித்தனே உனைபணிவோர் சத்தியம் அறிவார்
தேடுகின்ற சூட்சுமத்தை மாந்தர் அறிய
தனைபணிந்தால் போதுமென்று யானுரைத்தேன்


உரைத்தேனே ஞானத்திருவடி நூலின் சிறப்பை
உலகத்தின் சிறந்ததொரு சன்மார்க்கத்தை
சரியாக இந்நூல் ஓங்கச் செய்யும்
சித்தர்கோன் (அகத்தியர்) அருள்இருக்கும் இந்நூலை


இந்நூலை படிப்போர்க்கு இருள்நீங்கும்
இந்நூலை பற்றுவோர்க்கு மாயைநீங்கும்
இந்நூலை போற்றுவோர்க்கு புகழ்ஓங்கும்
இந்நூலால் உன்அருளை பெறுவார்மக்கள்


மக்களுக்கு மார்க்கம் சொல்லும் இந்நூலால்
மும்மலத்தை மக்களெல்லாம் வெல்வார்தானே
மகிழ்ச்சியுடன் இந்நூலை பூசிப்போர்கள்
மகான்களின் அருளையே பெறுவார்தானே


பெறுவார்கள் இந்நூலின் புகழறிந்து
புவிஎங்கும் பரப்புவோரும் புண்ணியம் பெறுவார்
அரங்கனே உன்மூலம் மக்களுக்கு
அகத்தியனும் சிலசூட்சுமம் சொல்லவந்தேன்


சொல்லிடவே இந்நூலால் சன்மார்க்கமறியும்
செகம்மக்கள் சித்தர்களால் காக்கப்படுவார்
நிலையாக தர்மத்தை குடில்மூலம்
நிறைவாக செய்வோரெல்லாம் புண்ணியர்தானே


புண்ணியத்தை மக்களெல்லாம் மிககாண
பொருளீந்து அரங்கர்தர்மத்தில் கலப்பீர்தானே
உண்மையையும் ஆன்மாவையும் அறிவதற்கும்
உற்றஞானி அரங்கனையே பற்றிடுவீர்


பற்றறுத்து புவிதன்னில் சித்தனாய்
பரமானந்தன் தேசிகனிருக்க அஞ்சிடாதீர்
குறைதன்னை அரங்கனிடத்தில் கூறிநின்று
காலடியை பற்றினாலே குறையகலும்


குறையகலும் நோயுள்ளோர் அரங்கனிடத்தில்
குறைவில்லா அளவுபாரா தானியங்கள் ஈந்து
அரங்கனாசி பெற்றாலே நோயும்தீரும்
(நோயுள்ளோர்கள் குடிலில் நடைபெறும் அன்னதானத்திற்கு பொருளுதவி செய்தால் நோய் நீங்கும் என்பது அகத்தியர் வாக்கு)
அடங்காத சுவாசதொல்லை அவதிஉறுவோர்


அவதிஉறுவோர் தான்சனித்த வாரம்தோறும்
அன்னதானத்திற்கு பொருளுதவி ஈந்து ஆசி
மெய்யாக பெறுவோர்க்கு சுவாசதொல்லைதீரும்
(ஆஸ்துமா, ஈஸ்னோபிலியா போன்ற சுவாசத் தொல்லையினால் அவதியுறுவோர் அவர்கள் பிறந்த கிழமை தோறும், தங்களால் இயன்ற அளவு குடிலில் நடைபெறும் அன்னதானத்திற்கு பொருளுதவி செய்தால் நோய்களிலிருந்து விடுபடலாம்)
முறையான மணம் தொழில் சிக்கலுள்ளோர்


உள்ளோர்கள் வற்றாது பொருளுதவி தந்து
உண்மையான அரங்கனருள் பெறுவோர்க்கு
வளம்பல மணம் தொழில் சிறக்கும்தானே
(திருமணம் தொழில் தடைபட்டவர்கள் குடிலில் நடைபெறும் அன்னதானத்திற்கு பொருளுதவி செய்தால் திருமணத்தடை, தொழில் தடை நீங்கி வளம் பெறுவார்கள்)
உளமார அரங்கனையே தினம் தினம்


தினம்தினம் மனமுருகி இல்அமர்ந்து
தியானங்கள் செய்வோர்க்கு அமைதிகிட்டும்
தினம்தினம் அரங்கனை துதித்து சயனிப்போர்க்கு
தேவையில்லா கெட்டசொப்பனம் நீங்கியோடும்


ஓடிடுமே வினையெல்லாம் என்றுணர்வீர்
ஓங்கார குடிலாசானை பற்றிடுவீர்
திடமான தர்மம் செய்யும் அரங்கனே
தன்னுடலில் யானிருந்து உலகத்தை


உலகத்தை ரட்சிப்பேன் அகத்தியன் யான்
உன்தவத்தால் உலகெங்கும் அமைதிபிறக்கும்
நிலையாக நீசெய்யும் தொண்டுவளர
நித்தியமாய் அருளாசி புரிந்தேன் முற்றும்.
-சுபம்-



     

Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html





No comments:

Post a Comment