முருகா! முருகா!! முருகா!!! என்றே முற்றிலும் உமது சிந்தை சொல் செயலெல்லாம் முருகனருளாய் கூடிட செபியுங்கள் முருகனே குருநாதனாய் வந்திடும் அற்புதம் காணுங்கள்.
Monday, 10 April 2017
ஆதிசக்தி அருள் அன்னை பராசக்தியின் ஜீவநாடி நூல் 22-07-2016
திருக்காமீசுவரர் திருவடியை பணிந்து போற்றி
தெரிவிப்பேன் அன்னை என் ஜீவமொழி ஆசி
இந்தநாள் அன்னையான் மனமகிழ்ந்து இறங்கி
இனிய என் அருள்மகன் விஜயகுமார் மூலம் அருள்நூல் படைப்பேன்
அருள்நூலை படைத்திடுவேன் எனது மகன் ஆறுமுக அரங்கனுக்கு
அகிலம் காக்க அவதரித்த முருகன் அவன் என்பேன்
சத்தியமாய் அருள்ஜோதி தரிசனமும் கண்டவன் அவனாம்
சக்தியான் ஈசன் மீது ஆணையிட்டு சொல்வேன்
சொல்லிடுவேன் ஆறுமுகன் வேறு அரங்கன் வேறல்ல
செகத்திலே வாசி வசப்பட்ட சற்குரு இவனே
வாலையான் அவனுடலில் வாழ்கின்றேன்
வற்றாத அருள் சக்தி அவனுள் உண்டு
உண்டான அது சக்தி உலகை காக்கும்
உயரஞான யோகியடா அரங்க முனியும்
பிரணவத்தை உணர்ந்திட்ட பிரம்ம ஞானி அவனும்
பிராணவத்தில் ஒடுங்குகின்ற ஒளி ஒலி வெளி அவனே
அவனுமே ஓங்காரத்தின் பொருளுமாவான்
அவனுமே ஓங்காரத்தின் தன்மையுமாவான்
சந்திரன் சூரியன் அக்னி மண்டல விளக்கம் யாவும்
சரீரத்தில் கண்டிட்ட முதல் கலியுக மகா ஞானி இவனே
இவனுமே தன்னடக்கம் பொறுமையுடன் கருணை கொண்டு
இது உலகில் வாழ்ந்து வாரான் அறியவில்லை மக்கள்
தரணிதனில் பொய் சொல்லி பொருளை குவிக்கும்
தரமில்லா போலி குருமார்களை அழிக்க வந்த ஆறுமுகன் இவன்
ஆறுமுகன் இவனென்று என் மகன் அறிவான்
ஆகவே ஆதி சீடனான எனது மகன் விஜயகுமார் மூலம்
இது நூலை குருபெருமை உலகமறிய செய்திட
இயக்கியே இது நூலை படைத்திட கட்டளையிட்டேன்
கட்டளையிட்டு சக்தியான் அவன் சரீரம் இறங்கி
காளையவன் சிந்தை புகுந்து நூலை எழுதி
உலக மக்கள் ஆறுமுகன் அரங்கன் பெருமை அறிய
உலகாளும் ஈசனடி பணிந்து இது நூல் படைத்தேன்
படைத்திட்டேன் அன்னை யானே அரங்கனை உலகில்
பரம்பொருளே கட்டளையிட்டார் இவர் அவதரிக்க
கோடி கோடி அருள் சக்திகள் ஓன்று கூடி
கோள்நிலைகள் ஸ்தம்பிக்க செய்து படைத்தேன்
படைத்ததினால் கோள் வினைகள் அரங்கனுக்கில்லை
பருதி இவன் திங்களிவன் அனுபவித்தால் புரியும்
ஆடி மாதம் அன்னையான் வாலையாய் இறங்கி
ஆறுமுக அரங்கனுடலில் வாழுகின்றேன்
வாழுகின்றேன் அரங்கனுடலில் அன்னை யானும்
வற்றாத அருள் பொருள் இன்பம் வீடுபேறு
அரங்கனடி பற்றிவிட யாவரும் அடைவர்
அற்புத ஞானியாவர் அவன் கரம் பட்டால்
கரம் பட்டால் கருமவினை தீருமென்பேன்
கரம் பட்டால் கூற்றுவனும் அஞ்சி பணிவான்
அகர உகர மகர விந்து நாத ரகசியம் எல்லாம்
அறிந்த ஒரே பிரம்மா ஞானி அரங்கன் என்பேன்
என்பதனால் உலக மக்கள் அரங்கனை பணிய
என்னருளை சத்தியமாய் பெறுவார் திண்ணம்
ஆறுமுக அவதார அரங்கன் புலம்பும்
அனைத்து வார்த்தைகளும் அருள் வாக்காகும்
அருள் வாக்காகும் அவன் கூறும் ஆசியெல்லாம்
அகிலமதில் அவன் சொல்லை காப்பேன் அன்னை
இது நூல் மூலம் அன்னை யானும் அகில மக்களுக்கு
இனிய ஞான கோடி வரம் அருளுகின்றேன்
அருளுகின்றேன் காப்புத் தாரேன் அகிலத்திற்கும்
அன்னை என் ரூபமே அரங்கன் ரூபமாகி இருக்கு
தட்டாது போலி மத குருமார் கூட்டம் எல்லாம்
தரணியிலே மனம் மாறி அரங்கன் அடி பணிய காப்பேன்
காத்திடுவேன் அவர் செய்த தவறுகளை மன்னித்து
கருத்துடனே சூட்சுமத்தை அருளி விட்டேன்
அரங்கனை மனதளவில் இகழ்ந்தால் கூட
அன்னையான் அதர்வணகாளி ரூபம் கொண்டே அழிப்பேன்
அழித்திடுவேன் சடுதியிலே போலி மதவாதிகளை
அரசாளும் மன்னர் யாரும் அரங்கனை கண்டால்
சத்தியமாய் ஞானபண்டிதன் அருளை பெறுவர்
சக்தியான் சூட்சுமத்தை தெரிவித்து விட்டேன்
விட்டிட்டேன் விடமாட்டேன் தீயோரை இனியும்
விளம்பவே அரங்கமுனி மனம் நொந்திட்டால்
அகத்தியரும் நந்தியும் போகமுனியும்
அகப்பேயர் தேரையர் சிவவாக்கியரும் அழுவர்
அழுதிடுவர் தேவர் மூவர் சப்தரிஷி கணங்கள்
அன்னையானும் மகா காளி ரூபம் தரிப்பேன்
பிரளய காலியாக மாறி நான் நின்று
பிரணவ குடிலாசானை இகழ்வோரை அழிப்பேன்
அழித்திடுவேன் அவரை நல்லாட்சி கலியுகத்தில் மலர
அருளும் ஆறுமுகன் ஆட்சியும் வளரும் மலரும்
சடுதியிலே ஆறுமுகன் அரங்கன் ஆட்சி உலகில்
சக்தியான் வேல் அளித்து ஏற்பட செய்வேன்
செய்திடுவேன் ஞான ஆட்சி இது உலகில்
சிறந்ததொரு நல்லாட்சி தொடர்ந்து நடக்கும்
ஜெகத்திலே புதிய கட்சி தோன்றுமப்பா
ஜெகத்திலே முருகனாட்சி மலருமப்பா
அப்பனே இது உலகில் பொய் களவு சூது வாது
அனைத்து தீயசெயல் செய்யும் மாந்தர் யாரும்
பூண்டோடு தானழிந்து தன் குலமும் அழிந்து
பூதலத்தில் மறைத்திடுவர் மீள நரகம் புகுவர்
புகுத்திடுவர் மட்டில்லா நெருப்பிலிட்ட புழுவாய் ஆவர்
புகன்றிட இது சனம் அரங்கனடி பணிந்தால்
தட்டாது ஆறுமுகனுடன் அன்னை என் காப்பு
தாமவர்க்கும் உண்டுதான் சத்தியம் பகர்வேன்
பகன்றிடுவேன் சக்தி வேறு சிவன் வேறு சித்தர் வேறல்ல
பாருலகில் ஒரே சக்தி அருள்ஜோதி சக்தி என்பேன்
அருட்பெரும் ஜோதியிலே அமர்ந்த தெய்வமும்
அருணையிலே வாழுகின்ற அருணாச்சல தெய்வமும் அதுவே
அதுவேதான் அரங்கன் வடிவில் அருட்க்குடிலில் வாழுதப்பா
அடியவன் விஜயகுமார் தீதல (திருவண்ணாமலை) ஒங்காரக்குடிலும் உள்ளதப்பா
அரங்கன் இயக்க இயங்கும் தீதல குடிலும் அறக்குடிலாய்
அரங்கன் புகழை பாடி தாங்கி ஓடும் ஓடும்
ஓடுமே உலகெலாம் தீதல குடில் பெருமை
ஓங்கார ஆறுமுக அரங்கன் வாழும் குடில் இதுவே
தானவனும் தவநேரம் ஆதிபரம அணுவில்
தட்டாது கலந்துமே தீதல குடிலை இயக்குகின்றான்
இயக்குகின்றான் உலகையே தான் விரும்ப
இயல்பாக குழந்தை போல் விளையாடும் தருணம்
புன்முறுவலில் உலக மாற்றம் செய்து முடிப்பான்
புண்ணியரே அவன் அருகில் நெருங்க முடியும்
முடியுமே கலியுக தீமை கொடுமை தோஷம் இவனால்
முடியுமே இவன் தன் ஆள்காட்டி விரல் நீட்ட
தக்கதொரு தருணத்தை தேவர் கூட்டம் மூவர் கூட்டம்
சித்தர் கூட்டம் காலமதை விரைந்து நடத்திட காத்திருக்கார்
காத்திருக்கார் உலகில் வாழ் அனைத்து மத இறைவரெல்லாம்
காத்திருக்கார் சண்முகனும் தன் ஞான படையினுடனே
ஆகவே அரங்கன் அடி பணியும் மக்கள் எல்லாம்
ஆவாரே சித்தராக திண்ணம் திண்ணம்
திண்ணமாக நானுரைத்த மகா ரகசியத்தை
தட்டாது தவ மகனும் ஞானத்திருவடி நூல் மூலம்
தெரிவித்தே அரங்கனடி திருவடி தீட்சை பெற்று
தரணியிலே அகத்தியர் நாமம் பரப்பி மகிழ்வான்
ஆதிசக்தி அன்னை என் ஆசி மேலுமுண்டு முற்றே.
-சுபம்-
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment