
உலகில் பல மாற்றங்களை சந்திக்கவிருக்கின்ற இந்த வருடத்தில் மாற்றங்களைக் கருதி அடுத்தடுத்து தொடர்ந்து இதுபோன்று நூல்களின் வாயிலாக உலக நலன் கருதி ஞானிகளாகிய நாங்களெல்லாம் தொடர்ந்து கூறி வருவோம்.
ஞானிகளே இச்செயல்களையெல்லாம் வழி நடத்தி வருவதால் ஞானதேசிகராம் அரங்கரை வணங்கி ஞானிகள் பூசையை அவசியம் எல்லா திசைகளிலும் நடைபெறும் படியாக செய்திடல் வேண்டும். எல்லாதிக்கும் ஞானிகள் பூசை நடைபெற நடைபெற உலகெங்கும் ஞானிகள் சார்ந்து உலக நன்மைகளை வீண்போகாதவாறு உலக மக்களுக்காக செய்து தருவார்கள்.
உலக மக்களின் மேன்மை கருதியே இந்தவித இரகசியத்தை உலகோர் அறிய எடுத்துரைக்கின்றேன் கமலமுனிவராகிய யான் இந்நூல் மூலமாக.
கமலமுனி யாம் உரைத்தபடி அரங்கமகாதேசிகர் வழியினை பின்பற்றி அரங்கரின் சீடர்களெல்லாம் உலகமெங்கும் சென்று ஞானிகள் பூசையினை செயலாக்கி ஞானிகள் பூசையை நடத்திட வேண்டும். பூஜைகள் நடக்க நடக்க உலகிலுள்ள தீவினை சக்திகள் எல்லாம் வலுவிழந்து அழிந்து போகும். வருகின்ற காலங்களில் தீய குணங்களும், தீய செயல்களும் வலுவிழந்து தீய குணங்கள் உலகோரிடத்தினின்று வெளியேறி அவரவரும் நற்குணவான்களாகி, நலம் பயக்கும் ஞானிகள் ஆசி கிட்டி நல்வினைகள் பெருகி சுகவாழ்வு வாழ்வார்கள்.
ஞானமார்க்கத்தில் சிறந்த சேவை செய்கின்றவர்களெல்லாம் மாறுபாடுகளின்றி அனைவரும் ஒன்று கூடி இவ்வுலகை ஞான சித்தர் லோகமாக மாற்றி இணையில்லாத தேவலோகம் போல இனிமையாக இவ்வுலகை மாற்றி அருள் புரிவதற்காக ஞானிகளெல்லாம் கருணைகொண்டு அருள் செய்வார்கள்.
ஞானவானாம் அரங்கரினால் வெளியிடப்படும் தவநூலாம், ஞானம் சொல்லும் ஞானநூலாம் “ஞானத்திருவடியை” உலகெங்கும் பரப்பி அந்நூலை மற்றவர்களும் வாசிக்கின்ற வண்ணம் அந்நிய மொழிகளிலும் மொழிபெயர்த்து மற்ற மொழி பேசும் மக்களுக்கும் வழிகாட்டி அவர்களும் ஞானவழி செல்ல உறுதியுடன் அன்பர்கள் செயல்பட அரங்கமகாதேசிகரின் புகழ் உலகளாவி பரவி உலகெல்லாம் ஞானிகளை பற்றியும் ஞானவழித்துறை பற்றியும் அறிந்து ஞானிகள் பூசை உலகெலாம் பரவி நிலைத்து நின்று உலகமே இந்த ஞானத்தின் சூட்சுமங்களை அறிந்து, அரங்கரை அறிந்து, சற்குரு அரங்கரே என உணர்ந்து உத்தம ஞானி அரங்கமகாதேசிகரை உலகெங்கும் உள்ள மக்களெல்லாம் ஓங்காரக்குடில் நாடி வர ஏதுவாகும்.
ஆதலினால் உலகெங்கும் உள்ள மொழிகளில் ஞானத்திருவடி நூலை மொழியாக்கம் செய்கின்ற இவை முறைகள் செய்து சன்மார்க்க வழிமுறைகளை உலகறியச் செய்து பரப்பிடல் வேண்டும்.