முருகா என்றால்,
முருகப்பெருமானின் அருளைப் பெறலாம். முருகப்பெருமானை தூப தீபமேற்றி மலர் கொண்டு அலங்கரித்து அர்ச்சித்து சடங்குகளால் ஆன சடங்கு பூசைகளை அவரவர் மனதினில் தோன்றியபடியே புறச்சமயச் சடங்குகளால் இதுவரை வழிபட்டு வந்த நாம் அதையும் தாண்டி அகத்துள்ளே அதாவது மானசீகமாக எந்தவித ஆரவாரங்களும் இன்றி வணங்கிடுவதான ஒரு அந்தரங்க பூசைமுறையும் உள்ளது என்று அறிந்து கொள்வார்கள்.
முருகப்பெருமானின் நாமத்தை உச்சரிப்பதற்கே அவன் பல்லாயிரமாண்டு தவமும் அளவிலாத தருமங்களும் செய்திருந்தால் அன்றி அந்த ஆதித்தலைவன் ஆறுமுகன் நாமத்தை சொல்ல வாய்ப்பில்லை என்பதை உணர்வார்கள்.
உணர்ந்த புறச்சமய சடங்குகளில் உள்ளவர்கள் மேலும் மேலும் முன்னேற அவர்கள் உயிர்க்கொலை தவிர்த்து புலால் மறுத்து ஜீவதயவு கொண்டால்தான் நமக்கு இந்த வாய்ப்பு வந்தது என்பதையும் உணர்வார்கள்.
அதைவிடுத்து புலால் உண்டாலோ, பலியிடும் தெய்வங்களின் ஆலயங்களுக்கு சென்றாலோ, பலியிட்டு சிறுதெய்வங்களை வணங்கினாலோ, ஜீவர்கள்பால் கொண்ட தயவு குறைந்தாலோ ஞானத்தலைவன் நம் சிந்தையினின்று மறைந்து முதல் படியான புறச்சமய பூசையில்கூட முருகனின் நாமத்தை சொல்லவோ அவனது நாமத்தை எந்த வகையிலும் சொல்லவோ விடமாட்டான் என்பதையும் உணர்வார்கள்.
மேலும் அவர்கள் முருகனின் நாமத்தை தொடர்ந்து செபித்திட செபித்திட இதுவரை அவன் செய்திட்ட புறச்சமய சடங்குகளைப்பற்றிய உண்மை அறிவினை முருகன் அருளால் பெறுவார்கள். சமுதாயத்தில் ஒரு சிலர் தருமங்களை மிகுதியாகச் செய்தும், புறச்சமயச் சடங்குகளை செய்து அகத்துள் இறைவனை காணாது மக்கள் வியக்க ஆரவாரமாய் பக்தியில் ஈடுபடுவார்கள், நாட்டிற்கு நல்லவைகளை செய்து தியாகிகளாய் இருப்பார்கள், நாட்டைக்காக்க தனது உயிரையும் கொடுத்து மாபெரும் வீரனாய் திகழ்வார்கள், நல்ல நெறிநின்ற வாழ்வை வைராக்கியமாக வாழ்ந்து சமூகச் சான்றோனாய் திகழ்வார்கள், பெரும் புண்ணியவானாக இருப்பார்கள். ஆயினும் அவர்கள் இயற்கை நியதிக்கு உட்பட்டவரே. அவர்கள் இயல்பாக இறந்திடவோ அல்லது போரில் மடிந்தோ போவார்கள்.
அவர்கள் அற்புதம் ஆயிரம் செய்து என்ன பயன்? அவர்களால் தங்கள் உயிரை தாங்களே காத்துக் கொள்ள முடியாத அளவிலேதான் உள்ளவர்கள். அவர்கள் நல்லவர்களே ஆனாலும் அருள் செய்கின்ற அளவிற்கு பெரியோர் அல்ல. அவர்கள் சாதாரணமானவர்களே யாவார். ஆயினும் அவர்கள் மீது கொண்ட விசுவாசத்தினால், அவனது தியாகத்தினால் அவனது நற்பண்புகளால் கவரப்பட்ட மக்களெல்லாம் அவனைப் பாராட்டி அவனது இறப்பிற்கு பின்னும் தம்முடன் உள்ளதாகவும் தம்மை அவன் இறந்தும் காக்கின்றதாக எண்ணி அவனை வணங்கிட துணிவார்கள்.
அது மக்கள் அவன்மீது கொண்ட விசுவாசமாகும். அதன் விளைவாய் இறந்தவனை வணங்க வணங்க இறந்தவனுக்கும் பிறவிகள் கிடைக்காமல் ஆன்மா சிறைப்பட்டு போவான், வணங்கியவன் ஆன்மாவும் சிறைப்பட்டு போகும்.
தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியாமல் இறந்து போனவன் எப்படி நம்மை காப்பாற்றுவான் என்று உணராமல் அவர்களெல்லாம் தாம் செய்த பாவத்தினால் செத்து பிறக்கின்ற புண்ணியவான்களை, தியாகிகளை, சமூகச் சான்றோனை வணங்கி வீணில் காலம் கழிப்பர்.
ஒருசிலர் தமது மனதிற்கு தோன்றியபடி செய்து செத்துப்போனவன் வாழ்ந்தபோது செய்திட்ட செயல்களுக்கு ஏதுவாக அவனுக்குப்பிடித்ததை செய்கிறேன் என்று செத்துப்போனவன் பெயரில் இவன் உயிர்ப்பலி செய்து செய்து செத்து போனவனை பெரும் பாவச்சுமைக்கு ஆளாக்கி பல லட்ச வருடங்களுக்கு மீளமுடியாத நரகத்தில், வணங்குகிறேன் பேர்வழி என்று இவனே தெய்வமில்லாத ஒருவனை தெய்வமாக்கி உயிர்ப்பலியிட்டு ஆழப்புதைத்து விடுவான் பாவி. செத்தவனும் பாவியாகி விடுவான். செத்தவனுக்கு பலி இட்டவனும், பாவியாகிவிடுவான்.
இவை அனைத்தும் ஞானபண்டிதன் முருகனை வணங்காததால் வந்திட்ட கொடும் வினைகளாகும் என்பதையும் முருகனை வணங்குபவன் உணர்வான்.

மேலும் முருகனை வணங்க வணங்க முருகனை வணங்கின நாம் மீண்டும் இந்தவித அசுத்த பூசைகள் செய்திடலாகாது, செய்திட்டால் நாமும் இந்த நரகக் குழியில் போய்விழ வேண்டும். வீழ்ந்தால் நம்மை இதுவரை காத்து வந்த மகாசன்னிதானம் இறைவன் முருகப்பெருமான் நம்மைவிட்டு விலகி விடுவான். அவன் நம்மை விட்டு விலகினால் அனைத்தும் சூன்யமாகிவிடும்.
மீண்டும் எப்போது அவன் அருள் கிடைக்கப் பெறுவோம் என்றே அறியாது, அறியாமையில் உழன்று பெரும் பாவிகளாகி விடுவோம் என்றே பயந்து உயிர்க்கொலை மீது மிகுந்த அச்சம் கொண்டு கொலை, பலி இடும் கோயில்கள் பக்கமோ கொலை செய்து வழிபடுபவனிடத்து நட்போ கொண்டால் அவன் செய்த பாவம் நம்மையும் சேர்த்து நரகத்தில் தள்ளிவிடும் என்று கொலை கோவில்களையும் கொலை பாதகர்களையும்
காணச்சகியாது உண்மை ஞானசூரியன் ஆதித்தலைவன் முருகனது திருவடியே கதியென்று வணங்கிட துவங்குவான்.
மேலும் மேலும் முருகனை உளமார உள்ளன்போடு வணங்க வணங்க, வணங்கின அவர் தம்முள்ளே உண்மை வழிபாடு தோன்றிடத் துவங்கும். அதுவரை அவன் இருந்த புறச்சமயச் சடங்குகள் எல்லாம் பக்தியை தருமே அன்றி அதன்மூலம் இறையருளை பெற முடியாது என்று உணர்வான்.
ஆதலின் இறையருளை பெற்றிட வேண்டுமாயின் அந்தரங்கத்திலே முருகநாமம் சொல்லியும் அந்தரங்கத்திலே மனதுள்ளேயே முருகன் திருவடியை பூசித்தும் முருகன் பெருமைகளை சதா எண்ணிக் கொண்டும் பிறருக்கு சொல்லியும் செய்துவர செய்துவர அவர்தம் உள்ளத்தே முருகன் அருள் கூடிட துவங்கி உண்மை ஆன்மீகம் அறிந்து உண்மை நெறிதனிலே கொண்டு செல்லும் முருகனருளால் நல்லோர் தொடர்புகளை மிகுந்து பெற்று நன்னெறி சென்று வாழ்வான்.
முருகன் நாமம்தனை செபிக்க செபிக்க ஜீவதயவு மனதினுள்ளே பெருகி எல்லா ஜீவனையும் தம்முயிர்போல் எண்ணி வாழ்தலே அந்த ஞானபண்டிதனின் அருளைப்பெற உறுதுணையாய் இருக்கும் என்றே உணர்ந்து ஜீவதயவினை தமது உயிர்மூச்சாகக் கொண்டு வாழ்ந்து கடைத்தேறுவான்.
ஜீவதயவு இல்லையேல் நம்முள் முருகன் நாமம் இல்லை
ஜீவதயவு இல்லையேல் முருகன் அருள் இல்லை
ஜீவதயவு இல்லையேல் பக்தி இல்லை
ஜீவதயவு இல்லையேல் எத்துணை வழிபாடு செய்தும் பயனில்லை
ஜீவதயவு இல்லையேல் எத்துணை புண்ணியம் செய்தும் பயனில்லை
ஜீவதயவு இல்லையேல் இன்னுயிர் நீத்து தியாகம் செய்தும் பயனில்லை
ஜீவதயவு இல்லையேல் உலகம் போற்ற வாழ்ந்தும் பயனில்லை
என்றெல்லாம் உணர்ந்து ஜீவகாருண்ய அருட்ஜோதி ஆறுமுகனை மனதினுள் வைத்து அளவிலாது அன்பு செலுத்தி முருகனை வழிபட்டு முருகனை ஜீவதயவே வடிவான அருட்பெரும் சோதியாக காணுகின்ற அற்புத நிலையையும் அடைவான் அந்த பக்தன்.
சண்முக துய்யமணியாம் சண்முகனை போற்றுவோம்
அவன் முகம் சைவமணியானதை உள்ளுணர்வால் உணர்வோம்
சைவமே முருகனாய் தோன்றி ஜீவதயவே வடிவாய் உள்ளதையும் உணர்வோம்.
-சுபம்-மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்
Related Articles
2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)
Nathan Suryahttp://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html
No comments:
Post a Comment