Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Friday, 14 June 2019

மகான் ஆறுமுக அரங்கர் அருளுரைகள்!

#உடல் மாசு #உயிர் மாசு

ஆன்மா இந்த உடம்பில் இருக்கும்போது, ஏன் மாசுபட்டதென்றால், உடல் மாசு காரணமாக உயிர் மாசு வந்தது.

உடல் மாசு என்றால் என்னவென்று கேட்டான்? மல, ஜல, சுக்கிலம். மல, ஜல, சுக்கிலம் எப்படி வந்தது? பசி. பசிக்கு என்ன காரணமென்று கேட்டான்? மூச்சுக்காற்றின் இயக்கம்.

நாளொன்றுக்கு 21,600 முறை வந்து போகின்ற மூச்சுக்காற்று. இந்த மூச்சுக்காற்றே பசிக்குக் காரணம். பசிக்கு உணவு தந்தால் அது சத்து அசத்தைப் பிரிக்கும். அசத்தாகிய மல, ஜலத்தை வெளியே தள்ளும். பிறகு 72000 நாடி நரம்புகளை முறுக்கேற்றும். அப்படி முறுக்கேற்றினால் மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகிய ஐம்புலன்களும் வேலை செய்யும்.

பிறகு மனம், புத்தி, சித்தம், அகங்காரம் ஆகிய அந்தகரணங்களும் வேலை செய்யும். ஆக பொறி ஐந்து, புலன் ஐந்து இதெல்லாம் தத்துவங்கள்.

இந்த உடம்பு என்பது காமதேகம். இந்த காமதேகத்திற்கு காரணம் மும்மலக் குற்றம்தான். மும்மலக்குற்றத்தை ஆசான் துணை கொண்டு மூலக்கனலை எழுப்பினால், மும்மலக்குற்றம் அற்றுப்போகும். மும்மலக்குற்றம் அற்றுப்போகும்போது அவன் மரணமிலாப் பெருவாடிநவை பெறுவான். அப்படி பெற்றவன்தான் குரு.

இது போன்ற வாய்ப்பை பெற்றவர்கள் நவகோடி சித்தர்கள். அதில் ஆசான் அகத்தீசர்தான் முதன்மையானவர். இதற்கெல்லாம் தலைவன் ஆசான் ஞானபண்டிதன். உலகத்திற்கே தலைவன் முருகன்தான். ஆசான் ஞானபண்டிதன் ஆசியில்லாமல் முடியாது. முருகா என்று சொல்வதற்கே மூன்று கோடி தவம் செய்திருக்க வேண்டும்.
முருகா எனவோர்தர மோதடியார்
முடிமேல் இணைத்தாள் அருள்வோனே
என்று சொல்கிறார் ஆசான் அருணகிரிநாதர். முதற்தலைவன் சுப்ரமணியர். அவரை வணங்கினாலும் குருவின் ஆசியில்லாமல் ஒருவன் கடைத்தேற முடியாது.

ஆக குரு என்று சொல்லப்பட்டவன் மும்மலக்குற்றம் அற்றவன். பொருள் பற்று அற்றவன், ஜாதி துவேசம் அற்றவன். உண்மைப் பொருள் தெரிந்தவன். எதையும் செய்வான். ஆணைப் பெண்ணாக்குவான். பெண்ணை ஆணாக்குவான். எல்லா வல்லமையும் அவர்களுக்கு உண்டு. அவர்கள்தான் குரு.

No comments:

Post a Comment