ஓம் அகத்தியர் திருவடிகள் போற்றி !
ஓம் மஸ்தான் திருவடிகள் போற்றி !
அகத்தியர் சதகம்
திக்கற்ற பாவியைப் பக்கத்தில் வைத்துரட்
சித்துநல் லருள் புரியவுந்
திருவுளம் இரங்கி நின்றிருவடி யளித்துத்
தினந்தினம் மருள் புரியவுந்
கைக்குள் வளர் நெல்லிக்கனிக்கு நிகராகக்
கடாட்சித்து னருள் புரியவுந்
கன்மம் தொலைத்தே கடைத்தேற்றி வைத்துநற்
கதிதந்து னருள் புரியவுந்
துக்க கடற்கடந் தக்கரைப் படவெனைத்
தூக்கிவிட் டருள் புரியவுந்
துன்பங்க ளெல்லாந் தொலைத்தடிமை யுன்பதந்
தொழுதிடற் கருள் புரியவும்
வைக்குமனம் வைத்து மெய்த் தவராஜ சிங்கமே
வரவேண்டும் என்றன் அருகே
மாகுணங்குடி வாழும் என் அகத்தீசனே
மவுன தேசிக நாதனே.
-மகான் மஸ்தான் சாகிப்
No comments:
Post a Comment