Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Saturday, 10 December 2016

பஞ்சமாபாதகங்களிருந்து விடுபட வேலனை வணங்குங்கள்!

முருகா என்றால் :


கள், காமம், களவு, கொலை, பொய்கூறல் என்ற ஐந்து பெருங்குற்றங்களும் பஞ்சமாபாதகங்கள் என்றும் இப்பாவங்களை செய்திட்டால் அது மனிதனை விடுபடமுடியாத வகையினிலே நரகத்தில் தள்ளிவிடும் என்பதையும் உணர்த்துவார்.



இந்த பஞ்சமாபாதகங்களும் அவரவர் முன் ஜென்மங்களிலே அவரவர் செய்திட்ட பாவங்களினாலேதான் இச்சென்மத்திலும் தொடர்கின்றதென்றும் அவை அவை அவரவர் செய்திட்ட பாவத்தினால் இச்சென்மத்திலும் தொடர்ந்து அவர் தம்மை மீண்டும் மீண்டும் மீளா நரகத்தில் ஆழ்த்திட முயற்சிக்கின்றது. ஆதலின் பாவவினைக்கு உட்பட்டவர்கள் முருகனருளால் உணர்ந்து மீண்டும் பாவத்தின் போக்கில் செல்லாமல் அதிலிருந்து விடுபட வேண்டுமென்ற உண்மை அறிவும் மிகும்.



முன்சென்மங்களிலே யாரும் அறியவில்லை என்றே நம்மை நாமே வியந்து ஏமாற்றிக் கொண்டு பிறர் அறியா வண்ணம் இரகசியமாக அவர்களது பொருளை கவர்தல், பொய்யான தகவல்களை கூறி ஏமாற்றி வஞ்சித்தல், பொருள் பறித்தல், அதிகவிலை உள்ள பொருளையோ, நிலத்தையோ, பிறர் வறுமையைப் பயன்படுத்தி தர்மத்திற்கு புறம்பான வழியிலே சென்று அவர்தம் பலகீனமான சூழ்நிலையை தக்க சந்தர்ப்பமாக எண்ணி பயன்படுத்தி வஞ்சனை செய்து சொத்தை அபகரித்தல், பொருளை அபகரித்தல் என்றும் தமக்கு உள்ள சக்தி, பணபலம், ஆள்பலம், அதிகாரபலம் போன்றவற்றை பயன்படுத்தி மிரட்டி பிறர் பொருளை வஞ்சனையாக அபகரித்தல் போன்ற மாபாதக செயல்களை செய்தவரெல்லாம் இச்சென்மத்திலே தன்னை தானே மயக்கும்படியான பொருள் கொடுத்து தீமையை விலைக்கு வாங்கி மயக்கம் உண்டாக்கி மனிதனை மரணத்தில் தள்ளவல்ல மதுவினை அமிர்தமாய் எண்ணி உண்டு தன்னைத்தானே மயக்கிக்கொண்டு அறிவு கெட்டு, புத்தி மழுங்கி, குணப்பண்புகளெல்லாம் தம்மிடமிருந்து விடுபட தன்னிலை மறந்து தன் தகுதி மறந்து மயக்கமுற்று பிறரை வஞ்சித்த பாவத்தின் தாக்கம் அதிகமாக அதிகமாக தன்னைத்தானே மயக்கமுறச் செய்து மயங்கி மதுவிற்கு அடிமையாகி மீளமுடியாமல் செத்தும் போவான். இவன் மானம் கெட்டு சாவது மட்டுமல்ல தன்னை சார்ந்த குற்றத்தினால் அவனது குடும்பத்தினரையும்
நடுத்தெருவில் நிறுத்திவிட்டு அவமானப்படும்படியான சூழலை உண்டாக்கி விட்டு அடுத்த ஜென்மத்திற்கும் குடும்பத்தினரால் வருகின்ற சாபத்தினையும் சேர்த்தே வாங்கி செல்வான் பாவி.



இந்த உண்மையை உணர்ந்திடப் பெறுவார்கள் முருகனருளால். உணர்ந்து யாரும் அறியவில்லை ஆனால் கடவுள் இருக்கின்றான், தர்மம் உள்ளது, முருகன் இருக்கின்றான், தர்மநெறி தவறிவிட்டால் தண்டிக்கப்படுவோம், பாவபுண்ணியத்திற்கு பயப்பட வேண்டும் என்று உணர்ந்து இச்சென்மத்திலாவது பிறரை ஏமாற்றாமல் வாழவேண்டுமென்ற உண்மை அறிவினை பெறுவார்கள்.



முன்சென்மங்களிலே தன்னை நம்பிய பெண்ணை காதலித்து தக்க சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவளை வஞ்சித்து சுகம் பெற்று பின்னர் தனது அதிகாரம் மற்றும் பணத்தின் பலம் போன்றவற்றை பயன்படுத்தி அவளை மிரட்டி ஏமாற்றுதல் பெண்ணிடம் பொய் சொல்லி கற்பை சூறையாடுதல், பெண்ணை திருமணம் செய்வதாக வாக்களித்து கெடுத்து பின் கைவிடல், விரும்பாத பெண்ணை வலுவினில் சென்று அபகரித்தல், பெண்ணை கற்பழித்தல் போன்ற பெண் கொடுமைகளும், வேலைக்கு வருகின்ற பெண்களின் வறுமையைப் பயன்படுத்தி தமது காம இச்சைக்கு அவர்களை பலியாக்குதல் அல்லது வேலைக்கு வந்த பெண்களை பயமுறுத்தி இச்சைக்கு பணிய வைத்தல் போன்ற வெளியில் சொல்ல முடியாத பெண் பாவங்களை செய்தவர்கள் எல்லாம் இச்சென்மத்திலே பெண் மயக்கமுற்று பெண்நினைவாகவே அலைந்து திரிந்து காமவயப்பட்டு விலைமகள் தொடர்பினை நாடி தீராத காமத்தினால் உந்தப்பட்டு நோய்களையும், அவமானங்களையும் பெற்று பாவியாவார்கள்.



அவர்களெல்லாம் முருகனருளைப் பெறபெற இவையெல்லாம் நம் முன்சென்மத்தில் செய்த பாவங்கள் என்றே உணர்ந்து அவையெல்லாம் முருகனருளால் மாற்றிட கூடும் என்றுணர்ந்து முருகனருளைப் போற்றி போற்றி முருகனருளைப் பெறுவார்கள்.



அதுபோலவே களவு செய்வோர்களும், களவின் வெளிப்பாட்டினால் கொலையும், இவையனைத்தையும் மறைத்திட நீதியின் தண்டனையிலிருந்து தப்பித்திட அடாது பொய் சொல்லியும் இவ்வாறாக ஒரு குற்றம் தொடர்ந்திட அதன் தொடர்ச்சியாய் பலபல குற்றங்களை தொடர்ந்து தொடர்ந்து செய்து கடைசியில் முடிவற்றதாய் குற்றங்கள் பெருகி நம்மை என்றென்றைக்கும் மீள ஒட்டாமல் நரகத்தில் தள்ளிவிடும் என்றுணர்ந்து இவற்றினின்று விடுபட முருகா உனதருளினால் தான் முடியும் என்று உணர்ந்து முருகன் திருவடியைப் இறுகப் பற்றிட தூண்டும்.



முருகன் திருவடியைப் பற்றி உருகி உருகி பூசித்திட பூசித்திட இப்பாவங்களின் தன்மையும் அதன் பாவவினைகளின் விளைவுகளை அனுபவித்து தீர்க்கும் தைரியமும் அதனின்று விடுபட முருகன் அருள் பெற்று தர்மம் செய்தால் விடுபடலாம் என்ற தர்மசிந்தையும் பெருகி தக்க ஆசானை நாடி, வினை நீக்கம் செய்திட துணிவும் ஆசான் துணையும் முருகனருளால் பெற்றிட பெறுவார்கள்.


தக்க சொற்குரு வழிகாட்டலினால் முன்சென்ம பஞ்சமாபாதக வினைக் குற்றங்களிலிருந்து விடுபட்டு ஜென்மத்தைக் கடைத்தேற்றிக் கொள்வார்கள்.


இவையனைத்தும் முருகனருள் கூடினாலன்றி நடந்திடலாகாது. முருகா! முருகா!! முருகா!!! என்போம். பாவபுண்ணியம் பற்றி அறிந்து பாவம் நீக்கி புண்ணியம் பெருக்கி பண்பாளனாய் ஆகி முருகனடிக்கே அடிமைகளாகி முருகன் அருள் பெற்று ஞானமும் அடைவோம்.
...........


மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர் சுவாமிகள்

     

Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

Nathan Surya
http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html





ஜென்மசாப விமோசன தொண்டாற்றல்!!


ஞானிகள் பூசை இல்லையேல் அரங்கன் திருஅருள் இல்லையேல் அரங்கனின் குருஅருள் இல்லையேல் ஞானசித்தி இல்லை!!!





காலனாம் எமனையும் வென்று காக்கும், மரணம் வெல்ல வல்லதொரு அதிஅற்புதமான கருணைமிகக் கொண்ட சக்திதான் அரங்கா உமது சக்தி. அது தருமத்தின் சக்தியாகும். சக்தி மிகுந்த தருமச்சக்கரம் தனைக் கொண்டு உலகைக் காக்கின்ற அரங்கர், தர்ம சக்கரத்துடன் கடைத்தேற்றவல்ல தூயநெறியாம் சன்மார்க்க நெறி என்கின்ற ஜீவதயவாய் ஆனதொரு தூயநெறிமுறையையும் உலகிற்கு அளித்து கடைத்தேற்றி ஞான வாழ்வளித்து காக்கின்ற சக்தி மிகக்கொண்ட இவ்வுலகின் மகாஞான குருநாதனே அரங்கனாவார். உத்தமமகா ஞானி கலியுக காவல்தெய்வம், யுகமாற்ற தலைவன் அருள்மிகு ஆறுமுக அரங்கமகா தேசிகரின் திருவடிகளிலே உடல், பொருள், ஆவி என்றே அனைத்தையும் சரணாகதியாக்கியே உளமார சரணடைந்தோர்க்கெல்லாம் அற்புத ஞானி அரங்கனின் அருள்வேலி காக்கும்.


அற்புத அருள்வேலி அன்பர்தமை இடையறாது காத்து அவர் தமக்கு மரணகண்டங்களிலிருந்து பாதுகாப்பு நல்கி கடன் தொல்லைகளிலிருந்து விடுவித்து கவலை துன்பம் அணுகாது காத்து பிணி வென்று சுகமளித்து காத்து இரட்சிக்கும் அரங்கனின் அருள் சக்தி.


ஒவ்வொரு நாளும் அரங்கன் தம் திருவடிகளை மறவாமல் அவரவர் இல்லங்களிலே தவறாமல் பூசித்திடல் கட்டாயமாகும். அரங்கனின் திருவடிகளை மானசீகமாக மனக்கண்ணிலே நிறுத்தி குளிர்ச்சி பொருந்திய, ஒளி பொருந்திய ஞானமளித்து விதி மாற்றம்தனை செய்து அன்பரை கடைத்தேற்றக்கூடிய தேவர்க்கும் மூவர்க்கும் எட்டா அந்த புனிதத் திருவடிகளை ஆறுமுகனார் அவதாரத் திருவடிகளை அவரவரும் அவர்தம் கண்ணீரால், கண்ணீர் மலர் கொண்டு, மனமுருகி அவரவரும் தம்தம் எண்ணி வருந்தி குற்றங்களுக்கு வெட்கி அந்தரங்கத்திலே அரங்கர் திருவடிக்கு சமர்ப்பித்து மன்னிப்பு கேட்டு தம்தம் நிலைதனை அவரும் உணரும் வகையிலே மனஇளக்கம் கொண்டு இறையாம் அரங்கரிடத்து அந்தரங்கத்திலே பூசைதனிலே பொய்யின்றி உளமார உண்மையுடன், மன்னிப்பு கோரியும் அரங்கரின் அற்புதங்களை, புகழை, பெருமைகளை மனதார உணர்ந்து போற்றி துதித்து அண்ணல் அரங்கரை அவர்தம் உண்மை சொரூபமாம் ஞானசோதி சுயம்பிரகாச அருள்ஞான வள்ளல் யோகானந்த ஞானானந்த சதாசிவ சாந்தசொரூப ஞானத்தலைவன்




முருகப்பெருமானாக எண்ணியே அன்பர் புறக்கண் தோற்றத்தில் கண்டிட்ட அரங்கரின் உருவம் கண்டு ஏமாறாது பிரம்மாண்ட சோதி பெருஞ்சுடராய் தோன்றும் ஒளி பொருந்திய அரங்கர் தம்மை மனதினில் இருத்தி கண்ணீர் மல்க மல்க நெஞ்சம் உருக உருக தவறுகளை உணர்ந்து உணர்ந்து மன்றாடி மன்னிப்பு கோரி வெட்கி வணங்கி அவர் திருமுன் மெய், வாய், கண், மூக்கு, செவி என ஐம்புலன்களும் கருவிகளும் ஒடுங்கிட மனசலனமின்றி வாய்புதைத்து மனம் பரிதவித்து வணங்கி வணங்கி அரங்க நாமம்தனை நாதழும்பேற அரங்கா அரங்கா என்றே அரற்றி கூறி ஆன்மா சோர அரங்கர் அருளை பெறவே மன்றாடி நின்றிடல் வேண்டும்.


அங்ஙனமே உளம் உருகி மன்றாடி நிற்கும் உண்மை பக்தராம் அன்பர் தமக்கு அவர்தம் ஆசைகள் அரங்கரின் அருளால் நிறைவேற்றப்படும். அந்த அன்பர் தமக்கு மட்டுமன்று அவர்தம் குடும்பத்தினருக்கும் அவரது பூஜா பலன்களாலே அவையனைத்தும் அருளப்படும்.


அண்ணல் அரங்கர் வாழும் ஞானஆலயமாம் ஓங்காரக்குடில் தனிலே சமைக்கப்படுகின்ற உணவு சாதாரண பசியை போக்குகின்ற உணவு மட்டுமன்று. அது ஞானிகள் அருளாசிகளினாலே சமைக்கப்படுகின்றதனாலே அருள்நிறை அருளமுதாகும். அருளமுதாம் குடில் உணவு ஆயுள்தனை விருத்தி செய்து காக்கும் அமுதத்திற்கு ஒப்பான உணவாகும்.


அதுவே பிணி தீர்க்கும் அருமருந்தாகும். ஓங்காரக்குடில் நாடி வந்து ஆங்கே தொண்டுகள் பொருளுதவிகள் செய்து தங்கி அரங்கரின் அன்பிற்கு வசமாகி ஆங்கே ஞானிகளருளால் சமைக்கப்படுகின்ற அருள் உணவை மனமார உண்டு செல்கின்ற அவரவர்க்கும் அவர்கள் மேற்கொண்ட செயல்களிலெல்லாம் செயல் வெற்றி பெறுவதோடு அவர்கள் மனதினுள் எண்ணிய எண்ணங்களில் வெற்றியும் பெற்று அவர் தம்மை அரங்கன் அருளும் ஆசிகளும் உடனிருந்து காக்கும்.


ஞானத்தலைவனாம் முருகப்பெருமானின் சக்தியை முழுமையாகக் கொண்ட உத்தம மகாஞானயோக வள்ளல் ஞானி அரங்கமகா தேசிகரின் வல்லமைகளை குறைத்து எண்ண வேண்டாம். அவரவர் செய்திட்ட வினைகள் காரணமாகவே அரங்கனை அவர்தம் ஆற்றலை, அவர் தன்மையை பார்க்கவோ, கேட்கவோ, சிந்திக்கவோ, அறியவோ, எண்ணவோ, உணரவோ முடியவில்லை. இது அவரவர் செய்திட்ட வினையினால் வந்திட்ட குற்றமே அன்றி அரங்கர்பால் தவறில்லை. ஆற்றல்மிகு அருள்ஞானி அரங்கரின் அருளொளியை, அற்புதத்தை கருணையை உணருகின்ற வாய்ப்பு அன்பர்தம் பாவத்தால் காணமுடியவில்லையே தவிர அரங்கரின் ஆற்றலில் உள்ள குறையன்று.



ஆதலின் அரங்க தரிசனம் பெறுதல் அவசியமாகும். அரங்க தரிசனம் சாபவிமோசனம் அன்றி அரங்கரின் சக்தி மீதோ அரங்கரின் செயல் மீதோ அரங்கரின் தோற்றம் மீதோ சந்தேகம் கொண்டு அரங்கதரிசனம் தனை அடையாது, அரங்கர் தொண்டுகள் தமை செய்திடாமல், “அவரவரும் இக்கலியுகத்திலே நெறிக்குட்பட்டு தொண்டு செய்து கடைத்தேறுதற்கு கிடைத்திட்ட ஒரே வாய்ப்பான குடில் தொண்டை மனமுவந்து செய்திடாமல் ஏமாந்து போய் வீணாய் போகாதீர்கள்”. உங்களுக்கு கிடைத்த வாய்ப்பை தொண்டுகள் செய்திட அரங்கன் மகாமகா கருணை கொண்டு அருளிய வாய்ப்பை உங்கள் கடைத்தேற்றத்திற்காக உண்டான வாய்ப்பை கண்டிப்பாக நழுவவிடாதீர்கள், நழுவவிட்டால் பின்னர் கிடைக்காது.


உலகப்பெருமாற்றம் விரைந்து அருகில் வருகிறது, வாய்ப்பை நழுவ விடாதீர்கள். கவனமுடன் விழிப்பாக இருங்கள், ஏமாந்து விடாதீர்கள். அவரவர்க்கு கிடைத்திட “ஜென்மசாப விமோசன தொண்டாற்றல்” வாய்ப்பை நழுவவிடாது யாவரும் பெற்று பயனுற வேண்டும் என்பதினாலே உங்கள் மீது கருணை கொண்டு சொல்கின்றேன் குருராஜன் யானும் சொன்னேன்.



தயவே வடிவான ஞானஜோதி அரங்கமகா தேசிகரே இவ்வுலகை கலிகால இடர்களிலிருந்து காத்து மீட்டு இரட்சிக்க வந்திட்ட நல்ஞானி ஆவார். அவர்தம் தொடர்பினின்று எந்த சூழ்நிலையிலும் விலகிடாதீர். ஞானிகள் பெருமை உரைத்து ஞானிகள் திருவடியைப் பற்றிட ஏதுவாய் நடக்கின்ற ஞானிகள் கலந்து அருளாசிகள் செய்கின்ற ஞானயோகி அரங்கனால் நடத்தப்படுகின்றதுமான  ஓங்காரக்குடில்தனிலே நடக்கின்ற ஞானிகள் பூசைகளிலே தவறாது கலந்து கொள்பவர்களுக்கே ஞானியர்களின் சூட்சும அருள் கிடைக்கப்பெற்று ஞானசித்தி எட்டும் என உறுதியாக கூறுகிறேன் என்கிறார் மகான் குருராஜர்