முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்....
உயிர்ப்பலியிடுகின்றதும், தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியாமல் இறந்து போனவர்களையும், போரில் போரிட்டு வீரமரணமடைந்தவர்களையும், இன்னும் பல்வேறு வகையில் மனிதனாய் பிறந்து செத்துப்போன மிகச்சிறு ஆற்றல் பெற்ற மனிதர்களை வணங்குகிறதான சிறுதெய்வங்களை வணங்குதலும் அச்சிறு தெய்வங்களால் ஏதேதோ பெரிய சக்திகளை தாங்கள் அடைந்துவிட்டதாகவும், சிறுதெய்வங்கள் மிகப்பெரிய ஆற்றல் மிக்கவைகளாகவும், விளம்பரப்படுத்துதல், கோயில் கட்டுதல் போன்றவை வீண் ஆரவாரம் என்றும், அவை வீண் கற்பனைகள் என்றும், தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள முடியாத ஒருவன் தன்னை வணங்குவோரை எப்படி காப்பாற்றுவான் என்பதையும் தெளிவாக அறியலாம்.
மேலும் சிறுதெய்வ வழிபாட்டினால் சாதாரண பூஜை செய்பவன்கூட உயிர்ப்பலியிடுதல் என்கிற கொடும் பாவச்செயலை மீளா நரகத்தில் தள்ளக்கூடியதான பெரும் பாவச்செயலை செய்வதினால் எந்த வகையிலும் சிறுதெய்வ வழிபாடு மனிதனை முன்னேற்றாது என்றும், சிறுதெய்வ வழிபாடு உறுதியாக மனிதனை நரகத்தில்தான் தள்ளும் என்பதையும் அறியலாம்.
மனிதனாய் பிறந்தவன், தான் கற்ற ஏட்டுக் கல்வியின் பயனால் பெரிய விஞ்ஞானியாக இருக்கலாம், பெரிய அறிவாளியாக இருக்கலாம், பெரிய தொழில் அதிபனாக இருக்கலாம், ஏன் இன்னும் அநேகம் அநேகம் திறமை உடையவராய் கூட இருக்கலாம். ஆனால் முருகனை வணங்காதவர்களுடைய அறிவு பொய்யறிவு, அவனது செல்வமும் அழியக்கூடிய செல்வமே.
அதுவும் தமிழனாய் பிறந்தும் ஒருவன் முருகப்பெருமானை குருவாய் தெய்வமாய் ஏற்று வணங்காமல் பல்வேறு தெய்வங்களை வணங்குவதும் அல்லது தெய்வ நம்பிக்கையே இல்லாமல் இருப்பதும் வேதனைக்குரியது. தமிழ் கடவுள் முருகனை அறியாது வாழ்வோர், கடைத்தேற வழியிருந்தும், கண்ணிருந்தும் கண்மூடி ஆழ்கிணற்றில் வீழும் குருடரைப் போல, பாழும் நரகில் வீழ்ந்து தொடர்பிறவிகளுக்கும் ஆளாகும் கொடுமையை எண்ணி வருந்துவார் முருகப்பெருமானை வணங்கினோரெல்லாம்.
முருகப்பெருமானை வணங்குவோம்! உண்மை மெய்ஞானம் பெறுவோம்!
மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்
Related Articles
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html
Related Articles
2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)
Nathan Suryahttp://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html