Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Saturday, 15 September 2018

தற்காலம் ஆன்மீகவாதிகளின் செயல்பாடுகளும் அறிவுரை ஆசியும் மகான் சுப்பிரமணியர் நடைமுறை அறிவுரை ஆசி நூல்

முருகப்பெருமான் துணை


அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி


தற்காலம் ஆன்மீகவாதிகளின் செயல்பாடுகளும் அறிவுரை ஆசியும்
மகான் சுப்பிரமணியர் நடைமுறை அறிவுரை ஆசி நூல்

12.09.2018, புதன்கிழமை


அருட்கனலை கொண்டிட்ட அரங்கனுக்கு
ஆறுமுகன் வாக்குதான் ஆசியோடு
ஒருமனதாய் அரங்கன் வாழ நடைமுறை ஆசி
உலகத்திற்கும் மக்களுக்கும் ஆசி சொல்வேன்


சொல்லுகிறேன் கலியுகத்தில் மெய் ஆன்மீகம்
சொல்லும்படி இல்லையப்பா பிழையே கண்டேன்
நல்லதொரு ஞானம் சொல்லா பிழைகளை சொல்லி
நாள்நாளும் பிழை செய்து வாழ்கின்றார்கள்


வாழ்கின்றோர் மத்தியில் வந்துதித்த
வள்ளல் நீ அரங்கன் நீ வாழிய என்றேன்
ஊழ்வினையால் உழன்றிட்ட மக்களுக்கு
உன்னுடைய வழிகாட்டல் தெளிவு தந்து


தந்ததப்பா ஞானத்தில் நிலைத்திருக்க
தரணியிலே குரு யார் என அறிய வேண்டும்
சுந்திரனே குருவால் மட்டும் தெய்வத்தை காணலாம்
சுத்த ஞானம் குருவால் மட்டும் காணலாகும்


காணவே கு என்றால் வெளிச்சம் ஆகும்
கண்டுரைக்க ரு என்றால் அறிவும் ஆகும்
காணுவாய் குருவைக் கண்டால் அறிவும் ஜோதி
காணாவிட்டால் அவனுக்கு முக்தி ஏது?


முக்தி பெற வழி சொல்வான் முனை திறப்பான்
மூர்க்கத்தை அழித்துதான் வாழ வைப்பான்
சக்திதனை தந்திடுவான் சன்மார்க்கம் தந்திடுவான்
சாகாக்கலை என்னவென்று எடுத்துரைப்பான்


உரைத்திடுவான் மரணமற்ற வாழ்வு தன்னை
உரைத்திடுவான் சிவத்தினை அறிவதற்கு
உரைத்திடுவான் சிவத்தோடு சிவமுமாக
உரைத்திடுவான் சிவநிலையை அடையும் மார்க்கம்


மார்க்கத்தை சொல்பவனே மகா குருவும் ஆகும்
மாந்தர்களும் குருபதத்தை பிடிக்க வேண்டும்
சார்ந்திருத்தல் அவசியமே குருஅடி தன்னை
சன்மார்க்க நிலைமாறா சார்ந்திருக்க வேண்டும்


சார்ந்திருத்தல் எளிதல்ல கடினமப்பா
சஞ்சலங்கள் இடையிடையே வந்து ஆட்டும்
பார்க்க வேண்டும் குருபதத்தை இறுக்கமாக
பாங்காக குருவாக்கை அறிய வேண்டும்


அறிந்துதான் தர்மத்தினை செய்திட வேண்டும்
ஆசானை ஈசனாய் அறிய வேண்டும்
அறிவதுடன் தெளிந்துதான் நிற்க வேண்டும்
ஆசானே சிவவடிவம் என்று உணர வேண்டும்


உணர்ந்து உணர்ந்து வணங்கியோரே உயர்நிலை கண்டார்
உத்தமமாய் குருதேகம் பார்ப்பது நன்று
குணவான்கள் பார்த்தவுடன் பணிந்து கொள்வார்
குருதொண்டை சிவதொண்டாய் கருதி நிற்பார்


நிற்க வேண்டும் அரங்கனை ஆறுமுகனாய் எண்ணி
நிர்மலம் ஆனதொரு சண்முகன் என்று
அற்புதமாய் எண்ணிதான் வணங்க வேண்டும்
அரங்கனும் சுப்பிரமணியரும் வேறல்ல என்றேன்


என்றுமே குருவழி நடக்க வேண்டும்
இல்லையென்றால் அஞ்ஞானம் பற்றிக் கொள்ளும்
நன்றான குருநாமம் சொல்ல வேண்டும்
நாள்நாளும் ஜெபமும் செய்ய நமனும் இல்லை


நமனேது துன்பமேது அவர்தமக்கு
நாள்நாளும் அவர் அடைவார் பேரின்பத்தை
சுமையேது குருநாமம் சொல்வோர்க்குத்தான்
சுப்பிரமணியம் சுப்பிரமணியம் என்று உரைக்கும்போது


உரைக்கும்போது சிவத்தின் அருள் கிட்டும்
ஓங்காரக்குடில் ஆசான் வாழ்கவென்றால்
குறையேது அவன் வாழ்வில் அவனே ஞானி
குடில் பெருமை பேசுவதே தொண்டர் சேவை


தொண்டர்களுக்கு இது எந்தன் கட்டளையாகும்
தொண்டர்களை கேட்கின்றேன் என் மகன் பெருமை
கண்டு பேசல் குற்றமோ சொல்லுங்கள் இப்போ
கந்தனின் பெருமையை குடில் வந்து பார்ப்பீர்


பார்க்கவே ஆசானை சுப்பிரமணியமாய்
பாங்கான அரங்கன்தான் என் வடிவமாகும்
சார்ந்துதான் இருக்கின்றேன் சண்முகம் அரங்கனை
சஞ்சலங்கள் தீர்க்கத்தான் வாருங்கள் இங்கே


இங்கு வந்து குடில் பெருமை குடில் உணவைப்பற்றி
எடுத்துரைக்க வேண்டுமே சேவையாக
இங்கு வந்து ஓங்காரக்குடில் பெருமை அறிந்து
இவ்வுலகம் அறியவே எடுத்துரைக்க வேண்டும்


உரைக்க வேண்டும் குடில் உணவு மருந்து என்று
உரைக்க வேண்டும் குடில் உணவு அருள் உணவு என்று
உரைக்க வேண்டும் குடில் தொண்டு மகேசன் தொண்டு என்று
உரைக்க வேண்டும் குடில் தொண்டு வள்ளல் தொண்டு என்று


வள்ளல்பின் மாந்தர்கட்கு அன்னம் தன்னை
வழங்கியது யாரப்பா? நீதான் அரங்கா
வள்ளலும் அருள்கின்றார் இக்கணத்தில்
வாழ்கவென்று உன்னையும் வாழ்த்துகின்றார்


வாழ்த்தை நீ பெற்றுவிட்டாய் இக்கணம் தொட்டே
வள்ளலையும் அகத்தியரையும் என்னையும் கண்டாய்
ஊழ் அகல உனைக் காண வேண்டுமப்பா
ஒவ்வொரு தொண்டர்கட்கும் கட்டளையாய் சொல்வேன்


சொல்கின்றேன் குடில் தொண்டை செய்யுங்கள் என்று
சுத்த சேவை செய்யும்போது சுப்பிரமணியர் சேவை
பொல்லாத வினை அகல புண்ணிய சேவை
பொருந்தியே செய்வோர்க்கு புண்ணியம் கிட்டும்


கிட்டுமென்றே சுப்பிரமணியர் சொல்லி விட்டேன்
கூறுகிறேன் தேகத்தில் கனல் கூடி நிற்குதப்பா
சட்டென்று தேகத்தில் வலி தோன்றுமப்பா
சஞ்சலமே வேண்டாம் விலகிப் போகும்


விலகிவிடும் முருகன் என் அருள் பலத்தால்
விளம்புகிறேன் அகவல்தனை பாடிக் கேளு
நலமடைவாய் என்றுதான் வாக்குரைத்தேன்
நானிலத்தில் சுத்த ஞானக் குடிலமைத்து


அமைத்துதான் மாந்தர் சேவை செய்யும் உனக்கு
அருளோடு பொருள் தருவார் வாழ்வார் வாழ்வார்
சுமை நீங்க குடிலிற்கு தனம் தருவீர்
சுப்பிரமணியன் அருள் பெறவே தனம் தருவீர்


தனம் தந்து அருள் பெறுவீர் அழைக்கின்றேன் வேலன்
தவசியான அரங்கனை வந்து காண்பீர்
மனம்மகிழ ஞானம் பெற வந்து காண்பீர்
மாந்தர்களை அழைக்கிறேன் வேலவன் இன்றே


வேலனும் அரங்கனும் ஒன்றுதானே
வேறல்ல ஈசனும் அரங்கனும் ஒன்றே
மேலான குருஅரங்கன் ஈசன் அவதாரமாகும்
மேன்மையாய் நடைமுறையில் குருசேவை செய்ய வேண்டும்


குரு சேவை கோடி புண்ணியம் தந்திடும்தான்
குருதீட்சை பிறவியை அளித்திடும்தான்
குருவாக்கு விதியையே மாற்றி நிற்கும்
குரு ஆசி பெறுவதற்கு அழைக்கின்றேன் வேலன்


அழைக்கின்றேன் வாரீர் வாரீர் மக்களே இன்று
அரங்கர் மூலம் கண்டுதான் செய்வீர் இங்கே
அழைக்கின்றோம் நடைமுறையை சொல்லி விட்டேன்
அரங்கனே வாழிய வாழிய என்றேன் முற்றே.
-சுபம்-



முருகப்பெருமான் துணை


மகான் சுப்பிரமணியர் அருளிய தற்கால ஆன்மீகவாதிகளின் செயல்பாடுகளும் உண்மை ஆன்மீகவாதிகளுக்கான நடைமுறை அறிவுரையும் ஆசியும் சிறப்பு நூல் :


ஞானம் அளிக்கும் யோகக்கனலாம் அருட்கனலை கொண்டிட்ட ஆறுமுக அரங்கமகா தேசிகனுக்கு முருகப்பெருமான் யான் ஆசிகளோடு சொல்லும் அருள் வாக்குதான் இதுவப்பா. ஆறுமுக அரங்கனும், அவர்தம் தொண்டர்களும், உலகோரும் ஒற்றுமையுடன் சிறப்பாய் வாழ்ந்திட கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளை ஆசி அறிவுரை நூலாக கூறுகிறேன் முருகப்பெருமான் யானுமே எனக் கூறுகிறார் மகான் முருகப்பெருமான். (நூல் வாசித்தளித்த நாள் விளம்பி வருடம் ஆவணி மாதம் 27ம் நாள் 12.09.2018, புதன்கிழமை). தற்காலம் இவ்வுலகினில் உண்மை நெறிப்படி நடந்து கொள்கின்ற உண்மை ஆன்மீகமும் உண்மை ஆன்மீகவாதிகளும் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. யாவரிடத்தும் குற்றம் உள்ளது எங்கு பார்த்தாலும் பிழையாகத்தான் இருக்கிறதப்பா. நல்ஞானம்தனை உண்மை ஞானம்தனை, தம்மை நம்பி வரும் அன்பர்களுக்கு சொல்லித்தராமல் அவரவரும் பிழைப்பிற்காக பிழையான ஆன்மீகத்தைச் சொல்லிக் கொடுத்து பிழையான ஆன்மீகவாதிகளாக ஆகி பிழைபட்ட ஆன்மீகத்தைதான் வளர்த்து வருகின்றார்கள்.


இப்படிப்பட்ட பொருள் பற்றும், காமுக எண்ணம் உடைய ஆன்மீகவாதிகள், பிழையான பொய் ஆன்மீகவாதிகளுக்கு மத்தியில் உண்மை ஆன்மீகம் போதித்து மக்களை வழிநடத்திடவே அவதாரமாக அவதரித்திட்ட வள்ளல் ஞானி ஆறுமுக அரங்கனே உம்மை முருகப்பெருமான் யானும் வாழ்த்துகின்றேனப்பா.


ஊழ்வினைகள் காரணமாக மனஉளைச்சலிற்கு ஆட்பட்டு, ஊழ்வினை துன்பங்களால் அவதியுறும் மக்களுக்கு அரங்கா உமது வழிகாட்டல்கள் தெளிவு தந்து காத்திடும். உமது வழிகாட்டல்கள் மக்களுக்கு ஞானத்தை தந்ததப்பா. இவ்வுலகினில் ஞானத்தில் நிலைத்திருக்க வேண்டுமாயின் முதலில் குரு என்பவர் யார் என்பதை அறிந்து கொள்ள வேண்டும் அன்பர்கள் எல்லாம். ஏனெனில் குருவினால் மட்டுமே, குருவின் மூலமாக மட்டுமே தெய்வத்தைப் பற்றி அறியவும், காணவும் முடியும். குருவின் துணையால் மட்டுமே சுத்த ஞானத்தை அறியவோ உணரவோ முடியுமப்பா.


குரு என்பது யார்? குரு என்றால் என்ன? எனில் குரு என்ற சொல்லில் உள்ள ‘கு’ என்ற எழுத்து வெளிச்சம் என்பதை குறிக்கும் எழுத்தாகும். ‘ரு’ என்ற எழுத்து அறிவினைக் குறிப்பதாகும். ஆக குரு என்பது பிரகாசமான அறிவு என்பதாகும். அதாவது ஜோதி வடிவான அறிவு அல்லது அறிவும் ஜோதியும் என்பதாகும். குருவை தரிசனம் செய்தால் அவனது அறிவு ஜோதி வடிவாக, அதாவது அறிவு விளக்கம் பெற்று செம்பொருள் அறிவாகும். குருவை காணாவிட்டால் அவனது அறிவு மலஅறிவாக மூடஅறிவாகப் போய் அறியாமைக்கு உள்ளாகி முக்தி அடையும் பேற்றினை இழந்து விடுவான். குரு இல்லையேல் முக்தி என்பது இல்லையப்பா.


குரு என்பவர் என்ன செய்வார்? குரு எனப்படும் அறிவுச் சுடரானவர் தம்மை நம்பி குருவாய் ஏற்று பணிந்தவர்க்கு அவர்தம் வினைகளை போக்கி முக்தியை அடையும் வழியை உணர்த்தி வழி நடத்துவார். பத்தாம் வாசலாகிய புருவமத்தியை திறந்து அவனை வாசிவசப்படச் செய்து வாசி நடத்திக் கொடுப்பான். அவனுக்கு வாசி நடத்திக் கொடுத்து அவனுள் இருக்கும் ஆன்ம குற்றமாகிய மூர்க்கத்தனத்தை, தான் எனும் ஆணவத்தை, மும்மலக்குற்றத்தை நீக்கி அவனை மனிதனாய், தேவனாய், தெய்வமாய் வாழ வைப்பாரப்பா குருவெனும் பெருந்தாய்.


நம்பிய பக்தனுக்கு சகலமும் தந்து கடைத்தேற்றிக் கொள்ளும் சக்தியும் தந்து கடைத்தேற்றுவான். சகமார்க்கமாகிய எவ்வுயிரையும் தம்முயிர்போல் எண்ணி இரங்கி இதம் புரியும் சன்மார்க்க நெறியினை போதித்து சாகாக்கலை எனும் மரணமிலாப் பெருவாழ்வைப் பற்றியும் அதை அடைந்திடும் முறையையும் உணர்த்திடுவான்.


மரணமிலாப் பெருவாழ்வை கூறி அதை அடைய துணை புரிந்து சிவத்தினை அறிவதற்கும், சிவத்தோடு தம்மை நம்பிய சீடனையும் சிவமாக ஆக்கிய சிவத்தோடு சிவமாக குருவே ஆகி உரைத்திடுவான், சிவநிலையை அச்சீடன் அடையும் வழிமுறைகளை. இப்படிப்பட்ட வல்லமை மிக்கவரும் சிவத்தை அடையும் மார்க்கத்தை தெள்ளத்தெளிவாக சொல்பவனே உண்மை குரு ஆவார். அவனே மகா குருவும் ஆவார்.


அப்படிப்பட்ட வல்லமையுள்ள மகா குருவின் திருவடிகளைப் பற்றி சரணடைந்தால் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளலாம். அப்படிப்பட்ட உண்மை குருவை அவசியம் ஆன்மீகவாதிகளும் இல்லறவாசிகளும் துறவு மேற்கொள்பவர்களும் சார்ந்திருக்க வேண்டுமப்பா.


உண்மை குருவின் திருவடி பற்றினோர் குரு உபதேசிக்கும் உபதேசமாகிய சன்மார்க்க நெறியினின்று வழுவாமல் நடந்திட வேண்டுமப்பா. ஒரு மனிதன் சன்மார்க்க நெறியினில் வழுவாது நடப்பது என்பது அவ்வளவு எளிதல்ல, கடினமான செயலாகும். ஏனெனில் கலியுகத்தின் மாமாயையினால் அந்த சீடனோ, அன்பரோ ஆட்பட்டு சஞ்சலங்களுக்கு ஆளாகிட நேரிடும். இடையிடையே தாம் செல்லும் பாதை சரியானதா? தவறா? என தடுமாற்றமும் உண்டாகும். அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தாம் ஏற்ற உண்மை குருவின் திருவடிகளை மானசீகமாகப் பற்றிக் கொண்டு மனம் உருகி பிரார்த்தனைகள் செய்திட வேண்டும்.


“எம்பெருமானே குருநாதா நான் பாவிதானப்பா, சந்தேகம் என்னை ஆட்கொண்டு வாட்டுகிறது. இந்த பாவி மீது இரக்கம் காண்பித்து எம்மையும் ஒரு பொருட்டாக மதித்து ஏற்றுக் கொள்ளுங்கள்” என குருவடி பணிந்து மனம் உருகி பிரார்த்தனைகள் செய்து குருவினை விட்டும், சன்மார்க்கத்தை விட்டும் நீங்காமல் தொடர்ந்து முயற்சிகள் செய்து குருவையும் குருவின் தன்மையையும், சன்மார்க்கத்தையும் அறிந்து செயல்பட வேண்டும்.


உங்களைத் தடுக்கும் மாயையினின்று விடுபடவும், வினைகளின் துன்பங்களில் இருந்து விடுபடவும், நீங்கள் புண்ணியவானாக இருக்க வேண்டும். ஆதலினால் உங்களது புண்ணியத்தை பெருக்கும் வகையிலே தானதருமங்களை தளராது தொடர்ந்து செய்தால்தான் நீங்கள் செய்திட்ட தர்மபலன் உங்களை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து விடுவித்து நற்கதியில் செலுத்தும். புண்ணியங்களையும், பூஜைகளையும் குருமுகாந்திரமாக தொடர்ந்து செய்து செய்து ஆசானாகிய குருவை ஈசனாக அதாவது சிவமாக அறிந்து கொண்டு தெளிவடைய வேண்டும். “குருவே சிவம்” என்பதையும் ஆசானே சிவம், சிவமே ஆசான் என்பதை உள்ளார்ந்து உண்மையுடன் உணர வேண்டும்.


குருவே சிவமென உணர்ந்து உணர்ந்து வணங்கி வருபவர்களே உயர்நிலையை அடைவார்கள். குருவின் திருமேனியை காண்பதே நன்மை தரும் என்பதை உணர்ந்து குருவினை பார்த்தவுடன் பணிந்து நிற்பார்கள். பண்புள்ளவர்கள் குருவிற்கு செய்யும் சேவைகள் அனைத்தையும் சிவதொண்டாக அவரெல்லாம் கருதி தொண்டினை திறம்பட செய்து வருவார்கள் பண்புடையோர்.


ஆதலினால் ஆறுமுக அரங்கமகா தேசிகனை முருகப்பெருமானாக எண்ணி வணங்கி வர வேண்டும். மும்மலக்குற்றம் அற்ற நிர்மலனாகிய சண்முகப்பெருமானே அரங்கன் என்றே அற்புதமாய் எண்ணி வணங்கி வர வேண்டும். ஆறுமுக அரங்கமகா தேசிகனும் சுப்பிரமணியராகிய யானும் ஒன்றன்றி வேறல்ல என்பதை உணர்ந்திட வேண்டும்.



எனவே உலக மக்களே நீங்கள் என்றுமே குருவின் திருவடிகளைப் பற்றி குரு உபதேசத்தின் வழியினைப் பின்பற்றி நடந்திட வேண்டும். இல்லையெனில் அவர்களை அஞ்ஞானம் ஆகிய அறியாமை பற்றிக் கொள்ளும். நன்மையே தருகின்ற குருவின் நாமங்களை பயபக்தியுடன் நாமஜெபமாக நாளும் சொல்லி வருவதுடன் பணிந்து வணங்கி வர அவர்களை எமனாகிய மரணமும் தீண்டாது விலகிப் போகும். அவர்களுக்கு எமபயம் இல்லை, அவர்கள் என்றும் மாறா பேரின்பத்தை அடைவர், குருவின் திருநாமங்களை சொல்வோர்க்கு சுமைகள் ஏதும் இல்லையப்பா.


சுப்பிரமணியம் சுப்பிரமணியம் என்று உரைக்கும்போது அவர்களுக்கு சிவத்தின் அருள் பூரணமாக கிடைத்திடும். ஓங்காரக்குடிலாசான் வாழ்க வாழ்க என்று சொல்லிட அவர்களது வாழ்வினில் குறைகள் ஏதும் வராது. அவர்கள் ஞானிகளாகவும் ஆகிடும் வாய்ப்பை பெறுவர்.


உத்தம மகா ஞானி ஆறுமுக அரங்கமகா தேசிகனின் பெருமைகளையும், ஏழாம் படை வீடு அரங்கன் வாழும் ஓங்காரக்குடிலின் பெருமையையும் பேசுவதே தொண்டர்களின் முக்கிய தொண்டாகும். இது  முருகப்பெருமான் யான் தொண்டர்களுக்கு கூறும் கட்டளையாகும்.


தொண்டர்களே உங்களை முருகப்பெருமான் யானும் கேட்கிறேன் என் மகன் அரங்கன் பெருமைகளை உலகறிய பேசுவது குற்றமோ? சொல்லுங்கள் தொண்டர்களே! அரங்கன் புகழை அறிய வேண்டுமாயின் முருகப்பெருமானின் பெருமையை குடிலிற்கு வந்து பாருங்கள் கண்டு கொள்வீர்கள்.


ஓங்காரக்குடிலிற்கு வந்து பாருங்கள் உலக மக்களே ஆங்கே வீற்றிருக்கும் குடில் ஆசான் அரங்கமகா தேசிகனை சுப்பிரமணியராய் பாருங்கள். அரங்கனே நான்தானப்பா, அரங்கனே என் வடிவமப்பா, அரங்கனை சண்முகம் யானும் அற்புதமாய் சார்ந்துள்ளேனப்பா.


ஆன்மீக தொண்டர்களே, அன்பர்களே வாருங்கள் ஓங்காரக்குடிலிற்கு உங்களது சஞ்சலங்களை குடில் வந்து தீர்த்துக் கொள்ளுங்கள். குடிலை நாடி வந்து குடில் பெருமை உணர்ந்து குடில் உணவின் அற்புதம் உணர்ந்து சொல்லுங்கள் உலகிற்கு, உலகறிய எடுத்துரையுங்கள் குடில் பெருமையையும் குடில் உணவின் அற்புதத்தையும். தொண்டர்களே அன்பர்களே உலகமெலாம் அறியவே உரக்க கூறிடுங்கள், குடில் உணவு நோய் தீர்க்கும் மருந்து என்று, குடில் உணவு அருள் தரும் அருள் உணவு என்று சொல்லுங்கள். குடிலில் செய்யும் தொண்டு மகேசனுக்கு செய்யும் தொண்டு என்று சொல்லுங்கள். குடிலில் செய்யும் தொண்டு வள்ளல் தன்மையுடையது என்று, வள்ளல் பெருமான் ராமலிங்கசுவாமிகளுக்கு செய்யும் தொண்டு என்று சொல்லுங்கள்.


இவ்வுலகினில் வள்ளல் ராமலிங்கசுவாமிகளுக்கு பின் அன்னதானத்தினை இவ்வுலகினில் சிறப்புடன் வழங்கியது யார்? வள்ளலுக்கு பின் அன்னதானத்தினை அற்புதமாய் வழங்கியது அரங்கமகா தேசிகா நீதானப்பா. வள்ளல் பெருமான் ராமலிங்கமும் அன்புடன் அருள் செய்து அரங்கா உம்மை வாழ்த்துகின்றாரப்பா. வாழ்த்தினை பெற்றுவிட்டாய் அரங்கா நீயும், வள்ளல் ராமலிங்கத்தையும், அகத்தியம்பெருமானையும் முருகப்பெருமான் எம்மையும் கண்டுவிட்டாய் அரங்கா இக்கணம் முதலாய். உலகினில் உள்ள தொண்டர்களே முருகப்பெருமான் யானும் உங்களுக்கு கட்டளையாய் சொல்லுகின்றேன் இப்போது, உங்களது ஊழ்வினைகளை அகற்றிக் கொள்ள வேண்டுமாயின் அவசியம் அரங்கமகா தேசிகனை காண வேண்டும். அரங்கனை கண்டு பயபக்தியுடன் பணிந்து அரங்கன் ஆற்றும் தானதரும பணிகளுக்கு தொண்டுகளை செய்திடுங்கள். தூய்மையான தொண்டுகள் செய்திட அது சுப்பிரமணியர் எனக்கு செய்யும் சேவையாக மாறிடும். அது பொல்லாத வினைகளை புண்ணிய சேவையாக மாறிடும். பொல்லாத வினை அகற்றும் வல்லமைமிக்க அரங்கனின் சேவைகளை மனம் விரும்பி செய்வோர்க்கு புண்ணியங்கள் பலவாறாய் கிட்டுமப்பா.


அரங்கா சுப்பிரமணியர் யானும் உரைக்கின்றேன் இப்போ. இந்த காலச் சூழ்நிலையில் அரங்கா உமது ஞானதேகமதில் மூலக்கனல் பெருகி நிற்குதப்பா. ஆதலினால் தேகத்தினில் சட்டென்று வலி தோன்றுமப்பா. சஞ்சலப்பட வேண்டாம் அரங்கனே அது தானே விலகிப் போய்விடும். முருகப்பெருமான் எனது அருள்பலத்தினாலே அரங்கா உம்முள் தோன்றிய வலிகள் விலகிடும். வள்ளல் பெருமானாரின் அகவல் பாராயணத்தினை பாடிடக் கேட்டால் விரைந்து உமக்கு நலம் உண்டாகும்.


இவ்வுலகினில் உலக நன்மைக்காக உலகப் பெருமாற்றத்திற்காக முற்றுப்பெற்ற முனிவன் அரங்கனே நீ மீண்டும் அவதரித்து மக்கள் நலன் கருதி மக்கள் ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள ஏதுவாக ஏழாம் படை வீடாய் ஓங்காரக்குடிலினை சுத்த ஞானக்குடிலாக அமைத்து உலகினர்க்கு சேவைகள் செய்து வருகின்றாய். உலகோர்க்கு தொண்டு செய்யும் உமது அறப்பணிகளுக்கு மனம் விரும்பி பொருள் தருகின்ற மக்களெல்லாம் வாழ்வாங்கு வாழ்ந்து வளம் பெறுவார்களப்பா.


ஆதலினால் மக்களே உங்களது பாவச்சுமை நீங்கிட குடிலிற்கு தானம்தனை அளித்து புண்ணியம் பெறுவீர் சுப்பிரமணியர் எனது அருளைப் பெற்றிட பொருளினை அளிப்பீர் அரங்கனுக்கு. பொருள் அளித்து எமது அருளை பெற்றிடவே அழைப்பு விடுகின்றேன் முருகப்பெருமான் யானுமே, உலகோரே எனது அழைப்பை ஏற்று ஏழாம் படை வீடு ஓங்காரக்குடிலினை நாடி வந்து அரங்கனை கண்டு தரிசியுங்கள். மனம் மகிழ ஞானம் பெற்றிட வந்து காணுங்கள் அரங்கமகா தேசிகனை. இன்றே உடன் வந்து காண அழைக்கின்றேன் உலகோரே, உங்களை அன்புடன் முருகப்பெருமான் யானுமே! மகா ஞானி அரங்கனும் முருகப்பெருமானும் யானும் ஒன்றுதானப்பா. ஈசனும் அரங்கனும் வேறல்ல ஒன்றுதானப்பா. மேன்மைமிக்க குரு அரங்கமகா தேசிகன் ஈசனின் அவதாரமாகும்.


ஆதலினால் பயபக்தியுடன் மேன்மையாய் குருவின் சேவைகளை தொண்டுகளை செய்து வர வேண்டும் தொண்டர்களே.

குருவிற்கு செய்யும் தொண்டு கோடி புண்ணியங்களை தந்திடும். 
குருவிடம் பெறும் தீட்சை உபதேசம் பிறவித் துன்பத்தை போக்கிடும். 
குருவின் வாக்கு உங்களது மாறாத விதியையே மாற்றி நிற்கும்.


ஆதலினால் மக்களே உடன் விரைந்து வாருங்கள் ஓங்காரக்குடிலிற்கு முருகப்பெருமான் அழைக்கின்றேன் அன்போடு, வாரீர் வாரீர் மக்களே இன்றே விரைந்து வாரீர். ஓங்காரக்குடில் நாடி வந்துமே அரங்கதரிசனம் பெற்று ஆசி தீட்சை ஏற்று குடில் அறப்பணிகளை சிரமேற்கொண்டு செய்து அரங்கனுக்கு உத்தம சீடர்களாக தொண்டுகளைச் செய்து ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ளுங்கள் என்றே வழிமுறை உரைத்திட்டேன் முருகப்பெருமான் யானுமே. எம் அவதாரமே ஆறுமுக அரங்கமகா தேசிகனே வாழிய வாழி எனக் கூறுகிறார் மகான் சுப்பிரமணியராகிய முருகப்பெருமான்.
-சுபம்-

Sunday, 26 August 2018

ஓம் அகத்தீசாய நம”



என்னுடைய பேர்ச்சொல்லில் கூட்டிக்கொண்டு 
இசைவான பொதிகையிலே யேறுவார்பார் 
உன்னுடைய திறங்கண்ட போதுதானே 
யுறுதியுள்ள சித்தனென்று பேருமீய்வேன் 
மின்னுடைய வொளிக்காட்டி யுறுதலமுங்காட்டி 
மெய்ஞ்ஞான வீடுபெற நிலையுங்காட்டி
பன்னுடைய சிதம்பரமு மேருபூசைப்
பாவிப்போ மஷ்டாங்கம் பரிந்துகாணே.

-அகத்தியர் பூரண சூத்திரம் 216

ஆசான் அகத்தியர் சொல்கிறார் என்னுடைய நாமத்தை சொன்னால் பொதிகை மலையாகிய புருவமத்திக்கு செல்லமுடியும். உன்னுடைய திறமையை அறிந்த பின்புதான் உன்னை சித்தன் என்று சொல்வேன் என்கிறார். அகத்தீசன் நாமத்தை சொல்ல சொல்ல நாம் அறியமுடியாத ஒன்றை பற்றி அறிய நமக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதுவே வீடுபேறு அடையவும் உண்மை ஆன்மீகத்தை அறியவும் உதவுகிறது.


காலை எழும் போதே “ஓம் அகத்தீசாய நம” என்று அகத்தியர் நாமங்களை நாமஜெபமாக சொல்லிக் கொண்டே எழுந்திரித்தால் நவகோடி சித்தரிஷி கணங்களின் ஆசிகளைப் பெற்று மனஅமைதியான வாழ்வை பெற்று, மனஅமைதியுடன் வாழ்வார்கள்.

ஞானிகள் நாமங்களை சொல்லி பூஜித்து ஆசி பெறுகின்ற மக்களுக்கு முருகனருளால் உணவு, உடை, தங்குமிடம் மற்றும் தகுதியுள்ள நட்பும் அமையப்பெற்று நலமான வாழ்வை வாழ்வார்கள் என்பதை அறியலாம்.


பக்தியே பாலனாக்கும்

நான்பெற்ற இன்பம் பெறுகஇவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரந்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே.
- திருமந்திரம் - திருமூலர் வரலாறு - கவி எண் 85.


நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று ஆசான் திருமூலதேவர் சொன்னார். ஆசான் ஞானபண்டிதன் வேறல்ல, மகான் அருணகிரிநாதர் வேறல்ல, எல்லாம் ஒருவர்தான். நான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் நான் அடைந்த இன்பத்தை இவ்வுலகம் அடைய வேண்டுமென்று சொன்னார்.
மறைபொருள் எது என்று கேட்டான்? அது, ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம் என்றார் ஆசான் திருமூலதேவர். நீங்களெல்லாம் இந்த உடம்பைப் பற்றி அறிய முடியவில்லை. நான் அறிந்தேன் என்றார். இந்த உடம்புக்குள்ளேயே சொர்க்கம் இருக்கிறது. ஊன் என்ற இரண்டு சுழி ‘ன்’ போட்டிருக்கும். உடம்பு என்று அர்த்தம். அது ஊன் பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்.
தான் பற்றப் பற்றத் தலைப்படுந் தானே என்றார். இப்ப நாங்களெல்லாம் அடைந்த இன்பம் எது? நீ பார்க்கக்கூடிய உடம்பை இதுநாள் வரை நீ நம்பியிருப்பாய், நம்பி போற்றி வருகிறாய். நாங்களும் போற்றி வருகிறோம். ஆனால் உன்னால் காப்பாற்ற முடியவில்லை. நரைதிரைக்கு உட்பட்டு, நோய்க்கும் பிரச்சனைக்கும் உட்பட்ட உடம்பாக இருக்கும். நாங்கள் என்ன செய்தோம்? உள்ளே ஒரு ஒளிச்சுடரை அறிந்து, நோய்க்கும், பிரச்சனைக்கும், பசிக்கும், பிணிக்கும் காரணமான உடம்பை நீக்கி, என்றும் அழியாத ஒளி உடம்பை நாங்கள் பெற்றிருக்கிறோம். இதை உங்களுக்கு சொல்கிறோம்.
நீங்களும் அறிந்து கொள்ளலாம். நீங்கள் என்ன செய்கிறீர்கள்? இதுபற்றி ஒன்றுமே அறியாமல், வெறும் ஆரவார பூஜை சடங்குகளில் மட்டும் ஈடுபடுகிறீர்கள். முதுபெரும் தலைவன் சொன்னார். உன்னால் அறிந்து கொள்ள முடியாது. உன்னுடைய அறிவு ஒரு எல்லைக்கு உட்பட்டது. எங்கள் அறிவு எல்லை கடந்தது. ஈரேழு பதினான்கு உலகமும் சென்று வரக்கூடிய வல்லமை உள்ள அறிவு நாங்கள் பெற்றிருக்கிறோம். அந்த அறிவு எல்லாம்வல்ல இயற்கை எங்களுக்கு கொடுத்திருக்கிறாள். தாய்தான் தந்திருக்கிறாள். ஆகவே நீங்களும் அதை அறிந்து கொள்ளுங்கள் என்றார். ஞானிகள் இதைத்தான் சொல்லியிருக்கிறார்கள்.


என்னவே நீயழைக்க எனக்குமுன்னே
எதிரேறி முன்வருவாள் ஆத்தாள்வாலை
சொன்னபேர் அறிந்துநன்றாய் அழைத்துப்பாரு
சூட்சமிதை உனக்காகச் சொன்னோமப்பா
இன்னபேர் இன்னகுறி யெண்ணவேண்டாம்
ஏகமாய் அறிந்திருப்போம் அப்போநாமும்
முன்னமே அழைக்கையிலே மூமூவென்றால்
முத்திதரும் வாலைபதஞ் சித்தியாமே.
- மகான் திருமூலர் ஞானம் 84ல் கவி எண் 82

சித்தர்கள் எல்லோரும் ஞானிகள். ஞானிகளில் இவர் உயர்ந்தவர், அவர் தாழ்ந்தவர் என்ற பேதமில்லை. எல்லா ஞானிகளும் மானுட தேகம் எடுத்து அதன் பயனை அறிந்து அதிலுள்ள மும்மல கசடை நீக்கி ஒளி உடம்பை பெற்றவர்கள். களிம்பாகிய மும்மலத்தை போக்காவிட்டால் ஞானியாக முடியாது. அவர்கள் பலகோடி யுகம் வாழும் வல்லமை பெற்றவர்கள். மனிதனாக பிறந்தால் மோட்ஷகதி அடைய வேண்டும். நம்மை தோற்றுவித்த வாலை அன்னை எப்பவும் இளமையாக இருக்கிறாள். நாம் பரிணாம வளர்ச்சிக்கு உட்பட்டு இறந்து விடுகிறோம். ஞானிகள் அருள் இல்லாமல் இயற்கை அன்னையை அறிய முடியாது. ஆசான் திருமூலதேவரை தியானித்து அழைக்கவேண்டும் இல்லாவிட்டால் ஒரு முற்றுப்பெற்ற ஞானியை ஆசானாக ஏற்று பூஜித்து ஆசி பெற வேண்டும்.

இருள்சேர் இருவினை சேராமல் காக்கும் இறைவனே வள்ளுவபெருமான்

திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் அவர்கள் அருளிய அருளுரை


திருக்குறள் கடவுளால் செய்யப்பட்டது. மற்ற நூல்களிலும் அறத்தைப் பற்றியும், பொருளைப் பற்றியும், இன்பத்தைப் பற்றியும் பேசுவார்கள். இன்பம் என்பது ஆணும் பெண்ணும் கூடி வாழ்கின்ற வாழ்க்கை. அது இல்லறமாகும். உலக அறிஞர்கள் எல்லோரும் அன்பாக நடந்து கொள்ள வேண்டும், இனிமையாக பேச வேண்டுமென்று சொல்வார்கள்.
வீடுபேறு என்றால் மரணமிலா பெருவாழ்வு அல்லது மோட்சலாபம். மனிதனுக்கு மரணமிலா பெருவாழ்வு உண்டு என்பதை அறிந்தவர்கள் நமது ஞானிகள். மகான் இராமலிங்க சுவாமிகள் முதற்கொண்டு ஆசான் அருணகிரிநாதர் வரை மரணமிலா பெருவாழ்வு என்ற வாய்ப்பை பெற்றிருக்கிறார்கள்.
விஞ்ஞானமும், மெய்ஞானமும் இரண்டு கண்கள் போன்றது. ஒன்றை ஒன்று அவமதிக்கக்கூடாது. இதற்கும் அதற்கும் பகையில்லை, நட்புதான்.இந்த விஞ்ஞானம் உடம்பைப் பற்றி அறிகின்ற அறிவாகும். உடம்புக்கு நோய் வந்தால் விஞ்ஞானத்தால் குணமாக்கலாம் என்று சொல்லலாம். நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கலாம். ஆனால் இந்த விஞ்ஞானம் உடம்பை காப்பாற்ற மட்டும்தான் பயன்படும்.
விஞ்ஞானத்தால் தயாரிக்கப்பட்ட கருவிகளும், மருந்துகளும் மனிதவர்க்கத்துக்கு ஒரு சிறந்த வரப்பிரசாதம்தான். ஆனால் அது மனிதன் மட்டுமே அடையக்கூடிய மோட்ச லாபத்தை தர வேண்டுமல்லவா?
மோட்ச லாபம் என்பது உடம்புக்குள்ளே சூட்சுமதேகம் அல்லது ஒளி உடம்பு என்ற ஒன்று இருக்கிறது. அந்த ஒளி உடம்பைப் பற்றி அறியணும். ஒளியுடம்பை அறிவதற்கு பக்தி ஒன்றுதான் வழி. ஒளி உடம்பை பெற்றவர்கள் அதை வீடுபேறு, மோட்சலாபம், முக்தி அல்லது முக்திநெறி என்று சொல்லுவார்கள். அதைப்பற்றி அவர்கள் அறிந்திருக்கிறார்கள். அந்த ஒளிஉடம்பை பெற்றவர்களிடம் பக்தி செலுத்தணும், அவர்களிடம் அன்பு செலுத்தணும் என்பார்கள்.
பக்தி எதற்கு செலுத்த வேண்டும்? மோட்சலாபம் அடைவதற்கு. மோட்சம் அல்லது வீடுபேறு அல்லது முக்திநெறி அடையவேண்டுமென்றால் பக்தி செலுத்தணும். பக்தியை யாரிடம் செலுத்துவது?
நாம் செலுத்துகின்ற பக்தியெல்லாம் ஒரு வகையில் சிறுதெய்வ வழிபாட்டில் போகும். அவரவர்கள் அறிவுக்கு ஏற்ற மாதிரி பக்தி செலுத்துவார்கள். ஞானிகளெல்லாம், முற்றுப் பெற்றவனாகவும், எவன் மரணமிலா பெருவாழ்வு பெற்றானோ, எவன் எக்காலத்தும் அழியாது இருக்கிறானோ அவனுடைய ஆசி பெறுவதற்காக ஞானிகள் பக்தி செலுத்துவார்கள். அவர்களுடைய ஆசியை பெறணும்.

ஆசான் திருவள்ளுவர் முற்றுப்பெற்ற முனிவர். மரணமிலா பெருவாழ்வு பெற்றவர். அவர் எழுதிய நூல்கள் பிசிறு இல்லாமல் தெளிவாக இருக்கும். எந்த காலத்துக்கும் பொருந்தும். இந்த காலத்துக்குத்தான் பொருந்தும், இந்த காலத்திற்கு பொருந்தாது என்று சொல்ல முடியாது. எல்லா காலத்துக்கும் பொருந்தக்கூடிய நூலை எழுதியிருக்கிறார். என்ன காரணம் என்றால் அவர் வீடுபேறு அறிந்தவர், மரணமிலா பெருவாழ்வு பெற்றவர், அறியாமை நீங்கியவர். அறியாமை நீங்கியதால்தான் அப்படிப்பட்ட நூலை அவரால் எழுத முடிந்தது. அறம், பொருள், இன்பத்தைப் பற்றி எழுதியிருக்கிறார், வீடு பேறைப் பற்றியும் எழுதியிருக்கிறார். அதை சொல்லாமல் சொல்லியிருக்கிறார்.
மகான் திருவள்ளுவபெருமான் பிறவிக்கு காரணமானதை அறிந்தவர். பிறவிக்கு என்ன காரணம்? இந்த மும்மலமாகிய தேகம்தான் காரணம். அறியாமையை உண்டு பண்ணக்கூடிய இந்த தேகத்தை நீக்கினால் மரணமிலா பெருவாழ்வைப் பெறலாமென்ற இரகசியத்தை அறிந்தவர் ஆசான் திருவள்ளுவர்.
எனவேதான் எக்காலத்திலும், எந்த சக்தியாலும், எந்த விஞ்ஞானியாலும், எந்த அறிஞராலும் புறக்கணிக்க முடியாததாகவும், இது தேவையில்லை என்று சொல்லக்கூடிய நூலை அவர் எழுதவில்லை. 1330 குறளும் அப்பேர்ப்பட்ட முதுபெரும் தலைவனால் எழுதப்பட்டது. அவர் பிறவி நீங்கியவர் பிறவிக்கு காரணமாகிய பேதைமையை நீக்கினவர்.
ஆக இந்த தேகத்தை அறிந்து அதிலுள்ள மாசை நீக்க வேண்டும். இந்த தேகத்தில் இருக்கும் அழுக்கு, மாசு அல்லது மும்மலக்குற்றம் என்று சொல்லப்பட்ட ஆணவம், கன்மம், மாயை அல்லது மல, ஜல, சுக்கிலம் என்ற இந்த கசடை நீக்கியதால்தான் அவன் இனி பிறக்க மாட்டான். அவனே பேதைமை நீங்கியவன்.

Wednesday, 22 August 2018

திருக்குறள் அமைச்சு என்ற அதிகாரத்திற்கு வழங்கிய அருளுரை

திருச்சி மாவட்டம், துறையூர், ஓங்காரக்குடிலாசான், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் அவர்கள் வழங்கிய அருளுரை



மனதை அரசனாகவும், அறிவை அமைச்சராகவும் அமைச்சியலை பேசலாம். இப்போது அரசன் எங்கு  இருக்கிறான்? உடம்பு என்ற கோட்டையில் இருக்கிறான். உடம்பு என்ற கோட்டையில் மனம் என்ற மன்னன்  இருக்கிறான், அறிவு என்ற அமைச்சன் இருக்கிறான். ஆக அரசன் என்ற மனமும், அறிவு என்ற மந்திரியும் முன்செய்த வினையின் காரணமாக, தெளிவில்லாமல் இருக்கிறார்கள். நல்வினை இருந்தால் தெளிவான மனம், தெளிவான அறிவு, தெளிவான நல்ல சிந்தனை, நல்ல மனம் இவையெல்லாம் இருக்கும். நல்வினை இல்லாததால், மனம் என்ற அரசன் நெறிதவறி நடப்பான். அறிவு என்ற அமைச்சன் என்ன அறிவுரை சொன்னாலும், மனம் என்ற அரசன் கேட்கமாட்டான்.

மனம் என்ற மன்னன், மெய், வாய், கண், மூக்கு, செவி என்று சொல்லப்பட்ட புலன்கள் வழியே செல்லுகிறான். அறிவு என்ற அமைச்சன் மனம் என்ற மன்னனைப் பார்த்து, “மெய், வாய், கண், மூக்கு, செவி என்று சொல்லப்பட்ட திருடர்கள், கயவர்கள், வேடர்கள் இவர்களின் பேச்சைக்கேட்டு நீ அவர்களின் போக்கில் போகாதே” என்று அறிவு என்ற அமைச்சன் சொன்னாலும், மனம் என்ற மன்னன் கேட்க மாட்டான்.

மனம் என்ற மன்னன் பொறி, புலன் வழியே செல்கிறான், அங்கு அறிவுரை எடுபடவில்லை. பொறி ஐந்து, புலன் ஐந்து ஆகும். கண் என்பது ஒரு பொறி. கண்களில் பார்த்து ஒரு பொருள் புலப்பட்டால் அது புலன். செவி என்பது பொறி. ஒரு செய்தியை, செவியால் சேகரிக்கப்பட்டு அதைப்பற்றி சிந்தித்தால் அது புலன். நாவு என்பது கருவி. சாப்பிட்ட பொருள்களின் சுவையை அறிந்தால் அது புலன். மூக்கு என்பது பொறி. மகிழம்பூ வாசனை, நெய் வாசனை, தக்காளிசாத வாசனை, சோம்பு வாசனை என வாசனைகளை இனம்பிரித்து காட்டும். இது புலன். மெய் என்பது உடம்பு. குளிர்ச்சியாகவும் வெப்பமாகவும் உள்ளதை உடம்பின் மூலமாக தொடு உணர்ச்சியால் அறியும் அனுபவத்தை புலன் என்று சொல்வார்கள்.

மனம் என்று சொல்லப்பட்ட மன்னன், அறிவு என்ற அமைச்சன் சொல்லுகின்ற கருத்தை கேட்காமல், பொறிபுலன் வழியே செல்கிறான். ஆக இவர்கள் இரண்டுபேரும் இப்படி முரண்பட்டு இருக்கிறார்கள். ஆக, மனது என்ற மன்னன், அறிவு என்று சொல்லப்பட்ட அமைச்சன் பேச்சை கேட்கவேண்டும்.

மனது என்ற மன்னன், புலன் வழியே செல்கிறான். புலன் வழியே, மனம் என்னும் மன்னன் செல்வதால், அங்கே ஒரு நெறி இருக்காது. புலன்களை நெறிப்படுத்த முடியாது. மனம்தான் அவற்றை கட்டுப்படுத்த வேண்டும். புலன் வழியே மனம் என்ற மன்னனும், அறிவு என்ற அமைச்சனும் செல்வதால், அங்கே ஒரு நெறி இருக்காது.

இப்படி இருக்கும்போது உடம்பு என்று சொல்லப்பட்ட அரண்மனையை அல்லது கோட்டையை எப்படி இவர்களால் காப்பாற்ற முடியும்? இப்படிப்பட்ட ஒரு நிலையில் உடம்பு என்று சொல்லப்பட்ட  அரண்மனையின் ஒரு பகுதியிலே ஒரு சத்தம் கேட்குது. இந்த ஆன்மாவுக்குரிய பலகோடி வினைகள் காரணமாக பலகோடி ஜென்மங்கள் எடுத்திருக்கு. பலகோடி ஜென்மங்களாக ஒவ்வொரு உடம்பிலும் ஆன்மா தங்குவதும், அதனால் உடம்பும் உயிரும் சேர்ந்து செய்கிறபாவம் உயிரைச் சார்ந்து விட்டது. இது மனம் என்கிற மன்னனுக்கும், அறிவு என்ற அமைச்சனுக்கும் தெரியாது.

தனி உடம்பு பாவம் செய்யாது. உயிரும் உடம்பும் செய்யக்கூடிய பாவம், உடம்புக்கு நலிவு வந்து, நோய் வந்து உடம்பு இறந்துவிடும். ஆனால் உயிருக்கு நலிவு இல்லை, நோயில்லை, பரிணாம வளர்ச்சி இல்லை. ஆனால் செய்த வினையை மட்டும் உயிர் வாங்கி வச்சுக்கும். இப்படி பலகோடி ஜென்மங்களில் பலகோடி உடம்பெடுத்து பாவம் செய்ததினாலே ஆன்மா நலிவுற்றுக் கிடக்கு. அதற்கு ஒரு வீர உணர்ச்சி இல்லை, தெம்பில்லை, நோய்வாய்ப்பட்டு கிடக்கு.

ஆன்மா, “நீங்க ரெண்டு பேரும் என்னை கவனிக்கவே இல்லை. நான் இந்த உடம்பிற்கு வந்து நாற்பத்தைந்து வருஷம் ஆச்சு. நாற்பத்தைந்து ஆண்டுகளாக என்னை நீங்க கவனிக்கல. அதனால நான் நலிந்து இருக்கிறேன்” என்று இப்படி ஆன்மா, மனதையும் அறிவையும் பார்த்து சொல்லுது. மனம் என்ற மன்னன் அறிவு என்ற அமைச்சனைப் பார்த்து “இவருக்கு (நலிந்த ஆன்மா) என்ன செஞ்சா சரியா வரும்? என்ன வைத்தியம் செய்றது?” என்று கேட்டான்.

அதற்கு அந்த நலிந்த ஆன்மா “எனக்கு உங்களால் எதுவும் கொடுக்க முடியாது. என்னால் எதுவும் சாப்பிட முடியாது. எனக்கு அருளும், புண்ணியமும்தான் வேணும். நான் சாப்பிடும் உணவு அருளும், புண்ணியமும்தான். புண்ணியமும், அருளும் இருந்து கொடுத்தீங்கன்னா ரொம்ப தெம்பா இருப்பேன்” என்று ஆன்மா, மனம் என்ற மன்னனையும், அறிவு என்ற அமைச்சனையும் பார்த்து சொன்னது.

மனம் என்ற மன்னன், “நம்மிடம் உள்ள வசதிக்கு நாம என்ன புண்ணியம் செய்ய முடியும்” என்று அறிவு என்ற அமைச்சரிடம் கேட்கிறான். அதற்கு அறிவு என்ற அமைச்சன், “இப்ப இருக்கிற மூலதனத்தைக் கொண்டு நாம எந்த புண்ணியத்தையும் செய்ய முடியாது” என்று சொல்லுகிறான். “இருக்கக்கூடிய பொருளைக் கொண்டு புண்ணியத்தை செய்து ஆன்மாவுக்கு உணவு தருவோம். புண்ணியமும் அருள் பலமும்தான் ஆன்மாவுக்கு உணவு. அருள்பலம் ஆன்மாவுக்கு நல்ல உணர்ச்சியைத் தரும். அந்த அருளை எப்படி சேகரிப்பது என்று” மனம் என்னும் மன்னன், அறிவு என்ற அமைச்சனைப் பார்த்து கேட்கிறான்.

அப்ப ஒரு சத்தம் வருகிறது “என் திருவடியைப் பற்றுங்கள்” என்று உள்ளே இருந்து ஒரு சத்தம் வருகிறது. “அறிவு என்ற அமைச்சனும், மனம் என்ற மன்னனும், ஆன்மாவும் இருக்கும்போது, என் திருவடியைப் பற்றுங்கள் என்று உள்ளே ஒரு ஓசை கேட்கின்றது” இந்த மூவரும் இவ்வாறு சொல்வது யார்? என்று பார்க்கும்போது அகத்திய முனிவர் இவர்களைப் பார்த்து ஏளனமாக சிரிக்கிறார்.


“அருள் பெறுவதற்கு வேறு இடம் தேவை இல்லை. என் திருவடியைப் பற்றுங்கள்” என்றார் அகத்திய முனிவர். மன்னன் என்ற மனம், அன்னதானம் செய்தது, அகத்தீசன் திருவடியை பூஜை செய்தது. இருவரும் சேர்ந்து கொண்டார்கள்.

பிறகு அறிவுக்கும், மனதிற்கும், ஆன்மாவுக்கும் அகத்தீசர் போதிக்கிறார். அன்னதானம் செய்வது நல்லதுதான் என்று கூறி, மேலும் “என் திருவடியைப் பற்றுங்கள். என் திருவடியைப் பற்றினால் உங்களுக்கு நான் அருள் செய்வேன்” என்றார்.

“ஆன்மா நலிந்துவிட்டால், ஆன்மா கோட்டையை (உடம்பை) விட்டு போய்விட்டால், ஆன்மா இல்லாத உடம்பிற்குள், மன்னனாகிய உனக்கும் (மனம்) வேலையில்லை. அமைச்சனாகிய அறிவுக்கும் வேலை இல்லை. ஆசானாகிய எனக்கும் இங்கு வேலை இல்லை” என்றார்.

இதைக்கேட்ட மனம் என்ற மன்னன், ஆசான் அகத்தீசரை பூஜை செய்கிறார். மகான் அகத்தீசரை பூஜை செய்யசெய்ய, அறிவு என்று சொல்லப்பட்ட அமைச்சன் தெளிவு அடைகிறான். இருவரும் பூஜை செய்கிறார்கள். மனம் என்று சொல்லப்பட்ட மன்னனும், அறிவு என்று சொல்லப்பட்ட அமைச்சனும் சேர்ந்து ஆசான் திருவடியைப் பூஜை செய்கிறார்கள்.

மனமும் அறிவும் சேர்ந்து, ஆசான் திருவடியை பூஜை செய்கிறார்கள். பூஜை செய்ய பூஜை செய்ய அறிவும் மனமும் சிறப்படையும், ஆன்மாவும் ஆக்கம் பெற்றது. ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும். ஒருவர் எடுத்துச் சொல்ல வேண்டும். மனம் என்ற மன்னன் மடையனாக இருந்தால், அறிவு என்ற அமைச்சனால் ஒன்றும் சொல்ல முடியாது.

மன்னனின் (மனதின்) லோபித்தனத்தைக் கண்டு அமைச்சர்(அறிவு) வருந்துவார். ஆக ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும். ஆன்மா நலிவடைந்தால் இந்தக் கூட்டைவிட்டு போய்விடும். கூட்டை விட்டு போகும் முன்னே “கூடலி முன்னே கதி கொள்ள வேண்டும்” என்பார்.

இந்த உடம்பு அழிவதற்கு முன்னே ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும். ஆன்மாவுக்கு ஆக்கம் தேடுவதற்கு அன்னதானம்தான் செய்ய வேண்டும். அன்னதானம் செய்வதற்கு அறிவு வேண்டும். ஆசான் அகத்தீசரை பூஜை செய்தால், பொல்லாத வறுமை தீரும், செல்வம் பெருகும். அதேசமயம் அருளையும் தருவார். அருள் பெருகினால் அறிவு சிறப்பாக வேலை செய்யும், லோபித்தனம் இருக்காது, சீலமும் பெருகும்.

ஒவ்வொருவருடைய உடம்பு என்ற கோட்டையில் மனம் என்ற மன்னன் இருக்கிறான், அறிவு என்ற அமைச்சன் இருக்கிறான். ஆன்மாவும் இருக்கு. மூவரும் தெளிவில்லாமல் இருக்கிறார்கள். ஞானிகளை வணங்கினால் நமக்கு உணர்த்துவார்கள்.

இப்ப நாம அகத்தீசாய நம, அகத்தீசாய நம, அகத்தீசாய நம என்று சொல்லுகிறோம். தினமும் அகத்தீசனை வணங்குங்கள், அகத்தீசனை வணங்குங்கள் என்று பேசுறோம். ஏனயா வணங்கனும்? என்று கேட்டால் ஆன்மா நலிந்து கிடக்கு. ஆன்மா நலிந்தால் இந்த கோட்டையிலே (உடம்பிலே) நீடித்து இருக்க முடியாது. இந்தக் கோட்டையை காப்பாற்ற வேண்டும். அதற்கு ஆன்மா, ஆக்கம் பெற வேண்டும். அதுக்குத்தான் அகத்தீசனை வணங்க சொல்றோம்.

ஆன்மா ஆக்கம் பெறாமல், உடம்பு மட்டும் ஆக்கம் பெற்று என்ன பயன்? இந்த உடம்பு நல்ல திடமாக இருக்கும்போது ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும். ஆன்மா உரம்பெற்று இருக்க வேண்டும்.

ஆன்மா பலகோடி ஆண்டுகளுக்கு முன்னே தோன்றியது. ஆனால் உடம்போ அவரவருக்கும் முப்பது வருஷம், நாற்பது வருஷம், ஐம்பது வருஷம், அறுபது வருஷம், எழுபது வருஷம், எண்பது வருஷம் போல ஒரு குறுகிய காலத்தில் வந்தது இந்த உடம்பு. ஆக குறுகிய காலத்தில் வந்த, இந்த உடம்பு இருக்கும்போதே உயிருக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டுமென்ற அறிவுரையை ஒருவர் சொல்ல வேண்டும்.

இயல்பாக எதையும் அறிவுக்கு உணர்த்த முடியாது. நல்வினை இருந்தால், ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டுமென்று அறிவுக்கு யாரேனும் ஒருவர் உபதேசிப்பார்கள். ஆன்மலாபத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ளுங்கள். இதற்கு என்ன உபாயம் என்றால், முற்றுப்பெற்றவன் திருவடியை பூஜை செய்ய வேண்டும். அடுத்ததாக ஏழைஎளிய மக்களுக்கு பசியாற்ற வேண்டும். இதுபோன்ற செயல்களால்தான் ஆன்மா ஆக்கம் பெறும். ஆன்மா ஆக்கம் பெற்றால் அறிவு வேலை செய்யும். மனமென்ற மன்னனும் தெளிவடைவான். இதையே மகான் திருவள்ளுவர்,


ஈதல் இசைபட வாழ்தல் அதுஅல்லது
ஊதியம் இல்லை உயிர்க்கு.
- திருக்குறள் - புகழ் - குறள் எண் 231.

ஈதல் - கொடுத்தல், இசைபட வாழ்தல் - புகழ்பட வாழ்தல். ஊதியம் - அன்னதானம் செய்வதால் ஆன்மாவுக்கு ஊதியம் வரும், புகழும் உண்டாகும். ஆன்மாவுக்கு ஆன்ம இலாபம் உண்டாகும்.
ஆன்மாவுக்கு ஆக்கம் வரும். அது அல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு - உயிர்க்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும்.

ஏன் உயிர்க்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும். உடல்மாசு காரணமாக உயிர்மாசுபட்டு இருக்கு. இந்த காமதேகத்தின் காரணமாக இந்த தேகத்தில் உள்ள உயிருக்கும் மாசு இருக்கும். உயிருக்கு மாசு வந்தால் அறிவு மங்கிவிடும். மனம் தெளிவடையாது. ஞானிகள்மீது செலுத்தும் பக்தியாலும், தானதவம் செய்வதாலும் உயிருக்கு ஆக்கம் தேடிக்கொள்ளலாம்.

இந்த உயிர் ஆக்கம் பெறபெற மனம் என்ற மன்னனும், அறிவு என்ற அமைச்சனும் தெளிவடைவார்கள். இதனால், ஆன்மா தெளிவு அடையஅடைய உடம்பைப்பற்றிய உணர்வு வரும். உடம்பை காப்பாற்றிக் கொள்ள வேண்டும், உடம்பை காப்பாற்றிக் கொள்வது நல்லது என்ற உணர்வு வரும். அப்ப உடம்பை எப்படி காப்பாற்றிக் கொள்வது? அசைவ உணவு கொடுத்து உடம்பை காப்பாற்றிக் கொள்ள முடியுமா? நிச்சயம் முடியாது.

உடம்புக்கு சைவ உணவைக் கொடுத்து காப்பாற்ற வேண்டும். உடம்பு இருக்கும்போதே உயிருக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும், என்ற எச்சரிக்கை உணர்வு வரும். உயிர் என்பது மூச்சுக்காற்று இயக்கம். மூச்சுக்காற்று வந்து போய்கிட்டு இருக்கும். உடம்பு என்ற கோட்டை அல்லது அரண்மனை, திடமாக இருந்தால்தான் மூச்சுக்காற்று இயல்பாக வந்துபோகும். உடம்பு என்ற கோட்டை நலிந்தால் நிச்சயமாக வந்து போகின்ற காற்று நின்றுவிடும். வந்து போகின்ற காற்று நின்றுவிட்டால், ஆன்மா உடம்பை விட்டு பிரிந்துவிடும்.

ஆன்மா மாசுபட்டால், ஆன்மா நலிந்தால், ஆன்மா மெலிந்தால், அறிவு மாசுபட்டுவிடும், அறிவு மங்கிவிடும். மனமும் தெளிவடையாது. ஆன்மாவிற்கு ஆக்கம் தருவது பக்தியும், புண்ணியமும்தான். அதை விரைவாக செய்து கொள்ள வேண்டும் என்பது ஞானிகளின் கருத்து. நேற்று நல்லபடியாக இருந்த ஒருவன், இன்று இல்லை. இப்படித்தான் வாழ்க்கை அமைந்துள்ளது என்பார் ஆசான் திருவள்ளுவர். இதை,

நெருநல் உளன்ஒருவன் இன்றுஇல்லை என்னும்
பெருமை உடைத்துஇவ் வுலகு.
- திருக்குறள் - நிலையாமை - குறள் எண் 336.
என்பார்.

நெருநல் உளன் ஒருவன் - நேற்று நல்லபடியாக உள்ள ஒருவன் இன்று இல்லை என்னும் பெருமை உடைத்தது இவ்வுலகம். நேற்று நல்லபடியா, திடகாத்திரமாக இருந்தார், இன்று இல்லை, என்று ஒருமாசம் இரண்டு மாசம் பேசுவார்கள். அப்புறம் மறந்தே விடுவார்கள்.

இப்படி கோடானுகோடி மக்கள் பிறப்பார்கள், இறப்பார்கள். புகழ் வாய்ந்தவர்கள் என்றால், அவர்களின் புகழ் பத்து வருஷங்களுக்கு இருக்கும். சிலபேருக்கு நூறு வருஷங்கள் வரைக்கும் அவரோட புகழ் இருக்கலாம். இதை ஆசான் திருவள்ளுவர்,


நிலவரை நீள்புகழ் ஆற்றின் புலவரைப்
போற்றாது புத்தேள் உலகு.
- திருக்குறள் - புகழ் - குறள் எண் 234.

உலகமெல்லாம் புகழ்பட ஒருவர் வாழ்ந்தால், அவர்கள்தான் பெருமைக்கு உரியவர்களாக இருப்பார்கள். நிலையில்லாத வாழ்க்கையை பெற்றிருக்கிறோம். அதற்குள் நிலையான காரியங்களை செய்துகொள்ள வேண்டும், என்பார் ஆசான் திருவள்ளுவர். பத்தாம் வாசலாகிய புருவமத்தியில் அந்தக்கல்லை வைத்து வழியை அடைக்க வேண்டும். இவ்வாறு செய்வதற்கு ஞானிகள்தான் அருள்செய்ய வேண்டும். மேலும் ஆசான் திருவள்ளுவர்,


நாச்செற்று விக்குள்மேல் வாராமுன் நல்வினை
மேற்சென்று செய்யப் படும்.
- திருக்குறள் - நிலையாமை - குறள் எண் 335.


நாச்செற்று - நாவடங்கி, விக்குள்மேல் - சிலருக்கு ஆன்மா பிரியும்போது விக்கல் வரும். மூலாதாரத்திலிருந்து அந்த ஆவி பிரியும்போது விக்கல் வரும். எந்த மனிதனும் நான் இத்தனை ஆண்டுகள் இருப்பேன் என்று சொல்ல முடியாது. நம்மை நோக்கி எமன் வந்துகொண்டே இருக்கிறான்.
அறியாமையாகவும், வறுமையாகவும், பகையாகவும், பல்வேறு பிரச்சனைகளாகவும் எமன் வருகிறான்.


கோபம், பொறாமை, வஞ்சனை போன்ற படைகள் நம்மை எதிர்த்து தாக்க வந்துகிட்டு இருக்கு. நரை, திரை, மூப்பு, ஈளை, இருமல் போன்ற பிரச்சனைகளும் நம்மை நோக்கி வருகிறது.

மெய், வாய், கண், மூக்கு, செவி என்று சொல்லப்பட்ட புலன்களும் நமக்கு பகைவன்தான். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்று சொல்லப்பட்ட கரணங்களும் நமக்கு பகைவன்தான். பொறி ஐந்து, புலன் ஐந்து, கரணம் நான்கு ஆக கருவிகள் பதினான்கு. தத்துவம் தொண்ணூற்றாறில் இந்த பதினான்கு கருவிகள்தான் முக்கியம். எழுபத்தீராயிரம் நாடிநரம்புகளில் பத்து நாடி முக்கியமானது. அந்த பத்து நாடியிலும் ஒரு நாடிதான் மிக முக்கியமானது என்று, ஒளவையார் கூறுவார்.

இந்த பதினான்கு கருவிகளும் நமக்கு எமனாக உள்ளது. தத்துவங்களெல்லாம் நம்முடன் ஒத்துழைக்காது. தேகம் காமதேகம் என்பதாலும், தேகத்தில் கசடு உள்ளதாலும், பொறிபுலன்கள் நம்மோடு ஒத்துழைக்கவில்லை.

ஞானிகள் தேகபந்தம், காமவிகாரம் ஆகியவற்றை தலைவன் துணைகொண்டு நீக்கி விடுகிறார்கள். காமதேகம் நீங்கினால், ஆன்மா தெளிவடையும். ஆன்மா தெளிவடைந்தால் அறிவு தெளிவடையும். அறிவு தெளிவடைந்தால் சிந்தை சிறப்பாக செயல்படும். அறிவு, சிந்தை என்ற மனிதனின் எண்ணங்களுக்கு தெளிவை கொடுத்துக் கொண்டே இருக்கும். அதனால் சிந்தை சிறப்பாக செயல்படும்.

அறிவே அமைச்சன், மனமே மன்னன். அறிவு, மனம், ஆன்மா இந்த மூன்று பேரும் சேர்ந்தே, இந்த உடம்பை காப்பாற்ற வேண்டும். நாம் உலகத்தை காப்பாற்றுவதை பிறகு பார்த்துக்கலாம். முதலில் நமது உடம்பை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். ஆக நற்காரியத்தை விரைந்து செய்து கொள்ள வேண்டும். நற்காரியம்  செய்து கொண்டால்தான் ஆன்மஜெயம் பெறலாம்.

நாம் நல்ல சிந்தனையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நல்ல சிந்தனையை வளர்த்துக் கொள்வது என்பது சாதாரண விஷயம் இல்லை. நம்முடைய வினைக்கு தகுந்தவாறுதான் நம் அறிவு வேலை செய்யும். முன்செய்த பாவம் மிகுந்து இருந்தால், நல்ல சிந்தனை இருக்காது. அங்கே கீழ்த்தரமான புத்திதான் இருக்கும். முன்செய்த பாவம்தான், பொல்லாத வறுமையாக இருக்கு. தேவையில்லாத பிரச்சனைகளை உருவாக்குதல், தேவையில்லாத பகையை உருவாக்குதல், தீர்க்கமுடியாத நோய், ஆழ்ந்து சிந்திக்க முடியாத மனநிலை போன்றவைகள் முன்செய்த பாவத்தால் வருபவை.

நல்வினை மிகுந்து இருந்தால், நல்ல சிந்தனை, தெளிந்த அறிவு, திடமான உடம்பு, எதைப்பற்றியும் அவசரப்பட்டு முடிவு எடுக்காத பண்புகள் எல்லாம் இருக்கும். அங்கு சினம் இருக்காது. நல்வினை மிகுந்து இருந்தால் கொடிய கோபம், நம்மை அடிமைப்படுத்த முடியாது. நல்வினை மிகுந்திருந்தால் பொறாமை உணர்வு இருக்காது. நமக்கு எமனாக இருப்பது கோபமும், பொறாமையும், பேராசையும்தான். பொல்லாத காமதேகமே நமக்கு எமனாக இருக்கு. தீவினை மிகுந்திருந்தால், பகை, பிரச்சினைகள் இருக்கும், மனதில் நிம்மதி இருக்காது. இவையெல்லாம் தேகத்தின் குற்றமல்ல.

இந்த தேகத்தின் இயல்பை அறிந்து, அது கெடுவதற்கு முன்பே, அதற்கு நரை, திரை, மூப்பு வருவதற்கு முன்னே, ஈளை, இருமல் வருவதற்கு முன்பே, நாம் இந்த தேகத்தை காப்பாற்றி கொள்ள வேண்டும். பூஜை செய்தால்தான் உடம்பை காப்பாற்றிக் கொள்கிற பக்குவம் வரும். உடம்பை காப்பாற்றிக் கொள்கிறவன், உயிரை காப்பாற்றிக் கொள்ள அறிய வேண்டும். உயிரைக் காப்பாற்றிக் கொள்ள, மூச்சுக்காற்றைப் பற்றி அறிய வேண்டும். இதை மகான் இராமதேவர், நீ மூச்சுக்காற்றோடு பழக வேண்டுமென்பார். பிராணாயாமம் அல்லது யோகாப்பியாசம் செய்வதற்கு முன்னே மூச்சுக்காற்றின் இயக்கத்தைப் பற்றியும், அது என்ன செய்யும் என்பதைப்பற்றியும் ஆசான் இராமதேவர் சொல்லியிருக்கிறார்.

ஆன்மஜெயம் பெறுவதற்கு ஆன்மாவுக்கு ஆக்கம் தேடிக்கொள்ள வேண்டும். ஆக்கம் பெற்ற ஆன்மாதான் அறிவை தெளிவடையச் செய்யும். அப்ப ஆன்மாவுக்கு ஆக்கம் தர வேண்டும். ஆன்மாவுக்கு அருள்தர வேண்டும். ஆன்மா ஆக்கம் பெற வேண்டும். ஆக்கம் பெற்ற ஆன்மாதான் தெளிவான அறிவாக இருக்கு. அதே மனமாக இருக்கு. அப்ப ஆன்மாவுக்கு தெளிவை உண்டாக்க வேண்டும்.

ஆன்மா, காமம் என்ற இருட்டிலும், நரகம் என்று சொல்லப்பட்ட இந்த உடம்பிலும் இருக்கு. எனவே அந்த ஆன்மாவுக்கு ஆக்கம்தர வேண்டும். ஆன்மாவுக்கு ஊக்கம் தரவேண்டும். ஆன்மா தெளிவடைய வேண்டும்.
ஆன்மாவிற்கு ஒளிதர வேண்டும்.

எல்லா ஞானிகளும் சிறந்த பக்தியாலும், விடாமுயற்சியாலும் ஆன்மஜெயம் பெற்றார்கள். அவர்கள் ஆன்ம ஒளி பெற்றவர்கள், ஆன்ம ஒளியைக் கண்டவர்கள், ஆன்ம ஜோதியைக் கண்டவர்கள். அத்தகைய பெருமை மிகுந்த ஞானிகளின் திருவடியைப் பற்றும்போது ஆன்மா தெளிவடையும், ஆன்மா ஒளி பெறும். இதை ஆன்மஜோதி என்பார்கள்.


நாம் ஞானிகளை வணங்குகிறோம். வணங்கவணங்க, பூஜைசெய்ய, பூஜைசெய்ய, நாமஜெபம் செய்யசெய்ய, ஆன்மாவினுடைய மாசு தீரும். பக்தி செய்யசெய்ய, புண்ணியம் செய்யசெய்ய இருட்டில் கிடக்கிற ஆன்மா வெளிச்சத்துக்கு வரும். ஆன்மாவிற்கு சிறிது வெளிச்சம் கிடைத்தால் அறிவு தெளிவடையும்.

ஆன்மாதான் அறிவாகவும் இருக்கு, மனமாகவும் இருக்கு. புண்ணியம், பக்தி என்ற ஒளியை இருட்டில் கிடக்கிற ஆன்மாவுக்கு தருகிறோம். இதனால் நரகத்திலும், இருட்டிலும் கிடக்கிற ஆன்மா தெளிவடைகிறது. ஆன்மா தெளிவு அடைந்தால் அறிவு தெளிவடையும். அறிவு தெளிவடைந்தால் ஆன்மாவைப்பற்றி அறியும். ஆன்மாவுக்கு ஆக்கம் தந்தால், அறிவு தெளிவடையும். தெளிவடைந்த உயிர், தெளிவடைந்த அறிவு ஆன்மாவைப்பற்றி சிந்திக்கும்.

Saturday, 4 August 2018

மனக்குழப்பத்திற்கும், மனஅழுத்தத்திற்கும் மருந்து முருகனின் நாமங்களே!

முருகப்பெருமான் திருவடி பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்....




வறுமையற்ற வாழ்வும், கவலையற்ற வாழ்வும், விஷஜந்துகளால், விபத்தினால், இயற்கை சீற்றங்களினால், முன்ஜென்ம பாவங்களினால், மரண கண்டங்களால் ஏற்படும் ஆபத்துகள் ஏதும் அணுகாத அமைதியான வாழ்வை வாழலாம்.

மனஅமைதியுடன் கூடிய ஆரோக்கியமும் நீடிய ஆயுளைப் பெறலாம்.  மனக்குழப்பத்திற்கும், மனஅழுத்தத்திற்கும் மருந்து முருகனின் நாமங்களே என்பதையும் அறியலாம்.

மன அழுத்தமும், மனக்குழப்பமும், முன்ஜென்ம பாவங்களினால்தான் வருகின்றதனால் பயிற்சிகளை செய்வதின் மூலம் ஒருபோதும் மனக்குழப்பத்திலிருந்து விடுபட முடியாது, மனஅழுத்தமும் தீராது.

ஜென்மஜென்மமாய் செய்த பாவத்தை பொடிப்பொடியாக்கும் முருகப்பெருமான் திருவடி கருணையால் தான் பாவங்கள் நீங்கும், பாவவினைகள் நீங்கினால் மனக்குழப்பமும் மனஅழுத்தமும் தானே நீங்கும், பிரச்சனைகளும் ஏதும் வராது என்பதையும் அறியலாம்.

உலகினில் பிறந்த அனைவரும் அனைவரையும் சந்திப்பதும் இல்லை, நட்பு கொள்வதும் இல்லை, பகை கொள்வதும் இல்லை, முன்ஜென்ம தொடர்புடையவர்களைத்தான் இச்சென்மத்திலும் தொடர்ந்து தொடர்பு கொள்கிறார்கள்.

முன்ஜென்மத்திலே செய்திட்ட பாவபுண்ணியங்களுக்கு ஏற்பவே இந்த ஜென்மத்தில் வாழ்வு அமைகிறது.

ஆதலினாலே பணிபுரியும் இடத்தில் வேலையில், உத்தியோகத்தில் பிரச்சனைகள் வருகிறது என்றால் அது நாம் பிறருக்கு முன்ஜென்மத்தில் செய்த இடையூறே, இப்படி இந்த ஜென்மத்தில் வந்துள்ளது என்பதை அறியலாம்.

குடும்பத்திலே பிரச்சனைகள் வருவதும் முன்ஜென்மத்தில் நாம் செய்த பாவமே. கடன் சுமை வருவதும் முன்ஜென்ம பாவமே. இப்படி மனிதன் வாழும் வாழ்வு முழுக்க பாவத்தினால் பிரச்சனைகளும் புண்ணியத்தால் நன்மைகளும் உண்டாகின்றதை அறியலாம்.

பிரச்சனைகளாலும், பிறர் நமக்கு செய்யும் இடையூறுகளாலும், நமது இயலாமையினாலும், பகையினாலும், வஞ்சத்தினாலும், ஏமாற்றத்தினாலும் மனஅழுத்தமும் மனஅமைதியின்மையும் வரத்தான் செய்யும்.

இவையெல்லாம் தீர்க்க, எல்லாம்வல்ல முருகனது திருவடியே கதியென சரணாகதி அடைந்து முருகநாமங்களை சொன்னால் முருகனது அருளால் சூரியனைக் கண்ட பனி விலகுவது போல அனைத்தும் விலகிடும் என்பதையும் அறியலாம்.

எட்டு என்பது அகாரம். இரண்டு என்பது உகாரம்.

வெளிக்காற்றும், உள்காற்றும் சேர்க்கக்கூடிய இடம் புருவமத்தி. அந்த இடத்தில் சேர்த்தால்தான் காற்று ஒடுங்கும். அப்படி ஒடுங்கினால்தான் விகாரம் அற்றுப்போகும். இதை மகான் அகத்தியர்,

பெட்டியிலே அடைத்து வைத்த பாம்புதன்னைப்
பிடித்தாட்டத் தெரியாமல் புலம்புவார்கள்
எட்டிலே இரண்டு வைத்து ஆட்டினாக்கால்
இருபுறமும் ஆடிவர எதிரேயேறும்
கட்டிற்குள் நில்லாது சிரசிலேறும்
கடைவாசல் சுழிமுனையில் கட்டும்வாசி
சுட்டியின்கீழ் திருவாடுதுறையைப் பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்றமாமே.
- மகான் அகத்தியர் அருளிய துறையறி விளக்கம் - கவி எண் 86.
.

பெட்டி என்பது வயிறு. வயிற்றில் உணவு எதுவும் இருக்கக்கூடாது. கால் வயிறு அளவுதான் உணவு இருக்கவேண்டும். அளந்துதான் சாப்பிட வேண்டும். பத்மாசனம் இட்டு, ஆசானை நினைத்து மூச்சுக்காற்றை உள்ளே இழுக்க வேண்டும்.

பெட்டியிலே அடைத்து வைத்த பாம்புதனை - பாம்பு என்றால் கருஞ்சாரை, வெஞ்சாரை. அல்லது இடகலையையும் பிங்கலையையும் சேர்ப்பது எனப்படும். அப்படி அடைத்து வைக்கின்ற காற்று என்ன செய்யும்?

பிடித்தாட்டத் தெரியாமல் புலம்புவார்கள் - ஆக அந்தக்காற்றை எப்படி ஆட்டுவது? அந்தக்காற்றை எப்படி இலயப்படுத்துவது? அந்தக்காற்றை எப்படி ஸ்தம்பிப்பது? எப்படி புருவ மத்தியில் செலுத்துவது? என்பது தெரியாது. எட்டிலே இரண்டு வைத்து ஆட்டினாக்கால் - எட்டு என்பது அகாரம். இரண்டு என்பது உகாரம்.

கண்டஸ்தானத்தில் இருக்கும் காற்றையும், வெளிக்காற்றையும் சேர்க்க வேண்டும். இது நம்மால் முடியாது. தலைவன் ஆசி இருக்க வேண்டும். வெளிக்காற்று - பரமாத்மா, உள்காற்று - ஜீவாத்மா. இந்த உள்காற்றையும், வெளிக்காற்றையும் சேர்த்து புருவமத்தியில் செலுத்தினால் அது என்னாகும்? வெளியே போகமுடியாது. இதை ஆசான் நயமாக சொல்லுவார், வெளிக்காற்று, உள்காற்று இரண்டையும் சேர்த்து ஆட்டினாக்கால் இருபுறமும் ஆடிவர எதிரேயேறுங் - வேறு வழியே இல்லாமல் மேலே போய்விடும். கட்டினுக்குள் நில்லாது சிரசிலேறும் - அதற்கு வேறு வழியேயில்லை சிரசில் ஏறும்.

கடைவாசல் சுழிமுனையில் கட்டும் வாசி
சுட்டியின்கீழ் திருவாடுதுறையைப் பார்க்கில்
சூரியனும் சந்திரனும் தோற்றமாமே.

என்றார். எதற்கு ஆசான் அகத்தீசரும், மகான் திருவள்ளுவரும் இப்படிப்பட்ட கருத்துக்களைச் சொல்லுகிறார்கள்? ஆக இப்படித்தான் யோகிகள் செய்திருக்கிறார்கள். இப்படி ஆசானின் ஆசி பெற தினம் தினம் பூஜை செய்ய வேண்டும். பிராணாயாமம் செய்கிறவர்கள் உணவு அரை வயிறாக சாப்பிட வேண்டும்.

பாசிப்பயிறு, பச்சரிசி, பழங்கள் சேர்க்க வேண்டும். பசு நெய் சேர்க்க வேண்டும். முறையோடு பிராணாயாமம் செய்து, ஆசான் ஆசி பெறவேண்டும். ஆக ஞான சித்தர் காலம் வருவதால் இந்தக்கருத்துக்கள் ஊரெங்கும், உலகெங்கும் பரவவேண்டும். ஞானிகளின் திருவடியைப் பற்றினால் மரணத்தை வெல்லலாம், ஞானிகளின் திருவடியைப் பற்றினால் நச்சுத்தேகமாகிய விஷதேகத்தை வீழ்த்தலாம். ஞானிகளின் திருவடியைப் பற்றினால் நமது அந்திமக்காலத்தில் கட்டக்கூடிய கபத்தை இப்போதே அறுத்து எடுத்துவிடலாம்.

உண்மையான ஆன்மீகவாதியை எப்படி அறிவது?

உண்மையான ஆன்மீகவாதியை எப்படி அறிவது? மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்



பொல்லா இருளகற் றுங்கதிர் கூகையென் புட்கண்ணினுக்
அல்லா யிருந்திடும் ஆறொக்கு மேஅறி வோருளத்தில்
வல்லார் அறிவார் அறியார் தமக்கு மயக்கங் கண்டாய்
எல்லாம் விழிமயக் கேயிறை வாகச்சி ஏகம்பனே.
- மகான் பட்டினத்தார் - திருஏகம்பமாலை - கவி எண் 17.

ஆசான் பட்டினத்தார் காஞ்சிபுரத்தில் இருந்தார். அவரைப் பார்க்க ஒருத்தன் வந்தான். இவரது எளிமையைப் பார்த்து இவரெல்லாம் சாமியாரா என்று சொல்லிவிட்டான். அவர் கூட இருந்தவர்கள் எல்லாம் என்ன உங்களை இப்படி பேசுகிறான் என்று சொன்னார்கள். அதற்கு அவர், “அவன் கோட்டான் மாதிரி”என்றார்.

கூகை என்றால் கோட்டான். பகலில் அதற்கு கண் தெரியாது. ஆனால் பிரம்மாண்டமான சூரியன் பகலில் இருக்கு. ஆனால் கோட்டானுக்கு மட்டும் பகலில் கண் தெரியாது. இதை ஆசான் பட்டினத்தார் சொல்வார்.

பொல்லா இருளகற்றும் - அமாவாசை இருட்டு போல இருக்கும். ரொம்ப காரிருள் என்பார்கள். மழை மேகம் மூடியிருந்தால் காரிருளாக இருக்கும். அப்ப சூரியன் வந்தவுடன் வெளிச்சமாகிவிடும்.

பொல்லா இருளகற்றும் கதிர் - கதிர் என்றால் சூரியன். கூகையின் புண்கண்ணிற்கு - இந்த கோட்டானுக்கு பகலில் இருட்டாக இருக்கு என்று சொன்னார். அதுபோல உண்மை ஞானிகளான எங்களை கண்டுபிடிக்க முடியாது.

மேலும் ஆசான் பட்டினத்தார் சொல்லிலும் தெரிந்து கொள்ளலாம் என்பார்.
பொருளுடையோரைச் செயலினும் வீரரைப் போர்க்களத்துந்
தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல்
அருளுடையோரைத் தவத்திற் குணத்தில் அருளிலன்பில்
இருளறு சொல்லிலுங் காணத்தகுங் கச்சி ஏகம்பனே.
- மகான் பட்டினத்தார் - திருஏகம்பமாலை - கவி எண் 15.


இப்படியும் காஞ்சிபுரத்தில் பேசியிருக்கிறார் ஆசான் பட்டினத்தார். அப்போ அடிப்படை என்னவென்றால் ஞானிகளை சுலபமாக அறிந்துகொள்ள முடியாது. ஆனால் அவர்களுடைய பேச்சில் தெரிந்து கொள்ளலாம் என்பார்.

பொருளுடையோரைச் செயலிலும் - நிறைய பொருளிருந்தது என்றால் வாகனம் வாங்குவான், வீடு கட்டுவான். அதிலிருந்து அவனிடம் நிறைய பணம் இருக்குதென்று தெரிந்து கொள்ளலாம்.

வீரரைப் போர்க்களத்தும் - வீரமுள்ளவனை எங்கே பார்க்க வேண்டும்.போர்க்களத்தில் பார்க்க வேண்டும். இங்கே வாய்சவடால் அடிப்பான். போர்க்களத்தில் அவனவன் தலை உருண்டுக்கிட்டே இருக்கும். அங்கே போகும்போது பயந்துவிடுவான்.

தெருளுடையோரை முகத்தினுந் தேர்ந்து தெளிவதுபோல் – ஒருவனை பார்க்கும்போதே மிகத்திறமையான ஆள் என்று சொல்லிவிடுவார்கள்.

அருளுடையோரைத் தவத்திற் குணத்தில் அருளிலன்பில் இருளறு சொல்லிலுங் காணத்தகும் - ஞானிகள் தன்னுடைய பேச்சில் ஒருவனுக்கு மாயையை உண்டுபண்ண மாட்டார்கள். அவனுக்கு தெளிவான பாதையை காட்டுவார்கள். அப்படிப்பட்ட ஞானியை பார்த்துக் கொள்ள வேண்டுமென்று ஆசான் பட்டினத்தார் சொல்வார்.

அவர் பேச்சு அத்தனையும் மனிதகுலத்துக்கு ஒளிவிளக்காக இருக்கும். அப்படி பேசுபவரைதான் கண்டுபிடிக்க வேண்டும். ஞானிகளை அப்படித்தான் அடையாளம் காட்டுவார் ஆசான் பட்டினத்தார். ஒருவனுடைய பேச்சு மற்றவனை மடையனாக்கும்படி இருந்தால் அவன் அருளில்லாதவன். ஆனால் ஞானிகள் பேச்சு தெளிவாக இருக்கும். இதுதான் மார்க்கம். இதைக் கடைப்பிடி என்று சொல்வார்கள்

அரவ மாட்டேல்

முருகப்பெருமானின் அவதாரம் தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை!

அரவ மாட்டேல்



அரவம் என்பது பாம்பாகும். பாம்பு என்னும் உயிரினமானது தமது வாயில் நச்சுப்பற்களோடு நஞ்சை வைத்துக் கொண்டுள்ளது. அது கொடுமையான உயிரினம். அத்தகைய கொடிய உயிரினத்தோடு யாரும் விளையாடமாட்டார்கள்.

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பது பழமொழி. மிகப்பெரும் வீரர்கள் கொண்ட படையில் பாம்பு புகுந்துவிட்டால் அந்த வீரர் படை தம் வீரத்தை மறந்து நடுங்கும், அந்த அளவிற்கு கொடியது பாம்பாகும். இது அனைவருக்கும் தெரிந்ததே.

ஞானமார்க்கத்தில் குரு சீடர் பாரம்பரியமாக பலப்பல இரகசியச் சொற்களை ஞானிகள் பயன்படுத்தி வந்தனர். அப்படி பயன்படுத்திய சொற்களில் ஒன்றுதான் “அரவம்” என்கிற சொல்லாகும். ஞானமார்க்கத்தைப் பற்றி அறிந்தவர்களுக்கு இது தெரியும்.

அரவம் என்றால் பாம்பு என்ற பொருள் இருந்தாலும் அரவம் என்பது ஞானமார்க்கத்தில் யோகநிலையில் ஒரு ஞானி வாசிப்பயிற்சியாகிய வாசி யோகத்தின் போது மூச்சுக்காற்றினை “அரவம்” என்ற இரகசிய வார்த்தையால் குறிப்பிடுவார்கள். இடது நாசியில் வருகின்ற காற்றை கருஞ்சாரை (கருநாகம்) என்றும் வலது பக்க நாசியில் வருகின்ற காற்றை வெஞ்சாரை (வெண்நாகம்) என்றும் குறிப்பிடுவார்கள்.

இத்தகைய வாசிப்பயிற்சியானது மும்மலதேகத்தின் மும்மலக் குற்றத்தை நீக்குதல் பொருட்டு ஆசான் ஞானபண்டிதன் உடனிருக்க ஞானிகள் துணையோடு காலம்காலமாக சிறிது சிறிதாக கணப்பொழுதும் நினைவினின்று வழுவாது காலநேரம் பாராது சதாசர்வகாலமும் மிகுந்த கவனத்துடன் செய்ய வேண்டிய ஒரு யோகப்பயிற்சியாகும்.

இத்தகைய யோகப்பயிற்சியானது வழிவழி வருகின்ற தொண்டர் கூட்டத்திற்கு குருமுகாந்திரமாக குருநாதர் உடனிருந்து உடற்தகுதி, உணவு முறை, சூழ்நிலை, தட்பவெப்பம் போன்றவற்றிற்கேற்பவும் தவத்தின் தன்மைக்கேற்பவும் அளந்து அளந்து சொல்லி தரப்பட்டு கவனத்துடன் அதிநுட்பமாக செய்கின்ற ஒரு பயிற்சியாகும்.

இந்த பயிற்சி செய்கின்றவர் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது. அவ்வாறு ஈடுபட்டால் அவரது யோகமும் தவமும் பாழ்பட்டு, ஏன் சமயத்தில் இறந்துவிடவும் கூடும். ஒரு துறவு நிலை கொண்டவரானாலும் ஆசான் துணையின்றி செயல்பட்டால் அடுத்து என்ன செய்வது? எனத் தெரியாமல் உள்ளே சென்ற காற்றானது வெளியேற முடியாமல் அவனைக் கொன்றுவிடும்.

அதுமட்டுமல்ல இல்லறத்தார்கள் மிகமிக ஆற்றல் வாய்ந்த இந்த வாசியோகப்பயிற்சியினை செய்யக்கூடாது. ஏனெனில் வாசியோகப்பயிற்சியின் அளவு, காலம், எவ்வளவு காலம் செய்ய வேண்டும் என்றெல்லாம் தெரியாமலும் அதன் தன்மை தெரியாமலும் செய்வார்களேயானால் இறுதியில் இறந்து விடுவார்கள். வாசியோகப் பயிற்சியின் போது நம் உடம்பிலுள்ள மூலக்கனலே எழும்பி அளவிலாத உஷ்ணத்தை கொடுக்கும். இல்லறத்தானுக்கு ஞானக்கனலும், அவனிடமுள்ள காமக்கனலும் சேர்ந்து உடம்பில் அளவில்லாத வெப்பத்தை உண்டாக்கி கடுமையான மலச்சிக்கல் முதல் பலப்பல நோய்களை உண்டாக்கி கடைசியில் அவனை இறந்துவிடும்படியான ஒரு சூழ்நிலையை உண்டாக்கிவிடும்.

எனவே இத்தகைய தகுதியில்லாத செயலை இல்லறத்தான் செய்தல் ஆகாது என்பதினாலேயே அரவ மாட்டேல் (காற்றுடன் விளையாடாதே, வாசிப்பயிற்சியை விளையாட்டாகச் செய்யாதே) என மறைபொருளாக கூறி வைத்தார் மகான் ஒளவையார்.

அற்பமா மூட ரறியாமல் யோகம்
சொற்பமா யெண்ணிச் செய்தே மரித்தார்
கற்பமில் லாட்டால் காணுமோ ஞானம்
அற்பர்செய் யோகம் அழிம்பிது பாரே.
-மகான் சட்டமுனிவர் அருளிய குரு சூஸ்திரம் 21 - கவி எண் 17.


மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

Saturday, 14 July 2018

“ஓம் சரவண ஜோதியே நமோ நம” எனும் செபத்தால் கிட்டும் பயன் குறித்த மகான் போகமகாரிஷி அருளிய ஆசி நூல்

முருகப்பெருமான் துணை
அருட்பெருஞ்சோதி அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்சோதி

“ஓம் சரவண ஜோதியே நமோ நம” எனும் 

செபத்தால் கிட்டும் பயன் குறித்த

மகான் போகமகாரிஷி அருளிய ஆசி நூல்



10.07.2018, செவ்வாய்க்கிழமை
பிரணவ சக்தியே முருகா
பிரணவ சித்தியே குமரா
சரவண ஜோதியே நமோ நம எனும்
செபதபத்தால் உலகோர்க்கு கிட்டும்
கிட்டும் பயனாக போகமகாரிஷியும்
கூறிடுவேன் அரங்கமகான் கேட்க
திட்டமுடன் ஆறுமுகனார் சூட்சும
தேசிகனார் வெளிப்பாடு உறுதி காண
காணவே இந்தவித நாமசெபம்
கட்டாய செபமாக தொடர்ந்து ஒலிக்க
ஞான சக்தி ஏழாம் படை வீட்டில்
ஞான ஒளியாக வெளிப்படக் கூடும்
கூடவே அரங்க மகானிடத்தில்
கூறியே பாதங்களை பிடித்து
திடமுற தொண்டு செய்திட
தேசிகனுள் இந்த நாம ஒலி பரவ
பரவவே ஆறுமுகனார் சக்தி

பரவி அரங்கனுக்கு தேக திடம்
தரணியிலே கரம் கால்கட்கு உரமாகி
தண்டாயுதன் துணைபட நடை வெளிப்பாடு

வெளிப்பாடு சடுதி காணும்
வினவிட ஞான சக்தி கூடும்
தெளிவுபட செபதப பலம்
தேசிகன் அவதார சூட்சுமம் வெளிப்படுத்தும்
வெளிப்படுத்த அரங்கனே முருகனெனும்

வானவர் கண்ட சூட்சுமம் உறுதிபடும்
தெளிவுபட இவை செபதபத்தை
தொடரும் தொண்டர்கள் வாழ்வில்
வாழ்வில் காரிய வெற்றி காணும்

வந்த நோக்கங்கள் மலரும்
ஊழ் அறுக்கும் தூண்டலாக
உயர் தொண்டும் செபமும் வழி வகுக்கும்
வகுக்கவே ருண ரோகமிடர்
வஞ்சம் ஏவல் சூழ்ச்சி விலகும்
வகைபட அரங்கனோடு இருந்து
வலுவான சேவை செபதபம் காண
காணவே ஞான பலமுடன்

கருணையும் பக்குவமும்

ஞானவான்கள் ஆகிட ஆசியும் அருளும்
ஞானிகளாகவே ஆகும் வாய்ப்பு கிட்டும்
கிட்டவே சரவணஜோதியே நமோ நம என
குறைவில்லா எண்ணிக்கை செபிக்க
கட்டநட்டம் எதிர்முறை குணம் விலகும்
கருணை தயவு பாதுகாப்பு பெருகும்

ஆகவே நாமசெபம் ஒலிக்க
அடியவர் என வந்தவர் எல்லாம்
யுகமாற்ற பங்களிப்பில் இடம் பெறுவர்
உலகை ஆளும் தகுதியும் பெறுவர்
பெருமைபட அகிலத்தவர்களும்
பிரணவம்பட இவை செபம் செய்ய
வறுமை விலகி தன் நிறைவும்
வசதி வளம் நல்பாதுகாப்பும் அடைவர்
அடைவர் அறிவும் பலமும்
அடைவர் சிந்தை தெளிவு திடமும்
சோடையான உலக மாயை வென்று
சுப்பனால் ஞான வாழ்வு பெறுவர்
வாழ்வினில் முருகனே தலைவன்
வையகம் காக்கும் இறைவன் எனும்
தாழ்விலா உண்மை அறிவர்
தக்க செபதபம் தொடர
தொடர உலக அழிவினின்றும்
துன்பமான வாழ்வினின்றும் மீள்வர்
இடரை வென்று காக்க வந்த
எங்கள் அரங்கனே முருகன் எனும்
எனும் சூட்சும அறிவு பெறுவர்

இந்தவித செபதபம் தொடர
ஞான உணவு சைவமே என்றும்
ஞானிகள் பூசையே உயர் பூசை எனும்
எனும் பக்குவம் திடம் பெறுவர்
எக்காலமும் செபதபம் செய்பவர்
ஞானவான்கள் தயவு பெற்றுமே
ஞானயுக வாழ்வும் ஞானியாகும் நிலை அடைவர்

அடையநல் இந்தவித செபதபம்
அளவிலா அனுதினம் செய்ய
சோடை வெல்வது அறமே எனும்
சுத்த தருமமே கருமம் போக்குவது எனும்
எனும் அரங்கன் தருமத்தின்

எல்லையிலா சக்தியை உணர்வர்
தானதரும வழியை கடைப்பிடித்து
தவராசன் தண்டாயுதன் துணைபட வாழ்வர்
வாழ்வினில் ஆபத்து இடைகண்டம்
வாராத எமபயம் விலகி
தாழ்விலா நெடிய ஆயுளும்
தானவர்கள் இனி பிறவா கதி பெறுவர் ஆசி நூல் முற்றே.
-சுபம்-

முருகப்பெருமான் துணை
மகான் போகமகாரிஷி அருளிய ஓம் சரவணஜோதியே நமோ நம எனும் செபத்தால் கிட்டும் பயன் குறித்த ஆசி நூலின் சாரம் :
ஓங்கார சக்தியே முருகப்பெருமானே ஓங்காரத்தின் வெற்றியே குமரப் பெருமானே “ஓம் சரவண ஜோதியே நமோ நம” எனும் ஜெபத்தினால் உலகோர்க்கு கிடைத்திடும் பயன்களையெல்லாம் அரங்கன் கேட்க போகமகாரிஷி யானும் ஆசி நூலாக விளம்பி வருடம் ஆனி மாதம் 26ம் நாள் 10.07.2018, செவ்வாய்க்கிழமையான இன்றைய தினமதனிலே உரைக்கின்றேன் என்கிறார் மகான் போகமகாரிஷி.
உறுதியாக குறித்த சமயத்தில் முருகப்பெருமானின் சூட்சுமமான அரங்கமகா தேசிகன் வெளிப்பாடு உறுதிபட நடந்திட வேண்டுமாயின் இத்தகைய வல்லமைமிக்க மந்திரமான ஓம் சரவண ஜோதியே நமோ நம எனும் மந்திரம் ஜெபமாக தொடர்ந்து ஒலித்திட ஞானசக்தி ஏழாம் படை வீடு தன்னிலே ஞானஒளியாக வெளிப்படுமப்பா.
ஆறுமுக அரங்கனை வணங்கி பணிந்து அரங்கன் முன்னிலையில் ஓம் சரவணஜோதியே நமோ நம என்று தொடர்ந்து ஜெபித்துமே அரங்கனின் கால் பாதங்களை பிடித்து திடமுற தொண்டுகளை செய்து வரவர, தேசிகனாருள் சரவணஜோதி மந்திர ஒலி பரவி முருகப்பெருமானின் சக்தி பரவி, ஆறுமுக அரங்கனுக்கு தேகதிடம் பெருகி அரங்கனின் கரம்கால்கள் உரமாகி முருகப்பெருமானின் துணைபட அரங்கனும் எழுந்து நடந்து தவஅறையினின்று வெளிப்பட்டு உலக மாற்ற செயல்பாடுகளுக்காக வெளியே வருவார்.

இத்தகைய வெளிப்பாடு விரைந்து நடந்திட சரவணஜோதி மந்திரத்தின் செபதப பலம் கூடிட விரைந்து வெளிப்பாடு காணும், ஞானசக்தி கூடி நிற்கும், செபதப பலத்தால் தேசிகனாரின் அவதார சூட்சுமம் வெளிப்படுத்தும்.
சரவணஜோதி மந்திர பலமானது அரங்கனின் அவதார சூட்சுமம் தன்னை வெளிப்படுத்திட ஆங்கே அரங்கமகா தேசிகப்பெருமானே முருகப்பெருமானாக உள்ள உண்மை தேவர்களும் ஞானிகளும் கண்ட உண்மையை தொண்டர்களும் கண்டு ரசிப்பார்கள்.

இப்படிப்பட்ட உயர்வான வல்லமைமிக்க ஜெபதபத்தை தொடர்ந்து சொல்லும் தொண்டர்களின் வாழ்வினிலே உள்ள காரியத் தடைகள் எல்லாம் விலகி காரிய வெற்றி காணுமப்பா. அவர்கள் இந்த பூமியில் எதற்காக பிறவி எடுத்தார்கள் என்பதையும் முன்ஜென்ம நோக்கங்களையும், தொடர்பையும் அறிந்து பிறவியின் நோக்கங்கள் நிறைவேறும். முன்ஜென்ம பாவங்களான ஊழ்வினையை உணர்ந்து ஊழ்வினை அறுத்து விடுபடும் முயற்சியாக ஊழறுக்கும் சக்தியாக முருகப்பெருமானின் உயர் மந்திரமாகிய ஓம் சரவணஜோதியே நமோ நம எனும் மந்திரம் உள்ளதை உணர்ந்து அதை தவறாது ஜெபித்திட அவர்களது இந்த ஜெபதபமும் உயர் தொண்டும் ஊழறுக்கும் வல்லமை தந்திடும்.
ஊழ்வினையை அறுத்து வெற்றிதரவல்ல சரவணஜோதி மந்திர ஜெபமதை தொடர்ந்து செய்து வர, அவரவரைப் பற்றிய கடன் துன்பங்கள் தீர்ந்திடும், அவரவர்க்கு உண்டான வஞ்சனைகள் விலகும், ஏவலும் சூழ்ச்சிகளும் செயலிழந்து அவர்களை விட்டு விலகி ஓடும்.
உத்தம மகா ஞானி முருகப்பெருமானின் அவதாரம் ஆறுமுக அரங்கனின் திருவடி நிழலே கதியென தஞ்சமடைந்து திருவடி நிழலில் தங்கி அரங்கனோடு உடனிருந்து வலுவாய் தொண்டுகளையும் ஜெபதபங்களையும் தவறாது செய்து வந்தால், அவரெல்லாம் ஞானபலம் தன்னை பெறுவதுடன் அரங்கனின் கருணையையும், பரிபக்குவத்தையும், அவரெல்லாம் ஞானவான்களாக ஆகிட எல்லா ஞானிகளின் ஆசியும் அருளும் பெற்று ஞானிகளாகவே ஆகும் வாய்ப்பையும் பெறுவார்கள்.
சரவணஜோதியே நமோ நம என்று குறைவின்றி நிறைவாக அதிக அளவில் ஜெபித்து வரவர, கஷ்டங்களும் நஷ்டங்களும் விலகும். எதையெடுத்தாலும் எதிர்மறையாக சிந்திக்கும் வக்கிர குணம் விலகும், எதிர்பதமான சிந்தனைகள் விலகும், அவர் தம்முள்ளே கருணையும் அருள் பாதுகாப்பும் தயவு உணர்வும் பெருகி நிற்கும்.

ஆதலினால் “ஓம் சரவணஜோதியே நமோ நம” என்றே நாமஜெபத்தை ஒலிக்கும் அடியவர்கள் எல்லோரும் யுகமாற்ற பங்களிப்பில் இடம் பெற்று சிறப்படைவார்கள், இந்த உலகை ஆளும் தகுதியும் பெறுவார்கள்.
உலக மக்களெல்லாம் ஓங்காரனாம் முருகப்பெருமானின் ஆசியுடன் ஓம் சரவணஜோதியே நமோ நம என்றே தொடர்ந்து ஜெபதபங்களை செய்து வரவர, அவரவரைப் பற்றிய வறுமை விலகி தன்னிறைவு காணும், நல்ல வசதியும் வளமும் நல்பாதுகாப்பும் பெற்று சிறப்படைவார்கள், சிறந்த அறிவு பலமும் சிந்தை தெளிவும் மனோதிடமும் பெற்று குற்றமுள்ள துன்பமயமான உலக மாயையை வென்று சுப்பனாம் முருகப்பெருமானால் ஞானவாழ்வை பெறுவார்கள்.
வாழ்வினில் அவரவரும் உறுதியுடன் முருகப்பெருமானே எமக்கு தலைவன், அவனே இந்த பிரபஞ்சத்திற்கும் தலைவன். இவ்வுலகைக் காக்கும் இறைவன் எம்பெருமான் முருகப்பெருமானே என்கிற அற்புதமான பேருண்மையையும் அறிந்து தெளிவார்கள்.
தகுந்த விதத்தில் முறையுடன் நாமஜெபங்களை ஜெபதபமாக தொடர்ந்து செய்திட அவரெல்லாம் உலகின் இயற்கை பேரிடர்களிலிருந்தும் மீள்வார்கள், துன்பமயமான உலக வாழ்வினிலிருந்தும் மீள்வார்கள். மக்களின் துன்பங்களை வென்று காத்திடவே வந்துதித்த எங்கள் அரங்கமகா ஞானியே முருகப்பெருமான் எனும் சூட்சும அறிவையும் பெறுவார்கள்.
இப்படிப்பட்ட உண்மையான ஆற்றல் பொருந்திய சரவணஜோதி திருமந்திரத்தை மந்திர ஜெபமாக தொடர்ந்து ஜெபித்து உருவேற்றினால் ஞானத்தினை அடைய தகுந்த உணவு சைவமே என்பதும், ஞானஉணவு சைவம்தான் என்றும், உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து சுத்த சைவ உணவை மேற்கொண்டாலன்றி ஞானத்திற்கு உரிய அறிவையோ, உணர்வையோ, ஞானத்தையோ ஒருபோதும் பெற முடியாது என்பதையும் அறியலாம். ஞானிகளை வணங்குவதுதான் உயர் பூஜை என்பதையும், மற்ற மற்ற சிறுதெய்வ வழிபாடுகளும், செத்து பிறந்த மனிதர்களை வணங்குவதும், மேன்மையடைய செய்யாது என்பதையும் தெளிந்து உணர்ந்து பக்குவம் பெறுவர். ஆக ஞான உணவு சைவமே என்றும், ஞானிகள் பூஜையே உயர்ந்த பூஜை எனும் பரிபக்குவம் மனோதிடமும் பெற்று சிறப்படைவார்கள்.

எல்லா காலத்தும் “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்றே ஜெபதபம் செய்து வருகின்றவர்கள் ஞானவான்களின் தயவினை பெற்று ஞானயுக வாழ்வும் ஞானியாகும் நிலையையும் அடைவார்கள். சரவணஜோதி மந்திரத்தை ஒவ்வொரு நாளும் தவறாது அளவிலாது ஜெபதபம் செய்து வந்தால், நம்மைப் பற்றிய மும்மல குற்றங்களையும் வெல்வது அறமே என்றும், சுத்த தருமமே கருமமாகிய முன்ஜென்ம பாவங்களை போக்குவது என்றும், அதனாலேயே மக்களின் வினைபோக்கும் மாதரும செயல்களை ஆறுமுக அரங்கனும் செய்து அன்னதானத்தை விரிவாக நடத்துகிறார் என்பதையும் ஆறுமுக அரங்கனின் தருமத்தின் எல்லையில்லா சக்தியையும் உணர்ந்து தெளிவார்கள்.
தானதருமத்தின் வழியே சிறந்த வழி என்றே உணர்ந்து, தர்மத்தின் வழியை கடைப்பிடித்து தவராசன் அரங்கன் துணையுடனும் தண்டாயுதன் முருகப்பெருமான் துணையுடனும் வாழ்ந்து சிறப்படைவார்கள். அவர்களது வாழ்வில் ஆபத்துகள் ஏதும் வாராமல் இடைத்துன்பங்களும் வாராது நல்வாழ்வு வாழ்ந்து எமபயமாகிய மரணபயம் விலகி தாழ்விலாத நீடிய ஆயுளையும் பெற்று இனி பிறவாத கதியாகிய மரணமிலாப் பெருவாழ்வு எனும் பெருநிலையை பெற்று சிறப்படைவார்கள் என தமது ஆசி நூல் மூலம் உலகறிய உரைக்கின்றார் மகான் போகமகாரிஷி.
-சுபம்-

நக்கீரன் திருவடியை நாளும் போற்றிட
தக்க துணையென்றே சாற்றுவோர் நல்லோர்.
- மகான் ஆறுமுக அரங்கமகா தேசிகர்.