Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Friday, 3 February 2017

முருகா என்றால் கலை ஞானமாகிய இராசயோகத்தினை அறியலாம்

முருகா என்றால் பதி, பசு, பாசம் என ஞானிகளால் சூட்சுமமாய் சொல்லப்படுகின்ற கலை ஞானமாகிய இராசயோகத்தினை அறியலாம்




இராசயோகம் என்பது யோகஇராசனான யோகத்தலைவனான முருகப்பெருமானே உடனிருந்து உள்ளிருந்து உன்னைச் சார்ந்து உமது களிம்பான காமதேகத்தினை சார்ந்து தன்னிகரில்லா தனிப்பெரும் தயவு கொண்டு அந்த சாதகன் அதற்கு முன் பல ஜென்மங்களிலே செய்திட்ட பிரம்மாண்டமான புண்ணிய பலத்தாலும் பலபல ஞானிகளுக்கு அச்சாதகன் செய்திட்ட தொண்டினால் அவர்கள்பால் ஞானிகள் மனம் மகிழ்ந்து அருளிய அருளாசிகளின் ஆற்றலாலும் அச்சாதகன் செய்திட்ட தானதவ பலனினாலும் தயவுடைத் தனிப்பெரும் தெய்வம் முருகன் தன்னிலை நின்று இரங்கி அச்சாதகனை சார்ந்தே பலகாலம் செய்திடக்கூடிய ஒரு பிரம்மாண்டமான யோகசாதனமாகும்.



பாசம் எனப்படுகின்ற சந்திரகலை (இடது நாசியில் வருகின்ற மூச்சுக்காற்று). இது உடல்சார்ந்த ஒரு மூச்சுக்காற்று இயக்கமாகும். இது உடம்பை பேணும். பசுவாகிய சூரியக்கலை (வலது நாசியில் வருகின்ற மூச்சுக்காற்று). இது உயிரைச்சாரும். அதாவது ஆன்மாவை சார்ந்து இயங்கக்கூடிய மூச்சுக்காற்று இயக்கமாகும். பதியாகிய சுழிமுனை (இடது, வலது, நாசித்துவாரங்களுக்கு மேலாக இரு கண்ணிற்கு மையமாக கபாலத்தின் உட்புறத்தே நாசித்துவாரங்களும், கண் துவாரங்களும், காது துவாரங்களும், மூளைத்துவாரமும் ஒன்று கூடக்கூடிய புறத்தே புருவத்தின் மத்திக்கு, நேராக கபாலத்தின் மையத்திலே இடது வலது நாசித்துவாரங்களுக்கு மேலாக ஒரு மெல்லிய சவ்வினால் பிரிக்கப்பட்டு சாதாரணமாய் இணைப்புடன் இல்லாமல் தனித்து பிரிந்து உள்ளதும் ஒரு மெல்லிய மயிரிழை போன்ற நாடியாகி கண்ணுக்கும், வேறெந்த கருவிகளுக்கும் புலப்படாமல் உள்ள ஒரு அற்புத இயற்கையின் வரப்பிரசாதமான நாடியாகும்.



இதுவே பிரம்மநாடி. இதுவே ஈஸ்வர நாடி. இதுவே மரணமில்லாப் பெருவாழ்வை தரவல்ல நாடியாகும். பதி என்று சொல்லப்படுகின்ற சுழிமுனை நாடியானது பரமான்மாவைச் சார்ந்து இயங்குகின்ற நாடியாகும். இதன் இயக்கமே இறைநிலையை நம்முள் கொண்டும்.



சாதாரணமாக எல்லா மனிதருக்கும் இடதுநாசி வழியாக, வலது நாசி வழியாக சுவாசங்கள் வந்து போய்க்கொண்டிருக்கும். அது ஒரு லய கதியில் இயங்காது. அதாவது ஒரே சீராக இயங்காது. ஆனால் ஞானிகளை வணங்கினால்தான் சீராக இயங்கும். அப்படி சீரான இயக்கத்திற்கு நாடிகளைக் கொண்டு வர, ஞானிகளை வணங்கி வணங்கி போற்ற வேண்டும்.


போற்றி போற்றி துதித்து, உருகி உருகி தியானித்து தியானித்து, ஞானிகள் அருளைப் பெறப்பெற, அவர்தம் முன்சென்ம அருளினால் பூர்வ புண்ணிய பலத்தால் முன்சென்ம வாசனை தொடர்ச்சியினாலே ஞானிகள் அருளிற்கு பாத்திரமாகி அவர்தம் முன்சென்ம ஞானகுருவாய் அமைந்த ஞானியின் திருவடிக்கு அவர்தம் பக்தி சென்று ஞானகுருவின் அன்பிற்கு பாத்திரமாகி முற்பிறவி தொடர்புடன் தொடர்பு இச்சென்மத்திலும் ஏற்பட்டு நாடிகளை எப்படி சீராக்குவது? எப்படி சமநிலைக்கு கொண்டு வருவது? எப்படி நாடிசுத்தி செய்வது? அதற்குரிய உணவு முறைகள் எவை எவை? எவைஎவை உனது தேகத்தை பாதிக்கும்? என்று உணர்த்தி சுமார் மூன்று வருடங்களுக்கு உப்பில்லாத வெறும் உணவினைக் கொடுத்து கொடுத்து, உடம்பிலுள்ள அசுத்தங்களை நீக்கும் மிகக் கொடுமையான வேதனையளிக்கும் பயிற்சிக்கு உட்படுத்தி ஞானகுரு தாயாய் அவர் தம்முடன் இருந்து அச்சாதகனை சேயாய் பாவித்து ஆறுதல் தேறுதல் கூறி அவன்தன் இலட்சியத்திலிருந்து விலகிடா வண்ணம் உடனிருந்து காத்தருள் புரிந்திடுவார்.



உடல் சிறிது தூய்மைப்படுத்திய உடன் ஞான குருநாதராய் அமைந்தவர் குருவிற்கெல்லாம் குருவாய் அமைந்த சித்தர்கோன் அகத்தியமகரிஷியிடம் அந்த சாதகனை ஞானநிலைதனிலே சூட்சுமமாய் ஆன்மாவைப்பற்றி அகத்தியர் திருவடிகளிலே அந்த ஆன்மாவைக் கிடத்தி “தாயே அகத்தீசா! இவன் என்பிள்ளை! எம்மால் ஆனதைச் செய்தோம். தாங்கள் இவனை சுத்தப்படுத்தி தாருங்கள். எம்பிள்ளை மீது கருணை காட்டுங்கள். எமக்கு எவ்வளவோ தொண்டுகள் செய்தான் இவன். இவனைக் காத்தருளுங்கள் தாயே!” என்று சாதகனுக்காக ஞானநிலை நின்ற ஞானகுரு இரங்கி அகத்தியர், திருவடி பணிந்து வேண்டிட உலக ஞானிகளில் அந்த சாதகன் இதற்குமுன் தொண்டு செய்திட்ட ஞானிகள் அனைவரும் ஒன்று கூடி அகத்தியரிடம் ஞானகுருவுடன் இணைந்து விண்ணப்பிக்க அனைவரது கூற்றினையும் கேட்கும் அகத்தியரும் மனமிரங்கி அச்சாதகனைச் சார்ந்து யாம் இவனை தூய்மைப் படுத்துவோம் என்றே உத்திரவாதம் அளித்து அச்சாதகனுக்கு அதற்கு மேலான பயிற்சிகளை தரத்துவங்கி அன்றுமுதல் அச்சாதகனை தமது வசமாக்கி அவன் தொண்டு செய்திட்ட ஞானிகள் கூட்டத்துடனே ஒன்று கூடியே அவனது தேகக்களிம்பை ஞானத்தலைவன் முருகன் வருகைக்கு உகந்ததாக ஆக்கிடவே துணிந்து செயலாற்றுவார்.



துணிந்துமே செயலாற்றிட அகத்தியர் நாடிசுத்தி, தேகசுத்தி என்றே பலவாறாய் துவங்கி செய்திட செய்திட சாதகன் தன்னிலை மறந்து உடல், உயிர், ஆன்மா மூன்றையும் ஞானகுருவின் வசம் முழுமையாக ஒப்படைத்து சரணாகதியாகியே வீழ்ந்திட மூன்று நிலை நின்றும் ஞானிகள் அனைவரும் ஒன்று கூடியே உணவு அளிக்க ஒரு ஞானி, உடம்பை காக்க ஒரு ஞானி, சுற்றுப்புறம் அமைக்க ஒரு ஞானி, பாதுகாக்க ஒரு ஞானி என்றே அச்சாதகன் தனக்கு அரூபநிலை நின்று ஞானிகளெல்லாம் ஒன்று கூடி ஒவ்வொரு நாளும் ஒரு பிரசவம் போல நிகழ்ந்திடும்படியான கவனத்துடன் அணுஅணுவாக நொடிநொடியாக கண்காணித்து கண்காணித்து உடம்பைப் பற்றிய மும்மலக் கசடை நீக்குவார்கள்.



தேகக்களிம்பு நீங்க நீங்க தேகம் தூய்மைபெறும். இவ்விதம் சுவாசப்பயிற்சியின் மூலம் உணவு கட்டுப்பாட்டு மூலமும், தேகத்தின் உஷ்ணத்தைக் கட்டுப்படுத்தி ஏற்றி இறக்கி தேகத்தில் உள்ள தேவையற்ற கசடுகளை நீக்கி நீக்கி ஆறுமுகனாம் முருகப்பெருமான் வருகைக்காக தயார் செய்வர் ஞானிகளெல்லாம் சாதகன் தேகத்தை. சுமார் பதினான்கு வருடங்கள் இப்படி படாதபாடுபட்டு தேகத்தை சுத்தப்படுத்தும் நிகழ்ச்சி நடந்திடும். தேகம் தேவையான அளவு தூய்மை பெற்றவுடன் ஆதிகுருநாதன் ஞானபண்டிதன் வருகைக்காக காத்திருப்பர் ஞானிகளெல்லாம். ஒரு சுபயோக சுபதினத்தினிலே சுபமுகூர்த்தத்திலே ஞானத்தலைவன் தன் திருவடிக்கு, அகத்தியர் தலைமையிலே ஞானக்கூட்டமெல்லாம் ஒன்று கூடியே ஞானியர் புடைசூழ ஞானபண்டிதன் வீற்றிருக்கும் திருச்சபைதனிலே அகத்தியரும் ஞானகுருவும் மற்றைய ஞானிகளும் சூட்சுமநிலையிலே சாதகன் ஆன்மாவை கொண்டு சென்றுமே தேவரீர் ஞானபண்டித எம்பிள்ளை இவன். எம்மை போன்றோர்க்கெல்லாம் உத்தமமாய் தொண்டுகள் செய்தவன், மகாபுண்ணியவான், பண்புடையோன், எம்மீது அளவிலா பக்தியுடையோன். இவன் தனக்கு நாங்களெல்லாம் காத்தருள் புரிவோம் என்றே வாக்களித்தோம். எங்கள் வாக்கு பொய்க்கா வண்ணமே எங்கள்மீது கருணை கொண்டு எங்கள்மீது இரக்கம் கொண்டு எங்களுக்காக இச்சாதகனை காத்து அருள் செய்து பிறவாநிலை அளித்திட உத்தாரம் தந்தருளுங்கள் என்றே மன்றாடி வணங்கி கேட்பர் தலை வணங்கா ஞானியர் குலாம், சீடன் பொருட்டு சாதகன் பொருட்டு
தலைவணங்கி தலைவன் முன்னே மன்றாடி நிற்கும்.



தலைவனும் ஞானியர் வேண்டுகோள் தனக்கு செவிசாய்த்து சாதகன் தனக்கு பிறவா நிலையளிக்க உத்தாரம் தந்துமே தலைவன் வருகைக்காக தூய்மைப்படுத்தப்பட்ட தேகம்தனில் பிரவேசிப்பார்.



அதுவே கிருகமாகிய இந்த தேகத்தினுள் பிரவேசிக்கும் அற்புத நாளாம். கிருகப்பிரவேச நாளாம் உடலெனும் ஆலயத்துள் பிரவேசிக்கும் ஆலயப் பிரவேச நாளாம். அதுவே வாசி வசப்படும் நாளாம். அதுவே மூலக்கனல் தோன்றும் நாளாம். அந்நாளே மனித ஜீவிதத்தில் ஒரு மனிதன் பெறக்கூடிய மிக உயர்ந்த நாளாம்.


அப்படி சாதகன் தேகத்தை முருகப்பெருமான் சாதகன் சுவாசத்தோடு சுவாசமாக மூச்சுக்காற்றோடு மூச்சுக்காற்றாக கலந்து தேகப்பிரவேசம் செய்து புருவமத்தியின் உள்ளே மெல்லிய சவ்வினை கரைத்திட பேரருள் புரிந்து அச்சவ்வினை கரைத்து அச்சாதகன் உள்ளே உள்ள அற்புத பிரம்ம நாடியாம் சுழிமுனைதனிலே பிரவேசித்து தனது அற்புத அதிநுட்ப ஞானஇரகசியங்களை அவன் தம்முள்ளே உணர்த்தி அச்சவ்வினை மீண்டும் மூடாவண்ணமே அச்சாதகன் தன் அன்பினால் கூடிய ஞானக்கூட்டம் ஒன்று கூடியே, ஞானிகள் உடனிருந்து காத்து அருள்புரிவர்.



ஞானபண்டிதனின் அருள்நிறை ஆலயப் பிரவேசமாகிய சாதகனின் தேகத்தினுள் பிரவேசித்து மயிரிழை போன்ற மெல்லிய நாடியாம் சுழிமுனையில் பிரவேசித்த அந்த நாள் முதல்தான் அச்சாதகனுக்கு ராஜயோகம் ஆரம்பிக்கிறது.



யோகராசன் முருகன் சாதகனை சார்ந்திடும் தினமே, இராசயோகத்தின் முதற்கட்டமாகும் அதன் பின்னே பலபல பயிற்சிகள், பலபல சாதனைகள், பலபல சோதனைகள், பலபல வேதனைகள் என்றே பன்னெடுங்காலம் சுமார் பதிமூன்று வருடங்களுக்கு குறைவில்லாது இராசயோகம் பயின்று ஆறுமுகனார் அச்சாதகனை சார்ந்து நீக்க முடியாத மும்மலச் சேற்றை சிறிதுசிறிதாக அணுஅணுவாக அணுக்களினின்றும்  நீக்கி உடம்பினுள்ளே சோதி தோன்றச்செய்து உடம்பையே சோதி வடிவமாக்கி பின் நான், அவன், அது என்ற வேறுபாடில்லாமல் அவன், அவள், அது என்ற வேறுபாடில்லாமல் தானும் தலைவனும் ஒன்றேயாகும்படி நீக்கமற கலந்து சோதி வடிவினனாக்கி சாதகனையும் தன்னைப் போலாக்கி தன்னுள் ஒருவனாக்கி தேகம்தனை விட்டு விலகியும் கலந்து நிற்பனன் ஞானத்தலைவன் முருகப்பெருமான்.



ஆதலின் மிகமிக கடினமான பூர்வசென்ம புண்ணிய பலத்தால், ஞானிகள் அருளால், ஞானிகள் உடனிருப்பால், ஞானிகள் தேகம் சார்ந்து பன்னெடுங்காலம் பாடுபட்டு ஞானபண்டிதன் உடம்பினுள் தங்கி பல வருடங்கள் யோகம் செய்து தேகமாற்றம் ஏற்படுத்தி தரக்கூடிய பலரது விடாத முயற்சியுடன் செய்து முடிக்க கூடியதுதான் இராசயோகமாகும்.



தனிமனித முயற்சியால், பணத்தாலோ, மற்றெந்த வகையாலோ, அறிவின் துணைகொண்டோ, எந்த விதத்திலும் செய்வதற்கு சாத்தியமே இல்லாத ஒரு யோகமே இராசயோகம். அவனருள் இல்லையேல் அவனை அறிய முடியாது, தன்னையும் அறிய முடியாது.



முருகா! முருகா!! முருகா!!! என்றே உருகி உருகி தியானியுங்கள், யோகத்தின் தன்மை உணரப் பெற்று தலைவனையும் தன்னையும் உணர்ந்திடலாம் நல்வழி சென்று நலமாய் வாழலாம்.


மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

     

Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html





Saturday, 10 December 2016

பஞ்சமாபாதகங்களிருந்து விடுபட வேலனை வணங்குங்கள்!

முருகா என்றால் :


கள், காமம், களவு, கொலை, பொய்கூறல் என்ற ஐந்து பெருங்குற்றங்களும் பஞ்சமாபாதகங்கள் என்றும் இப்பாவங்களை செய்திட்டால் அது மனிதனை விடுபடமுடியாத வகையினிலே நரகத்தில் தள்ளிவிடும் என்பதையும் உணர்த்துவார்.



இந்த பஞ்சமாபாதகங்களும் அவரவர் முன் ஜென்மங்களிலே அவரவர் செய்திட்ட பாவங்களினாலேதான் இச்சென்மத்திலும் தொடர்கின்றதென்றும் அவை அவை அவரவர் செய்திட்ட பாவத்தினால் இச்சென்மத்திலும் தொடர்ந்து அவர் தம்மை மீண்டும் மீண்டும் மீளா நரகத்தில் ஆழ்த்திட முயற்சிக்கின்றது. ஆதலின் பாவவினைக்கு உட்பட்டவர்கள் முருகனருளால் உணர்ந்து மீண்டும் பாவத்தின் போக்கில் செல்லாமல் அதிலிருந்து விடுபட வேண்டுமென்ற உண்மை அறிவும் மிகும்.



முன்சென்மங்களிலே யாரும் அறியவில்லை என்றே நம்மை நாமே வியந்து ஏமாற்றிக் கொண்டு பிறர் அறியா வண்ணம் இரகசியமாக அவர்களது பொருளை கவர்தல், பொய்யான தகவல்களை கூறி ஏமாற்றி வஞ்சித்தல், பொருள் பறித்தல், அதிகவிலை உள்ள பொருளையோ, நிலத்தையோ, பிறர் வறுமையைப் பயன்படுத்தி தர்மத்திற்கு புறம்பான வழியிலே சென்று அவர்தம் பலகீனமான சூழ்நிலையை தக்க சந்தர்ப்பமாக எண்ணி பயன்படுத்தி வஞ்சனை செய்து சொத்தை அபகரித்தல், பொருளை அபகரித்தல் என்றும் தமக்கு உள்ள சக்தி, பணபலம், ஆள்பலம், அதிகாரபலம் போன்றவற்றை பயன்படுத்தி மிரட்டி பிறர் பொருளை வஞ்சனையாக அபகரித்தல் போன்ற மாபாதக செயல்களை செய்தவரெல்லாம் இச்சென்மத்திலே தன்னை தானே மயக்கும்படியான பொருள் கொடுத்து தீமையை விலைக்கு வாங்கி மயக்கம் உண்டாக்கி மனிதனை மரணத்தில் தள்ளவல்ல மதுவினை அமிர்தமாய் எண்ணி உண்டு தன்னைத்தானே மயக்கிக்கொண்டு அறிவு கெட்டு, புத்தி மழுங்கி, குணப்பண்புகளெல்லாம் தம்மிடமிருந்து விடுபட தன்னிலை மறந்து தன் தகுதி மறந்து மயக்கமுற்று பிறரை வஞ்சித்த பாவத்தின் தாக்கம் அதிகமாக அதிகமாக தன்னைத்தானே மயக்கமுறச் செய்து மயங்கி மதுவிற்கு அடிமையாகி மீளமுடியாமல் செத்தும் போவான். இவன் மானம் கெட்டு சாவது மட்டுமல்ல தன்னை சார்ந்த குற்றத்தினால் அவனது குடும்பத்தினரையும்
நடுத்தெருவில் நிறுத்திவிட்டு அவமானப்படும்படியான சூழலை உண்டாக்கி விட்டு அடுத்த ஜென்மத்திற்கும் குடும்பத்தினரால் வருகின்ற சாபத்தினையும் சேர்த்தே வாங்கி செல்வான் பாவி.



இந்த உண்மையை உணர்ந்திடப் பெறுவார்கள் முருகனருளால். உணர்ந்து யாரும் அறியவில்லை ஆனால் கடவுள் இருக்கின்றான், தர்மம் உள்ளது, முருகன் இருக்கின்றான், தர்மநெறி தவறிவிட்டால் தண்டிக்கப்படுவோம், பாவபுண்ணியத்திற்கு பயப்பட வேண்டும் என்று உணர்ந்து இச்சென்மத்திலாவது பிறரை ஏமாற்றாமல் வாழவேண்டுமென்ற உண்மை அறிவினை பெறுவார்கள்.



முன்சென்மங்களிலே தன்னை நம்பிய பெண்ணை காதலித்து தக்க சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளை வஞ்சித்து சுகம் பெற்று பின்னர் தனது அதிகாரம் மற்றும் பணத்தின் பலம் போன்றவற்றை பயன்படுத்தி அவளை மிரட்டி ஏமாற்றுதல் பெண்ணிடம் பொய் சொல்லி கற்பை சூறையாடுதல், பெண்ணை திருமணம் செய்வதாக வாக்களித்து கெடுத்து பின் கைவிடல், விரும்பாத பெண்ணை வலுவினில் சென்று அபகரித்தல், பெண்ணை கற்பழித்தல் போன்ற பெண் கொடுமைகளும், வேலைக்கு வருகின்ற பெண்களின் வறுமையைப் பயன்படுத்தி தமது காம இச்சைக்கு அவர்களை பலியாக்குதல் அல்லது வேலைக்கு வந்த பெண்களை பயமுறுத்தி இச்சைக்கு பணிய வைத்தல் போன்ற வெளியில் சொல்ல முடியாத பெண் பாவங்களை செய்தவர்கள் எல்லாம் இச்சென்மத்திலே பெண் மயக்கமுற்று பெண்நினைவாகவே அலைந்து திரிந்து காமவயப்பட்டு விலைமகள் தொடர்பினை நாடி தீராத காமத்தினால் உந்தப்பட்டு நோய்களையும், அவமானங்களையும் பெற்று பாவியாவார்கள்.



அவர்களெல்லாம் முருகனருளைப் பெறபெற இவையெல்லாம் நம் முன்சென்மத்தில் செய்த பாவங்கள் என்றே உணர்ந்து அவையெல்லாம் முருகனருளால் மாற்றிட கூடும் என்றுணர்ந்து முருகனருளைப் போற்றி போற்றி முருகனருளைப் பெறுவார்கள்.



அதுபோலவே களவு செய்வோர்களும், களவின் வெளிப்பாட்டினால் கொலையும், இவையனைத்தையும் மறைத்திட நீதியின் தண்டனையிலிருந்து தப்பித்திட அடாது பொய் சொல்லியும் இவ்வாறாக ஒரு குற்றம் தொடர்ந்திட அதன் தொடர்ச்சியாய் பலபல குற்றங்களை தொடர்ந்து தொடர்ந்து செய்து கடைசியில் முடிவற்றதாய் குற்றங்கள் பெருகி நம்மை என்றென்றைக்கும் மீள ஒட்டாமல் நரகத்தில் தள்ளிவிடும் என்றுணர்ந்து இவற்றினின்று விடுபட முருகா உனதருளினால் தான் முடியும் என்று உணர்ந்து முருகன் திருவடியைப் இறுகப் பற்றிட தூண்டும்.



முருகன் திருவடியைப் பற்றி உருகி உருகி பூசித்திட பூசித்திட இப்பாவங்களின் தன்மையும் அதன் பாவவினைகளின் விளைவுகளை அனுபவித்து தீர்க்கும் தைரியமும் அதனின்று விடுபட முருகன் அருள் பெற்று தர்மம் செய்தால் விடுபடலாம் என்ற தர்மசிந்தையும் பெருகி தக்க ஆசானை நாடி, வினை நீக்கம் செய்திட துணிவும் ஆசான் துணையும் முருகனருளால் பெற்றிட பெறுவார்கள்.


தக்க சொற்குரு வழிகாட்டலினால் முன்சென்ம பஞ்சமாபாதக வினைக் குற்றங்களிலிருந்து விடுபட்டு ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள்.


இவையனைத்தும் முருகனருள் கூடினாலன்றி நடந்திடலாகாது. முருகா! முருகா!! முருகா!!! என்போம். பாவபுண்ணியம் பற்றி அறிந்து பாவம் நீக்கி புண்ணியம் பெருக்கி பண்பாளனாய் ஆகி முருகனடிக்கே அடிமைகளாகி முருகன் அருள் பெற்று ஞானமும் அடைவோம்.
...........


மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

     

Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html





ஜென்மசாப விமோசன தொண்டாற்றல்!!


ஞானிகள் பூசை இல்லையேல் அரங்கன் திருஅருள் இல்லையேல் அரங்கனின் குருஅருள் இல்லையேல் ஞானசித்தி இல்லை!!!





காலனாம் எமனையும் வென்று காக்கும், மரணம் வெல்ல வல்லதொரு அதிஅற்புதமான கருணைமிகக் கொண்ட சக்திதான் அரங்கா உமது சக்தி. அது தருமத்தின் சக்தியாகும். சக்தி மிகுந்த தருமச்சக்கரம் தனைக் கொண்டு உலகைக் காக்கின்ற அரங்கர், தர்ம சக்கரத்துடன் கடைத்தேற்றவல்ல தூயநெறியாம் சன்மார்க்க நெறி என்கின்ற ஜீவதயவாய் ஆனதொரு தூயநெறிமுறையையும் உலகிற்கு அளித்து கடைத்தேற்றி ஞான வாழ்வளித்து காக்கின்ற சக்தி மிகக்கொண்ட இவ்வுலகின் மகாஞான குருநாதனே அரங்கனாவார். உத்தமமகா ஞானி கலியுக காவல்தெய்வம், யுகமாற்ற தலைவன் அருள்மிகு ஆறுமுக அரங்கமகா தேசிகரின் திருவடிகளிலே உடல், பொருள், ஆவி என்றே அனைத்தையும் சரணாகதியாக்கியே உளமார சரணடைந்தோர்க்கெல்லாம் அற்புத ஞானி அரங்கனின் அருள்வேலி காக்கும்.


அற்புத அருள்வேலி அன்பர்தமை இடையறாது காத்து அவர் தமக்கு மரணகண்டங்களிலிருந்து பாதுகாப்பு நல்கி கடன் தொல்லைகளிலிருந்து விடுவித்து கவலை துன்பம் அணுகாது காத்து பிணி வென்று சுகமளித்து காத்து இரட்சிக்கும் அரங்கனின் அருள் சக்தி.


ஒவ்வொரு நாளும் அரங்கன் தம் திருவடிகளை மறவாமல் அவரவர் இல்லங்களிலே தவறாமல் பூசித்திடல் கட்டாயமாகும். அரங்கனின் திருவடிகளை மானசீகமாக மனக்கண்ணிலே நிறுத்தி குளிர்ச்சி பொருந்திய, ஒளி பொருந்திய ஞானமளித்து விதி மாற்றம்தனை செய்து அன்பரை கடைத்தேற்றக்கூடிய தேவர்க்கும் மூவர்க்கும் எட்டா அந்த புனிதத் திருவடிகளை ஆறுமுகனார் அவதாரத் திருவடிகளை அவரவரும் அவர்தம் கண்ணீரால், கண்ணீர் மலர் கொண்டு, மனமுருகி அவரவரும் தம்தம் எண்ணி வருந்தி குற்றங்களுக்கு வெட்கி அந்தரங்கத்திலே அரங்கர் திருவடிக்கு சமர்ப்பித்து மன்னிப்பு கேட்டு தம்தம் நிலைதனை அவரும் உணரும் வகையிலே மனஇளக்கம் கொண்டு இறையாம் அரங்கரிடத்து அந்தரங்கத்திலே பூசைதனிலே பொய்யின்றி உளமார உண்மையுடன், மன்னிப்பு கோரியும் அரங்கரின் அற்புதங்களை, புகழை, பெருமைகளை மனதார உணர்ந்து போற்றி துதித்து அண்ணல் அரங்கரை அவர்தம் உண்மை சொரூபமாம் ஞானசோதி சுயம்பிரகாச அருள்ஞான வள்ளல் யோகானந்த ஞானானந்த சதாசிவ சாந்தசொரூப ஞானத்தலைவன்




முருகப்பெருமானாக எண்ணியே அன்பர் புறக்கண் தோற்றத்தில் கண்டிட்ட அரங்கரின் உருவம் கண்டு ஏமாறாது பிரம்மாண்ட சோதி பெருஞ்சுடராய் தோன்றும் ஒளி பொருந்திய அரங்கர் தம்மை மனதினில் இருத்தி கண்ணீர் மல்க மல்க நெஞ்சம் உருக உருக தவறுகளை உணர்ந்து உணர்ந்து மன்றாடி மன்னிப்பு கோரி வெட்கி வணங்கி அவர் திருமுன் மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐம்புலன்களும் கருவிகளும் ஒடுங்கிட மனசலனமின்றி வாய்புதைத்து மனம் பரிதவித்து வணங்கி வணங்கி அரங்க நாமம்தனை நாதழும்பேற அரங்கா அரங்கா என்றே அரற்றி கூறி ஆன்மா சோர அரங்கர் அருளை பெறவே மன்றாடி நின்றிடல் வேண்டும்.


அங்ஙனமே உளம் உருகி மன்றாடி நிற்கும் உண்மை பக்தராம் அன்பர் தமக்கு அவர்தம் ஆசைகள் அரங்கரின் அருளால் நிறைவேற்றப்படும். அந்த அன்பர் தமக்கு மட்டுமன்று அவர்தம் குடும்பத்தினருக்கும் அவரது பூஜா பலன்களாலே அவையனைத்தும் அருளப்படும்.


அண்ணல் அரங்கர் வாழும் ஞானஆலயமாம் ஓங்காரக்குடில் தனிலே சமைக்கப்படுகின்ற உணவு சாதாரண பசியை போக்குகின்ற உணவு மட்டுமன்று. அது ஞானிகள் அருளாசிகளினாலே சமைக்கப்படுகின்றதனாலே அருள்நிறை அருளமுதாகும். அருளமுதாம் குடில் உணவு ஆயுள்தனை விருத்தி செய்து காக்கும் அமுதத்திற்கு ஒப்பான உணவாகும்.


அதுவே பிணி தீர்க்கும் அருமருந்தாகும். ஓங்காரக்குடில் நாடி வந்து ஆங்கே தொண்டுகள் பொருளுதவிகள் செய்து தங்கி அரங்கரின் அன்பிற்கு வசமாகி ஆங்கே ஞானிகளருளால் சமைக்கப்படுகின்ற அருள் உணவை மனமார உண்டு செல்கின்ற அவரவர்க்கும் அவர்கள் மேற்கொண்ட செயல்களிலெல்லாம் செயல் வெற்றி பெறுவதோடு அவர்கள் மனதினுள் எண்ணிய எண்ணங்களில் வெற்றியும் பெற்று அவர் தம்மை அரங்கன் அருளும் ஆசிகளும் உடனிருந்து காக்கும்.


ஞானத்தலைவனாம் முருகப்பெருமானின் சக்தியை முழுமையாகக் கொண்ட உத்தம மகாஞானயோக வள்ளல் ஞானி அரங்கமகா தேசிகரின் வல்லமைகளை குறைத்து எண்ண வேண்டாம். அவரவர் செய்திட்ட வினைகள் காரணமாகவே அரங்கனை அவர்தம் ஆற்றலை, அவர் தன்மையை பார்க்கவோ, கேட்கவோ, சிந்திக்கவோ, அறியவோ, எண்ணவோ, உணரவோ முடியவில்லை. இது அவரவர் செய்திட்ட வினையினால் வந்திட்ட குற்றமே அன்றி அரங்கர்பால் தவறில்லை. ஆற்றல்மிகு அருள்ஞானி அரங்கரின் அருளொளியை, அற்புதத்தை கருணையை உணருகின்ற வாய்ப்பு அன்பர்தம் பாவத்தால் காணமுடியவில்லையே தவிர அரங்கரின் ஆற்றலில் உள்ள குறையன்று.



ஆதலின் அரங்க தரிசனம் பெறுதல் அவசியமாகும். அரங்க தரிசனம் சாபவிமோசனம் அன்றி அரங்கரின் சக்தி மீதோ அரங்கரின் செயல் மீதோ அரங்கரின் தோற்றம் மீதோ சந்தேகம் கொண்டு அரங்கதரிசனம் தனை அடையாது, அரங்கர் தொண்டுகள் தமை செய்திடாமல், “அவரவரும் இக்கலியுகத்திலே நெறிக்குட்பட்டு தொண்டு செய்து கடைத்தேறுதற்கு கிடைத்திட்ட ஒரே வாய்ப்பான குடில் தொண்டை மனமுவந்து செய்திடாமல் ஏமாந்து போய் வீணாய் போகாதீர்கள்”. உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை தொண்டுகள் செய்திட அரங்கன் மகாமகா கருணை கொண்டு அருளிய வாய்ப்பை உங்கள் கடைத்தேற்றத்திற்காக உண்டான வாய்ப்பை கண்டிப்பாக நழுவவிடாதீர்கள், நழுவவிட்டால் பின்னர் கிடைக்காது.


உலகப்பெருமாற்றம் விரைந்து அருகில் வருகிறது, வாய்ப்பை நழுவ விடாதீர்கள். கவனமுடன் விழிப்பாக இருங்கள், ஏமாந்து விடாதீர்கள். அவரவர்க்கு கிடைத்திட “ஜென்மசாப விமோசன தொண்டாற்றல்” வாய்ப்பை நழுவவிடாது யாவரும் பெற்று பயனுற வேண்டும் என்பதினாலே உங்கள் மீது கருணை கொண்டு சொல்கின்றேன் குருராஜன் யானும் சொன்னேன்.



தயவே வடிவான ஞானஜோதி அரங்கமகா தேசிகரே இவ்வுலகை கலிகால இடர்களிலிருந்து காத்து மீட்டு இரட்சிக்க வந்திட்ட நல்ஞானி ஆவார். அவர்தம் தொடர்பினின்று எந்த சூழ்நிலையிலும் விலகிடாதீர். ஞானிகள் பெருமை உரைத்து ஞானிகள் திருவடியைப் பற்றிட ஏதுவாய் நடக்கின்ற ஞானிகள் கலந்து அருளாசிகள் செய்கின்ற ஞானயோகி அரங்கனால் நடத்தப்படுகின்றதுமான  ஓங்காரக்குடில்தனிலே நடக்கின்ற ஞானிகள் பூசைகளிலே தவறாது கலந்து கொள்பவர்களுக்கே ஞானியர்களின் சூட்சும அருள் கிடைக்கப்பெற்று ஞானசித்தி எட்டும் என உறுதியாக கூறுகிறேன் என்கிறார் மகான் குருராஜர்

Saturday, 19 November 2016

முருக தரிசனம் பாவ விமோசனம்!

முருகா என்றால்,



வேதாகமங்களெல்லாம் ஓங்கி உயர்ந்து போற்றுகின்ற வேதநாயகன் பரப்பிரம்ம சொரூபியான அருட்பெருஞ்சோதி ஆண்டவர் முருகப்பெருமானே என்பதை உணரலாம். வேதங்களும், ஆகமங்களும், இதிகாசமும், புராணமும், ஞானநூல்களும், உபநிஷத்துக்களும், சாத்திரங்களும், தோத்திரங்களும், பிரபந்தங்களும் இன்னும் பலபலவாய் தோன்றிய வேதாகம நூல்கள் அனைத்தும் அந்த மறைபொருளாய் கால பரியந்தம் தனிலே வெளிப்படுத்தாது மறைக்கப்பட்ட ஆதி ஞானத்தலைவன் அந்தந்த காலத்தின் சூழ்நிலைக்கேற்ப வெவ்வேறு நாமங்களினாலே சொல்லி அழைக்கப்பட்ட நாமங்களின் நாயகன் முருகனே என்றும் அவனே ஞானமளிப்போன் அவனே அனைத்து நாமத்திற்கும் அழைத்த அக்கணமே வந்தருள் செய்து அன்பர் குறை தீர்த்திட்டவனும் எங்கெங்கிருந்து ஏதேது வேண்டினும் அங்கங்கிருந்து அருளுகின்ற அருட்பெருஞ்ஜோதி ஆண்டவராயும் திகழ்ந்தனன் ஆதிமூல நாயகனாம் வேற்படை வேலவனாம் முருகப்பெருமானே என்றும் அறியலாம்.



ஆதலின் மனித மல அறிவின் துணை கொண்டு ஞானிகள் இயற்றிய ஞானநூல்களின் சாரங்களை நமது அறிவினால் உணர முடியாது என்றும், உணர்ந்து அந்த நூல்களில் அந்தந்த ஞானிகள் பின்வரும் திருக்கூட்ட மரபினர் அவர் சார்ந்த துறையின் தன்மையை தெரிந்து கொள்ளவே அவரவர் அனுபவத்தை ஞானானுபவத்தை எழுதி வைத்தனர் என்றும், அந்த அனுபவங்களை உணர்வால்தான் உணரமுடியுமே அன்றி வார்த்தைகளால் உணர முடியாது என்றும் அவர்கள் கண்டு இரசித்த பேரானந்த அனுபவத்தை ஞானநிலை கொண்டே நாமும் அனுபவிக்க முடியும் என்றும் உணர்ந்து ஞானமடைய ஞானிகள் திருவடியே துணையென்றும் ஞானிகள் திருவடி பற்றினாலன்றி ஞானபண்டிதனை அடைதல் இயலாது என்பதையும் உணரப்பெறுவார்கள்.



முருகா! முருகா!! முருகா!!! என்றே செபித்திட செபித்திட முருகன் அருள் கூடி அனைத்து தெய்வங்களின் பெயரினாலும் அழைத்திட்டாலும் அங்கே முன்னின்று அவரவர் விரும்பிய வடிவினிலே அருளுபவன் முருகன் தான் என்றும் அவரவர் செய்திட்ட பாவபுண்ணியத்திற்கு ஏற்பவே அவரவர் வழிபாடு இருக்கும் என்றும் அவரவரும் வினைக்கேற்ப அவர்தம் உள்ளத்து தோன்றும் சிந்தனைகள் மாறி சிலர் சிறுதெய்வ வழிபாட்டிலும், சிலர் பலியிடும் தெய்வங்களையும், சிலர் மும்மூர்த்திகளையும், சிலர் சக்தி வழிபாட்டிலும், சிலர் காளி மாரியம்மன் போன்ற தேவதைகளையும் சிலர் பல மதம் சார்ந்தும் வணங்கிடுவர் என்றும் முற்றுப்பெற்ற ஞானிகளை வணங்கி அருள்பலம் பெற்றவர் தமக்கு அருள்சோதி வடிவினனாக தோன்றி அருள்கின்றவன் அறுபடை வீடு கொண்ட ஆறுமுகனாக தோன்றி அருளி காக்கின்ற அந்த முருகனே அவரவர் வினைக்கேற்ப பன்றியாகவும், நாயாகவும், எருமையாகவும், காளியாகவும் இன்னும் பலபல வடிவினில் சிங்கமாகவும், புலியாகவும், அவரவர் பக்திக்கும் பாவவினைக்கேற்பவும் காட்சி தருகிறான்.



ஆயினும் அவனது பக்தி உண்மையாய் இருப்பின் அங்கிருந்தும் பெருந்தாயன்பினால் அவன் விரும்பிய வண்ணமே அருளுகின்றனர் முருகன்.



அற்புதமாய் ஆனந்த தரிசனம் பெற்று உயர்ஞானம்தனை பரிசாக பெற்று உயர்வடையக் கூடிய வகையிலே அழகுடை அதியற்புத சோதி வடிவினனாக தோன்றும் ஆறுமுகனை ஞானிகள் துணையிருந்தாலன்றி புண்ணிய பலம் இருந்தாலன்றி, குருவழிகாட்டல் இருந்தாலன்றி, ஞானமார்க்கம் வருகையுற்றால் அன்றி, அன்னதானம் செய்து பிறஉயிர் துன்பம் நீக்கினாலன்றி, சுத்த சைவம் கடைப்பிடித்தாலன்றி பெற இயலாது என்பது சத்தியம் என்பதையும் உணரலாம்.



சோதி வடிவுடை முருக தரிசனம் பாவவிமோசனம்! குறையுடைய சிறு தெய்வ தரிசனம் பாவபெருக்கம்! என்பதையும் முருகன் அருளால் உணரப்பெறுவார்கள்.



ஆக பன்முகம் காட்டும் முருகனை புண்ணிய பலத்தினால், அருள்பலத்தால் முற்றுப்பெற்ற ஞானிகள் உதவியுடன் முருகனை முருகனாக பார்க்க முடியாமல் போனது அவரவர் செய்திட்ட பாவமே என்றும் முருகனை பலவித கோர வடிவினனாக பார்த்து அவனது உண்மை சொரூபம் தனை அறிய ஒட்டாது தடுத்தது நாம் செய்த பாவமே என்றும் உணர்ந்து உண்மை ஞானசொரூப ஞானபண்டித முருகனை தரிசித்திட அயராது நாத்தழும்பேற முருகநாமத்தை சொல்லி சொல்லி பாவம் கழிந்து முருகதரிசனம் பெற வேண்டும் என்ற முயற்சியும் நம்முள் தோன்றும்.


தோன்றிய அம்முயற்சி முருகனருளால் முருகதரிசனம் கிடைத்திட துணை வரும். முருகா! முருகா!! என்று விடாது சொல்லி சொல்லி முருகனை நெஞ்சார நினையுங்கள்.


முருகனை முருகனாக பார்த்து மகிழ்ந்து ஞானம்தனை அவனிடத்து வரமாய் பெறுங்கள்.


மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது!

முருகா என்றால்,



மும்மலக்குற்றத்திற்கு காரணமானதை அறிந்து மும்மலக் குற்றத்தை முருகன் அருளால் நீக்கி அறியாமையினின்று விடுபட்டு தெளிந்த அறிவை பெற்று நிலையற்ற தொடர்பிறவியை வென்று நிலையான மரணமில்லாப் பெருவாழ்வை பெறலாம் என்று உணர்வான்.


நாம் காணும் அனைத்தும் நிலையற்றவைதான். இந்த நிலையற்ற பொருளெல்லாம் ஒரு கால பரியந்தத்தில் அதனதன் தன்மைக்கேற்ப அழியத்தான் போகிறது என்ற உண்மையை உணர்ந்திடுவான் முருகனை போற்றும் முருகபக்தன்.


ஆயினும் நிலையற்ற எல்லா பொருள்களும் கண்டிப்பாக நிலையான ஒன்றிலிருந்துதான், தோன்றியிருக்க வேண்டும் என்றும் நிலையான ஒன்றிலிருந்து தோன்றிய அவையெல்லாம் அதனதன் தன்மைக்கேற்ப செயல், வினை வடிவமாகி பல்வேறு சூழ்நிலைக்கு ஆட்பட்டு அதனதன் சூழ்நிலைக்கேற்ப காலத்தின் மாற்றத்தினால் படிப்படியாக தோன்றியது போலவே தேய்ந்து மறைந்தும் பின் தோன்றுகின்றன என்பதையும்  அறிகின்றான்.



முருகா! முருகா! முருகா! என்றே சிந்தையெல்லாம் முருகனின் திருநாமம்தனை ஏற்றி தொழுது தொழுது வழிபட வழிபட தோற்ற இரகசியமும் அவனுள்ளே முருகனே தோன்றி உணர்த்திட அறியப்பெறுவான்.


எது என்றும் அழிவில்லாத பொருளாய் இருக்கின்றதோ அதுவே நிலையானது என்றும், அதுவே பரம்பொருள் என்றும் அறிகின்றான். நிலையான அந்த பொருள் சிற்றணுவாகிறது, சிற்றணுவாகிய அதுவே ஆன்மா என்றே பெயர் பெற்று பரம்பொருளாய் ஆதி வஸ்துவினின்று பிரிந்திட அது தனக்கென்று ஒரு அணுக்கூட்டத்தை தனது கவர்ச்சியினால் தோற்றுவிக்கிறது. நிலையான அந்த ஆன்மா நிலையற்ற அணுக்களால் ஆன ஒரு கூட்டினை தனது ஈர்ப்பினால் கட்டுகிறது. அதற்கு உண்டான அனைத்து கட்டளைகளும் அந்த ஆன்மாவின் உள்ளேயே புதைந்துள்ளது என்பது இதுவரை யாரும் அறியமுடியாத அறிவிற்கும் எட்டாததொரு மிக பிரம்மாண்டமான சூட்சுமமாகும்.


அப்படி தோன்றிய ஆன்மாவானது மீண்டும் மீண்டும் தோன்றுகின்ற கூட்டினை ஸ்திரப்படுத்தி தம்மோடு அந்த கூட்டினை நிரந்தரமாக தக்க வைத்துக் கொள்ள முடியாமல் அந்தந்த தேர்ந்தெடுத்த உருவாக்கிய கூட்டின் தன்மைக்கேற்ப கால வித்தியாசங்களில் ஆன்மாவிற்கும் கூட்டிற்கும் உள்ள தொடர்பு அறுபட்டு போவதால் கூட்டைவிட்டு ஆன்மா பிரிகிறது. ஆன்மா பிரிந்த உடனே அதுவரை ஆன்மாவால் ஈர்த்து வைக்கப்பட்ட அந்த கூடு ஈர்ப்பு மையம் விலகியதால் நெறிப்படுத்தும் கட்டளை கேந்திரம் விலகியதால் ஒன்றுடன் ஒன்று இணைய இயலாத அணுக்களெல்லாம் அவைஅவை பிரிந்து பிரிந்து எங்கிருந்து கூடியதோ அங்கேயே பிரிந்து செல்கின்றன.


இப்படி ஆன்மா பரமாணுவினின்று தோன்றி தனக்கென இதுவரை ஒரு கூடு கிடைக்காமல் அலைந்து அலைந்து பல்வேறு கூடுகளிலே கட்டி தஞ்சம் புகுகிறது. ஆனால் எங்கும் நிரந்திர கூடு கிடைக்கவில்லை என்பதையும் ஒரேஒரு அணுத்திரளில் மட்டுமே ஒரே ஒரு அணுக் கூட்டமைப்பில் மட்டுமே ஆன்மாவும் அந்த அணுக்கூட்டமைப்பின் அணுக்களும் ஒன்று கூடுவதற்கான வாய்ப்பை உள்ளதை உணர்கிறது. அந்த கூட்டமைப்பே மனித தேகம் என்ற பெயர் பெற்றது.


இப்படி இயக்கமற்ற ஒன்றிலிருந்து தோன்றிய ஆன்மாதான், பல்லாயிரங்கோடி ஆண்டுகளாக எடுத்த பலப்பல தேகத்தின் செயல்பாட்டினால் அது அத்தேகத்தின் வாயிலாய் தோன்றி செயல் பதிவுகளையும் (வினைப்பதிவு) தன்னுடனே எடுத்து செல்வதால் அடுத்த அணுக்கூட்டமான தேகத்தை அமைத்திட சார்ந்திடும்போது அந்த ஆன்மா பெற்ற வினைப்பதிவும் தேக அணுக்களை சார்ந்து தேகத்தின் அணுக்களிலும் தன்வினைப்பதிவை
பதிப்பதால் எக்காலத்தும் அணுக்கூட்டமும் ஆன்மாவும் ஒன்றிணைய வாய்ப்பே இல்லாமல் போகிறது.


ஆன்மாவின் செயல்களால் பிற ஆன்மாக்கள் பட்ட துன்பங்களினால் பிற ஆன்மாக்களிலிருந்து வெளிப்பட்ட பதிவுகளெல்லாம் இந்த ஆன்மாவை தாக்குவதால் பதிவுகளில் குற்றம் ஏற்பட்டு ஆன்மாவை மாசுள்ளதாக்கி தொடர்ந்து தொடர்ந்து வருவதினாலே ஆன்மா மும்மலக்குற்றம் எனும் சிறையினுள் அகப்பட்டு மீள முடியாமல் தவிக்கிறது. அதுவே ஒரு தேகத்தினோடு ஆன்மா இரண்டற கலக்க முடியாமல் அறியாமையில் மூழ்கி, கலக்க வழி தெரியாது தடுமாறுகின்றது.


இப்படி தடுமாறுகின்ற ஆன்மாக்கள் முற்றுப்பெறுவதற்கான இரண்டற கலப்பதற்கான ஏதுவான மனிததேகத்தினுள் பிரவேசித்து அந்த அணுதிரள்களிலே அணுவுக்கு அணுவாய் கலந்துள்ள மும்மலக் கசடை நீக்கிட ஒரு உபாயம்தனை அற்புதமான வேதியியல்தனை அதிசூட்சா சூட்சுமம் மிக்கதொரு வழிமுறையை கண்டு பிடித்து சேராத தேகத்தை ஆன்மாவுடன் சேர்த்து வெற்றி கண்டான் ஆதித்தலைவன் முருகப்பெருமான் என்பதையும் முழுதும் தன் அறிவினால் உணர்கிறான் முருகனின் ஆசி பெற்ற முருகபக்தன்.



பிறஉயிர்களுக்கு செய்திட்ட தீயசெயல்களே வினைப்பதிவுகளாக மாறி, நிலையான ஆன்மாவில் பதிந்திட அந்த ஆன்மா மாசுபடுகிறது. அதனால் மாசு மிகுந்த தேகமே அமைகிறது. ஆதலின் மாசுபட்ட ஆன்மாவை சுத்தி செய்தால் தேகமும் சுத்தியாகும் என்பதை உணர்த்திடுவான் ஆதிதலைவன் முருகப்பெருமான்.


ஆதலின் பிற உயிர்களுக்கு செய்திட்ட துன்பங்கள் பாவினைகளாக பதிந்திட, பிறஉயிர்களுக்கு செய்கின்ற உபகாரம் தூயவினைகளாக நற்பதிவுகளாக பதியும் நற்பதிவுகள் எல்லாம் ஒன்று கூடிட ஜீவதயவினால் ஆனதொரு சாவி, அந்த ஆன்மாவிற்குள் கிடைத்திடும் ஆன்மகுற்றம் நீங்க நீங்க அந்த ஜீவர்கள் வாழ்த்துகின்ற வாழ்த்து எனும் இயற்கை சார்ந்த அடிப்படை நல்வினை பதிவுகளெல்லாம் நல்ல செயல்செய்யும் ஆன்மாவினை சாரச்சார ஆன்ம ஒளி பெற்று அதன் விளைவாய் அது பெற்ற தேகத்தினிலே அணுக்களை சேர ஒட்டாது தடுக்கின்ற மும்மலக்குற்றமெனும் கசடை நீக்கவல்ல ஒரு சாவியை, அதாவது அடிப்படை பதிவுகளை வெளிக் கொணர்கிறது.


ஒன்று கூடாத அணுத்திரளை ஆன்மாவுடன் ஒன்று கூட்டிட ஏற்கனவே ஒன்று கூடிட்ட ஆன்மா ஒன்றினது வழி நடத்தல் அவசியமாகிறது. அதன் மூலப்பிரதி தேவைப்படுகிறது. அதுவே ஞானிகளின் ஆன்மாவாகும். அதுவே முற்றுப்பெற்றவர் தம் ஆன்மாவாகும். அந்த முற்றுப்பெற்ற ஞானிகளின் வழி நடத்துதலினாலே இந்த ஆன்மா சேராத அணுக் கூட்டத்தினின்று எப்படி கசடை நீக்குவது என்று கற்றுத்தெளிந்து படிப்படியாக படிப்படியாக பல்லாயிரமாண்டு சுமார் 27,000 வருடங்களாக பாடுபட்டு பாடுபட்டு மீள்வினைக்கு ஆளாகாமல் ஞானிகள் துணையுடன் வந்து வந்து தேக அணுக்கூட்டத்தில் உள்ள கசடை நீக்கி நீக்கி தூய்மையான அணுக்களால் கூடிய சுத்த தேகம்தனை இறுதியில் பெறுகிறது.


பின்னரே ஞானத்தலைவன் ஆறுமுகனார் ஒளி பொருந்திய அந்த பேரான்மா முன்னிலையிலே ஞானிகள் ஆன்மாக்களெல்லாம் ஒன்றுகூடி நிற்க, இந்த தேர்ந்தெடுக்கப்பட்ட ஆன்மாவினுள் பரமானந்த நிலைநிற்கும் ஆறுமுகனார் ஆன்மாவின் உட்பிரவேசத்தினால் ஆன்ம சுத்தி பெற்று அந்த ஆன்மா பெற்ற தேகக்கசடை முருகன் நீக்குவான்.


ஆறுமுகனார் தேகக்கசடை ஜீவகாருண்யமாகிய ஜீவதயவு எனும் பிற உயிர்கள் நமக்களிக்கின்ற மகிழ்வின் கூறுகளாய் ஆன நல்வினை பதிவுகளைக் கொண்டே இந்த கசடான தேகத்தை தூய்மைப்படுத்துவதினால் முதலில் களங்கப்பட்ட ஆன்மாவை சதா ஜீவதயவின் பெருக்கத்தை அளவிறந்து பெறுதற்காக ஏராளமான புண்ணியங்களை மிகுந்து செய்திட தூண்டி பிற உயிர்களின் ஆசிகளை பெறச்செய்து பெறச்செய்து ஞானவீட்டிற்கான திறவுகோலை பெற்றுத் தருவான் ஞானபண்டிதன்.


முருகா! முருகா! முருகா! முருகா! முருகா! முருகா! என்றே அயராது நாத்தழும்பேற நாமம்தனை சொல்லி சொல்லி ஜீவதயவின் சிகரம், ஆதிமூல தலைவன் முருகன் ஆசி பெறப்பெற ஜீவதயவுடை முருகன் அவன் தம்முள்ளே ஜீவதயவாகிய ஞானவீட்டின் திறவுகோல் கொண்டு ஞானமடையச் செய்து ஆன்மா சுத்தி பெறச் செய்து ஒரு சிறப்பான தனித்தன்மையுடைய வேதியியலால் இணையாத அணுக்கூட்டத்தை குற்றம் நீக்கி இணைத்திட துணைபுரிந்து இணைத்து ஆன்மாவை விட்டு மீண்டும் பிரியாத வகையிலே ஒன்று கூட்டி தருவான் ஞானபண்டிதன்.


ஜீவதயவின் அருள் கூடவே ஞானபண்டிதன் அருளைப் பெற்று அந்த ஆன்மாவும் ஆன்மாவிற்கு உண்டான அணுத்திரள் கூட்டமைப்பாம் தேகமும் ஒன்றென கலந்து ஆன்மா எந்த ஆதிவஸ்துவினின்று தோன்றியதோ அதைப் போன்றே பஞ்சபூதத்தினால் பெறப்பட்ட அணுத்திரள் கூட்டமான தூலதேகமும் அகதேகமாக அணுதேகமாக ஒளிதேகமாக மாறி ஆன்மாவைப் போன்றே அதுவும் ஆகினபடியால் அது மீண்டும் எக்காலத்தும் ஆன்மாவை விட்டு பிரியாது, தோன்றிய பஞ்சபூதத்தின் தன்மைக்கு அப்பாற்பட்டும் பஞ்சபூதத்துவினின்று விடுபட்டு ஆதி வஸ்துவாய் மாறுகின்றபடியாலே ஆன்மா தேகம் விட்டு பிரிதலான மரணம் என்ற ஒன்று அந்த ஆன்மாவிற்கோ அது பெற்ற உடலிற்கோ ஏற்படாமல் அந்த ஆன்மா என்றுமே அழியாத ஆன்மாவை விட்டு பிரியாத மரணமில்லா தேகத்தைப் பெற்று மரணமில்லாப் பெருவாழ்வை ஜீவதயவினால் மட்டுமே இறுதியில் அடைகிறது.


இப்படி ஆன்மா மரணமில்லாப் பெருவாழ்வை பெறுவதற்கு அதற்கு சாவியாக இருப்பதும் தேகக்கசடை நீக்க பயன்படுவதும் ஜீவதயவு எனும் ஜீவர்கள்பால் செலுத்துகின்ற பரிவே காரணமாய் இருப்பதினாலே அந்த ஜீவதயவே இறுதியில் மரணமில்லாப் பெருவாழ்வாக தூயதேகமாக ஆதிமூல வஸ்துவிற்கு அடிப்படையாக இருப்பதையும் அறிவான் முருகபக்தன்.



அறிய அறிய, தெளிய தெளிய முருகன்மீது பக்தி கூடி கூடி அந்த ஜீவதயவு என்பதே முருகனின் அருளாய் வெளிப்படுகிறது என்பதையும் உணர்வான் ஜீவதயவின் வடிவமே முருகன் என்றும் முருகனின் வடிவமே ஜீவதயவு என்றும் ஜீவதயவின் பேராற்றலே அருட்பெருஞ்சோதியாய் தோன்றுகிறது என்பதையும் உணர்ந்து ஜீவதயவைப் பெருக்கி கடைத்தேறுவான் முருகபக்தன்.


வேலனை போற்றுவோம்
காலனை வெல்லுவோம்.

-சுபம்-
மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

     

Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html






Thursday, 10 November 2016

நாம் செய்த பாவங்கள்தான் நமக்கு துன்பங்களாக மாறி நம்மை தாக்குகின்றது!

முருகனை வணங்கிட :


காமத்தினால் பல ஜென்மங்களிலே நாம் பலபெண்களை கெடுத்த பாவங்களையும், கற்பழித்த பாவங்களையும், தூயநெறி நடக்கும் கற்புடைய பெண்களை கெடுத்த பாவங்களையும், கோபத்தால் பல உயிர்களுக்கு நாம் செய்த பாவங்களையும், பொறாமையால் பலருடைய வாழ்வை கெடுத்ததால் உண்டான பாவங்களையும், பேராசையால் பிறர் சொத்தை அபகரித்ததினால் உண்டான பாவங்களையும், மற்றவர்மீது புறஞ்சொல்லி பிறர் வாழ்க்கையை கெடுத்ததினால் உண்டான பாவங்களையும், செய்நன்றி மறந்ததால் உண்டான பாவங்களையும், உதவி செய்தோருக்கே இடையூறு செய்த கொடும் பாவத்தினால் உண்டான பாவங்களையும் உயிர்க்கொலை செய்ததினால் உண்டான பாவங்களையும் உணரச் செய்து அந்த பாவவினைகள்தான் இச்சென்மத்திலே நம்மை நோயாக, வறுமையாக, பகையாக, பல்வேறு வகையான பிரச்சனையாக இப்போது நம் வாழ்விலே குறுக்கிடுகிறது என்பதையும் உணரச்செய்தும், இப்படி நாம் செய்த பாவங்கள்தான் நமக்கு துன்பங்களாக மாறி நம்மை தாக்குகின்றது என்பதை முருகனை வணங்க உணர்ந்து இவையாவும் நாம் செய்ததினால் வந்ததுதான் என்பதையும் இப்பாவ வினைகளிலிருந்து நாம் மீண்டு வரவேண்டுமே அன்றி பாவங்களின் போக்கிலே போகாது அவற்றை ஏற்று அனுபவிக்க வேண்டுமே அன்றி பாவத்தினால் உந்தப்பட்டு மேலும் மேலும் பாவியாகாது நம்மை காத்துக் கொள்ள முருகன் திருவடியே துணை என்பதையும் உணர்ந்து முருகனது திருவடியை தீவிரமாக பற்றி பூஜிப்பான்.


முருகனது திருவடியை பூஜிக்க பூஜிக்க பூஜிக்க பாவவினைகளின் தன்மையை ஆழமாக உணர்வான். நாம் செய்த பாவங்கள் நம்மை மேலும் மேலும் பாவங்களை செய்யத் தூண்டி நம்மை நரகத்தில் தள்ளி எடுத்த இந்த அற்புதமான மானுட பிறப்பினின்று இழிநிலை பிறப்புகளை உண்டாக்கிவிடும் என்றும், பாவம் மிகுதியாக மிகுதியாக நாம் நாயாக, பன்றியாக, சொறிபிடித்த நாயாக, நொண்டி பன்றியாக, கழுதையாக, பாம்பாக மாறிமாறி நமது பாவவினை நம்மை பிறக்கச் செய்து இறுதியில் மலத்தில் நெளியும் புழுவாகவும் பிறக்கச் செய்துவிடும் என்பதையும் உணர்ந்து பாவத்தினால் வருகின்ற துன்பங்களை ஏற்றுக் கொள்வான் முருகபக்தன்.



முருகனை வணங்கா விட்டால் இந்த பாவங்கள் நம்மை சூழ சூழ பாவபுண்ணியத்தின் மீது நம்பிக்கை இல்லாதுபோய் பலவிதமான இழிபிறவிக்கு ஆளாவோம் என்பதை தெளிவாக உணர்ந்து முருகனை மேலும் மேலும் வணங்கிட, செய்த பாவவினைகள் செய்தவைதான், செய்த பாவங்களுக்கு மன்னிப்பு என்பது இறைவனிடத்தும் இல்லை, இயற்கையிடத்தும் இல்லை. நாம் செய்தவை நமக்கு அப்படியே திரும்பித்தான் வரும் என்பதையும் முருகன் அருளால் பாவவினைகளின் வேகத்தை குறைத்து மெதுமெதுவாக முருகன் அருள் துணையால் அனுபவித்து நீக்கி கொண்டும், முருகனருளால் மேலும் பாவங்களை செய்யாதிருக்க முருகன் துணையுடன் தானதருமங்களைச் செய்தும் தனது ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்ள வேண்டுமென்றும் உணர்வான்.



நாம் செய்த பாவங்கள் நம்மை நோயாக தாக்கும்போது நாம் வணங்கிய முருகன் நமக்கு மருந்துவனாக வருவதையும், நோய் நீங்க மருந்தாகவும் அவனே வருவதையும், நோய் நீக்க தேவையான பொருளாக அவனே வருவதையும் தெள்ளத்தெளிவாக உணர்வதோடு பாவத்தின் தீவிரம் முருகன் அருளால் கடுகி விரைந்து குறைவதையும் காண்பான் முருகபக்தன்.


பாவத்தை உணரச்செய்வதும் முருகனின் கருணையே!
பாவத்தை அனுபவிக்க செய்வதும் முருகனின் கருணையே!
பாவத்தை அனுபவிக்க துணையாய் இருந்து காப்பதும் முருகனின் கருணையே!


ஆதலில் அருள்நிறை கருணையே வடிவான காத்தருள் புரிகின்ற எல்லாம்வல்ல இறைவனாம் முருகப்பெருமானின் திருவடிகளை மனம் உருகி பயபக்தியுடன், “ஓம் முருகப்பெருமான் திருவடிகள் போற்றி! போற்றி!!” என்றோ “ஓம் சரவண ஜோதியே நமோ நம!” என்றோ “ஓம் சரவண பவ” என்றோ முருகனது திருநாமங்களை தொடர்ந்து சொல்லி சொல்லி மந்திர உரு செய்ய செய்ய முருகப்பெருமான் நம்மை சார்ந்து நமது பாவங்களான உயிர்க்கொலை செய்து புலால் உண்கின்ற பழக்கத்திலிருந்து முதலில் விடுவிக்கின்றான்.


முன்செய்த பாவங்களிலிருந்து மீள, நம்மை புண்ணியவானாக்கும் பொருட்டு வணங்கினோர்க்கு தேவையான பொருளாதாரத்தை கொடுத்து ஏழை எளியோர்க்கு அன்னதானங்கள் செய்ய தூண்டி அன்னதானங்களை செய்ய செய்து புண்ணியவானாக மாற்றி மேல்நிலையை அடையச் செய்கின்றான். ஜீவதயவினை உணரச் செய்து நம்மை ஜீவதயவுடையோராக ஆக்கி தூயநெறியிலே நடந்திடச் செய்து நம்மை பெரும் புண்ணியவான்களாக ஆக்கி இறுதியில் மரணமிலாப் பெருவாழ்வு என்கிற பெறுதற்கரிய பெரும் பேற்றினையும் தந்தருளி நம்மையும் அவனைப் போலவே ஆக்கிக் கொள்கின்றான் முருகப்பெருமான் எனும் பெருங்கருணை தாய்.
...................

மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

Saturday, 29 October 2016

பற்றுகள் அனைத்தும் துறந்த மகான் பட்டினத்தார் அருளிய ஆசி நூல்

ஞானி என்பதற்கு அடையாளம் ஓங்காரக்குடில் ஆசானே!

உலகில் பலபேர் ஆன்மீக வாழ்வில் முன்னேற வேண்டுமென பல வழிகளில் முயற்சி செய்து பலவிதமான நபர்களை சந்தித்து அவர்களால் தமக்கு வழிகாட்ட முடியுமா? என அவர்களை நாடி இறுதிவரை தெளிவு பெறாமல் அவரவர்களுக்கு தெரிந்தவரையில் ஆன்மீகம் என்ற பெயரில் ஏதேதோ, எதைஎதையோ கற்றுக் கொண்டு உண்மை ஆன்மீகம் பற்றியும், உண்மை வழிகாட்டியான குருநாதரைப் பற்றியும் தெரியாமல் தடுமாறி, தாங்கள் ஆன்மீகத்துறையில் முன்னேறி வருவதாக தாங்களாகவே கற்பனை செய்து வருகின்றனர். இவர்கள் மேல் குற்றமில்லை.


இவர்களில் தர்மசிந்தனையுடன் தான தர்மங்கள் செய்பவர்களும், உண்மையான பக்தி விசுவாசத்துடனும், யாருக்கும் தீங்கு நினைக்காமல் இறைவனை மனமார பூஜித்தும் வருகிறவர்கள் இருக்கிறார்கள்.


ஆனால் அவர்களது ஆன்மீக வழிகாட்டியாக உள்ளவர்கள் சரியில்லாததால் இவர்கள் தடம்மாறி சென்று ஆன்மீகத்தில் முன்னேற முடியாமல் தவிக்கின்றனர். அப்படிப்பட்டவர்கள் உண்மை குருவை தேடிக் கண்டுபிடித்து அக்குரு உபதேசம் பெற்று அவர் கூறும் வழிகளைப் பின்பற்றினால் அவர்கள் இனிப்பிறவா நிலையையும் அடையலாம். இவர்கள் உண்மைகுரு யாரென்று தமக்குள் ஒரு கருத்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.


அது என்னவெனில் குருவானவர் காட்டில் ஆசிரமம் வைத்திருப்பார்கள், அங்குள்ளவர்கள் எல்லோரும் காவி உடை தரித்து முனிவர்களாக இருப்பார்கள், அங்கு பெண்களே இருக்க மாட்டார்கள், அவர்கள் உலகியல் வாழ்விலிருந்து விடுபட்டு யாரையும் சந்திக்காமல் இரகசியமாக வாழ்வார்கள், பொதுமக்களை சந்திக்க மாட்டார்கள். இரகசிய பூஜைகள், இரகசிய மந்திரங்கள் செய்வார்கள், ஜடாமுடி தரித்திருப்பார்கள், தாடி வைத்திருப்பார்கள், அவர்கள் தவம் செய்ய ஆரம்பித்தால் அவர்களைச் சுற்றி புற்று வளரும் அளவிற்கு தவம் செய்வார்கள், யாருடனும் பேச மாட்டார்கள், உடம்பெல்லாம் விபூதியோ திருமண்ணோ தரித்திருப்பார்கள், அவர்கள் உக்கிரமான பக்தி வசப்பட்டு ஆடுவார்கள் என்றெல்லாம் பற்பல கற்பனைகளை மனதில் பதிய வைத்துக் கொண்டு இந்த உலகிலும் காடுகளிலும் தேடி அலைந்து இன்றுவரை யாரும் உண்மை குருநாதரை கண்டுபிடித்ததாக தெரியவில்லை.


உண்மையில் ஞானிகள் அப்படி மனித சமுதாயத்தை விட்டு விலகி இருக்க மாட்டார்கள். மக்களோடு மக்களாகவே சமுதாயத்தில் தொழில் செய்து கொண்டே, இறைவனை பூஜித்து வெளியே அடையாளம் தெரியாமல் இயல்பான வாழ்க்கையில் தான் இருப்பார்கள், அவர்களிடம் வீண் ஆரவாரம் இருக்காது, பொய் பேசமாட்டார்கள், ஜடாமுடியும் தாடியும் இருக்காது, பொய்வேடம் போடமாட்டார்கள். அவர்களது செயல்பாடுகளினால்தான் அவர்களை அடையாளம் காண முடியுமே தவிர தோற்றத்தினால் அடையாளம் காண முடியாது.


மகான் அகத்திய முனிவர், திருமூலர் போன்றோர் ஜடாமுடி தரித்து உருத்திரம் அணிந்து, புலித்தோல் ஆசனத்தில் அமர்ந்திருப்பது போல் அடையாளம் காண்பிக்கப்பட்டு இருப்பது, அது தத்துவ விளக்கங்களேயாகும்.


மேலும் அவர்கள் நிலை உயர்ந்தவர்கள். அவர்களை அலட்சியமாக எண்ணக்கூடாது, இடையூறு செய்து விடாதீர்கள், கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்வதற்காகவே தவ வேடத்தில் இருப்பார்கள். ஒருவர் தவவேடம் போட்டதால் மட்டும் அந்நிலை அடைந்தவராக கொள்ளக்கூடாது. அப்படிப்பட்ட உண்மை குரு, இப்போதைய காலக்கட்டத்தில் வள்ளல் பெருமானுக்கு பிறகு துறையூர் ஓங்காரக்குடிலாசான்தான் என்பதை மக்கள் உணர வேண்டும்.


அவரைத் தேடிக் கண்டுபிடித்து அவர் திருவடி பணிந்து பணிந்து அவர் செய்யும் அறப்பணிகளிலும் தர்மகாரியங்களிலும் கலந்து கொண்டு தொண்டு செய்தால் குடிலாசான் ஆசியினாலும் மகான்களின் ஆசியினாலும் துயரண்டாத வாழ்வும், நற்செல்வமும், புகழும், கீர்த்தியும், நற்பண்புகளும் வாழ்வில் நினைத்ததை முடிக்கும் வல்லமையும், மனிதருள் மேன்மையான நிலையும் சிறந்த இடத்தையும் பெற்று மரணமில்லா பெருவாழ்வையும் இறுதியில் பெறலாம். இக்கலியுகத்தில் தற்போது ஞானி என்ற சொல்லிற்கு, ஞானி என்பதற்கு அடையாளம் ஓங்காரக்குடில் ஆசானே. அவரே முற்றுப்பெற்ற ஞானி, அவரை அடைந்து ஆசி பெற்றால் அனைத்தும் விளங்கும். ஞான சூட்சுமங்கள் படிப்படியாக தெளிவடையும், உண்மை புரியும் என மகான் பட்டினத்தார் கூறுகிறார்.