மக்களே
இனிவரும் காலங்களிலே முருகப்பெருமானார் வெளிப்படும் ஜோதியான
சரவண ஜோதியினை ஒவ்வெருவர் வீட்டிலும் ஒரு திருவிளக்கினை
வைத்து அதில் நெய் அல்லது நல்லெண்ணை ஊற்றி
அதை தீபமேற்றி
வழிபடல் வேண்டும்.
தீபம் ஏற்றும் போது “ஓம் சரவண ஜோதியே நமோ நம” எனக் கூறிக்கொண்டே தீபம் தனை ஏற்றிடல் வேண்டும். ஏற்றிய சரவண ஜோதியை பயபக்தி விசுவாசத்துடன் வணங்கி அச்சோதியிலே ஆசான் முதுபெரும் தலைவன் ஆதிஞான பரப்பிரம்மம் முருகப்பெருமான் எழுந்தருளியுள்ளதாக எண்ணி வழிபடல் வேண்டும்.
ஏற்றிய ஜோதியிலே முருகப்பெருமானே தோன்றியதாய் பாவித்து ஜோதியின் முன் அமர்ந்து “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்று குறைந்தது 108 முறையேனும் கூறிடல் வேண்டும். இப்படி காலை மாலை முடிந்தால் நள்ளிரவு பன்னிரண்டு மணிக்கு ஒரு முறை என ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று முறையேனும் வழிபடல் வேண்டும்.
ஆறுமுகனார் வெளிப்படும் சரவண ஜோதி வழிபாடு செய்து “ஓம் சரவண ஜோதியே நமோ நம” என்ற மகா மந்திரத்தை ஜெபித்தால் வரும் நன்மைகள்.
1. வறுமையில்லா வாழ்வு அமையும்.
2. நோயற்ற வாழ்வு அமையும்.
3. குடும்பத்தில் ஒற்றுமையும், பண்புள்ள புத்திரபாக்கியமும் ஏற்படும்.
4. பிள்ளைகளுக்கு கல்வியில் தேர்ச்சியும், நல்ல வேலைவாய்ப்பும் அமையும்.
5. பிள்ளைகளுக்கு தகுதியுள்ள வரன் அமையும்.
6. உயிர்க்கொலை தவிர்த்து, புலால் மறுத்து சுத்த சைவநெறியை கடைப்பிடிக்கின்ற அறிவு வரும்.
7. பசித்த ஏழைகளுக்கு பசியாற்றுவிக்கின்ற எண்ணம் உண்டாகும்.
8. பிறரை அனுசரித்தல், மதிக்க கற்றுக்கொள்ளுதல், சகிப்பு தன்மை, விட்டுக் கொடுத்தல், நம்மை சார்ந்தவர்கள் செய்திட்ட குற்றங்களை பொறுத்துக் கொள்ளுதல், பொறுத்து மன்னித்தல், மறத்தல், மனம் விட்டு பரஸ்பரம் பழகுதல், எதிலும் பெருந்தன்மை ஆகிய நற்பண்புகள் உண்டாகும்.
பல்வாறாய் நன்மையே அளிக்கவல்ல ஆறுமுகனார் வெளிப்படும் ஆறுமுக ஜோதியாம் சரவண ஜோதியினை ஏற்றி சித்தர் பூசைகளை மறவாது தொடர்ந்து சலிப்பின்றி செய்திட செய்திட அற்புதமாய் பல மாற்றங்களை வாழ்வில் காண்பர்.
- மகான் ஆறுமுக அரங்கமகாதேசிகர்

No comments:
Post a Comment