முருகப்பெருமான் துணை
மகான் ஆறுமுக அரங்கர் அருளுரைகள்
முருகப்பெருமான்
திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்....
முருகனே
தமிழை உருவாக்கியவன், முருகனே ஞானத்தையும் உண்டாக்கியவன்,
முருகனே அனைத்து கலைகளுக்கும் தலைவன், தமிழே ஞான
மொழி, தமிழ் கற்றால்தான் ஞானம் பெற முடியும் எனும் சிறப்பறிவை
பெறலாம்.
உயிர்க்கொலை
செய்து புலால் உண்பது பாவம்தான். ஆனால் அதைவிட பாவம் எதுவெனில் தெய்வத்தின் பெயரால் உயிர்க்கொலை செய்வது. அதனினும்
பெரும் பாவம் எதுவெனில் ஞானம் அளிக்கும் தமிழ் கற்றும் தமிழனாக
பிறந்தும் தமிழ் தலைவன் முருகனைப் பற்றி அறியாதிருப்பது பெரும்
பாவமாகும் என்பதை
அறியலாம்.
தமிழ்
கடவுள் முருகனே ஞானபண்டிதனாக இருப்பதையும், முருகப்பெருமான்
திருவடி பற்றி மனமுருகி பூஜித்து வணங்க வணங்க உயிர்க்கொலை
செய்து புலால் உண்டதால்தான் நமக்கு ஞானம் தடைபட்டதை உணர்வார்கள்.
புலால்
மறுத்து, சுத்த சைவ உணவை மேற்கொண்டாலன்றி ஞானத்தில் முன்னேற முடியாது என்பதையும் அறிந்து, சைவ உணவினை மேற்கொண்டு
முருகனது திருவடி பற்றி பூஜித்து எல்லா உயிர்களிடத்தும் நீக்கமற நிறைந்துள்ள
முருகனது ஆசிபெற மாதம் ஒருவருக்கேனும் பசித்த ஏழைக்கு பசியாற்றுவித்தும்,
எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்தியும் ஆசியை பெற்றால்
ஞானம் பெறலாம் என்பதையும் அறிந்து முருகனது கருணையாலே ஞானவழிக்குரிய மார்க்கமும் அதற்குரிய தக்க துணையான சொற்குருவையும், சற்குருவையும் முருகனருளால் பெறுவார்கள்.
சொற்குரு
வழிகாட்டலினாலே சற்குருவை கண்டுகொண்டு ஞானவழிதனிலே சென்று
ஞானமும் பெறுவார்கள் என்பதை அறியலாம்.
.................
இன்பமாம்
முருகனின் இணையடி போற்றிட
துன்பமும்
இல்லை துணையாம் இணையடி.
தஞ்சமாம்
முருகனின் தாளினை போற்றிட
வஞ்சகம்
இல்லை வாழ்வும் செம்மையே.
No comments:
Post a Comment