Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Sunday, 2 April 2017

இக்கலியுகத்திலே கும்பனாம் அகத்தியரும், ஆறுமுகனும் உமது வடிவமே மகான் சுகப்பிரம்மர்!

சுகப்பிரம்மர் யானும் கூறுகிறேன் அற்புதமகா ஞானி அரங்கமகா ஞானயோகி வாழும் இந்த ஓங்காரக்குடில் உலகின் மிகச்சிறந்த பரிகாரத் தலமப்பா.




ஆதலின் அவரவர் வாழ்வினிலே உண்டான நவக்கோள் குற்றம் (கிரக தோஷம்), ஊழ்வினை (கர்மவினை), குற்றம் செய்வினை துன்பங்கள் (முன்சென்ம பாவங்களால் இச்சென்மத்தில் ஏற்படும் இடர்களும் துன்பங்களும்) மனிதன் வாழ்வை பாழ்படுத்தும் பிறர் தமக்கு செய்கின்ற வஞ்சனை செயல்கள், பொறாமையினால் ஏற்படும் கண்ணெரிப்பு கோளாறு (கண்படுதல்) என்றே பலவாறாய் தமது வினைகளாலும் பிறர் நமக்கு அளிக்கின்ற இடையூறுகளினாலும் துன்பங்களை கண்டவர்களெல்லாம் இவ்வுலகினிலே கலியுகத்திலே சித்தர்களெல்லாம் ஒன்று கூடியே அரூபநிலை நின்று அகலாது தங்கி அருள் செய்கின்றதும் கலியுகத்தின் பரிகாரத்தலமுமாகியதும், உத்தம ஞான தொண்டர்கள் சூழ்ந்த ஞானஆலயமும், உலகமகா இரட்சகன் யுகமாற்ற தலைவன் ஞானவான் ஆறுமுக அரங்கமகா ஞானதேசிக குருமகா சன்னிதானம் வாழ்கின்ற உத்தம ஞான ஆலயமும் ஆன ஓங்காரக்குடிலே அவர்களுக்கெல்லாம் மிகச்சிறந்த பரிகாரத்தலமாகும்.



ஆதலின் மக்களே சுகப்பிரம்மன் வாக்கை கேளுங்கள். உத்தம நன்மை சொல் உரைப்பேன் உங்களுக்கு, உண்மையுடன் அரங்கன் வாழும் ஓங்காரக்குடில் தனக்கு அன்புடனும் பயபக்தியுடனும் செல்ல வேண்டும். இவ்வுலகிலே குடில் தனக்கு செல்லும் முன்பதாக அவரவரும் அவரவர் இல்லம் தனிலே முற்றுப்பெற்ற ஞானிகள் தம்மை மனதார வணங்கி போற்றி துதித்து குடில் பிரவேசம் செய்திடவே ஞானபூசைகள் தனை செய்திடல் வேண்டும், செய்து மனமெல்லாம் முருகன் அருள் நிரம்பியே ஞான தாய்வீட்டை கண்டு பக்தன் பரவசத்துடன்  செல்வது போலவே ஆறுமுகனார் உறையும் படைவீடாம் அரங்கன் அருளாலயமாம் அருளொளி வீசி அறியாமை அகற்றும், அற்புத ஞான சுகமளிக்கும், உத்தம தொண்டர் சூழ் ஓங்காரக்குடிலிலே பயபக்தியுடன் மனம் ஒடுங்கி புலன் ஒடுங்கி சர்வபலம் மிக்கதொரு சக்தி எல்லையிலே பிரவேசிப்பதாக எண்ணியே பணிவுடன் குடில் பிரவேசம் (குடில் எல்லையிலே நுழைந்திடல்) செய்திடல் வேண்டும்.



அவரவரும் பயபக்தியுடன் குடில் பிரவேசம் செய்துமே ஆங்கே ஞானிகள் அருளாசியினால் சமைக்கப்படுகின்ற அற்புத சுகமளித்து ஞானமும் அளித்து வினை போக்கி புண்ணியவானாகவும் ஆக்கவல்ல குடில் உணவினை அந்த ஆறுமுகனே உமக்கு அமுது படைப்பதாக எண்ணி வணங்கி உணவளித்த அந்த ஆண்டவர் ஆறுமுகனுக்கும், அரங்கனுக்கும், அருள் செய்திட்ட ஞானிகளுக்கும், அமுது படைத்திட்ட குடில் ஞானதொண்டர் தமக்கும் நன்றிகளை மனமார உள்ளத்துள் கூறி ஞானிகளை மனதினுள் எண்ணியே இந்த உணவினை அருள் உணவினை அடியேன் பெற்றிட என்ன பாக்கியம் செய்தேனோ என்றே வினைதீர்க்கும் உணவளித்த ஆண்டவனுக்கு புகழ்ச்சி செய்துமே பக்தியுடன் உண்ண வேண்டும்.



ஏனெனில் அரங்கனின் ஞானக்குடிலிலே ஒருவருக்கு ஒரு வேளை உணவு உண்ண கிடைக்கின்ற வாய்ப்பு என்பது அவர்கள் இதற்கு முன் செய்திட்ட பலசென்ம புண்ணியத்தாலும் அதன் பயனாய் முதுபெரும் ஞானத்தலைவன் அவனுக்கு அளித்திட்ட மகாபெரும் கருணையினாலும் தான், அவன் குடிலிலே உணவு உண்ணும் பாக்கியத்தை பெறுவான்.



குடிலிலே உணவு உண்ண, கொடுத்து வைத்திருக்க வேண்டும். உணவு உண்ண வாய்ப்பு அவ்வளவு எளிதாகவோ சாதாரணமாகவோ யாருக்கும் கிடைத்திடாது. அப்படிப்பட்ட உயர்ஞானமளித்து வினைக்குற்றம் போக்கி சுகமளிக்கும் உணவினை ஆறுமுகனின் அருட்பிரசாதமாக மாறிடவே அவர்தம் திருவடிகளை மனதினுள் எண்ணி நாமசெபம் சொல்லி வணங்கி உண்டு அதன்பின்னே உயர் ஞானஆற்றல் சூழ்ந்து அருளாற்றல் நிரம்பிய அரங்கனின் தவக்குடில்தனை நாடிச்சென்று ஆங்கே ஆறுமுக அரங்கன் தவதடத்தின் முன் அமர்ந்துமே உள்ளம் கசிய உள்ளமெல்லாம் அரங்கனை நிரப்பி அரங்கதோற்ற ஞானபீடத்தினிலே அவரவரும் மனம் ஒன்றி ஒருசில நிமிடங்களேனும் தியானங்கள் செய்து அதன்பின் உத்தம மகாஞானசன்னிதானம், ஞானயோகி ஆறுமுக அரங்கமகா தேசிகர் தம்மை தாழ்ந்து பணிந்து பயபக்தியுடன் வணங்கி, வீழ்ந்து வணங்கி திருவடி போற்றி துதித்து சற்குருவாய், சொற்குருவாய், ஞானகுருவாய் மனதினிலே ஏற்று குருவாய், முருகனாய் வீற்றிருக்கும், அரங்கரிடத்து தீட்சை உபதேசம் தனை பெற்றிடல்
வேண்டும்.



தீட்சை உபதேசம் தனை பெற்றுமே அதன்பின்னர் அவரவரும் கடைத்தேறிடவே அற்புத ஞான வீட்டின் திறவுகோலாம் ஜீவதயவினை பெற வேண்டியே அதற்கு விடையாக உள்ள தருமத்தினை செய்திட துவங்கிட வேண்டும். ஆதலின் தருமம் துவக்கிட குடில் தனிலே நடக்கின்ற தரும அறப்பணிகளுக்கு அவரவரால் இயன்ற அளவு தாராளமாய் பொருளுதவிகள் செய்தும், தொண்டுகள் செய்தும் வருதல் வேண்டும்.



இவ்விதமே செய்து தொண்டுகள், தருமங்களை குடில்தனிலே தொடர்ந்து செய்து வருகின்ற மக்களுக்கெல்லாம் அவர்தம் வாழ்வினிலே தீங்குகள் ஏது? துர்பலன்கள்தான் ஏது? அப்படி நேருமாயின் அது அவர்கள் தொண்டின் குறைபாடேயாகும், பூசைகளின் குறைபாடேயாகும், முன்சென்ம வினைக்குற்றம் மிகுதியினாலே யாம், என்றே அறிந்து கிடைத்த வாய்ப்பை நழுவவிடாது மீண்டும் மீண்டும் தொடர்ந்து ஞானிகள் திருவடிகளை மிகச்சிரத்தையுடன் பற்றிடல் வேண்டும்.



அப்படி பற்றித் தொடர்ந்திட ஏதுவான ஞான வாழ்வும் எல்லா பாதுகாப்பும் கண்டு இவ்வுலகினிலே பெருமைபட வாழ்ந்து இவ்வுலகிலே அவர்களெல்லாம் சித்தியையும் முக்தியையும் பெற்று ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள். அரங்கன் திருவடியைப் பற்றி ஆறுமுக அரங்கனருளைப் பெற்று உயர்வீர்கள் ஞானவாழ்வுதனிலே, பிறவிப்பெருங்கடல் தனை கடந்து பிறவாநிலைதனை அரங்கன் அருளால் கடந்து பெறுவீர்கள்உரைக்கின்றார் மகான் சுகப்பிரம்மர் உலக நலம் கருதி.
-சுபம்-

     

Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html






No comments:

Post a Comment