Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Saturday, 11 November 2017

மரணமிலாப் பெருவாழ்வை தரும் வல்லமை முருகனுக்கே உண்டு!

முருகப்பெருமான் திருவடிகளைப் பற்றி பூஜித்து ஆசி பெற்றிட்டால்....



தன்னை காத்துக் கொள்ள சிலர் உடற்பயிற்சிகள் செய்வார்கள், உடம்பை பாதுகாக்க உடற்பயிற்சி தேவைதான். ஆனால் உயிர் பாதுகாப்பை எவ்வாறு பெறுவார்கள்?  உடம்பு எவ்வளவு வலிவுடையதாய் இருப்பினும் உயிரில்லையேல் வலிவுள்ள உடம்பிற்கு மதிப்பில்லை என்பதை உணரமாட்டார்கள். தனது வாழ்வு வளம்பெற பொருளீட்டுவார்கள், உயிர் பலம் பெற என்ன செய்தார் என்றால் ஒன்றுமில்லை. 


இப்படி அழியக்கூடிய உடம்பிற்காக எத்தனை எத்தனை பாதுகாப்பு, அலங்காரம், ஆராதனை, பொருள் சேமிப்பு என வாழ்நாளை வீணாக்குவதைவிட எல்லாம்வல்ல காக்கும் தெய்வம் முருகன் திருவடிகளை மனமுருகி வணங்க வணங்க முருகனருளால் அனைத்தும் கை கூடி உடல் பலம், உயிர் பலம், செல்வ பலம் என அனைத்தும் பெற்று மனோபலத்துடன் மகிழ்வுடன் வாழலாம் என்பதை அறியாமல் வீணாக மாயையுள் ஆட்பட்டு வாழ்வை கழிக்கின்றதை உணரலாம்.


முருகனை வணங்க வணங்க அழியும் உடலை பயிற்சிகளாலோ, பணத்தாலோ, மருந்துகளாலோ முற்றிலும் காக்க முடியாது என்றும், அழிவற்ற ஒளிதேகம் பெற்ற முருகப்பெருமானால்தான் நாம் பெற்ற அழியும் இத்தேகத்தை அழியாத தேகமாக மாற்றி தரமுடியும் என்பதையும், கூடிப்பிரியும் உடலையும் உயிரையும், என்றும் பிரியாத உடலும் உயிரும் ஒன்றென கலந்து மரணமிலாப் பெருவாழ்வு பெற்ற ஒளிதேகமாகவும் மாற்றும் வல்லமை முருகனுக்கே உண்டு என்பதையும் அறியலாம். என்றும் பிறவா நிலையான மரணமிலாப் பெருவாழ்வை பெறுவதே பிறவியின் நோக்கம் என்பதையும் அறிந்து கொள்ளலாம்.


No comments:

Post a Comment