Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Friday, 14 June 2019

ஞானத்தை அடைய யோகப்பயிற்சி - மகான் பாம்பாட்டிச்சித்தர்


ஞானத்தை அடைய முயற்சிப்பவர்கள் ஒன்றை நன்கு தெரிந்து கொள்ள வேண்டும். ஞானத்தை அடைய யோகமார்க்கம் என்ற ஒன்று உண்டு. அப்படி செய்யப்படும் யோகமானது ஆசான் ஞானபண்டிதனாகிய ஆறுமுகப்பெருமானும், மகான் அகத்திய பெருமானும் நமது உடலோடு கலந்து நின்று உள்ளிருந்து உணர்த்த உணர்தலால் செய்யக்கூடிய பயிற்சியாகும்.
அத்தகு யோகப்பயிற்சி செய்யுங்காலத்து உடலின் தன்மைக்கும் யோகசக்திக்கும் ஏற்ப அவ்வப்போது கற்பங்களும் மூலிகைகளும் ஆசான் உணர்த்த அவற்றின் உதவியால் உடலைக் காத்துக் கொள்ள வேண்டும்.
தவத்திற்கென்று ஞானத்தலைவனும், குருமுனி அகத்திய பெருமானும், மற்றைய ஞானிகளும் அவ்வப்போது உடல் தகுதிக்கேற்பவும் உடல் உஷ்ணத்திற்கேற்பவும் தவஉணவினை சொல்லியும், அவற்றை உண்ணும் அளவுகள் குறித்தும் அறிவுறுத்தியும் உடனிருந்து யோகத்தை நடத்துவார்கள்.
இதன்றி பல்வேறு வகையான கனி வகைகள், பல்வேறு வகையான மூலிகைகள், பல்வேறு வகையான கற்பங்கள், மருந்துகள், சூரணங்கள் இப்படிப் பலபல விதங்களில் நொடிப்பொழுதும் யோகியை விட்டு நீங்காது ஒரு பெரிய ஞானியர் கூட்டமே அவ்யோகியை சுற்றி அரூபநிலையில் நின்று கண்காணித்துக் கொண்டே இருந்து அவ்வப்போது உள்ள சூழ்நிலைக்கேற்ப மாற்றி மாற்றி ஆலோசனைகளை சுவடிகள் மூலமாகவும், சகுணங்களாகவும், அசரீரியாகவும், பொருள்கள் மூலமாகவும் அறிவுறுத்திக் கொண்டே இருப்பார்கள்.
ஏன் தண்ணீர் அருந்துவது என்றால்கூட உடற்சூட்டின் அளவைப்பொறுத்து இவ்வளவுதான் குடிக்க வேண்டும். அதற்கு மேல் குடிக்கக் கூடாது என உத்தரவுகள் வரும். இப்படி முழுதும் ஞானிகள் திருவடிக்கு தன்னை முழுமையாக ஒப்படைத்து இமைப்பொழுதும் அவரது சிந்தை நீங்காமல் தவமாய் தவமிருந்து செய்வதே வாசி யோகமாகும்.
அப்படிச் செய்தால்தான் குண்டலினி சக்தி விழிப்படைந்து அவ்யோகிக்கு பலன் அளித்து இறுதியில் மரணமில்லா பெருவாழ்வைத் தரும். அதை விட்டுவிட்டு சிலர் குண்டலினியைப் பற்றி சற்றும் அறியாமல் ஏதோ விளையாட்டாக தவறான முறையில் யோகப்பயிற்சிகள் தருகிறார்கள். அதை நம்பி பலர் அப்பயிற்சிகளை மேற்கொண்டு நீடிய மலச்சிக்கல் ஏற்பட்டு, உடல் உஷ்ணம் ஏறி, முறையான யோகப்பயிற்சிகள் செய்யாமலும், உணவுக்கட்டுப்பாட்டை கடைப்பிடிக்காமலும் இருந்து இறுதியில் உடல் வீங்கி துன்பப்பட்டு இறந்தும் போய்விடுகிறார்கள். ஞானிகளுக்கு யோகப்பயிற்சி அவசியம்தான்.
அடையோகம் என்பது ஒரு வருட காலம் ஒரே அறையில் இருந்து வெளிமக்களைச் சந்திக்காமல், தன் எண்ணம், சிந்தை, ஆன்மா அனைத்தையும் உள்முகமாக திருப்பி ஒருநிலைப்படுத்தி ஒரேசிந்தையாக இறைவன் திருவடியையே சிந்தித்து ஆன்ம விசாரணையில் இருந்து கடுந்தவமியற்றுவதாகும்.
அவர்களுக்கு தேவையான உணவுகள் கூட அவர்களே அவர்களது கைகளால் தயாரித்துக் கொள்ள வேண்டுமே அன்றி பிறர் உதவியை நாடாதிருக்க வேண்டும்.
ஆனால் ஒரு சிலர் அடிநாக்கை அறுத்துக் கொண்டு நுனி நாக்கை உள்நாக்கில் அடக்குவார்கள். அப்படி அடக்கிய நாக்கு சில சமயம் வெளிவரும், சிலசமயம் உள்ளடங்கி திரும்பிவராமல் சுவாசக்குழாயை அடைத்து கடுமையான மூச்சுத்திணறலுக்கு ஆளாகி அல்லல்பட்டு துடிதுடித்து சாவார்கள்.
அது முதுபெரும் தலைவன் ஞானத்தலைவன் ஆசான் ஆறுமுகப்பெருமானின் தனிப்பெருங்கருணையினால் மட்டுமே சாத்தியம். அதற்கு பலகோடி ஜென்மங்கள் ஞானிகள் திருவடி பணிந்து பாடுபட்டிருக்க வேண்டும். ஏதோ பயிற்சியினால் மட்டும் அதை அடைய முடியாது.
ஆனால் யோகப்பயிற்சிகள் செய்வதால் மட்டும் ஒருவர் ஞானியாகிவிட முடியாது. அப்படி பயிற்சிகளால் ஞானிகளாகி விடலாம் என்றால் இவ்வுலகில் எண்ணற்ற கோடிக்கணக்கானோர் ஞானிகளாகி இருப்பார்கள். ஞானம் பெறுவதும், யோகம் பெறுவதும், வாசி வசப்படுவதும் அவரவர் விருப்பமல்ல.

இப்படி கடினமானதும், பலஜென்ம புண்ணியத்தாலும் வரக்கூடிய யோகப்பயிற்சியினை ஞானநூல்களை படித்தோ, பிறர் கூறியதன் பேரிலோ, தவறான வழிகாட்டுதல்களினாலோ அல்லது தானாகவோ முயற்சி செய்து யோகப்பயிற்சிகளை செய்பவர்களும், செய்து பாதிக்கப்பட்டவர்களும் , செய்ய நினைப்பவர்களும் வாசியோகம் முழுதும் அறிந்த, குண்டலினி சக்தியைப் பற்றி முழுதும் அறிந்த, உடல் தத்துவமும், ஆன்ம தத்துவமும் அறிந்த, யோக நிலைகளும், தத்துவ நிலைகளையும் அறிந்து அவற்றையெல்லாம் கடந்து முழுமை பெற்ற ஆறுமுகனின் அவதாரமான ஓங்காரக்குடிலாசான் அரங்கமகாதேசிகர் வாசம் செய்யும் ஓங்காரக்குடிலிற்கு வந்து அரங்கமகாதேசிகரின் ஆசி பெற்றால் தவறான யோகப்பயிற்சியினால் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து விடுபட்டு உண்மையான யோகத்தை அறியவும், ஞானவாழ்வில் தடைபட்டவர்கள் தடைகள் நீங்கி ஞானவாழ்வை தொடரவும் தவறான யோகத்தினால் பாதிக்கப்பட்ட சக்கரங்கள் மீண்டும் இயங்கவும் செய்யும்.
குருவருளும் திருவருளும் புண்ணியபலமும் உள்ளவர்கள்தான் யோகத்தைப் பற்றி சிந்திக்கலாமே தவிர குருவருளும், திருவருளும், புண்ணியபலமும் இல்லாதவர்கள் யோகத்தைப் பற்றி சிந்திக்கவே கூடாது. ஏனெனில் யோகமானது முழுதும் பூர்வஜென்ம புண்ணியபலத்தாலும், குருவருளாலும் நிகழக்கூடிய ஒன்றாகும். கல்வியினாலோ, பயிற்சியினாலோ செய்யக் கூடியது அல்ல.
ஞானத்திருவடி- மாசி 2013

ஞானஇரகசியம் - மக்கள் கடைத்தேற மார்க்கம் உரைக்கின்றார் மகான் ஆனாய நாயனார்


# சித்தமார்க்கம் (உண்மை ஆன்மீகம்) 


 MahanArumugaArangar


உலகில் மனிதராய்  பிறந்த  அவரவரும்  அவரவர்வினை  வென்று  பொல்லா மாயைசூழ் இப்பிறவிகளை   விட்டொழிந்து  கடைத்தேறிய  அவரவரும்  தோற்றிய தோற்ற மூலமாம் ஆதிசிவத்தோடு  அற்புதமாய் இரண்டற கலந்து  இன்புறவே  விரும்புகின்றனர்.


ஆயினும்  அவரவர் தேர்ந்தெடுக்கின்ற மார்க்கமும், வழிகளும், நெறிகளும்,  துணைகளும், வழிநடத்தல்களும் மெய்யானதாய் அமைந்திடாமல் அவரவர்  மனநிலைக்கும் அவரவரின் மதிநுட்பத்திற்கு ஏற்றார் போல தேர்ந்தெடுத்து  தம் அறிவின் கண் கூறியதை உண்மை அதுவே சிறந்தது என்றே தம் அறிவை  பேரறிவாய் எண்ணியே உண்மை உணராது பொய்யான வழிகளிலே,  நெறிகளிலே போலியான வேடதாரிகளின் பசப்பு வார்த்தைகளிலே மயங்கி  அவர்தம் புறத்தோற்ற பொலிவினால், இனிமையான வாளினும் கூரான  சொற்களை கண்டு மயங்கி அவர்தம்மை உண்மை குருநாதராக கடவுளின்  அவதாரமாகவே எண்ணி உண்மையறியாத மூடர்தம் வார்த்தைகளை  தேவவாக்காக எண்ணியே பின்பற்றி தானும் கெட்டு தன்னை  சார்ந்தவர்களையும் அத்தீய நெறி சாரச்செய்து தான் நரகத்திற்கு செல்வதோடு தன்னை சார்ந்தோரையும் நரகத்தில் தள்ளி பெரும் பாவிகளாக  ஆகியே எந்த நோக்கத்திற்காக வந்தோமோ அந்த நோக்கம் நிறைவேறாமல்  எதிர்விளைவுகளால்  அவர்தம் தீயவினைகளால் பிறவிச்சூழலில் மாட்டி மீளா  பிறவித்துயரில் ஆழப்புதைந்து அல்லலுறுகின்றனர்.


ஏனெனில்  அவர்களெல்லாம் உண்மை ஞானம் பற்றிய அடிப்படை ஞானம்கூட, அடிப்படை அறிவு இல்லாததினாலே இவ்விதமே நடந்து வீணில்  கெடுகின்றனர்ஆதித்தலைவன், ஞானத்தலைவன், ஞானத்தை  ஞானமெனும்  அதியற்புதமான ஒரு மகாசக்தியை, பிறவித்துயர்  ஒழித்து  மரணமில்லாப்பெருவாழ்வை அருளுகின்ற  வழித்துறையை நெறியை  ஆதிமுதலாய் தோற்றுவித்தவன் ஆறுமுகனாம்  முருகப்பெருமானார்  என்பதையே அறியாதோர் அவர்கள்


முருகப்பெருமானே இம்மனித வர்க்கத்தினர் தம்முள்ளே  இயற்கையன்னையின் அற்புதமான ஆசிகளைப் பெற்று  ஞானத்தின்  இரகசியம் தன்னை முதன்முதலிலே கண்டு பிடித்து எந்த  இயற்கை நம்மை தோற்றுவித்து காத்து இறுதியில் நம்மை வஞ்சித்து  நமது இறப்பிற்கும்  காரணமாகி நின்று மீண்டும் அது பிறவிக்கு  காரணமாகி வளர்த்து அழித்து  இவ்விதமே பல்லூழி காலமாக  உயிர்களை உடம்புகளை தோற்றி அழித்து  மீளாப் பிறவித் துயரினிலே  ஆழ்த்தி வருவதினை கண்டும் அத்தொடர் இயக்கத்தினிலே  மனித வர்க்கத்திற்கு மட்டுமே அந்த தொடர்  இயக்கத்தினின்று மீண்டு எந்த இயற்கை நம்மை தோற்றுவித்ததோ அந்த   இயற்கையின் அற்புத படைப்பின் இரகசியத்தினை அதனின்று  விடுபட்டு  வெல்லும் உபாயம்தனை மனிததேகத்தின்கண்  உள்ளதை கண்டு அந்த  வழியாக அதியற்புத சூட்சும  நாடிகளின் துணையாக மற்றெந்த உடலிலும் காணப்படாத  உடல்உயிர் சேர்க்கைக்கு காரணமாக உள்ள நாடிகளைக்   கண்டு இயற்கையின் துணை கொண்டு இயற்கையளித்த  காமதேகத்தைப்  பற்றி அறிந்து அந்த காமதேகத்தினால் விளைந்திட்ட  மும்மலக் குற்றமும் அதனால் விளைகின்ற வினைக்  குற்றங்களும் அவ்வினைகளால் ஏற்படுகின்ற  பிறவித்  தொடர்புகளையும் தெளிவுற அறிந்து வினைக்கு காரணமான மும்மலக்  கசடுகளை வாசியாகிய பரமான்வாவின் துணை  கொண்டு   வாசியோகம் எனும் அரும்பெரும் யோகநெறி நின்று  கசடான   காமதேகத்தினை உருக்கி உள்ளொளி பெருக்கி  ஒளிதேகமாய்  மாற்றி மரணமில்லாப்பெருவாழ்வை முதன்  முதலில் பெற்றிட்டார்.  


 இவற்றிற்கெல்லாம் ஆதார சக்தியாய் ஆறுமுகனார் அடைந்திட அடிப்படை  காரணமாக அமைந்தது இயற்கையின் கொடையே ஆகும். அந்த இயற்கை  அவர் தமக்கு கொடையாய் மரணமில்லாப்பெருவாழ்வை அளிக்க  காரணமாய் இருந்தது ஆறுமுகனாம் முருகப்பெருமானார் இவ்வுலக  உயிர்கள் பால் செய்த அளவிலாத அளவிலாத பெரும் கருணைகளே,  அன்புகளேயாம்.


ஆறுமுகப்பெருமானின் அத்தீவிரமான இரக்கமும் அன்புமே அவர்தம்மை ஒளிதேகம் பெறச் செய்தது. இவ்விதமே அவர் சுமார் 27,000 (இருபத்தேழாயிரம்  வருடங்கள்) பாடுபட்டன்றோ இவ்வற்புத நிலைதனை அடைந்திட்டார். அன்று  முதலாய் இன்று அரங்கர் வரை யாவராயினும் இத்துறையிலே நுழைந்து  கடைத்தேறிட குறைந்தது 27,000 ஆண்டுகளேனும் தவம் செய்திட்டாலன்றி  இவ்வற்புத வாய்ப்பை பெற இயலாது.



அவ்விதமே ஞானபண்டிதன் அறிந்திட்ட  இந்த அதியற்புத ஞான இரகசியத்தை தமக்கு தம் தவத்திற்கு முழுமுதலாய் முற்றிலும் உதவியாய் இருந்த தமது மூத்த சீடராம் அகத்தியம் பெருமானாருக்கு தமிழ் தோற்றுவித்து ஞானோபதேசம் செய்தார்.


அகத்தியரும் இம்மனித  சமுதாயத்தின் மீது அளவிலா கருணை கொண்டுமே அகத்தியர் குலம்தனை தோற்றுவித்து அன்றுமுதல் இவ்வற்புத ஞான இரகசியங்கள் குருசீட  பாரம்பரியமாக வாழையடி வாழையென தொன்று  தொட்டு உபதேச வழிதனிலே தொடர்ந்து வந்து பலகோடி சித்தரிஷி கணங்களை தோற்றுவித்துள்ளது.


இவ்விதமே வருகின்ற திருக்கூட்ட மரபினரை சார்ந்த ஒருவரால்தான் உண்மைஞானம்தனை உபதேசிக்க முடியும். அவரே அறம், பொருள், இன்பம்,  வீடுபேறு  ஆகிய நான்கு படித்தர நிலைகளை கற்றுணர்ந்தவராவார். அவரே  நம்மை  காத்து இரட்சித்து கடைத்தேற்ற வல்லவராவார். அவர்  தம்மாலே   மக்கள் வினைகளை போக்கி  புண்ணியவான்களாக்கி  யோகநெறி வந்து   ஞானமளித்து காத்திட முடியும்.  அவ்விதமே வாழையடி வாழையென  வந்து  உதித்திட்ட திருக்கூட்ட மரபினராம் அரங்கமகாதேசிகர். இக்கலியுகம் காத்திடவே ஆசான் ஆதி ஞானத்தலைவன் ஆறுமுகனாவார்.


ஆறுமுகப்பெருமானே ஆசான் அரங்கர் வடிவினிலே தோன்றி அகிலத்தினை  காத்திட பொல்லா மாயைசூழ் கலியுகத்தினை வென்று  ஞானயுகமாக  மாற்றிடவே அவதாரமாக வந்துதித்துள்ளார்.   
அவ்விதமே உள்ள உத்தம மகா ஞானயோகி அரங்கர் தம்மை  விடுத்து  இவ்வுலகினிலே கலிகாலத்தே வேறு  சற்குருநாதர்  ஜென்மத்தைக்கடைத்தேற்ற வல்லார் ஒருவர் யாவரும்  இல்லையெனலாம்.  


ஆயினும் மற்ற மற்ற பக்திமான்கள், யோகிகள்,  ஞானம்  அறிந்தோர்உபதேசிப்போர், பண்புள்ளோர், சமுதாய  சான்றோர்கள் என அநேகம் அநேகம்பேர்கள் இவ்வுலகினிலே  இருக்கலாம். அவர்களெல்லாம் நன்னெறி  புகட்டவோ  அவற்றைப்பற்றிய செய்திகளை அழகுற சொல்நயத்தோடு   சொல்லத்தான் முடியுமே தவிர அவர்களால் தானும்  கடைத்தேற இயலாது,  தம்மை நாடி வந்தோரை கடைத்தேற்றவும் இயலாது


ஏனெனில் அவர்களது அறிவானது கற்ற நூலறிவே அன்றி உண்மை ஆதிதலைவன் அருளிய ஞானஅறிவன்றுஆயின் மக்களெல்லாம் உண்மையறிய கடைத்தேறிட கடவுளை அடைய விரும்பியே அவரவரும் மார்க்கம் தேடி அலைகின்ற அந்தவித தேடல்தனை  எண்ணிறந்த மயக்கவாதிகள் பயன்படுத்தி அம்மக்களிடத்தே பொய் கபட  வேடமிட்டு அவர் தம்மை மயக்கி தாம் ஏதோ தெய்வத்தின் பிரதிநிதி  போலவும், தாமே இறைவனாகவும், தாம் இறைவனுடன் தினம்தினம்  பேசுவதாகவும், தாம் இறைவனுடன் கலந்து விட்டதாகவும், தாம் இறைவனுடைய செய்திகளை உங்களுக்கு சொல்ல வந்த இறைதூதன்  என்றும், தாமே அனைத்தும் கற்று தேர்ந்தவனென்றும், தாமே பரப்பிரம்மம்  என்றும், தாமே அவதாரம் என்றும், சிற்சில மாய கண்கட்டு வித்தைகளை  காண்பித்து அதியற்புத சித்திகளை அடைந்தவர் போலவும், சிற்சித்திகளை  மந்திர உச்சாடனங்கள் வாயிலாக பெற்றுமே மக்களை பயமுறுத்தி  பயமுறுத்தல் ஆன்மீகம் நடத்தியும், மாயாஜாலங்களை காண்பித்தும், கண்கட்டு வித்தை நடத்தி மக்களை மயக்கியும், சொல்வன்மையால்  மக்களை மயக்கும்படி இனிமையாக பேசியும் மக்களை மயக்கி  பொருள்பற்றுடன் பொருள்மீதே கண்ணாக கொண்டு வஞ்சித்து பொருள் பறித்து வாழ்கின்றனர்.


இவ்விதமே பொருள் பறிப்பதோடு தமக்கு அனைத்தும் தெரிந்ததுபோல்  காட்டி, தான் தவறான பாதையில் செல்லுவதோடு தம்மை   நாடிவந்தோரையும் தவறான பாதையில் செலுத்தி தானும்  நரகத்திற்கு  போவான், தம்மை நாடிவந்தோரையும் நரகத்தில் தள்ளி  விடுவான் மகாபாவிஇப்படியுள்ள மகாபாவிகளிடம் அகப்பட்டு அவர்கள் துணையுடன் ஞானம்  அடைகிறேன் என்றே அவர்தம்மை தொடர்ந்து சென்று உடல் நலிந்து மனம்  பயமுற்று மனக்குழப்பங்கள் ஏற்பட்டு ஆன்மீகத்தின் மேல் அளவிலாத  வெறுப்புற்று அவர்களெல்லாம் அவர்களது பொருளையும்,  சொத்துக்களையும், மானம் மரியாதைகள் என  அனைத்தையும் இறுதியில்  இழந்து தீயநெறி சென்று ஏமாந்து  இயலாதவனாய் கலக்கம் கொண்டுள்ளனர் மக்கள் பலர்


அவ்விதமே கலக்கம் கொண்டவர்களும் தாம் சென்று வீழ்ந்த பாதை  தவறாயினும் சரி, கவலை வேண்டாம் மக்களே! தாம் செல்ல  நினைத்தது  சரியே. ஆயினும் சென்ற வழி தவறாம் ஆதலினின் நன்னெறி புகட்டி அறம்,  பொருள், இன்பம், வீடு பேறு எனும் நான்கும் காட்டி உண்மை ஞானம் உணர்த்தி தெளிவித்து கடைத்தேற்றவல்ல இக்கலியுகத்தின் யுகமாற்ற சதாசிவ சற்குரு அரங்கமகா தேசிகர் தம்மை இன்றேனும் மறவாமல் உண்மையுடன் பயபக்தியோடு பணிந்து வணங்கி துதித்து தாம் செய்த  பாவங்களுக்கெல்லாம் பாவமன்னிப்பு கோரியே சற்குருநாதன் அரங்கர்  திருவடி பணிந்து எம்மை ஏற்றுக் கொள்ளுங்கள் சற்குருவே என்றே மனமார  முழுமனதுடன் குருவாக ஏற்றுமே திருவடிக்கு சரணாகதியாக தம்மை  ஒப்புவித்தால் கருணைமிகு தயாள தெய்வம் அரங்கரின் கருணையினாலே  அவர்களெல்லாம் கண்டிப்பாக காப்பாற்றப்பட்டு கடைத்தேற்றப்படுவார்கள்.


ஆதலின் அவர்களெல்லாம் உத்தம ஞான ஆலயமாம் ஓங்காரக்குடில் தனக்கு  தவறாது சென்று வணங்கி ஆங்கே அரங்கர் மேற்கொள்ளும்  அறப்பணிகளுக்கு அவரவரால் இயன்ற அளவு தொண்டுகள் செய்தால்  தொண்டுகள் செய்ய செய்ய அவர்களைப் பற்றிய  தீயவினைகள்  அவர்களுக்குண்டான செய்வினைகள் படிப்படியாக அகன்று  திடமான மெய்ஞானம் கைகூடி வாழ்வினிலே ஆன்மீகத்திலே  நம்பகம் ஏற்பட்டு  முன்னேறுவதற்கான மேலான வழிகள்  கிடைக்கப்பெற்று சிறப்பான  வாழ்வை வாழ்வார்கள்.
  

சிறப்பறிவுகளெல்லாம் உலகப்பேராசான் அற்புதமகாஞானிஅரங்கனருளால் அவர்களெல்லாம்  நன்கு  கைவரப்பெற்றுமே இவ்வுலகினிலே அறியாமை   நீங்கி தெளிவான  சிந்தனைகளைப் பெற்று படிப்படியாக  பூரணமான முழுமையடைந்த  ஞானம்தனை  அரங்கமகாதேசிகரின் வழிகாட்டுதலிலே   அவர்தம் நெறிகளிலே நடந்து  கிடைக்கப் பெறுவார்கள்.  அரங்கரின்  அருளினாலே மரணமில்லாப்  பெருவாழ்வின்  சூட்சுமங்களை  அறிந்து  அதை அடைகின்ற  முறைமையும்  அதன் வாசலினையும் கண்டிடுவார்கள்.  


அதன் வாசலாம் சுழிமுனைக் கதவினை அறிந்து சுவாசம் எனும்  வாசிக்குதிரைதனை அடக்கி ஆட்சி நடத்திட அரங்கரின் மார்க்கமே  அவசியமானதென்றும் மற்ற மற்ற மார்க்கமெல்லாம்  தேவையற்ற மார்க்கம் என்றுமே உணர்ந்து வாசி நடத்தி செல்ல  அரங்கமார்க்கமே உகந்ததென்ற  தெளிவும், அரங்கமார்க்கத்தின்  மாட்சிமைகளையும், அற்புதங்களையும்,  ஆற்றல்களையும் தெளிவாக உணரப்பெறுவார்கள். அவ்விதம் உளமார தெளிந்து அறியப்பெற்று மனத்திடமுற்று இவ்வுலகினிலே தொடர்ந்து தம் கண்ணுக்கு புலனாகா ஆன்மாவை அறிவால் உணர்ந்து கட்டுப்படுத்த  இயலா  ஆன்ம செயல்களை கட்டுப்படுத்தி ஆன்மாவை  அறிவால் ஆட்சி புரியும்  வல்லமைகளையும் அரங்கனருளால் பெறுவார்கள்.


அவர்களெல்லாம் அரங்கரின் அதியற்புத துணையினாலே வழி  நடத்துதலாலே  ஞானவழியினில் சென்று கலியிடர் வென்று ஞானவான்  நிலைதனை அரங்கனருளால் அடைந்து வெற்றியும் பெறுவார்கள்.  ஆதலினால் அரங்கனே ஞானமளிக்க வல்லான்  அரங்கர்  திருவடியைப் பற்றி வினையொழித்து கடைத்தேற குடில்  தனக்கு விரைந்து  வந்து கடைத்தேறுவீர் என அழைப்பு விடுக்கிறார்  மகான் ஆனாய நாயனார்.
-சுபம்-

முருகா என்றால் தம்மைச் சார்ந்தோரை மதிக்கக் கற்றுக்கொள்வான்!

Friday, 17 May 2019

உலகமாற்றம்- ஞானயுகத்தை நோக்கி..



உலகில் பல மாற்றங்களை சந்திக்கவிருக்கின்ற இந்த வருடத்தில் மாற்றங்களைக் கருதி அடுத்தடுத்து தொடர்ந்து இதுபோன்று நூல்களின் வாயிலாக உலக நலன் கருதி ஞானிகளாகிய நாங்களெல்லாம் தொடர்ந்து கூறி வருவோம். 

ஞானிகளே இச்செயல்களையெல்லாம் வழி நடத்தி வருவதால் ஞானதேசிகராம் அரங்கரை வணங்கி ஞானிகள் பூசையை அவசியம் எல்லா திசைகளிலும் நடைபெறும் படியாக செய்திடல் வேண்டும். எல்லாதிக்கும் ஞானிகள் பூசை நடைபெற நடைபெற உலகெங்கும் ஞானிகள் சார்ந்து உலக நன்மைகளை வீண்போகாதவாறு உலக மக்களுக்காக செய்து தருவார்கள்.

உலக மக்களின் மேன்மை கருதியே இந்தவித இரகசியத்தை உலகோர் அறிய எடுத்துரைக்கின்றேன் கமலமுனிவராகிய யான் இந்நூல் மூலமாக.

கமலமுனி யாம் உரைத்தபடி அரங்கமகாதேசிகர் வழியினை பின்பற்றி அரங்கரின் சீடர்களெல்லாம் உலகமெங்கும் சென்று ஞானிகள் பூசையினை செயலாக்கி ஞானிகள் பூசையை நடத்திட வேண்டும். பூஜைகள் நடக்க நடக்க உலகிலுள்ள தீவினை சக்திகள் எல்லாம் வலுவிழந்து அழிந்து போகும். வருகின்ற காலங்களில் தீய குணங்களும், தீய செயல்களும் வலுவிழந்து தீய குணங்கள் உலகோரிடத்தினின்று வெளியேறி அவரவரும் நற்குணவான்களாகி, நலம் பயக்கும் ஞானிகள் ஆசி கிட்டி நல்வினைகள் பெருகி சுகவாழ்வு வாழ்வார்கள்.

ஞானமார்க்கத்தில் சிறந்த சேவை செய்கின்றவர்களெல்லாம் மாறுபாடுகளின்றி அனைவரும் ஒன்று கூடி இவ்வுலகை ஞான சித்தர் லோகமாக மாற்றி இணையில்லாத தேவலோகம் போல இனிமையாக இவ்வுலகை மாற்றி அருள் புரிவதற்காக ஞானிகளெல்லாம் கருணைகொண்டு அருள் செய்வார்கள்.

ஞானவானாம் அரங்கரினால் வெளியிடப்படும் தவநூலாம், ஞானம் சொல்லும் ஞானநூலாம் “ஞானத்திருவடியை” உலகெங்கும் பரப்பி அந்நூலை மற்றவர்களும் வாசிக்கின்ற வண்ணம் அந்நிய மொழிகளிலும் மொழிபெயர்த்து மற்ற மொழி பேசும் மக்களுக்கும் வழிகாட்டி அவர்களும் ஞானவழி செல்ல உறுதியுடன் அன்பர்கள் செயல்பட அரங்கமகாதேசிகரின் புகழ் உலகளாவி பரவி உலகெல்லாம் ஞானிகளை பற்றியும் ஞானவழித்துறை பற்றியும் அறிந்து ஞானிகள் பூசை உலகெலாம் பரவி நிலைத்து நின்று உலகமே இந்த ஞானத்தின் சூட்சுமங்களை அறிந்து, அரங்கரை அறிந்து, சற்குரு அரங்கரே என உணர்ந்து உத்தம ஞானி அரங்கமகாதேசிகரை உலகெங்கும் உள்ள மக்களெல்லாம் ஓங்காரக்குடில் நாடி வர ஏதுவாகும்.

ஆதலினால் உலகெங்கும் உள்ள மொழிகளில் ஞானத்திருவடி நூலை மொழியாக்கம் செய்கின்ற இவை முறைகள் செய்து சன்மார்க்க வழிமுறைகளை உலகறியச் செய்து பரப்பிடல் வேண்டும்.

-மகான் கமலமுனிவர்

27. வஞ்சகம் பேசேல் -ஆத்திசூடி


முருகப்பெருமானின் அவதாரம் தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள் மகான் ஒளவையாரின் ஆத்திசூடிக்கு அருளிய அருளுரை!


உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் அவை அவை தம்தம் வாழ்வியல் சூழலிற்கு ஏற்ப வாழ்கின்றன. அவையெல்லாம் தமக்கு பிற உயிர்களால் இடையூறு ஏற்பட்டால் அவை ஒன்று நேருக்கு நேர் எதிர்த்து தம்மால் இயன்ற அளவு தாக்கி போராடும் அல்லது எதிரி வலுவுள்ள உயிராக இருந்தால் அவை பயந்து ஓடிவிடும். 




ஆனால் எதிரி தம்மை தாக்கிவிட்டதை ஞாபகம் வைத்து சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருந்து கொல்லும்படியான அறிவு பெரும்பாலும் ஐந்தறிவு வரையுள்ள உயிர்களிடத்து காணப்படுவதில்லை. ஆனால் நன்மை தீமைகளை உணர்ந்து மனிதன் கடைத்தேறுவதற்காக இறைவனால் அளிக்கப்பட்ட சிறப்பான கொடையே ஆறாம் அறிவாகிய பகுத்தறிவாகும். இதை அவன் நல்லபடியாக வாழ்ந்து தீயனவிலக்கி மேல்நிலை அடைய வேண்டுமே அன்றி அந்த அறிவை தீயவழிகளில் பயன்படுத்தி மேலும் மேலும் பாவியாகக் கூடாது.


விலங்குகள் கூட தமக்கேற்பட்ட துன்பத்தை மறந்து அவை மீண்டும் இயல்பாக வாழ்கின்றன. ஆனால் மனிதனோ தமக்கு ஒருவர் இடையூறு செய்து விட்டால் வலுவுள்ளவனாக இருந்தால் அவன் உடனே தமது கோபத்தினால் எதிரியை தாக்கி அழித்துவிடுகிறான்.


எதிரியை அழிக்க இயலாத போது அவன் அந்த நிகழ்வை மறக்காமல் தமது மனதிற்குள்ளாகவே ஆழப்புதைத்து எதிரியை தாக்கி அழிக்க, தக்க சந்தர்ப்பத்தை எதிர்நோக்கி வஞ்சகமாய் காத்திருந்து தக்க சந்தர்ப்பம் ஏற்பட்ட உடன், எதிரி எதிர்பாராத வகையில் தாக்கி அழித்துவிடுகிறான்.


ஒருவன் மற்றொருவரால் பாதிக்கப்பட்டால் நேருக்கு நேர் தமது மனவெளிப்பாட்டை வெளிப்படுத்தினால் அதைக் கண்டு எதிரி, இவன் நம்முடன் ஒத்துப்போகாதவன், இவன் தொடர்பு தேவையில்லை, இவன் நமது எதிரி என எண்ணி அவனது பார்வையினின்று அகன்று சென்றுவிடுவான் அல்லது ஒதுங்கி வாழ்வான்.


ஆனால் நடந்த சம்பவங்களை மறக்காமல் உள்ளுக்குள்ளேயே வைத்துக் கொண்டு சந்தர்ப்பத்திற்காக காத்திருந்து அந்த சந்தர்ப்பம் கிடைக்கும்வரை எதிரியிடத்து தான் பணிந்து விட்டதாகவும் அவனிடம் நட்பாக நடந்துகொள்வது போல நடந்து இனிமையாக அவனை புகழ்ந்துபேசி அவனது நம்பிக்கையைப் பெற்று எதிரி அயர்ந்த சமயம் பார்த்து நயவஞ்சகமாக பேசி பேசி இறுதியில் வீழ்த்தி வெற்றி காண்கின்ற நயவஞ்சக செயல் மிகக் கொடுமையான செயலாகும்.


ஒருவன் தனக்கு எதிரி என்றால் அது வெளிப்படையாக தெரிவதால் ஒன்று எதிர்த்து போராடுவான். இல்லை தோல்வியை ஒப்புக்கொண்டு ஒதுங்கி விடுவான். ஆனால் வஞ்சகம் உள்ளவன் அவ்வாறில்லாமல் எப்போது என்ன செய்வான்? எப்படிப் பேசுவான் என்று தெரியாததால் அவன் மிகக் கொடுமையானவன் ஆவான்.


எப்போது மனிதனின் மனதில் தூய்மையில்லையோ, பொறாமை உள்ளதோ, பொருள் பற்று உள்ளதோ, காமம் உள்ளதோ, அப்போது அவனது மனதில் கள்ளம் தோன்றி வஞ்சனை கொள்வான். ஒருவன் பொருள்பற்றினாலும், பிறர்மீது கொண்ட பொறாமையினாலும் வஞ்சனை கொள்வான்.


ஆயினும் வஞ்சனையாக உள்ளோர் பழி உணர்வை பெரும்பாலும் வெளிப்படையாக தெரியும்படி நடந்து பகை உணர்வு கொள்வதால் எதிராளி விலகிச் சென்று விடுவான். அவனிடம் நட்பு கொள்ளாமல் விலகிவிடுவான்.


ஆனால் சிலர் தாம் எடுத்துக் கொண்ட காரியத்தை பகையை முடிக்க எண்ணி எவர் எதிரியோ அவனிடமே நட்பு பாராட்டி ஆழ்ந்த நட்பு உள்ளவரைப் போல் நடித்து உள்ளத்தில் வஞ்சமும் புறத்தில் அளவில்லா அன்புள்ளவனாகவும் அவனது நலனில் மிகுந்த அக்கறை கொண்டவனாகவும், அவனுக்காக இவன் தியாகம் செய்வது போல தேனொழுக இனிமையாக பேசி அவனை நம்பச்செய்து இறுதியில் பகை முடித்து வீழ்த்திவிடுவான்.


உள்ளத்தில் நஞ்சும் உதட்டில் தேனும் கொண்டு பேசுகின்ற இவர்களிடம் மிகுந்த எச்சரிக்கையுடன் இருந்திட வேண்டும். இச்செயல் மிகக் கொடுமையான செயல், நம்பிக்கைத் துரோகமான செயல். ஆதலால் வஞ்சகம் பேசேல் எனக் கூறுகிறார் மகான் ஒளவையார்.