ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி !
ஓம் மஸ்தான் திருவடிகள் போற்றி !அகத்தியர் சதகம்
அட்டமா சித்தி தந்து அருள்புரியவும்
சித்தர்கணம் எல்லாம் எனக்கு அருள் இரங்கவும்
சித்தம் வைத்து அருள் புரியவும்
பாவி அடியேன் செய்த பாவங்களெல்லாம்
பறந்தோட அருள் புரியவும்
பக்குவம் அறிந்து எனைப் பக்குவ விசேடனாய்ப்
பண்ணி வைத்து அருள் புரியவும்
நாவிட்டு உரைக்க ஒணாச் சோதி நயனத்தோடு
நடனமிட அருள் புரியவும்
நம்பினேன் ஐயனே நட்டாற்றில் என் கைகள்
நழுவிடாது அருள் புரியவும்
மாவேகமாக மெய்த் தவராஜ சிங்கமே
வரவேண்டும் என்றன் அருகே
மாகுணங்குடி வாழும் என் அகத்தீசனே
மவுன தேசிக நாதனே.
-மகான் மஸ்தான் சாகிப்
No comments:
Post a Comment