# சித்தமார்க்கம் (உண்மை ஆன்மீகம்)
உலகில் மனிதராய் பிறந்த அவரவரும் அவரவர்வினை வென்று பொல்லா மாயைசூழ்
இப்பிறவிகளை விட்டொழிந்து கடைத்தேறிய அவரவரும் தோற்றிய
தோற்ற மூலமாம் ஆதிசிவத்தோடு அற்புதமாய் இரண்டற கலந்து இன்புறவே விரும்புகின்றனர்.
ஆயினும் அவரவர் தேர்ந்தெடுக்கின்ற
மார்க்கமும், வழிகளும், நெறிகளும், துணைகளும்,
வழிநடத்தல்களும் மெய்யானதாய் அமைந்திடாமல் அவரவர் மனநிலைக்கும்
அவரவரின் மதிநுட்பத்திற்கு
ஏற்றார் போல தேர்ந்தெடுத்து தம்
அறிவின் கண் கூறியதை உண்மை
அதுவே சிறந்தது என்றே தம் அறிவை பேரறிவாய் எண்ணியே உண்மை உணராது பொய்யான வழிகளிலே, நெறிகளிலே
போலியான வேடதாரிகளின் பசப்பு வார்த்தைகளிலே மயங்கி அவர்தம்
புறத்தோற்ற பொலிவினால், இனிமையான வாளினும் கூரான சொற்களை
கண்டு மயங்கி அவர்தம்மை உண்மை குருநாதராக கடவுளின் அவதாரமாகவே
எண்ணி உண்மையறியாத மூடர்தம் வார்த்தைகளை தேவவாக்காக
எண்ணியே பின்பற்றி தானும் கெட்டு தன்னை சார்ந்தவர்களையும்
அத்தீய நெறி சாரச்செய்து தான்
நரகத்திற்கு செல்வதோடு தன்னை சார்ந்தோரையும் நரகத்தில் தள்ளி பெரும் பாவிகளாக ஆகியே
எந்த நோக்கத்திற்காக வந்தோமோ அந்த நோக்கம் நிறைவேறாமல்
எதிர்விளைவுகளால்
அவர்தம்
தீயவினைகளால் பிறவிச்சூழலில் மாட்டி மீளா பிறவித்துயரில்
ஆழப்புதைந்து அல்லலுறுகின்றனர்.
ஏனெனில்
அவர்களெல்லாம்
உண்மை ஞானம் பற்றிய அடிப்படை ஞானம்கூட, அடிப்படை அறிவு இல்லாததினாலே இவ்விதமே நடந்து வீணில் கெடுகின்றனர். ஆதித்தலைவன்,
ஞானத்தலைவன், ஞானத்தை ஞானமெனும் அதியற்புதமான
ஒரு மகாசக்தியை, பிறவித்துயர் ஒழித்து மரணமில்லாப்பெருவாழ்வை
அருளுகின்ற வழித்துறையை
நெறியை ஆதிமுதலாய்
தோற்றுவித்தவன் ஆறுமுகனாம் முருகப்பெருமானார்
என்பதையே
அறியாதோர் அவர்கள்.
முருகப்பெருமானே
இம்மனித வர்க்கத்தினர் தம்முள்ளே இயற்கையன்னையின்
அற்புதமான ஆசிகளைப் பெற்று ஞானத்தின் இரகசியம்
தன்னை முதன்முதலிலே கண்டு பிடித்து எந்த இயற்கை நம்மை
தோற்றுவித்து காத்து
இறுதியில் நம்மை வஞ்சித்து நமது இறப்பிற்கும் காரணமாகி
நின்று மீண்டும் அது பிறவிக்கு காரணமாகி
வளர்த்து அழித்து இவ்விதமே
பல்லூழி காலமாக உயிர்களை உடம்புகளை தோற்றி அழித்து மீளாப்
பிறவித் துயரினிலே ஆழ்த்தி வருவதினை கண்டும் அத்தொடர் இயக்கத்தினிலே மனித வர்க்கத்திற்கு மட்டுமே அந்த தொடர் இயக்கத்தினின்று மீண்டு எந்த
இயற்கை நம்மை தோற்றுவித்ததோ அந்த இயற்கையின்
அற்புத படைப்பின்
இரகசியத்தினை அதனின்று விடுபட்டு வெல்லும்
உபாயம்தனை மனிததேகத்தின்கண் உள்ளதை கண்டு அந்த வழியாக
அதியற்புத சூட்சும நாடிகளின் துணையாக மற்றெந்த உடலிலும் காணப்படாத உடல்உயிர் சேர்க்கைக்கு காரணமாக உள்ள நாடிகளைக் கண்டு
இயற்கையின் துணை கொண்டு இயற்கையளித்த காமதேகத்தைப் பற்றி அறிந்து அந்த காமதேகத்தினால் விளைந்திட்ட மும்மலக் குற்றமும் அதனால் விளைகின்ற வினைக் குற்றங்களும் அவ்வினைகளால் ஏற்படுகின்ற பிறவித் தொடர்புகளையும் தெளிவுற
அறிந்து வினைக்கு காரணமான மும்மலக் கசடுகளை வாசியாகிய பரமான்வாவின் துணை கொண்டு வாசியோகம் எனும் அரும்பெரும் யோகநெறி நின்று கசடான காமதேகத்தினை
உருக்கி உள்ளொளி பெருக்கி ஒளிதேகமாய் மாற்றி மரணமில்லாப்பெருவாழ்வை முதன் முதலில் பெற்றிட்டார்.
இவற்றிற்கெல்லாம் ஆதார சக்தியாய் ஆறுமுகனார் அடைந்திட அடிப்படை காரணமாக
அமைந்தது இயற்கையின் கொடையே ஆகும். அந்த இயற்கை அவர் தமக்கு கொடையாய்
மரணமில்லாப்பெருவாழ்வை அளிக்க
காரணமாய்
இருந்தது ஆறுமுகனாம் முருகப்பெருமானார் இவ்வுலக உயிர்கள்
பால் செய்த அளவிலாத அளவிலாத பெரும் கருணைகளே, அன்புகளேயாம்.
ஆறுமுகப்பெருமானின்
அத்தீவிரமான இரக்கமும் அன்புமே அவர்தம்மை ஒளிதேகம் பெறச் செய்தது. இவ்விதமே அவர் சுமார் 27,000 (இருபத்தேழாயிரம்
வருடங்கள்)
பாடுபட்டன்றோ இவ்வற்புத
நிலைதனை அடைந்திட்டார். அன்று முதலாய்
இன்று அரங்கர் வரை யாவராயினும் இத்துறையிலே நுழைந்து கடைத்தேறிட
குறைந்தது 27,000 ஆண்டுகளேனும் தவம் செய்திட்டாலன்றி இவ்வற்புத
வாய்ப்பை பெற இயலாது.
அவ்விதமே
ஞானபண்டிதன் அறிந்திட்ட
இந்த
அதியற்புத ஞான இரகசியத்தை தமக்கு
தம் தவத்திற்கு முழுமுதலாய் முற்றிலும் உதவியாய் இருந்த தமது மூத்த சீடராம்
அகத்தியம் பெருமானாருக்கு
தமிழ் தோற்றுவித்து ஞானோபதேசம் செய்தார்.
அகத்தியரும்
இம்மனித சமுதாயத்தின்
மீது அளவிலா கருணை கொண்டுமே அகத்தியர் குலம்தனை தோற்றுவித்து
அன்றுமுதல் இவ்வற்புத ஞான இரகசியங்கள் குருசீட
பாரம்பரியமாக
வாழையடி வாழையென தொன்று தொட்டு
உபதேச வழிதனிலே தொடர்ந்து வந்து பலகோடி சித்தரிஷி கணங்களை தோற்றுவித்துள்ளது.
இவ்விதமே
வருகின்ற திருக்கூட்ட மரபினரை சார்ந்த ஒருவரால்தான் உண்மைஞானம்தனை உபதேசிக்க முடியும். அவரே அறம், பொருள்,
இன்பம், வீடுபேறு ஆகிய நான்கு படித்தர நிலைகளை கற்றுணர்ந்தவராவார். அவரே நம்மை காத்து இரட்சித்து கடைத்தேற்ற வல்லவராவார். அவர் தம்மாலே மக்கள் வினைகளை போக்கி புண்ணியவான்களாக்கி யோகநெறி வந்து ஞானமளித்து
காத்திட முடியும். அவ்விதமே வாழையடி வாழையென வந்து உதித்திட்ட
திருக்கூட்ட மரபினராம் அரங்கமகாதேசிகர். இக்கலியுகம் காத்திடவே ஆசான் ஆதி ஞானத்தலைவன் ஆறுமுகனாவார்.
ஆறுமுகப்பெருமானே
ஆசான் அரங்கர் வடிவினிலே தோன்றி அகிலத்தினை காத்திட
பொல்லா மாயைசூழ்
கலியுகத்தினை வென்று ஞானயுகமாக மாற்றிடவே
அவதாரமாக வந்துதித்துள்ளார்.
அவ்விதமே
உள்ள உத்தம மகா ஞானயோகி அரங்கர்
தம்மை விடுத்து இவ்வுலகினிலே
கலிகாலத்தே வேறு சற்குருநாதர் ஜென்மத்தைக்கடைத்தேற்ற
வல்லார் ஒருவர் யாவரும் இல்லையெனலாம்.
ஆயினும்
மற்ற மற்ற பக்திமான்கள், யோகிகள், ஞானம் அறிந்தோர், உபதேசிப்போர்,
பண்புள்ளோர், சமுதாய சான்றோர்கள் என அநேகம் அநேகம்பேர்கள்
இவ்வுலகினிலே இருக்கலாம்.
அவர்களெல்லாம் நன்னெறி புகட்டவோ அவற்றைப்பற்றிய செய்திகளை
அழகுற சொல்நயத்தோடு சொல்லத்தான்
முடியுமே தவிர அவர்களால் தானும் கடைத்தேற இயலாது,
தம்மை
நாடி வந்தோரை கடைத்தேற்றவும் இயலாது.
ஏனெனில் அவர்களது
அறிவானது கற்ற நூலறிவே அன்றி
உண்மை ஆதிதலைவன்
அருளிய ஞானஅறிவன்று. ஆயின்
மக்களெல்லாம் உண்மையறிய கடைத்தேறிட கடவுளை அடைய விரும்பியே அவரவரும் மார்க்கம் தேடி
அலைகின்ற அந்தவித தேடல்தனை எண்ணிறந்த
மயக்கவாதிகள் பயன்படுத்தி
அம்மக்களிடத்தே பொய் கபட வேடமிட்டு அவர் தம்மை மயக்கி தாம்
ஏதோ தெய்வத்தின் பிரதிநிதி போலவும்,
தாமே இறைவனாகவும், தாம் இறைவனுடன் தினம்தினம் பேசுவதாகவும்,
தாம் இறைவனுடன் கலந்து விட்டதாகவும், தாம் இறைவனுடைய செய்திகளை உங்களுக்கு சொல்ல வந்த இறைதூதன் என்றும்,
தாமே அனைத்தும் கற்று தேர்ந்தவனென்றும், தாமே பரப்பிரம்மம் என்றும்,
தாமே அவதாரம் என்றும், சிற்சில மாய கண்கட்டு வித்தைகளை
காண்பித்து
அதியற்புத சித்திகளை அடைந்தவர் போலவும், சிற்சித்திகளை மந்திர
உச்சாடனங்கள் வாயிலாக பெற்றுமே மக்களை பயமுறுத்தி பயமுறுத்தல்
ஆன்மீகம் நடத்தியும், மாயாஜாலங்களை காண்பித்தும், கண்கட்டு வித்தை நடத்தி மக்களை மயக்கியும், சொல்வன்மையால் மக்களை
மயக்கும்படி இனிமையாக பேசியும் மக்களை மயக்கி பொருள்பற்றுடன்
பொருள்மீதே கண்ணாக கொண்டு வஞ்சித்து பொருள் பறித்து வாழ்கின்றனர்.
இவ்விதமே
பொருள் பறிப்பதோடு தமக்கு அனைத்தும் தெரிந்ததுபோல் காட்டி,
தான் தவறான பாதையில் செல்லுவதோடு தம்மை நாடிவந்தோரையும்
தவறான பாதையில் செலுத்தி தானும் நரகத்திற்கு போவான்,
தம்மை நாடிவந்தோரையும் நரகத்தில் தள்ளி விடுவான் மகாபாவி. இப்படியுள்ள
மகாபாவிகளிடம் அகப்பட்டு அவர்கள் துணையுடன் ஞானம் அடைகிறேன் என்றே அவர்தம்மை தொடர்ந்து சென்று உடல் நலிந்து மனம் பயமுற்று
மனக்குழப்பங்கள் ஏற்பட்டு
ஆன்மீகத்தின் மேல் அளவிலாத வெறுப்புற்று அவர்களெல்லாம் அவர்களது பொருளையும், சொத்துக்களையும்,
மானம் மரியாதைகள் என அனைத்தையும் இறுதியில் இழந்து
தீயநெறி சென்று ஏமாந்து இயலாதவனாய் கலக்கம் கொண்டுள்ளனர் மக்கள் பலர்.
அவ்விதமே
கலக்கம் கொண்டவர்களும் தாம் சென்று வீழ்ந்த
பாதை தவறாயினும்
சரி, கவலை வேண்டாம் மக்களே!
தாம் செல்ல நினைத்தது சரியே.
ஆயினும் சென்ற வழி தவறாம் ஆதலினின் நன்னெறி புகட்டி அறம், பொருள்,
இன்பம், வீடு பேறு எனும்
நான்கும் காட்டி உண்மை ஞானம் உணர்த்தி தெளிவித்து கடைத்தேற்றவல்ல இக்கலியுகத்தின் யுகமாற்ற சதாசிவ சற்குரு அரங்கமகா தேசிகர் தம்மை இன்றேனும் மறவாமல் உண்மையுடன் பயபக்தியோடு பணிந்து வணங்கி துதித்து தாம் செய்த பாவங்களுக்கெல்லாம்
பாவமன்னிப்பு கோரியே சற்குருநாதன் அரங்கர் திருவடி
பணிந்து எம்மை ஏற்றுக் கொள்ளுங்கள் சற்குருவே என்றே மனமார முழுமனதுடன்
குருவாக ஏற்றுமே திருவடிக்கு சரணாகதியாக தம்மை ஒப்புவித்தால்
கருணைமிகு தயாள தெய்வம் அரங்கரின் கருணையினாலே அவர்களெல்லாம்
கண்டிப்பாக காப்பாற்றப்பட்டு கடைத்தேற்றப்படுவார்கள்.
ஆதலின்
அவர்களெல்லாம் உத்தம ஞான ஆலயமாம் ஓங்காரக்குடில்
தனக்கு தவறாது சென்று வணங்கி ஆங்கே அரங்கர் மேற்கொள்ளும் அறப்பணிகளுக்கு
அவரவரால் இயன்ற அளவு தொண்டுகள் செய்தால் தொண்டுகள்
செய்ய செய்ய அவர்களைப் பற்றிய தீயவினைகள் அவர்களுக்குண்டான
செய்வினைகள் படிப்படியாக அகன்று திடமான மெய்ஞானம் கைகூடி வாழ்வினிலே ஆன்மீகத்திலே நம்பகம் ஏற்பட்டு முன்னேறுவதற்கான
மேலான வழிகள் கிடைக்கப்பெற்று சிறப்பான வாழ்வை
வாழ்வார்கள்.
சிறப்பறிவுகளெல்லாம் உலகப்பேராசான் அற்புதமகாஞானிஅரங்கனருளால் அவர்களெல்லாம் நன்கு கைவரப்பெற்றுமே இவ்வுலகினிலே அறியாமை நீங்கி
தெளிவான சிந்தனைகளைப் பெற்று படிப்படியாக பூரணமான முழுமையடைந்த ஞானம்தனை அரங்கமகாதேசிகரின்
வழிகாட்டுதலிலே அவர்தம்
நெறிகளிலே நடந்து கிடைக்கப் பெறுவார்கள். அரங்கரின் அருளினாலே
மரணமில்லாப் பெருவாழ்வின் சூட்சுமங்களை அறிந்து அதை அடைகின்ற முறைமையும் அதன் வாசலினையும் கண்டிடுவார்கள்.
அதன் வாசலாம்
சுழிமுனைக் கதவினை அறிந்து சுவாசம் எனும் வாசிக்குதிரைதனை
அடக்கி ஆட்சி நடத்திட அரங்கரின் மார்க்கமே அவசியமானதென்றும்
மற்ற மற்ற மார்க்கமெல்லாம் தேவையற்ற மார்க்கம் என்றுமே உணர்ந்து வாசி நடத்தி செல்ல அரங்கமார்க்கமே உகந்ததென்ற
தெளிவும்,
அரங்கமார்க்கத்தின் மாட்சிமைகளையும், அற்புதங்களையும், ஆற்றல்களையும்
தெளிவாக உணரப்பெறுவார்கள். அவ்விதம் உளமார தெளிந்து
அறியப்பெற்று மனத்திடமுற்று
இவ்வுலகினிலே தொடர்ந்து தம் கண்ணுக்கு
புலனாகா ஆன்மாவை அறிவால் உணர்ந்து கட்டுப்படுத்த இயலா ஆன்ம
செயல்களை கட்டுப்படுத்தி ஆன்மாவை அறிவால் ஆட்சி புரியும் வல்லமைகளையும்
அரங்கனருளால் பெறுவார்கள்.
அவர்களெல்லாம்
அரங்கரின் அதியற்புத துணையினாலே வழி நடத்துதலாலே
ஞானவழியினில்
சென்று கலியிடர் வென்று ஞானவான் நிலைதனை
அரங்கனருளால் அடைந்து வெற்றியும் பெறுவார்கள். ஆதலினால்
அரங்கனே ஞானமளிக்க வல்லான் அரங்கர் திருவடியைப்
பற்றி வினையொழித்து கடைத்தேற குடில் தனக்கு விரைந்து வந்து
கடைத்தேறுவீர் என அழைப்பு விடுக்கிறார் மகான் ஆனாய நாயனார்.
-சுபம்-
முருகா
என்றால் தம்மைச் சார்ந்தோரை மதிக்கக் கற்றுக்கொள்வான்!