ஞானமெனும் பெருநிலைதனிலே வெற்றியடைவதற்கு வழிகாட்டுகின்ற மகாஞானயோகியே, சிவராஜயோகம்தனிலே அவர்களை வருகையுறச் செய்துமே, ராஜயோகம் பயிற்றுவித்து வெற்றிபெறச் செய்கின்ற சிவராஜயோகியே, அரங்கமகாதேசிக ஞானயோகியே!
அவர்தம் யோக நெறிகளிலே அற்புதமாய் அவர்தம் அறிவினுள் உடலினுள் கலந்து ஞானக்கனல் மூட்டி, யோகச்சித்தியைத் தந்தருளுகின்ற தன்னிகரில்லா தனிப்பெரும் யோகஞானத்தலைவனே, ஆறுமுகனார் அவதாரமே, அற்புத மகாஞானமணியே, பொற்பதம் கடந்த தூய வான் சோதி செழுஞ்சுடரே! அரங்கமகாதவசியே!
உண்மையாய், உம்மை சார்ந்தோர் தமை உண்மையுடன் மெய்யன்போடு உளத்தூய்மையுடன் உம்மையே கதியென்று சரணடைந்தோர், தமக்கு முற்றுப்பெற்ற முழுதும் உணர்ந்த தேக ஞானம்தனையும் யோக ஞானம்தனையும் அளித்து, முற்றுப்பெறச் செய்கின்ற தேக முக்திநிலை அருளுகின்றவரே, முக்தி பெற்றோர் தமக்கு அவர்தம் அறிவினுள் ஆன்மாவினுள் கலந்து கலந்து தான்வேறு அவன்வேறு என்றில்லாமல் தானே அவனாய் ஆகின்றதொரு, ஞானசித்தியையும் அவர்தமக்கு அருளி கடைத்தேற்றுகின்ற மகாபரஞ்சோதி சொரூபஞானபண்டித ஆறுமுக அரங்கமகாதேசிகரே!
அப்பனே ஆறுமுகனின் அவதாரமே! அருள்நிறை உமைபாலன் முருகப்பெருமானார் தம் ஆறுபடைவீடுகளுக்கு சென்றால் கிடைக்கின்ற அத்துணை பலன்களை ஐயன் ஆறுமுக அரங்கன் தாம் வாழும் ஓங்காரக்குடில் எனும், ஒருபடை வீட்டிற்கு வந்தாலே பெறக்கூடிய வகைதனிலே இக்கலியுகத்தினிலே அற்புதமாய் ஒருபடைவீடாம் ஓங்காரக்குடில் தந்திட்ட ஞானதேசிகனே! ஐயா அரங்கமகாதேசிகரே!
கந்தவேலனாம், ஆதி தலைவன் முருகப்பெருமானின் அற்புதமான ஞானதூதனே, அருள்நிறை ஞானதேசிகனே! அரங்கமகாதேசிகனே! ஞானபூமியாம் தாம் வாழும் துறையூர் நகரை ஞானபீடமாக கொண்டுமே, வாழ்கின்ற கலியுகமகா ஞானியே அரங்கமகாதேசிகரே! துறையூர் நகரமர்ந்து குடிலமைத்து குடில் அமர்ந்து உயர்ஞான திருவருளை அருளிக் காக்கின்ற உலகமகா ஞானகுருராசனே! உம்மை அன்போடு உம்மை காக்கும், கடவுளாக கடைத்தேற்ற வந்த குருவாக உபதேசிக்கும் சொற்குருவாக யோக ஞானம் அறிவித்து அருளுகின்ற சற்குருவாகவே முழுமையாக நம்பி உம்மை முழுதும் சரணடைந்து உமது திருவடித் திருநிழலிலே தாம் பெற்ற பாக்கியமாக எண்ணி அதுவே உமது அருள் பிரசாதமாக எண்ணி உமது திருவடித் திருநிழலிலே சரணடைந்து வாழ்பவர் தமக்கு மேன்மைகள் பலவாறாய் கிட்டுமப்பா.
சிந்திக்க, பேச, பிறருக்கு சொல்லிட என எந்தவகையில் சிந்தித்தாலும், மேன்மையே தந்தருளும் உமது பெருமைகளை சூதமுனிவர் யானும் அரங்கா உமக்கு உரைக்கின்றேன் உலக நலம் கருதியே என்கிறார் மகான் சூதமுனிவர்.
இவ்வுலகினிலே அவரவர் செய்திட்ட முன்சென்ம தொடர்பினாலே வினைக்குற்றங்களினாலே தனித்து என்ன செய்வதென அறியாது திகைத்து தட்டு தடுமாறுகின்ற, துன்பப்பட்டு, மனம் வேதனையுற்று கசிந்துருகும்படி எல்லா வகையிலும் கவலையுற்று வாடுகின்ற மக்களெல்லாம், மக்கள் தொண்டே மகேசன் தொண்டு! என்றே தன்னலமில்லாது பொதுநலனே தவமாய் கொண்டு வாழ்ந்து, இவ்வுலகை காத்து அருளிச் செய்கின்ற மகாஞான யோகி அரங்கனின் தெய்வீகமான ஓங்காரக்குடிலிற்கு வாருங்கள், ஆங்கே ஆறுமுக அரங்கனாய், அண்ணலாய், வீற்றிருந்து உலக உயிர்களெல்லாம் இன்புற்று வாழவே அற்புதமாய் அன்னமிட்டு, அன்பர் குறைதீர்த்து, ஆன்ம இலாபமளித்து, துன்பம் களைந்து, துயர் துடைத்து, இன்பம் அளித்து, இன்முகம் காட்டி, இகபரத்தின் நிலையும் காட்டி, முத்திக்கும், சித்திக்கும் வழியருளும், சித்திநாதனாய், சிவயோக மாமுனியாய், அருள்ஞான ஒளிவீசி பிரகாசித்து, அருளுகின்ற அற்புத குருமகா சன்னிதானம், அருள்நிறை அரங்கமகாதேசிக ஞானயோகிதனை உண்மை அன்போடு வந்து வணங்கி அவர்தம் தயவினைப் பெற்றுவிட, அரங்கஞானி தயவினை பெற்றிட்ட அவர்களுக்கெல்லாம், இழந்த அத்துணை உறவுகளும், மனித உறவுகள், ஆனால் அரங்கன் தயவை பெற்ற அவனோ, பெறும் உறவுகளெல்லாம் ஆன்மாவை கடைத்தேற்றவல்ல என்றும் அழியாத நிலைபெற்ற ஆன்மநேய ஒருமைப்பாடுள்ள உத்தம மகா ஞானிகளின் உறவினை அரங்க தயவால் அவர்கள் பெற்று ஞானிகளெல்லாம் அவர்தமக்கு ஆதரவாய், அவர்களே, அவர் தமக்கு உறவினர்களாய், நண்பர்களாய், தாயாய், தந்தையாய், சகோதரனாய், பல பரிமாணத்திலே நேசக்கரம் கொண்டு ஞானிகளே இரங்கி அவர் தமக்கு அரங்கன் பொருட்டு பாதுகாப்பினை தந்து உடனிருப்பார்கள்.
உண்மையுடன் மெய்யன்பால் உமது உள்ளம், உடல், பொருள், ஆவி என்றே அனைத்தையும் அரங்கர் திருவடிக்கே முழுமையாக அர்ப்பணித்து இனி எனதென்று ஏதொன்றுமில்லை அனைத்தும் உமது கமலமலர்
பொற்பாதங்களிலே சமர்ப்பித்தேன் அரங்கமகாதேசிக ஞானியே. இப்பாவியேன் அர்ப்பணிப்பையும் ஒரு பொருட்டாய் மதித்து ஏற்றுக் கொள்ளுங்கள். உமது திருவருள் பெற்றிட சற்றும் தகுதியற்ற பாவியேன் யான் எம்மையும் ஒரு பொருட்டாய் மதித்து ஏற்றுக் கொள்ளுங்கள்.
எமக்கு உற்ற தாயும், தந்தையும், நான் போற்றும் சாமியும் தெய்வமும் நீரே ஆகுக! எமக்கு உற்ற நட்பும் உறவும் உற்றாரும் அனைத்தும் நீரே ஆகுக! எல்லாமும் எல்லாமுமாய் இருந்து எம்மைச் சார்ந்து எம்மை வழி நடத்திடுங்கள்.
எத்துணையும் பேதமுறா இன்பமே அரங்க அமுதமே அளவிலா ஆனந்த பேரொளியே எமக்கு அறிவினை தந்து உம்மை உள்ளவாறு உள்ளபடி உணர்ந்துமே உமது திருவடிக்கே பணிந்துமே உமது ஏவல்தனை செய்கின்ற உத்தம தொண்டராய் எம்மை ஆக்கியுமே உமது திருவடிக்கே எம்மை ஆளாக்கிக் கொள்வாய்.
அன்புடைத்தாயே அரங்கா! ஆறுமுகா! சண்முகா! ஆறுமுகனே! அரங்கனாய் தாமே வந்துள்ளீர், அறியவொட்டாமல் அரற்றி அலைகின்றேன் யான் எமக்கு ஆறுமுகனாய் எம் சிந்தையுள் அமர்ந்து உமது உண்மை சொரூபம் காட்டி இப்பாவியை கடைத்தேற்றி உமது திருவடிக்கே எம்மை ஆளாக்கிக் கொள்வாய் அருட்பேரின்பமே. அளவிலா ஆனந்த வாரியே! உம்மை, உண்மை குருநாதனாய் காண்பதற்கே எம்மால் ஆகாதப்பா உமதருளை உணர உமதருள் வேண்டும்.
உமதருளாலே உமது தாள்பணிந்து உண்மை குருநாதனாய் உமது ஆசியால் உம்மையே அடைந்து உமது ஆசி பெற்றிட பக்குவங்களை தாமே எமக்கு அருளி தாமே எம்மை உமக்கு உகந்தவனாக ஆக்கிக்கொள்வாய் தயாநிதியே அரங்கமகா ஞானியே அற்புதமே! தாயே அரங்கா! தன்னிகரில்லா தனிப்பெரும் தலைமையே! எங்கள் இறைவனே! காக்கவந்த கடவுளே! கருணாமூர்த்தியே! கேட்டதெல்லாம் தருகின்ற குருநாதா! எங்கள் இரட்சகனே! ஒப்பில்லா உயர்ஞானியே! ஓங்கார சொரூபியே! உயர்ஞான தட்சிணாமூர்த்தியே! எம்மை
ஏற்றுக்கொள்ளுங்கள், ஏற்றுக்கொள்ளுங்கள், ஏற்றுக்கொள்ளுங்கள்.
எமக்கு உற்ற துணை ரும் இங்கே இல்லை. நீயும் எம்மை புறந்தள்ளிடல் வேண்டாம். எம்மை புறந்தள்ளாதீர் உம்மையே நம்பினேன் பாவியேன் யான்! எம்மை ஏற்றுக்கொள்ளுங்கள் என்றெல்லாம் உத்தம மகாஞானயோகி எதற்கும் அசையாத, அன்பிற்கு மட்டுமே அசைகின்ற அந்த சுயஞ்சோதி பிரகாச ஞானக்கனல் சண்முக ஆறுமுக முருகன் உள்ளமர் அரங்கமகா தேசிகர் தம் நெஞ்சம் நெகிழ்ந்து அவர் உம்மை சீடனாக ஏற்றுக் கொள்ளும்படியிலே யாரும் அறியா வண்ணமே அந்தரங்க பூசைகளிலே உமது உள்ளம் கரைய உளமார உண்மையுடன் மெய்யன்பால் உள்ளம் விகிர்த்து ததும்ப நெஞ்சமெல்லாம் அவர்தம் திருஅருளை, கருணையை, அற்புதங்களை எண்ணி உமதனைத்தையும் அவர்தம் திருவடிக்கே அரங்க ஞானிக்கே அர்ப்பணித்து சரணடைய உமது அர்ப்பணிப்பை அரங்கன் ஏற்றுவிட்டால் ஏற்பவர் தமக்கு குருஅருள் நீங்காது அவர் தம்முள் சார்ந்து திளைத்து வரும் உலகினிலே பிறவிப்பிணி இல்லாத வகையினிலே வளங்களையும் வீடுபேற்றினையும் அரங்கனருளாய் பெற்று மேன்மையுற்று பெருவாழ்வினை வாழ்வார்கள் என உரைத்து அரங்கனே முருகன் என்றும் அரங்கனருள் பெற அனைத்து ஞானிகளும் அருளிநிற்பர் என்றும் உரைக்கின்றார் மகான் சூதமுனிவர்.
No comments:
Post a Comment