முருகப்பெருமான் துணை
மகான் சூலமுனிவர் ஞான சூட்சும நூல் (07/06/2014)
அருள்நிறை ஞானிகளெல்லாம் கூடியே அளவிலாத அருள்நிறை அருட்சபை கொண்டிட்ட அற்புத கலியுக மாற்ற மகாஞானி அரங்கமகாதேசிகரே! அறமே பிரதானமாக கொண்டதொரு அறச்சபை கண்டு மாயைசூழ் கலியுகத்தினை ஞானயுகமாகவே மாற்றுகின்ற மகாஞான தவயோகி அரங்கமகா தேசிகரே! உண்மை வழிபாடாம் ஆதிமூல ஞானத்தலைவனின் அற்புத வெளிப்பாடாம் அருட்பெருஞ்சோதி வழிபாடுதனை உலகிற்கு அளித்து அதன் ஆற்றலெல்லாம் உம்முள்ளே அடக்கி அவதார புருஷனாக ஆகியே ஆறுமுகன் மறைத்து அரங்கனாய் வெளிப்படும் எங்கள் தலைவனே எல்லையில்லா பேரானந்த நிலை நின்று எங்களை கடைத்தேற்றிய ஆறுமுகனே அற்புதமாய் உலக மாற்றம் கருதி ஆறுமுக அரங்கராய் தோன்றிட்ட அறதரும அருள் வள்ளல் மகாயோக ஞான தவசி அரங்கமகா தேசிக மகா ஞானியே! அருட்சுடர் ஜோதி பிரகாசமே ஞானமளித்து காக்கின்ற ஞானதேசிகனே! வானோரெல்லாம் மெச்சி போற்றுகின்ற மகாதேவனே! திருவருளே வடிவாய் நின்ற ஞானஅரசனே! உமது பெருமையை உரைக்கவும் முடியுமோ? சொல்லொண்ணா உமது பெருமைகளை உலகறிய சொல்லி சாதி, மத, இன, மொழி பேதாபேதமின்றியே உலகோர் அனைவருக்கும் பொதுநிலை நின்றே பொதுமறையாய் பேதமற்ற ஞானசூட்சும நூல் தனையே உலக நலம் கருதியே உலக மக்கள்பால் அன்பு மிகுந்துமே உண்மைதனை உள்ளபடி உரைக்கின்றேன் அரங்கா உமக்காக சூலமுனிவர் யானும் என்கிறார் மகான் சூலமுனிவர்.
நன்மையற்ற தீமையை உண்டு பண்ணி மக்களை தீயநெறி செலுத்தி பாழ்படுத்தும் மகாமாயை சூழ்ந்துள்ள இக்கலியுகத்தின் கோரப்பிடியினின்று மக்களெல்லாம் விடுபட்டு நலம் பெற்று நல்வினை கூடி சிறப்புற வாழ்ந்திடவே உத்தம மார்க்கமாய் சலனங்களற்ற எவ்விதமான குழப்பங்களும் இல்லாத தூய நெறியாம் சாதி, மத, இனம், தேசம், மொழி, மேலோர், கீழோர் என்ற பாகுபாடுகளினின்று சிறிதளவும் பேதாபேதமில்லாத அனைவருக்கும் பொதுவான கடைத்தேற்றி காக்கவல்ல சத்திய நெறியாம் சமரச சுத்த சன்மார்க்கம் தனையே அந்த அற்புத நெறியை உலகினர்க்கு அளித்து அந்த நெறிதனிலே சென்றுமே வற்றாத பெருகிடும் தருமங்களை அளவிலாது செய்து அத்தருமங்களின் வழிதனிலே தொண்டுகள் செய்திட மக்கள் தனக்கு வாய்ப்பளித்து அந்த வாய்ப்பையே ஞானகுருவாய் தாம் நின்று தொண்டர் தமக்கு அளித்து தருமங்கள் செய்திட தூண்டி அதன்வழியே ஜென்மத்தை அவர்களெல்லாம் கடைத்தேறிட வாய்ப்பளித்து செய்த தொண்டுகள் வழியினிலே தாம் பெருங்கருணை கொண்டு அவர் தமக்கு அருளை வாரிவாரி வழங்கி தொண்டர்தமை அழைத்து அழைத்து கடைத்தேற தாயினும் மேலான தயவு கொண்டு மகா கருணை கொண்டு வாய்ப்பளித்து அருளி நின்று அவர்தம் தீவினைகளை நீக்கி அவரவர் வாழ்வினிலே வளங்களை அளித்து காத்து இரட்சிக்கும் மாபெரும் கருணை வள்ளல் ஞானியப்பா எங்கள் அரங்கன். அரங்கன் செயல் கண்டு ஞானிகள் வர்க்கமே புளங்காகிதம் அடைந்து அவர் செயல்கண்டு வியந்து நிற்கின்றோம்.
அற்புதம் அற்புதம் அரங்கன் செயல்! அற்புதம் அற்புதம் அரங்கன் கருணை! அற்புதம் அற்புதம் அரங்கன் அருள்! அற்புதம் அற்புதம் அரங்கன் சேவை! அற்புதம் அற்புதம் அரங்கன் ஞானம்! அற்புதம் அற்புதம் அரங்கன் மார்க்கம்! மூவுலகிலும் யாவரும் செய்திடாத அரும்பெரும் செயலை அநாயாசமாக செய்யும் அற்புத மகாஞான யோகி அரங்கனப்பா.
அரங்கன் ஆற்றல்தனை அறியாது போனார்கள் மக்களெல்லாம். ஆதலினால் பக்தி கொள்ளாதும் போனார் அரங்கன் மேலே. எனினும் அரங்கன் மேல் யாவருக்கும் பக்தி உண்டோ இல்லையோ கவலை இல்லை, இல்லையென்றாலும் பரவாயில்லை, வாய்ப்புள்ளது கவலை வேண்டாம். இனியேனும் அவரவர் மனதினுள் உள்ள சலனங்களை விட்டுத் தள்ளுங்கள். அரங்கன் மேல் பக்தி கொள்ளுங்கள் மனம் மாறி அரங்கனை குருவாய் ஏற்றுக் கொள்ளுங்கள். அற்புதமகா ஞானகுரு அரங்கன், அற்புத சொற்குரு அரங்கன், அற்புத யோகி அரங்கன், அற்புத ஞானி அரங்கன், உத்தம மகா ஞானி அரங்கன்.
யுகமாற்றம் கருதியே உங்கள்பால் கருணை கொண்டு ஆற்றல் மறைத்து மனித ரூபத்திலே தாயன்பு கொண்டுமே தயாநிதியாக தன்னை மறைத்து தலைவனாய் உள்ள நிலைதனை விட்டு இரங்கி சாதாரண சாமான்ய மனிதனாய் உங்களுடன் வாழ்கின்றார் அரங்கஞானி. ஆதலின் அவர்தம் எளிமைகண்டு ஏமாந்து விடாதீர்கள். அரங்கனை புறக்கண் கொண்டு ஆராயாமல் அகக்கண் கொண்டு காணுங்கள் அற்புதம்
தெரியும்.
மக்களே கிடைத்த வாய்ப்பை எளிதாய் எண்ணாது தவறவிடாது பயன்படுத்திக் கொள்ளுங்கள். போனால் மீண்டும் இப்படியொரு வாய்ப்பினை நீங்கள் பெற எத்தனை இலட்சம் வருடங்கள் ஆகுமோ தெரியவில்லை, காலம் கடத்தாதீர், கவனமாய் இருங்கள், கலங்கிடாதீர் கருத்தாய் செயல்படுங்கள்.
மக்களே வாய்ப்பை தவறவிடாது விரைந்து அவரவரும் மனம்மாறி அரங்கன்தமை குருவாய் ஏற்று பயபக்தியுடன் பணிந்து போற்றி அவர்தம் வழிதனிலே இணைந்து அரங்கரின் உபதேச வழி நடந்து எல்லா வல்லமைகளையும் பெற்று வாழ வேண்டியே உலகோரே உங்களையெல்லாம் வருக வருக என்று அழைக்கின்றேன் சூலமுனி யானும் ஞானவர்க்கத்தினர் சார்பாக இன்றையதினம். வாருங்கள் விரைந்து வாருங்கள் தவறவிடாதீர்கள். எச்சரிக்கிறேன் இனி உலகின் மாற்றங்களிலே ஆபத்துகள் அதிகமாகும்.
ஆதலின் ஆபத்தில்லா வாழ்வை வாழ அரங்கன் திருவடிக்கு சரணடையுங்கள். வருங்காலம் பொல்லாதது அதன் இடர்களிலே சிக்கிவிடாது, தப்பித்திடவே கடைத்தேற்றும் மகாஞானி அரங்கனிடம் அடைக்கலம் புகுங்கள். அரங்கனை நாடினோர் மட்டுமே அற்புதமாய் எங்கள் வர்க்கத்தால் காப்பினை பெற்று கடைத்தேறுவார்கள். மற்றவர் நிலை குறித்து சொல்ல தேவையில்லை.
ஆதலின் கலியின் வெங்கொடுமையின் ஆபத்தினின்று மக்களை காத்து ஆபத்தில்லா உலகை படைத்திடவே ஞானிகள் பலர் தோன்றி தோன்றி வந்திட்ட போதும் முடிக்க இயலாது போகவே தழைத்து வந்த ஞானிகள் பலரது தவசக்திகளையும் ஆற்றலையும் ஒன்றிணைத்து அந்த ஆறுமுகனே, ஞானத்தலைவனே, முருகப்பெருமானே நேரில் தோன்றி எல்லா சக்திகளையும் ஒன்றிணைத்து அரங்கனாய் தோன்றிட்டார் அற்புதமாய் கலிமுடிக்கவே. கலிமுடித்து ஞானயுகம் படைக்கவே ஆதிதலைவன் ஆறுமுகன் வருகையுற்ற தக்க காலமாம் இக்காலத்தே கலிமுடிக்கவே களமிறங்கிட்டார். தலைவன் களமிறங்க ஞானவர்க்கமே அவர்தம் பின்னே அற்புதமாய் ஒன்றிணைந்து யாவரும் ஊகிக்க முடியாத வகையிலே மிகப்பிரம்மாண்டமானதொரு பெருஞ்சக்தியாய் மாறியே உலகமாற்றம்தனை நடத்துகின்றது.
மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை கொண்டு பாவவினைக்கு உட்பட்டது மனிதவர்க்கம். மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசைதனை அறவே விட்டொழித்து அறுத்தெறிந்த அற்புதவர்க்கம் ஞானியர் வர்க்கம்.
மும்மலச் சேற்றில் ஆழப்புதைந்தது மனிதவர்க்கம். மும்மலச்சேற்றை அறுத்தெறிந்தது ஞானவர்க்கம். மீண்டும் மீண்டும் பிறவி எடுப்பது மனித வர்க்கம். மீண்டும் பிறவா இறவா நிலை கொண்டது ஞானவர்க்கம். எக்காலமும் அறியாது மயங்குவது மனிதவர்க்கம். முக்காலமும் உணர்ந்து காலம் கடந்து நிற்பது ஞானவர்க்கம்.
பொறாமை, வஞ்சனை சூழ்ச்சி போட்டி என்றே வாழ்வு முழுவதும் வினைகளால் சூழ்ந்தது மனிதவர்க்கம். குணக்கேடுகளற்று குணப்பண்புகளே உருவாய் உள்ளது ஞானவர்க்கம். ஆற்றல் அற்றது, அருளற்றது மனிதவர்க்கம். அளவிலா ஆற்றல் நிறைந்தது அருள்நிறை ஞானவர்க்கம்.
எல்லாவித மாயையினின்று விடுபட்டு குணப்பண்புகளின் சிகரமாய் விளங்கி மரணம் தவிர்த்து ஒளி தேகம் பெற்று உயர் ஆற்றல்தனை அடைந்து பேரானந்தம் கொண்டு எதையும் செய்யும் வல்லமைகள்தனை ஞானவர்க்கம் சார்ந்தோர் அனைவரும் பெற்றிருந்தாலும் அவர்களெல்லாம் உங்கள் முன்தோன்ற இயலாது, தோன்றிட்டாலும் உங்கள் புறக்கண்களுக்கு காட்சியாய் தெரியாது. அவர்களால் உங்களுடன் பேச இயலாது. ஆதலின் எங்கள் ஞான வர்க்கம் வந்த அனைத்து ஞானிகளும் உங்களைக் காத்திடவே உறுதி பூண்டுமே எங்கள் தலைவன் உள்ளமர் அவதாரம் அரங்கன் வடிவினிலேயே வெளிப்படுகின்றோம்.
ஞானியரெல்லாம் ஒன்று கூடி அற்புதமாய் எல்லா சக்திகளையும் ஒன்றிணைத்து உருவாக்கிய பொற்தேகமே அரங்க தேகம். எங்களின் மொத்த ஆற்றல் குவிப்பே அரங்க ஆற்றல். எங்கள் தலைவனே அரங்கன். அரங்கன் வெளிப்பட அனைவரும் உடன் வருவோம்.
ஆதலின் மக்களே அரங்கன் எளிமை கண்டு ஏமாந்து விடாதீர்கள். உத்தம மகாஞான யோகி பரப்பிரம்ம சொரூப ஜோதிச்சுடர் அருட்பெருஞ்சோதி ஆண்டவராம் ஆறுமுகனார் சார்ந்திட்ட அவதார ஞானயோக வள்ளல் ஞானி அரங்கமகாதேசிகர் தம்மை கண்டாலே பாவங்களெல்லாம் அவர்தம்மை விட்டு விலகி ஓடும். அரங்கனை வணங்கினால் பாவமெல்லாம் பொடிப்பொடியாகும். அவர்தமை பற்றிய குறைகளெல்லாம் ஓடிவிடுமப்பா. தவறவிடாதீர்கள் அரங்கரின் அருள் பெறும் வாய்ப்பை நழுவவிடாதீர்.
தொண்டுகள் செய்திட அரங்கன் அளித்த வாய்ப்பை மறந்து விடாதீர்கள், அரங்கன் மீதுள்ள பக்தியை. விலகி விடாதீர்கள் அரங்கன் திருவடி நிழலை விட்டு. மக்களே ஞான லோகத்தினை படைக்கின்ற மகாசக்தியாக வந்து உதித்த ஆறுமுக அரங்கமகாதேசிகர் மக்கள் மீது பெருங்கருணை கொண்டு காக்கும் வேலைகளை அற்புதமாய் இரட்சித்து அருள் செய்து நடத்துகின்ற அரங்கமகாதேசிகரைப்போல இப்பிரபஞ்சத்தில் வேறு ஒரு குரு இல்லை, இல்லவே இல்லை என்பேன். இதுவரை அரங்கனைப் போல் ஆறுமுகன் ஆற்றல் கொண்டு தோன்றியதும் இல்லை. இனி தோன்றப் போவதும் இல்லை இக்கலியிலே.
ஆதலின் எங்கள் தலைவன் அரங்கன் வடிவிலிருக்கும் ஆறுமுகனை அரங்கனாய் காணாது, ஞானபண்டிதனாய், முருகனாய், வேற்படை தலைவனாய், அமராபதியாய், ஞானியர் தலைவனாய் கண்டுமே வணங்கி போற்றி துதித்து பக்தி கொண்டு பாடி பரவசம் செய்து, அவர்தம் திருவடி பணிவோர்க்கு இனி வாழ்வில் துன்பங்களேது? உத்தம மகாஞான யோக வள்ளல் ஞானி ஆறுமுக அரங்கமகா தேசிகரிடம் வரங்கள் பெற வாரீர்! வாரீர்!!
யுகமாற்ற தலைவன் அரங்கனிடம் வாழ்வு மலர வாரீர்! வாரீர்!
மகாயோக ஞானி அரங்கனிடம் ஆசி பெற்று கடைத்தேற வாரீர்! வாரீர்!!
அற்புதம் நிறை அருளாளன் அரங்கன் அருள் பெற்றுயர வாரீர்! வாரீர்!!
அரங்க அற்புதம் காண ஓங்காரக்குடில்நாடி வாரீர்! வாரீர்!!
வந்து பாருங்கள்! வளம் பெறுங்கள்! வாழ்க்கையை உயர்த்திக் கொள்ளுங்கள்!
அற்புதமகா ஞானவேலியின் அருள் பாதுகாப்பினுள் விரைந்து வந்து விடுங்கள் உலகமக்களே வாரீர்! வாரீர்!! வாரீர்!!! என உலகோரையெல்லாம் உத்தம உபதேசம் கூறி உண்மை உரைத்து அழைத்து கடைத்தேற மார்க்கம் உபதேசிக்கிறார் மகான் சூல முனிவர் தமது ஞானசூட்சுமநூல் மூலமாக.
-சுபம்-
Related Articles
2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)
Nathan Suryahttp://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html