Contact தொடர்பு

உலகமக்கள் நன்மைகருதி சித்தர் சுவடிகள்

Friday, 24 May 2024

அகத்திய மாமுனிவர் பெருமை

 மகான் ஆறுமுக அரங்கர் அருளுரை

நெஞ்சார நினைப்பவர்க்கு நிழல் ஆவானை
நீங்காதோர் குலம் தழைக்க நிதியாவானைச்
செஞ்சொலி வயற்பொழில்சூழ் தில்லை மூதூர்ச்
சிலம்பொலி போல் பாடுகின்ற சித்தன் தன்னை
வெஞ்சாபமுமில்லை ஒரு வினையுமில்லை
வேலுண்டு துணைவருங்கால் வெற்றியுண்டாம்
அஞ்சாதீர் என்று யுகயுகத்தும் தோன்றும்
அகத்தியனை அருட்குருவை அகத்துள் வைப்போம்.



ஆசான் அகத்தீசனை மனமார பூஜித்தால் நோயும், வறுமையும், பகைமையும், மன உளைச்சலுமாகிய வெப்பம் தணிய ஆசான் அகத்தீசன் குளிர்ச்சி பொருந்திய நிழல்போல் இருந்து அருள் செய்வார். மேலும், ஆசான் அகத்தீசனை பூஜை செய்தால் தனக்கும் தன் சந்ததிகளுக்கும் செல்வநிலை பெருகச் செய்வார். மேலும், ஆசான் அகத்தீசரின் பாடல்கள் அத்தனையும் வளப்பம் பொருந்திய தில்லைவாழ் அம்பலவாணரின் கால் சிலம்;பொலிபோல் கேட்க இனிமை உடையதாக இருக்கும். காரணம் ஆசான் அகத்தீசனின் பாடல்கள் அத்தனையும் பிறவிப்பிணிக்கு மாமருந்தாக இருப்பதால் படிக்கவும், கேட்கவும், சிந்திக்கவும் இனிமை உடையதாக இருக்கும். மேலும், ஆசான் அகத்தீசனை பூஜித்தால் அறியாமை காரணமாக பல ஜென்மங்களில் செய்த பாவத்தால், பிறரால் சபிக்கப்பட்ட கொடுஞ்சாபங்களும் நீங்கும், பாவங்களும் நீங்கும். அதுமட்டுமல்லாமல் "முருகா! " என்றால் ஈரேழு பதினான்கு லோகமும் கிடுகிடுவென நடுங்கும் ஆற்றல்பெற்ற ஆசான் சுப்ரமணியரின் வேல்படை நமக்கு உற்றதுணையாக இருக்கும். மேலும் வெற்றிகளும் உண்டாகும். தொடர்ந்து ஆசான் அகத்தீசனை பூஜைசெய்தால் நாம் எத்தனை பிறவிகள் எடுத்தாலும் ஆசான் அகத்தீசர் குருவாக வந்து "அஞ்சேல்! " என்று ஆட்கொண்டு அருள்செய்வார். எனவே ஆசான் அகத்தீசரை தினமும் பூஜிப்போமாக!.

குருநாதர் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் முக்தி

முருகப்பெருமான் உத்தரவுப்படி எமது குருநாதர் ஆறுமுக அரங்கமகா தேசிக சுவாமிகள் 14.05.2024 செவ்வாய்க்கிழமை பூசம் நட்சத்திரம் அன்று முருகப்பெருமான் திருவடியில் இணைந்து முக்தி பெற்றார்கள். 16.05.2024 வியாழன் மகம் நட்சத்திரம் அன்று மதியம் 3 மணியளவில் துறையூர் ஓங்காரக்குடிலில் மகான் புஜண்டமகரிஷி மண்டபத்தில் ஜீவசமாதி அமைக்கப்பட்து.





Friday, 15 December 2023

காப்புச் செய்யுள்

 மகான் ரோமரிஷி அவர்கள் இயற்றிய பூஜா விதி காப்புச் செய்யுள்

காப்பான கருவூரார் போகநாதர்
கருணையுள்ள அகத்தீசர் சட்டைநாதர்
மூப்பன கொங்கணரும் பிரமசித்தர்
முக்கியமாய் மச்சமுனி நந்தி தேவர்
கோப்பான கோரக்கர் பதஞ்சலியார்
கூர்மையுள்ள இடைக்காடர் சண்டிகேசர்
வாப்பன வாதத்திற்கு ஆதியான
வாசமுனி கமலமுனி காப்புத் தானே.



Friday, 6 October 2023

சொர்க்கவாசல் திறப்பு 12-10-2023

முருகப்பெருமான் துணை

முருகப்பெருமான் அருளால் குருநாதர் ஆறுமுக அரங்கமகாதேசிக சுவாமிகள் அவர்களுக்கு புருவமத்தி (சுழிமுனை) சூட்சம திறப்பு திருநாள்

நாள் 12.10.2023 வியாழன் காலை 4.30 - 6.00 மணி




கோளறு பதிகம்

 மகான் திருஞானசம்பந்தர் அருளிய கோளறு பதிகத்தின் பாடல்களைப் தினமும் பாராயணம் செய்து, கிரக தோஷங்களில் இருந்தும் கொடிய நோயின் பிடியிலிருந்தும் விடுபடலாம். இன்றைய சூழ்நிலையில் நோயின்றி வாழ புறத்தூய்மையுடன் சைவநெறியையும், அகத்தூய்மையையும் கடைப்பிடித்து ஞானிகளை வழிபாடு செய்து வரவேண்டும்.

 

திருச்சிற்றம்பலம்
 
வேயுறு தோளி பங்கன்விடமுண்ட கண்டன் மிகநல்ல வீணை தடவி
மாசறு திங்கள் கங்கை முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
ஞாயிறுதிங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனிபாம் பிரண்டு முடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
 
 
என்பொடு கொம்பொடாமை இவைமார்பிலங்க எருதேறி யேழை யுடனே
பொன்பொதி மத்த மாலை புனல்சூடி வந்து என் உளமே புகுந்த அதனால்
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொ டுஆறும் உடனாய நாள்கள்
அவைதாம் அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
 

 
உருவளர் பவளமேனி ஒளிநீ றணிந்து உமையோடும் வெள்ளைவிடைமேல்
முருகலர் கொன்றை திங்கள் முடிமேலணிந்து என் உளமே புகுந்த அதனால்
திருமகள் கலைய தூர்தி செயமாது பூமி திசை தெய்வமான பலவும்
அருநெறி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
 
 
மதிநுதல் மங்கையோடு வடபால் இருந்து மறைஓதும் எங்கள் பரமன்
நதியொடு கொன்றை மாலை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
கொதியறு காலனங்கி நமனொடு தூதர் கொடு நோய்கள் ஆன பலவும்
அதிகுணம் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.

 
 
நஞ்சணி கண்டன் எந்தை மடவாள் தனோடும் விடை ஏறும் நங்கள் பரமன்
துஞ்சிருள் வன்னி கொன்றை முடிமேல் அணிந்துஎன் உளமே புகுந்த அதனால்
வெஞ்சின அவுண ரோடும் உருமிடியு மின்னும் மிகையான பூதம் அவையும்
அஞ்சிடும் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
 
 
வாள்வரி அதள தாடை வரிகோவணத்தர் மடவாள் தனோடும்உடனாய்
நாண்மலர் வன்னி கொன்றை நதிசூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானைகேழல் கொடு நாகமோடு கரடி
ஆளரி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
 
 
செப்பிள முலைநன் மங்கை ஒரு பாகமாக விடையேறு செல்வன் அடைவார்
ஒப்பிள மதியும் அப்பும் முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
வெப்பொடு குளிரும் வாதம் மிகையான பித்தும் வினையான வந்து நலியா
அப்படி நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
 
 
வேள்பட விழிசெய்தன்று விடைமேல் இருந்து மடவாள் தனோடும் உடனாய்
வான்மதி வன்னி கொன்றை மலர் சூடி வந்தென் உளமே புகுந்த அதனால்
ஏழ்கடல் சூழிலங்கை அரையன் தன்னோடும் இடரான வந்து நலியா
ஆழ்கடல் நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
 
 
பல பல வேடமாகும் பரன் நாரி பாகன் பசுவேறும் எங்கள் பரமன்
சலமகளோடு எருக்கு முடிமேல் அணிந்தென் உளமே புகுந்த அதனால்
மலர்மிசை யோனும் மாலும் மறையோடு தேவர் வருகால மான பலவும்
அலைகடல் மேரு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
 
 
கொத்தலர் குழலி யோடு விசையற்கு நல்கு குணமாய் வேட விகி்ர்தன்
மத்தமும் மதியும் நாகம் முடிமேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்
புத்தரொடு அமணை வதில் அழிவிக்கும் அண்ணல் திருநீறு செம்மை திடமே
அத்தகு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே.
 
 
தேனமர் பொழில் கொள் ஆலை விளை செந்நெல் துன்னி வளர்செம்பொன் எங்கும் நிகழ
நான்முகன் ஆதியாய பிரமா புரத்து மறைஞான முனிவன் தானுறு கோளும் நாளும்
தானுறு கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரை செய்
ஆனசொல் மாலை ஓதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே.
திருச்சிற்றம்பலம்